இந்திய வாழ்வியல்
---------------------------------
எனக்கு
ஒன்று தெளிவாகப் புரிகிறது என் ஆரம்பப்
பதிவுகளில் இருந்த வீச்சு இப்போதுஇல்லை. பழைய பதிவுகளில் எழுதி இருந்த விஷயங்கள் மனதில்
தோன்றிய வலியிலிருந்து எழுந்தவை ஒரு பதிவு
எழுத நிறையவே மெனக்கெடுவேன் அவற்றுக்கு வந்துகொண்டிருந்த பின்னூட்டங்களும்
பதிவின் வீச்சை தெரிவித்தது அப்படி இருக்க நான் ஏன் இப்போதெல்லாம் அதுமாதிரி எழுத முடிவதில்லை
என்னதான் எழுதினாலும் என்னால் எந்த ஒரு மன
மாற்றத்தையும் வாசகர்களிடம் கொண்டு வர
முடிவதில்லை ஒரு வேளைப் பலரும் முகநூல்
பக்கம் போக சீரியஸ் விஷயங்களுக்கு
மதிப்பில்லாததாலும் முக நூலில் எழுத மெனக்கெட
வேண்டாமென்பதாலும் இருக்கலாம் ஆனால்
என்னால் ஏனோ தானோ என்று எழுத முடியவில்லை எந்தஒரு விஷயமும் என்னில் ஒரு சலனத்தை
ஏற்படுத்தினால் மட்டுமே என்னால் எழுத முடிகிறது
அண்மையில் பதிவுகள் எழுத மிகவும் சிரமப்படுகிறேன் மொக்கையாகவோ என்னைப் பற்றியோ எழுதி
சமாளிக்கிறேன் இது ஒரு பழைய பதிவின்
சாராம்சம் மீள் பதிவு என்று சொல்லப்
பிரியப்படவில்லை. சிலவிஷயங்கள் மீண்டும் மீண்டும் சொல்வதனால் மதிப்பிழக்குமா. என்னை பற்றி நான் ஆராய்வது போலவே இந்தசமூகம்
பற்றியும் எண்ணுகிறென் இந்த சமூகத்தை
திருத்த என்னால் முடியாது ஆனால் அடிமேல் அடி வைத்தால் எங்காவது ஒரு சிறிய
மாற்றமாவதுவராதா என்னும் நப்பாசை
எறும்பூரக் கல்லும் தேயுமாமே
லஞ்சம் ,ஊழல் , கையூட்டு, என்று நாளொரு வண்ணம் ,பொழுதொருகதையுமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன இந்த அளவுக்குப் பேசப்படும் விஷயத்துக்கு அடிப்படைக் காரணம் குறித்து சிந்தித்த போது சில எண்ணங்கள் தோன்றின அதுவே பதிவாகிறது வழக்கம் போல் என் கருத்துகள் பலராலும் ஏற்கப்படாமல் போகலாம் இருந்தாலும் அது பற்றிக் கவலை இல்லை. எதிர்மறைக் கருத்துகள் ஒரு ஆரோக்கிய சிந்தனைக்கு வழிவகுக்கும் என்னும் நம்பிக்கையே இதை எழுதச் செய்கிறது
இந்தியாவில் லஞ்சம் ,ஊழல் , கையூட்டு, எல்லாமே நம்
கலாச்சாரத்தின் பரிணாமமே. நாம் லஞ்சத்தையும் ஊழலையும் சர்வ சாதாரணமாக அணுகுகிறோம்
எந்த ஒரு வேலையும் இலவசமாக
வராதுஎன்றும் நினைக்கிறோம்அரசு ஊழியர்கள்
செய்ய வேண்டிய அவர்கள் வேலைகளைச் செய்யவும்
லஞ்சம் கொடுக்கிறோம்
இல்லையென்றால் அதற்காக அலைய வேண்டும், இந்த அலைச்சலைத் தவிர்க்கக்
கொடுக்கும் பணம் லஞ்சமல்ல என்றும்
சப்பைகட்டுகிறோம் எந்த இனமும் ஊழல் இனமாக இருக்க முடியாது ஆனால் கலாச்சாரமே
ஊழலுக்கு வித்தாக இருக்கமுடியுமாஇருக்கும் போல்தான் தோன்றுகிறது
. முதலில்
இந்தியாவில் மதமே பேரம் பேசுதலை ஒப்புக்
கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. நாம், இந்தியர்கள்
கடவுளிடமே பேரம் பேசி ( TRANSACT BUSINESS.) கடவுளுக்குப்
பணம் கொடுக்கிறோம். அதற்குப் பலனை எதிர்பார்க்கிறோம்.
இந்த முறையில் தகுதி இல்லாதவரும் பலன் பெருவதை
சாதாரணமாக நினைக்கிறோம். பணம் படைத்தவன் கடவுளுக்கு
பணமும், பொன்னும் மணியும் வாரிக்கொடுக்கிறான்.பலனை
எதிர்பார்க்காமலா.?இந்தக் காரியம் கோயில் சுவர்களுக்கு
வெளியில் நடந்தால் லஞ்சம் என்ற பெயரில்தானே அழைக்கப்
படுகிறது. கடவுளின் உண்டியலில் வாரிக் கொட்டுபவன் பசித்
திருக்கும் தேவையுள்ளவர்களுக்குக் கொடுப்பதை, வீண் என்றும் பலன் இல்லாதது என்றும் எண்ணுகிறான்
கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. நாம், இந்தியர்கள்
கடவுளிடமே பேரம் பேசி ( TRANSACT BUSINESS.) கடவுளுக்குப்
பணம் கொடுக்கிறோம். அதற்குப் பலனை எதிர்பார்க்கிறோம்.
இந்த முறையில் தகுதி இல்லாதவரும் பலன் பெருவதை
சாதாரணமாக நினைக்கிறோம். பணம் படைத்தவன் கடவுளுக்கு
பணமும், பொன்னும் மணியும் வாரிக்கொடுக்கிறான்.பலனை
எதிர்பார்க்காமலா.?இந்தக் காரியம் கோயில் சுவர்களுக்கு
வெளியில் நடந்தால் லஞ்சம் என்ற பெயரில்தானே அழைக்கப்
படுகிறது. கடவுளின் உண்டியலில் வாரிக் கொட்டுபவன் பசித்
திருக்கும் தேவையுள்ளவர்களுக்குக் கொடுப்பதை, வீண் என்றும் பலன் இல்லாதது என்றும் எண்ணுகிறான்
2009/-ல் ஒரு செய்தி
பத்திரிகைகளில் இரண்டு மூன்று நாட்கள் வந்து கொண்டிருந்தது.கர்நாடக மந்திரி ஒருவர்திருப்பதி
ஏழுமலையானுக்கு ரூபாய் 45 கோடி செலவில் தங்கத்தில் வைரத்தால் இழைக்கப்பட்ட கிரீடம்
ஒன்று சாத்தினார் சிக்கினாலும் மீண்டு
விடுவோம் என்னும் நம்பிக்கை போல் இருக்கிறது கடவுளுக்கே கையூட்டு
கொடுத்தவர் தான் செய்த முறை கேடுகளில்
இருந்து தப்ப என்னதான் செய்ய மாட்டார்
கடவுளே அருளைத்தர, பணம் பெற்றுக்கொள்ளும்போது, சாதா
மனிதர்கள் காரியங்களை நடத்திக் கொடுக்க, லஞ்சம் வாங்குவது,
தவறில்லை என்ற மனோபாவம் வளர்ந்து விட்டது. லஞ்சம்
வாங்குவதோ கொடுப்பதோ தவறில்லை என்றும், அது அவமானப்
பட வேண்டிய விஷயம் அல்ல என்றும் சாதாரணமாகக் கருதப்
படுகிறது. Ther is no stigma attached to being corrupt. இது வாழ்வின் இன்றி
யமையாத அம்சம் என்ற எண்ணம் அநேகமாக எல்லோருக்கும் இருக்கிறது. Corruption has become a way of life. இல்லையென்றால் ஊழல்
குற்றங்களுக்குப் பெயர் போய், பல குற்றச்சாட்டுகள் நீதி
மன்றங்களில் நிலுவையில் இருந்தும், எதுவுமே நடக்காதது
போலும், நாட்டையே ரட்சிக்க வந்தவர் போலும் வேடமிடும்
ஒருவர், மக்களின் பெரு மதிப்போடு ஒரு மாநிலத்துக்கு முதல்வர்
ஆக முடியுமா.?
கடவுளே அருளைத்தர, பணம் பெற்றுக்கொள்ளும்போது, சாதா
மனிதர்கள் காரியங்களை நடத்திக் கொடுக்க, லஞ்சம் வாங்குவது,
தவறில்லை என்ற மனோபாவம் வளர்ந்து விட்டது. லஞ்சம்
வாங்குவதோ கொடுப்பதோ தவறில்லை என்றும், அது அவமானப்
பட வேண்டிய விஷயம் அல்ல என்றும் சாதாரணமாகக் கருதப்
படுகிறது. Ther is no stigma attached to being corrupt. இது வாழ்வின் இன்றி
யமையாத அம்சம் என்ற எண்ணம் அநேகமாக எல்லோருக்கும் இருக்கிறது. Corruption has become a way of life. இல்லையென்றால் ஊழல்
குற்றங்களுக்குப் பெயர் போய், பல குற்றச்சாட்டுகள் நீதி
மன்றங்களில் நிலுவையில் இருந்தும், எதுவுமே நடக்காதது
போலும், நாட்டையே ரட்சிக்க வந்தவர் போலும் வேடமிடும்
ஒருவர், மக்களின் பெரு மதிப்போடு ஒரு மாநிலத்துக்கு முதல்வர்
ஆக முடியுமா.?
இந்தக்
கலாச்சாரக்கேடு நம் இந்திய சரித்திரத்தை புரட்டினாலேபுரியும் நகரங்களும் நாடும் மாற்றானுக்கு அடிமைப்பட ,
தேவைப்பட்டதெல்லாம் கையூட்டுதான்
கோட்டையின் கதவுகள் திறந்து விடப்படும்
சேனாதிபதிகள் சரணடைவார்கள் இந்தியாவில் நடந்தபோர்களெல்லாம் ஐரோப்பா மற்றும்
பழைய கிரேக்கப் போர்களோடு ஒப்பிடும்போது எப்படிப் பிசுபிசுத்ததுஎன்றுபுரியும் துருக்கியின்
நாதிர்ஷாவுடன் ஆன போரின் உக்கிரம் கடைசி
மனிதன் இருக்கும் வரை நடந்ததாக சரித்திரம் கூறுகிறது இந்தியாவில் ஆயிரக்கணக்கான போர்
வீரர் இருந்தாலும் அவர்களைவெல்ல சில நூறு
பேர்களே போதுமானதாக இருந்தது ஏன் என்றால்
இந்திய படைகளில் கருப்பு ஆடுகள் லஞ்ச லாவண்யதுக்கு மயங்கி மாற்றானின் வெற்றிக்கு வழிவகுத்தனர் இந்திய சரித்திரப்புகழ்
பெற்ற ப்ளாசி யுத்தம் , ராபர்ட் க்ளைவ், மீர் ஜாஃபரை தன் கைக்குள்போட்டுக்
கொண்டதால் வெறும் 3000வீரர்களை வைத்துக் கொண்டு வங்காளத்தை வளைத்துப்போட்டுப்
பிசுபிசுத்துப் போனது
1687-ல் கோல்கொண்டா கோட்டை ரகசியப்பின்
வாசல் திறக்கப்பட்டதால் வீழ்ந்தது
முகலாயர்கள் மராத்தியரையும் ராஜ புத்திரர்களையும்
வெறும்வஞ்சத்தாலும் லஞ்சத்தாலும்
வென்ற கதைகள் நிறைய உண்டு இந்தப் பேரக் கலாச்சாரங்கள் ஏன் கேள்வி கேட்கப்படாமலேயே தழைத்து வருகிறது
இந்தியர்கள் அனைவரும் சமம் என்று எண்ணுவதில்லை எல்லோரும் முன்னேற
முடியும் என்று நம்புவதில்லை ஏன் என்றால்
வாழையடி வாழையாக அவர்கள் அப்படிப்
போதிக்கப்படவில்லை இதனாலேயே ஹிந்து மதமே
பிளவுபட்டு சீக்கியம் ஜைனம்புத்தம் என்று
பிரிந்ததுசாதிமத இன வேறுபாடுகளால் நாம் ஒருவரை ஒருவர் நம்புவதில்லை
இந்தியாவில் இந்தியர்களில்லை
ஹிந்துக்களும்
கிருத்துவர்களும் முஸ்லிம் களும்
இன்னும் பலபிரிவு சார்ந்தோரே இருக்கின்றனர் இதில் வருத்தப்படக் கூடிய விஷயம் என்ன வென்றால் இந்த ஏற்ற தாழ்வுகளெல்லாமே சமூக
மத அங்கீகாரம் பெற்றவை
இதையெல்லாம் எண்ணிப்பார்த்து ஆராயக்கூடிய கல்வி
அறிவு பெரும்பாலோருக்கு மறுக்கப்பட்டுவந்திருக்கிறது இன்னவனுக்கு இன்ன வேலை
என்றுவரையறுத்து அவர்களை கிணற்றுத் தவளைகளாகவே மாற்றிவிட்ட சமுதாயமிது நிலைமை மாறி தற்போது எல்லோருக்கும் கல்வி என்ற நிலைவரும்போது தாழ்ந்திருந்தவர்கள் முதன்
முதலில் கற்றுக் கொள்வது இந்த சமுதாயத்தின் எல்லா சீர்கேடுகளையும்தான்
மன்னன் எப்படி மக்களப்படி தற்காலத்துக்கு தலைவன் எப்படி தொண்டன் அப்படி . கடந்த சமுதாயம் தற்கால சமுதாயம் எல்லாமே
நல்லதை விட்டு அல்லாத வற்றைப் பின்
பற்றுகிறது EXCEPTION CAN NOT BE A RULE
இந்தியாவில் ஒவ்வொருவனும் மற்றவனுக்கு
எதிரி ஆண்டவனைத் தவிர என்று எடுத்துக் கொள்ளலாமா
நல்ல அலசல்.
பதிலளிநீக்குநன்றி மேம்
நீக்குஎன்ன ஒரே எதிர்மறைச் சிந்தனைகளின் தொகுப்பாக இருக்கிறது? எல்லாரும் 'பாசிடிவ்' போடுவதால் ஒரு மாறுதலுக்காக நீங்கள் 'நெகடிவ்' பதிவு போட்டுவிட்டீர்களா?
பதிலளிநீக்கு"அடிமேல் அடி வைத்தால் எங்காவது ஒரு சிறிய மாற்றமாவதுவராதா" - மாற்றம் மெதுவாக வரும். கடந்த 10-20 ஆண்டுகளில் மிகவேகமாக மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. (நல்லதுக்கோ அல்லது கெடுதலுக்கோ)
"கடவுளின் உண்டியலில் வாரிக் கொட்டுபவன் பசித்
திருக்கும் தேவையுள்ளவர்களுக்குக் கொடுப்பதை, வீண் என்றும் பலன் இல்லாதது என்றும் எண்ணுகிறான்" - இதுவும் சமூகத்துக்குத்தானே செல்கிறது. எல்லா மதங்களிலும், இனங்களிலும் இந்தமாதிரி கடவுளர் ஆலயத்துக்குச் செலவழிப்பது இயல்பான விஷயம்.
"ஹிந்து மதமே பிளவுபட்டு சீக்கியம் ஜைனம்புத்தம்" - இதுவும் சரியான பார்வை இல்லை. புத்த மதத்திலேயே நான்குக்கும் அதிகமான பிரிவுகள் உண்டு. சீக்கிய மதத்திலேயும் அப்படித்தான். மனிதர்கள், எப்போவும் குழுவாகவும், அந்தக் குழுவிலும், இன்னும் பல சிறிய குழுவாகவும் இயங்குவது இயல்பான விஷயம்தான்.
இந்தியர்களின் பொதுவான குணம்-சாதுவாக இருப்பது. 'கையூட்டுக்கும்' அதற்கும் சம்பந்தமில்லை.
இதுஒரு எதிர்மறைப் பதிவு அல்ல. இருப்பதைக் கூறும்பதிவு கடவுளர் ஆலயத்துக்குச் செலவழிப்பது இயல்பான விஷயமாகத் தோன்றவில்லை பலன் எதிர்பார்த்துச் செய்வதே பார்வைகள் பலவிதம் என் பார்வையே எழுத்தில் சாதுவாக இருப்பவர்கள் கையூட்டு கொடுப்பதில்லையா வருகைக்கு நன்றி சார்
நீக்குலஞ்சங்களைப் பற்றி சாணக்கியன் அர்த்த சாஸ்திரத்திலேயே எழுதி இருக்கிறான். ரொம்பப் பழைய தவறு மட்டுமல்ல, மாற்ற முடியாததும் கூட.
பதிலளிநீக்குஇரண்டாம் வாக்கு.
அதைத்தான் நானும் என் வரிகளில் எழுதி இருக்கிறேன் நம் இயல்பு என்று வருகைக்கு நன்றி ஸ்ரீ
நீக்கு///எதிர்மறைக் கருத்துகள் ஒரு ஆரோக்கிய சிந்தனைக்கு வழிவகுக்கும்///
பதிலளிநீக்குஅருமை ஐயா இதுவே எனது கருத்தும் இதன் காரணமாகவே எனது பதிவுக்கு வரும் எதிர்மறைக் கருத்துக்களை கண்டு கோபப்படுவதில்லை.
//பணம் படைத்தவன் கடவுளுக்கு பணமும், பொன்னும் மணியும் வாரிக் கொடுக்கிறான். பலனை எதிர்பார்க்காமலா. ?//
நிச்சயமாக எதிர்பார்ப்பது தவறே....
//இந்தக் காரியம் கோவில் சுவர்களுக்கு வெளியில் நடந்தால் லஞ்சம் என்ற பெயரில்தானே அழைக்கப்படுகிறது.//
உலகில் லஞ்சத்தை அறிமுகப்படுத்தியவர்கள் இந்தியர்களான இந்துக்களே... கடவுளுக்கு தேங்காய் உடைத்ததே முதல் வஞ்சமாகும்
//கடவுளின் உண்டியலில் வாரிக் கொட்டுபவன் பசித்திருக்கும் தேவை உள்வர்களுக்குக் கொடுப்பதை, வீண் என்றும் பலன் இல்லாதது என்றும் எண்ணுகிறான் //
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதில் உடன்பாடில்லாதவர்கள் இவர்களே... நான் உடன்பாடானவன்.
மனதில் தோன்றும் எண்ணங்களை தொடர்ந்து எழுதுங்கள் ஐயா
குறிப்பு – நேரமிருப்பின் புதிய பதிவர்களின் தளங்களுக்கு சென்று கருத்துரை வழங்குங்கள் ஐயா தங்களைப் போன்றவர்களின் வரவுகளால் புதியவர்களுக்கு ஊக்கம் பிறக்கும் வலையுலகம் வளரும் நன்றி – கில்லர்ஜி
தமிழ்மணம் - 3
////எதிர்மறைக் கருத்துகள் ஒரு ஆரோக்கிய சிந்தனைக்கு வழிவகுக்கும்/// நான் எதிர்மறைக்கருத்து என்று சொன்னது பின்னூட்டங்களில் வரும் சில கருத்துகளைத்தான் என்னால் வேறு விதமாக எழுத முடியும் என்று தோன்றவில்லை பல பதிவுகளுக்குச் சென்று கருத்து இடுகிறேன் புதிய பதிவர்கள் என்று தேடிச் செல்வதில்லை நான் விரும்பும் தளங்களைதொடர்கிறேன் வருகைக்கு நன்றி ஜி
நீக்குCompletely agree. Idhil marukka edhuvme illai.... manidhanaal manidhan vasadhikku avanE uruvaakkik kondathu.
பதிலளிநீக்குAramba kalathil kadavulukku selutha patta panam, ezhai ezhiyavargaL annadhaanam mudhaliya udhavikaaga paavathirku parikaagamaaga seyya pattirukkalaam. NaaLadaivil idhu vEru manobaavathai valarkkirathu enbathu marukka mudiyathu.
உ ண்மைக்கு மாறாக எதுவும் சொல்லவில்லையே மறுக்க/ கடவுளுக்கு மட்டும் அல்லவே கையூட்டு எதையும் சாதிக்க உபயோகப்படுத்தப் படுகிறது வருகைக்கு நன்றிம்மா
நீக்குசில கோயில்களில் உண்டியல் பணம் நல்ல காரியங்களுக்கு பயன் படும்.
பதிலளிநீக்குஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போர் உண்டு.
மக்கள் சேவையே மகேசன் சேவை என்போரும் உண்டு.
கடவுள் லஞ்சத்திற்கு மயங்க மாட்டார். காலம், நேரம் பார்த்து செயலுக்கு ஏற்ற விளைவாய் இறைவன் வருவார்.
கடவுள் லஞ்சத்துக்கு மயங்கமாட்டார் என்று நினைக்கிறோம் ஆனால் நடைமுறையில் கடவுளையும் விட்டு வைக்கவில்லை. என்பதிவு கடவுளுக்குக் கொடுக்கும்லஞ்சம் பற்றியது மட்டுமல்ல. அதுவே நம் குணமாகி விட்டதே என்னும் ஆதங்கம்தான் வருகைக்கு நன்றி மேம்
நீக்குலஞ்சம் - புறையோடிவிட்ட நோய்.....
பதிலளிநீக்குகோவிலுக்கும் லஞ்சம்! அதைக் கேட்பதும் அங்கிருக்கும் மனிதனே தவிர கடவுள் அல்ல! அவர் யாரிடமும் கேட்கவில்லையே. மனிதனே பேரம் பேசுகிறான்.... எல்லா இடங்களிலும்.
நமது வேலையை நடத்திக்கொள்ள எந்த வழிக்கும் போக நினைக்கிறோம். மனித மனங்கள் ஒவ்வொன்றிலும் அழுக்கு. வேறென்ன சொல்ல.
/லஞ்சம் - புறையோடிவிட்ட நோய்...../ இதைத்தானே பதிவாகக் கூறி இருக்கிறேன் எல்லோரிடமும் இருக்கும் ஆதங்கமே என் எழுத்தில் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு//பணம் படைத்தவன் கடவுளுக்கு பணமும், பொன்னும் மணியும் வாரிக் கொடுக்கிறான். பலனை எதிர்பார்க்காமலா. ?// நிச்சயமாக எதிர்பார்க்கக் கூடாது...என் தனிப்பட்டக் கருத்து இறைவனை இறைவனுக்காகத் தொழுவது....எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ....ப்ரேயர் என்பது ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி தரும் விஷயம் அல்லாமல் இது நடக்கும் என்றோ அது நடக்கும் என்றோ அல்ல என்பது....ஆங்கிலத்தில் சொல்வது போல lOVE GOD! GOD IS LOVE LOVE IS GOD..
பதிலளிநீக்குலஞ்சம் என்பது அழிக்க முடியாத ஒன்று...அதுவும் நம் நாட்டில்...
கீதா
நான் நடப்பைக் கூறுகிறேன் நீங்கள் ஐடியலைக் கூறு கிறீர்கள் ஆங்கிலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு NO LUNCH IS FREE எதிர்பர்ப்பு இல்லாமல் ஏதும்நடப்பதில்லை யாராலும் எப்போதும் லஞ்சம் அல்லது கையூட்டு கொடுக்காமல் இருந்திருக்க முடியாது. அதுதான் சகஜமென்பது போல் தோன்றுவதைத்தான் நமியல்பு என்று சொல்லி இருக்கிறேன் பதிவில் கடவுளுக்குக் கொடுப்பதை லஞ்சம் என ஏற்றுக் கொள்ளாமல்தான் பின்னூட்டங்கள் வருகைக்கு நன்றி
நீக்குநல்ல அலசல் ஐயா
பதிலளிநீக்குபழங்காலத்தில் இருந்தே,கொஞ்சம் கொஞ்சமாய் முளைச் சலவைச் செய்து, இப்பொழுது இரத்தத்திலேயே கலந்து விட்டது ஐயா,
தெய்வத்திடம் ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால்,வேண்டிக் கொள்ளுதலும், வேண்டுதலை நிறைவேற்றுதலுமே ஒருவகை இலஞ்சம்தானே, இதைத்தானே காலம் காலமாய் செய்து கொண்டிருக்கிறோம்
கொஞ்சம் கொஞ்சமாய் மக்களிடம் மன மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் ஐயா,
குறைந்த பட்சம் வாசகப் பதிவர்களிடையேயாவது மாற்றம் வரக் கூடாதா என்பதே ஆசை வருகைக்கு நன்றி சார்
நீக்குஇந்தியா கடந்த வந்த பாதையை அருமையாகச் சொல்லி இருக்கிங்க வாழ்த்துகள் ஐயா. நீங்கள் பதிவு ஏற்றுவதற்குப் பதிலாக தங்கள் குரலில் பதிவு செய்தோ அல்லது ஒளி,ஒலி யாக பதிவு செய்தோ பதிவு செய்யலாம். https://clyp.it, https://www.youtube.com/
பதிலளிநீக்குபதிவுலகில் காணொளி பார்க்க பொறுமை உள்ளவர்கள் குறைவு மேலும் சில தொழில் நுட்பங்கள் எனக்குத் தெரியாது வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி சார்
நீக்குநீங்களே சொல்வது போல திரும்பத் திரும்ப நீங்களும் சொல்லிக் கொண்டும் எழுதிக் கொண்டும்தான் இருக்கிறீர்கள். அதிகாரத்தை கையில் வைத்துள்ளவர்களாலேயே ‘ஊழலின் ஊற்றுக் கண்ணை’ அடைக்க முயலாதபோது அல்லது முடியாத போது நம்மைப் போன்றவர்களால் இவ்வாறு பேசவும் எழுதவும்தான் முடியும். இதற்கும் இப்போது துணிச்சல் வேண்டும்.
பதிலளிநீக்குஒருவன் மீண்டும் மீண்டும் எழுதுகிறானே ஒரு வேளை அதில் சாராம்சமிருக்கலாமென்று வாசகர்கள் எண்ணலாம்தானே சில தவறான எண்ணங்கள் மாற்றப்பட்டாலே நடைமுறையில் மாற்றங்கள் நேரலாம் வருகைக்கு நன்றி சார்
நீக்கு# நாட்டையே ரட்சிக்க வந்தவர் போலும் வேடமிடும்
பதிலளிநீக்குஒருவர், மக்களின் பெரு மதிப்போடு ஒரு மாநிலத்துக்கு முதல்வர்
ஆக முடியுமா.? #
செத்த பிறகும் அவரை கொண்டாடும் கூட்டம் ,எல்லாம் பதவி வெறிதான் காரணம் :)
கொண்டாடும் கூட்டத்தினர் எல்லோருக்கும் பதவி வெறியா ஜி
நீக்குaazamillaha pathivukal kooda ipo padika paduvathillai sir. verum 4 vari copy paste msg than padikirangka. athuku mela pona yarum padipathillai.
பதிலளிநீக்குbribe pathi thani manithar ovvoruvar manathilum matram varavendum. apothan thirunthum.
நம் இயல்பிலேயே ஊழலும் கையூட்டும் ஊறி இருக்கிறது என்பதைத்தானே எழுதி இருக்கிறேன் இந்நிலையில் தனி மனிதர் திருந்துவதற்கான சூழ்நிலை காணப்படவில்லை நாம் எழுதுவது நம் எண்ணங்களைக் கடத்தவே வாசித்து தெளிவுபெறுபவரும் இருக்கிறார்கள் வாசிக்காமல் போனால் யார் என்ன செய்ய முடியும் நஷ்டம் அவர்களுக்கே வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்குஅருமையான அலசல் ஐயா...
பதிலளிநீக்குதாங்கள் பாணி எழுத்தில் என்ற மாற்றமும் இல்லை.. ஒருவேளை எழுதுவதற்குச் சோம்பலாக இருக்கலாம்... என்னைப் போல்...:)
மற்றபடி எப்பவும் போல்தான் எழுதுகிறீர்கள்... இந்தப் பதிவில் கூட மெனக்கெடல் தெரிகிறது...
சோம்பல் ஏதும் இல்லை குமார் எழுதுபொருள் தெரிந்தபின் வார்த்தைகள் வந்து விழ வேண்டும் இல்லாவிட்டால் எழுத முடிவதில்லை வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு//எழுதுபொருள் தெரிந்தபின் வார்த்தைகள் வந்து விழ வேண்டும் இல்லாவிட்டால் எழுத முடிவதில்லை..//
பதிலளிநீக்குஒரு யோசனை. முடியுமா பாருங்கள்.
உங்களின் சில பதிவுகளுக்கு விஷயத் தெளிவோடு வரும் பின்னூட்டங்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் நீங்கள் பதிலளித்து விலகி விடுவதாக எனக்கு ஒரு குறை உண்டு. அதனால் நீங்கள் எழுதும் விஷயங்களை முழுமையாக தொடர்ந்து சிந்திக்கவும் முடியாமல் போகிறது.
வரும் பின்னூட்டங்களுக்கு உங்கள் பின்னூட்ட பதில்களில் தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் இல்லை. அந்தந்த பின்னூட்டங்களுக்கு உங்கள் மனதில் தோன்றும் பதில்களை கோர்வையாக பதிவாக்கினாலே தொடர்ந்து பல பதிவுகளில் ஒரு விஷயத்தையேனும் பேசித் தெளிவு கண்ட உணர்வு ஏற்படும். நீங்களும் அதே விஷயத்தை மீண்டும் மீண்டும் பதிவாக்காமலும் இருக்கலாம்.
உதாரணத்திற்கு உங்களின் சமீபத்திய 'கேள்விகள், கேள்விகள்' பதிவு. இப்பொழுது கூட உங்களின் பதிலுக்கான பின்னூட்டம் ஒன்று அங்கு காத்திருக்கிறது.
இப்படித் தொடர்ந்து வரும் பின்னூட்டங்களுக்கான உங்கள் பதிலை பதிவாக்கினால் மீண்டும் அதே விஷயத்தைத் தொடர்ந்து தெளிவு பெற வழியேற்படலாம்.
எதைப் பற்றியும் எழுத நீங்கள் ஆசைப்படுவதால் தான் இந்த யோசனையே. இந்த யோசனையும் உங்கள் யோசனைக்கே.
/உதாரணத்திற்கு உங்களின் சமீபத்திய 'கேள்விகள், கேள்விகள்' பதிவு. இப்பொழுது கூட உங்களின் பதிலுக்கான பின்னூட்டம் ஒன்று அங்கு காத்திருக்கிறது.
நீக்குஇப்படித் தொடர்ந்து வரும் பின்னூட்டங்களுக்கான உங்கள் பதிலை பதிவாக்கினால் மீண்டும் அதே விஷயத்தைத் தொடர்ந்து தெளிவு பெற வழியேற்படலாம்./ அதே பதிவுக்கு வேறு சில பின்னூட்டங்களு மிருந்தன. சிலர் உங்கள் கேள்விக்கு பதில் கூற முயன்றீருக்கிறார்கல் நானே சர்ச்சையைத் தொடர வேண்டும் என்பதுதான் உங்கள் கருத்தா
இப்படியான பதிவுகள் சர்ச்சைகளைக் கிளப்பும் தான். சர்ச்சைகளை ஆக்கபூர்வமான விவாதங்கள் ஆக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும்.
பதிலளிநீக்குநிச்சமாக பொழுது போக்கிற்காக இல்லை. எதையோ எதிர்பார்த்துத் தானே இந்த மாதிரி பதிவுகளை எழுதுகிறீர்கள்?
அந்த எதிர்ப்பார்ப்பு பொய்க்கக்கூடாதில்லையா?
பொதுவாக என் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள் வாசிப்பவரின் பதிலை அல்லது எண்ணத்தைத் தாங்கி வரும் அதில் நான் ரியாக்ஷனைத் தெரிந்து கொள்வேன் பின்னூட்டங்களுக்கு என் பதிலையும் கொடுத்து விடுவேன் மேலும் மேலும் அதில் வாதிக்க விரும்புவதிலை எதிர் பார்ப்பு என்பது என் கருத்து எந்த அளவுக்குப்போய் சேறு கிறதுஎன்பதைத் தெரிந்து கொள்ள மட்டும் தான் என் எண்ணங்களைத் திணிக்க அல்ல. என்கருத்து சரியாகப் புரிந்து கொள்ளப்படாதபோது அதையே மீண்டும் வலியுறுத்தி எழுதுகிறேன் பலரது ரியாக்ஷன்களில் மாற்றமும் கண்டிருக்கிறேன் நான் வலியுறுத்தி உள்ள கருத்துகள் தாமதமாக புரிந்து கொள்ளப்படுவதையும் கண்டிருக்கிறேன் அதைத்தான் அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்கிறேன்
நீக்குஏன் உங்கள் எழுத்தின் வீரியம் குறைந்துவிட்டதோ என நீங்களாகவே சந்தேகப்படுறீங்க?.. அப்படி எதுவும் இல்லை.. மனதில் தோன்றுவதை எழுதுங்கள்.. ஆனா யாரின் மனமும் புண்படாதபடியும் பார்த்துக் கொள்ளுங்கோ..
பதிலளிநீக்குஎனக்கு அரசியல் பிடிப்பதில்லை.. அதனால் அரசியல் பதிவுகள் எனில் நான் பெரும்பாலும் படிப்பதில்லை...
என் எழுத்து யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல சில பகுத்தறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கைகளுக்கு எதிராக எழுதுவேன் அதைப் பலரும் விரும்புவதில்லைஎனத் தெரிகிறது எனக்கும் அரசியல் பிடிக்காது இருந்தாலும் சில பதிவுகளில் என் எண்ணங்களை எழுதி இருக்கிறேன் வருகைக்கு நன்றி அதிரா. எங்கே உங்கள் நண்பிக்கு விடுமுறை இன்னும் முடியவில்லையா
நீக்குஆரம்பத்தில் உள்ள விறுவிறுப்பு தற்போது உங்கள் எழுத்தில் இல்லை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் ஐயா. ஆனால் எங்களுக்கு அப்படித் தோன்றவில்லை. ஒவ்வொரு பதிவும் ஏதோ ஒரு நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாங்கள் உணர்கிறோம்.
பதிலளிநீக்குஎன் ஆரம்ப எழுத்துகளைப் படித்தவர்களுக்கு இது தெரியும் எனக்கு சரியெனப்படுவதை இன்னும் எழுதுகிறேன் முக்கியமானவைதான் வருகைக்கு நன்றி சார்
நீக்கு//இந்தியர்கள் கடவுளிடமே பேரம் பேசி ( TRANSACT BUSINESS.) கடவுளுக்குப்பணம் கொடுக்கிறோம். அதற்குப் பலனை எதிர்பார்க்கிறோம்.//
பதிலளிநீக்குஒரு நியூசிலாந்துகாரர் சொல்கிறார் “Religion is transactional in India. Indians give God cash and anticipate an out-of-turn reward.
There are no Indians in India, there are Hindus, Christians, Muslims and what not. This division evolved an unhealthy culture;The inequality has resulted in a corrupt society, in India every one is thus against everyone else, except God and even he must be bribed.”
அவர் சொல்வதற்கு நாம் வருத்தப்படக்கூடாது. ஏனெனில் உலகிலேயே least corrupt நாடு நியூசிலாந்து தான்.
இந்தப் பதிவிலேயே இந்தக் கருத்துகள் சொல்லப்பட்டு இருக்கின்றன நான் நியூசிலாந்து காரர் சொன்னதை படிக்கவில்லை இந்தப்பதிவே என் ஒரு பழையபதிவின் சாராம்சம் என்று கூறி இருக்கிறேன் எனக்கு இது நம் இயல்பாகவே படுகிறது வருகைக்கு நன்றி ஐயா
நீக்குதங்களது கருத்தை ஆதரிப்போர்களும் இருக்கிறார்கள் என்பதற்காகவே அந்த நியூசிலாந்துக்காரர் சொன்னதை தந்திருந்தேன்.அவ்வளவே. .
நீக்குஎனக்கு நான்நியூசிலாந்துகாரர் சொன்னதைப் ப்டித்து எழுதியதல்ல என்பதை க்ளியர் செய்யத் தோன்றியதை எழுதினேன் ஐயா
நீக்குSorry about the English response,Sir. I dont have tamil fonts here.
பதிலளிநீக்கு***G.M BalasubramaniamAugust 20, 2017 at 7:31 PM
கடவுள் லஞ்சத்துக்கு மயங்கமாட்டார் என்று நினைக்கிறோம் ஆனால் நடைமுறையில் கடவுளையும் விட்டு வைக்கவில்லை.***
I had an argument with a christian friend who is in US,a long time ago.
He said no matter how good you are you must accept "GOD" as the greatest, then only you will get to Heaven.
My argument was, I am going to be as good as you are or even better than you are but only thing I would not do is, I would not pray God and accept that God is great or anything of that kind. But I am no worse than you are as for as "conduct" "caring" "helping others" are concerned., Will I go to Heaven, then?
He said, "NO"! You must believe in Jesus and accept that he is great and beg him to forgive your sins.
I said I am not going to do that.
I would rather go to Hell and have an interesting life rather than going to Heaven and live with boring people like you! lol
People bribe God and please God to help them. God should not care one worships him or not if he is great. He should only look at how good a person is not how much he pleases him! :)
Remember: God is only Human's imagination. He is going to exist they way one imagines. For some he never exists. Yeah, "non-existence" is a way of existence of God too! lol
அன்பின் வருண், நான் முன்பு எழுதி இருந்த கடவுள் அறிவா உணர்வா என்னும் பதிவுக்கு நண்பர் காஸ்யப பின்னூட்டமிட்டிருண்டார் அதை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன் IT MIGHT INTEREST YOU
நீக்கு/மதிப்பிற்குரிய ஜீ.ஏம்.பி அவர்களே! கடவுள்-அறிவா? உணர்வா?என்ற கெள்வியையே கெள்விக்கு உட்படுத்துகிறேன்!" கடவுளே இல்லை! அது ஒரு concept " என்பவருக்கு இந்த கேள்வி தேவையில்லை! கடவுள் என்பதுகருத்தியல்! கருத்து உங்கள் நினப்பு ! இவை மூளையின் நடவடிக்கை ! function of brain ! a few micro miilli of protein,nuron,electric charge etc ! pure matter ! matter is primary ! பொருள் முதல் வாதம் ! பொருள் இல்லையேல் எதுவும் இல்லை ! கடவுள் உண்டு,இல்லை என்று நினைப்பதற்கு மனிதன் வேண்டுமே ! அறிவு உணர்வு என்பதெல்லாம் அதன் பிறகு தானே !உணர்வு உடான்ஸ் என்று எழுதிய அப்பாதுரை சரி என்றே கருதுகீறேன் ! ஏங்ஜெல்ஸ் எழுதிய "இயற்கையின் தர்கவியல்" என்ற நூலில் விரிவாக உள்ளது! அப்பாதுரை எங்ஜெல்ஸை ஏற்கமாட்டர் ! விஷயம் அவர் ஏற்பதோடு நிற்பதில்லையே ! மிகவும் ஆழமான இடத்தை தொட்டிருக்கிறீர்கள ! விவவதிக்க வேண்டியது ,விளக்க வேண்டியது நிறைய உள்ளது ! கடவுளை ஏற்றுக் கொண்டவருக்கு உங்கள் கருத்து intelectual level ல் தடவிக் கொடுக்கலாம்! அறீவியலில் உரசிப்பார்க்கும் போது கொஞ்சம் சிரமப்படும் ! உங்கள்கருத்தை பலமாக ,எதிர்க்கிறொனோஎன்று தோன்றுகிறது ! மன்னித்து அருளுங்கள்! ---காஸ்யபன்!
நன்றி சார். :)
பதிலளிநீக்கு***நாம் செய்யும் தவறுகளுக்குக் கடவுளைச் சுட்டிக்காட்டும் நாத்திகவாதிகள் மறைமுகமாகக் கடவுளை நம்புவதையே தெளிவாக எடுத்துக் காட்டுகிறது அல்லவோ?***
உங்க அதே பதிவில், ஒருவர் நாத்திகவாதிகளுக்கும் கடவுள் நம்பிக்கை இருக்குனு முடிவுக்கு வந்துவிட்டார்.
அடுத்து விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும், பிறந்த பச்சைக் குழந்தைக்கும் கடவுள் நம்பிக்கை உண்டுனு சொல்லுவார். இல்லைனு எப்படி இவரிடம் யாரும் நிரூபிக்க முடியும்?. It is not worth spending lots of time on convincing people who does not want to open up. அவர் "கற்பனை" அதுனு போக வேண்டியதுதான்.:)
சுட்டியையும் படித்து மீள் வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி சார்
நீக்கு