புதன், 9 ஆகஸ்ட், 2017

கேள்விகள் கேள்விகள்


                                       கேள்விகள்  கேள்விகள்
                                       -------------------------------------
வழக்கம் போல் எதையோ நினைத்து எழுத அமர்கிறேன்  என்  எண்ணங்களே  என் எழுத்தை நகர்த்திச் செல்கிறது பழைய பதிவு ஒன்றில் நீ நாத்திகனா ஆத்திகனா என்று கேட்டு எழுதி இருந்தேன் எனக்கு நான் ஆத்திகனா நாத்திகனா என்னும் சந்தேகம்  வருவதுண்டு என் பதிவுகளைப் படிப்போர் சிலருக்கு  அந்த சந்தேகம் எழுவதுண்டு இதற்கு விடை காண்பதென்றால் நாத்திகன்  யார் ஆத்திகன் யார் என்று தெரிய வேண்டும் கோவில்களுக்குப் போகிறவன் ஆத்திகன் என்றால் நான் ஆத்திகன்  பல கோவில்களுக்குச் சென்றவன் ஆனால் கோவில்களுக்குச் சென்று எதையும் வேண்டிக் கொள்பவன் அல்ல நம் வழிபாட்டு முறைகளையும்  கோவில்களின் கட்டுமானத்தையும்கண்டு வியப்பவன் கோவில்களுக்குச் சென்று அனிச்சையாகத் தொழுபவர்களைக் கண்டு எனக்கு வியப்பு வரும் வாய் வார்த்தையில் எனக்கு நல்லது செய் என்று வேண்டும் போது மனம் எவ்வளவு லயிக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்பவன்  என்  தந்தை வழிப் பாட்டி தினமும்  மாலைகளை உருட்டி தெய்வ நாமம் சொல்பவர்  அதிலும்கணக்குப் பார்க்கவே இந்தமாலை உருட்டுதல் ஐயனே உம்முடைய அழகிய பாதத்தை நான் அர்ச்சித்திருப்பதும்  எப்போ  என்று வாய்விட்டுப் பாடுவார் அவர் ஆத்திகர்தான் ஆனால் என்ன … ஏது செய்கிறோம் என்று தெரியாமல் மெகானிகலாக தெய்வம் தொழுவார்  இம்மாதிரிப் பலரையும்  கண்டிருக்கிறேன்  சிலர் தெய்வச் சிலை  முன்  நின்று கடவுளிடம்நியாயம் கேட்பார்கள் இவர்கள் எல்லோருக்கும் பொதுவான விஷயம்  ஏதோ நம்பிக்கை. அது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் இந்த நம்பிக்கைகள் மூடத்தனமாக (இப்படிச் சொன்னாலேயே ஆத்திரமடையும் ஆத்திகர்களும்   உண்டு) வெளிப்படும்போது கேள்வி கேட்கிறேன்  
இம்மாதிரிக் கேள்விகளுக்கு விடைகாண்முடியுமா என்பதே சந்தேகம்எதுவானாலும்  அதற்கும் ஏதாவது காரணம் இருக்க வேண்டுமல்லவா  விடை காண முயன்று எழுதிய பதிவே  நான் நாத்திகனா ஆத்திகனா என்பது பார்க்க பதிவு  http://gmbat1649.blogspot.com/2010/11/blog-post_13.html
நானும்  பல பதிவுகள் எழுதி இருக்கிறேன்  பெரும்பாலும்முருகனைப் பற்றியதே கேட்ட கதைகளின் கருவே கதைகளில்  இருக்கும்  ஒரு பதிவு உன்னை வணங்குகிறேன்  என்னும் தலைப்பில் எழுதி இருந்தேன்  அந்தப் பதிவைப் பாட்டாகப் பாடி மகிழ்வித்தார் சுப்புத் தாத்தா

பாடல் வரிகள் கீழே 

ணு அண்டம் பேரண்டம் அனைத்தையும்
இயக்கும் சக்தியே உன்னை நான் வணங்குகிறேன்.
உருவமும் பெயரும் ஏதுமில்லா உன்னை என்ன சொல்லி
போற்றுவேன் .மலையத் துவசன் பெற்ற பெரு வாழ்வென்பேனா-
புவி மடந்தை- நாமருவிய கலை மடந்தை- ஜெய மடந்தை என்பேனா-
சர்வசக்தி பொருந்திய  சர்வாங்க சுந்தரி என்பேனா--நான்
அவலத்தில் அழுந்தும்போது என் நாவினில் வந்தமரும்
முருகனும் நீயே,- கண்ணனும் நீயே- ஏனையோர் துதிக்கும்
எல்லா நாமங்களும் கொண்டவளும் நீயல்லவா- நீ என்
அப்பனல்லவா, அம்மையல்லவா, கண் துஞ்சாது எனைக்
 காக்கும் தாரமல்லவா.- யாதுமாகி நிற்கும் தேவியே

கலை மகளே, அலை மகளே, மலைமகளே
உயிருள்ள,உயிரற்ற, அனைத்திலும் இருப்பவளே,
எனை ஈன்ற தாயின் தாயே எல்லாம் நீயே
உன்னை வணங்குகிறேன் காத்தருள்வாயே 
 அவரிடம்  ஒரு முறை நான்  எழுதி இருந்த மொழிபெயர்ப்பான மாத்தாடு மாத்தாடு மல்லிகே  எனும் பதிவை ராகத்துடன் பாடக் கேட்டிருந்தேன்  அம்மாதிரிப்பாடல்களை  பாட இயலாது என்று மறு தளித்து விட்டார்  அது ஆண்டவன் குறித்த பாடல் இல்லையே

எப்படியும்  ஒரு கேள்வி எழுகிறது கடவுள் என்பது உணர்வா அறிவா என்னும்  சந்தேகம் வர அதைப் பதிவாக்கினேன்  ஒரு பதிவர் அது உணர்வும் அல்ல அறிவும்  அல்ல உடான்ஸ் என்று பின்னூட்டமிட்டிருந்தார்
கடவுள் அறிவா உணர்வா பதிவு இங்கே    

                                     


                   

 





52 கருத்துகள்:

  1. அவரவருக்குப் பிடித்த மாதிரிப் பொருள் கொள்ளலாமே! கடவுள் எப்படியாக வேணாலும் இருக்கட்டும்! இருப்பே ஓர் நம்பிக்கையைத் தரும் அல்லவா! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரவருக்குப் பிடித்தமானபடிபொருள் கொள்வதில் தவறு இல்லைஏதாவது லாஜிக் இருக்க வேண்டுமல்லவா வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. சுப்புத் தாத்தா அவர்களின் முயற்சியைப் பாராட்டுகிறேன். அதைக் கேட்கும்போது, கே.பி.சுந்தராம்பாள் பாடிய பாடல் பழம் நீயப்பாதான் என் மனதில் ஓடியது (ஏனிப்படி தண்டு கொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்....) எனக்கு ராகம்லாம் கண்டுபிடிக்கத் தெரியாது. ஒத்த (Equivalent) பல பாடல்களைச் சொல்லத் தெரியும்.


    "நம்பிக்கைகள் மூடத்தனமாக" - இது அவரவர் பார்வையைப் பொருத்தது. பேரன் கீழே விழுந்தால், உடனே தரையை ஒரு அடி கொடுத்து, 'ஏன் அவனை கீழ விழவச்ச' என்று தாத்தா சொல்லும்போது, பேரன் அழுகையை நிறுத்துகிறான். தாத்தா முட்டாள் என்று சொல்லமுடியுமா? எனக்கு 'கோவிலுக்குப் போவது' சரியாகத் தோணுது, அதே சமயம் வாயில் கம்பி குத்தி அலகு எடுப்பது சரியில்லைனு தோணுது. ஆனா அது அவர்களோட நம்பிக்கை. இது ஒருபுறம் இருக்க, நான் முழுமையான 'நாத்திகக்'குடும்பத்தை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. அதேபோல, நிறைய பதின்ம வயதுடையவர்கள் கடவுள் நம்பிக்கைக்குறைவோடு இருப்பதையும் பின்பு மாறுவதையும் பார்க்கிறேன். 'FAITH' னு சொல்லியாச்சுனாலே அங்க 'தனக்குத் தானே' கேட்டுக்கலாமே ஒழிய பிறரைக் கேள்விகேட்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுப்புத்தாத்தாஅவருக்குப் பிடித்திருந்தால் பாடிவிடுவார் எனக்கு லேபி சுந்தராம்பாள் பாடியது நினைவுக்கு வரவில்லை / பேரன் கீழே விழுந்தால், உடனே தரையை ஒரு அடி கொடுத்து, 'ஏன் அவனை கீழ விழவச்ச' என்று தாத்தா சொல்லும்போது, பேரன் அழுகையை நிறுத்துகிறான். தாத்தா முட்டாள் என்று சொல்ல முடியுமா/ குழந்தயினறியாமையைப் பயன் படுத்துகிறர் தாத்தா அதுபோல்தான் வளர்ந்த குழந்தைகளின் அறியாமை பயன்படுத்தப்படுகிறதுfaith னு சொல்லியாச்சுனாலேயே பிறாஅரைக் கேள்வி கேட்க முடியாதுஅப்படி என்னால் இருக்க முடியவில்லை அறுஇயாமை இருளை விலக்குங்கள் என்றுதான் கூறு கிறேன் உங்கள் கருத்டு எதிர்பார்க்கப்பட்டதே வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
    2. நிறையவே தட்டச்சுப் பிழைகள் மன்னிக்கவும்

      நீக்கு
    3. ஜி.எம்.பி சார்... 'அறியாமை' - இதை மதத் தலைவர்கள்தான் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு நான் செய்வது சரியாகத் தெரியும், மற்றவர்கள் செய்வதில் பிழை கண்டுபிடிக்க முடியும். இன்னொன்று, நம் வாழ்'நாளில் எல்லாவற்றையும் அலசி ஆராயமுடியாது. அதனால பெரும்பாலான விஷயத்துல நாம பெரியவங்க செய்ததைத் தொடர்கிறோம் (சின்ன வயசுலேர்ந்து). அப்புறம் மெச்சூரிட்டி வளர வளர, எது சரி எது தேவையில்லை என்று நாமாகவே புரிந்துகொண்டு அதன்படி நடக்கணும்னுதான் நான் நினைக்கிறேன். இது அவரவர் உணர்ந்து நடக்கணும், நாம நம்மைத் திருத்திக்கொள்வதற்கே ஆயுள் போதாது, இதுல மற்றவர்களை அதுவும் நமக்கே தெரியாத ஆன்மீகத்தில் திருத்தவேண்டும்?

      என் குழந்தைகளும் (பெண்தான் தைரியமாகக் கேட்பா) கேள்வி கேட்கும் பெரும்பாலும் நமக்கு விடை தெரியாது, ஏனென்றால் நாம கேள்வி கேட்டுக்கொள்வதில்லை). அதனால கன்வின்சும் செய்யமுடியாது.

      'கடவுள் உண்டா இல்லையா' - இதை ஒவ்வொருவரும் தனக்குத் தானே கேட்டுக்கொண்டு, தன் அனுபவத்தின் மூலமாகவே உணர முடியும். இன்னொருவர், மற்றொருவரை கன்வின்ஸ் செய்ய இயலாது.

      நீக்கு
  3. தாத்தாவின் பாடல் கேட்டேன் கே.பி.எஸ் பாடலின் மெட்டு போன்று அருமை.

    கடவுள் இல்லை என்பது உறுதியாக மனிதனுக்கு தெரிந்து விட்டால் உலகில் இன்னும் அக்கிரமங்கள் கூடிப்போகும் ஐயா.

    ஆகவே நம்புவோரும், நம்பாதவரும் அவரவர் வழியில் பயணிப்பதே நலம்.

    இணைப்புகளுக்கு செல்கிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர் ஜி எனக்கு தாத்தாவின் பாட்டை ரசிக்க முடிந்தது மற்றபடி கேபிஎஸ்ஸின் மெட்டு தெரியவில்லை இப்போது மட்டும் அக்கிரமங்கள் குறைந்து விட்டதா யார் எந்த வழியில் வேண்டுமானாலும் பயணிக்கட்டும் ஆனால் வெளிச்சத்தில் செல்லட்டும் என்பதே என் விருப்பம் வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  4. கடைசி சுட்டி கடவுள் - அறிவா ? உணர்வா ? சென்று படித்தேன் ஐயா

    ஏற்கனவே கருத்துரை இட்டு இருக்கிறேன் 2015-ல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உனக்குள் இருக்கும் கடவுளைவிட்டு வேரெங்கு ம் தேடவேண்டாம் என்பதே மையக் கருத்து அப்போது பாராட்டி இருக்கிறீர்கள்

      நீக்கு
  5. தெய்வம் இருப்பது எங்கே ?

    http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post.html

    பதிலளிநீக்கு
  6. சுட்டிக்குச் சென்றேன் டிடி உனக்குள் தெய்வம் இருக்கிறது என்ப தை ஓங்கி ஒலிக்கச் செய்வதே என்பதிவின் நோக்கம் வருகைக்கு நன்றி டிடி

    பதிலளிநீக்கு
  7. துளசி : தாத்தா அவர்களின் பாட்டு நன்றாக இருக்கிறது. ஸார் கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் நம்பிக்கை தானே. எனக்கு நம்பிக்கை உண்டு. எல்லாமும் ஏதோ ஒரு கணக்குப் படிதான் நடக்கிறது என்ற நம்பிக்கையும் உண்டு.

    கீதா: ஸார் நம்பிக்கை தானே வாழ்க்கை! நம்மை மீறிய சக்தியை நம்புவது என்பதும் அந்த நம்பிக்கை தானே பாலமாக அமைகிறது. அதுவே ஒரு பாஸிட்டிவ் எனர்ஜிதானே! அந்தத் தெய்வம் நம் மனதிலும் இருக்கிறதுதான். பாசிட்டிவ்வாக இருந்தால். நெகட்டிவாக இருந்தால் மனம் எப்போதும் தவறாகவே சிந்திக்கும். அதில் அந்தச் சக்தி இருக்க வாய்ப்பில்லை ஸார். (இதைத்தான் ஒரு சிலர் சாத்தான் என்று சொல்லுகிறார்களோ??!!)

    ஆத்திகம் என்பதும் நாத்திகம் என்பதும் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டவை என்பதே என் கருத்து.

    நான் சடங்குகளைப் பின்பற்றுகிறேனோ இல்லையோ நம்மை மீறிய சக்தியை முழுவதுமாக நம்புகிறவள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @துளசி தாத்தாவின் பாட்டு பற்றிச் சொன்ன நீங்கள் பாடு பொருள் பற்றிக் கூறவில்லையே நம்பிக்கைகளின் தரம்
      பற்றியும் கூறவேண்டுமல்லவா
      @கீதா தலையில் தேஹ்க்காய் எறிய வைப்பதும் எச்சில் இலையில் புரள்வதும் அலகு குத்தித்தொங்குவதும் பாம்புப் புற்றுக்கு பால் ஊற்றுவதும் நம்பிக்கையின் அடிப்படையில் தானே இம்மாதிரி நம்பிக்கைகள் பாசிடிவ் எனர்ஜி என்று சொல்ல வருகிறீர்களா ஆத்திகம் நாத்திகம் இரண்டுமே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவையே நம்மை மீறிய சக்திகள் சடங்குகளால் உருக்கொண்டவையோ என்னும் சந்தேகம் வருகிறது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி கீதா

      நீக்கு
  8. கேள்விகள்... இப்படி நமக்கு நாமே கேட்டுக்கொண்டு தான் பல விஷயங்கள் புரிந்து கொள்ள முடிகிறது! சுப்புத்தாத்தா பாடிய காணொளி நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாக்ரடிஸ் அன்றே சொன்னாராம் கேள்விகளாஐக் கேட்டு தெளிவு பெறு என்று சுப்புத்தாத்தா பாடியது என் வரிகளுக்கு அதன் பொருளே அவரைப் பாட வைத்தது

      நீக்கு
  9. நீங்கள் சொல்லுவதை முற்றிலும் ஒத்துக் கொள்கிறேன் ஸார் ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வம் இருக்கிறது என்பதை. ஆனால் நம் எண்ணங்கள் நல்லதாக, பாசிட்டிவாக இருந்தால் மட்டுமே அத்தெய்வம் நம்முள் இருக்கும். இல்லை என்றால் நாம் மிருகத்தனமாகத்தான் நடந்து கொள்வோம். ஒரு சிறு உதாரணம். ஒருவனுக்கு அதிகமாகக் கோபம் வருகிறதென்றால் அவனுள் தெய்வம் இருக்கிறது என்று நீங்கள் எப்படிச் சொல்லுவீர்கள்? அவன் அக் கோபத்தை அடக்க அடக்க மனம் பண்படுகிறது. அப்போது அவனுள் நலல்து மலர்கிறது. சக்தியும் அதிகமாகிறது. அவன் நல்லதை நோக்கிப் பயணிக்கிறான் என்று சொல்லலாம் இல்லையா...அவனுள் இருக்கும் தெய்வ சக்தி வலுப்பெறுகிறது என்று கொள்ளலாம் இல்லையா...
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெய்வம் என்று நீங்கள் சொல்வது ஏதோ உருவத்தை மனதில் கொண்டா அல்லது சில குணங்களைக் கொண்டா, நான் எழுத வந்ததும் அத்சைப்பிறர்புரிந்து கொள்வதும் எனக்குப் பிடிபடவில்லை. கடவுள் அறிவா உணர்வா என்னும் பதிவின் கடைசி வரிகளில் நான் சொல்லி இருப்பதை
      கவனத்தில் கொண்டீர்களா மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. நான் அறிந்தவரையில் நீங்கள் ஆத்திகர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் புரிதலை மதிக்கிறேன் ஆனால் பதிவு அதுபற்றியதா விடை காண முயலும்கேள்விகள்பல இருக்கிறதே நன்றி சார்

      நீக்கு
  11. நான் அறிந்தவரையில் நீங்க ஒரு 90% நாத்திகர். 10% ஆத்திகர். அதுவும் நம் கலாச்சரத்தில் இருப்பதால் கோயில் குளம்னு போறீங்க. It is mainly for "fun" and for social interactions. மற்றபடி மனதார உங்களால் கடவுளை (இருப்பை) உணரவோ நம்பவோ முடியவில்லை என்பது என் கணிப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு உண்மையைச் சொல்லட்டுமா வருண் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது சர்ச்சைகுரிய விஷயம் ஆனால் கடவுளின் பெயரால்நடக்கும் பலசெயல்கள் புரிபடாமல் கேள்விகளாக இருக்கிறது அதுதான் என் பலபதிவுகளில் வெளிப்பாடாக இருக்கிறது

      நீக்கு
  12. கடவுளை உருவாக்கியது மனிதந்தான். விலங்குகள் எல்லாம் கடவுளை வழிபடுவதில்லை. கடவுள் இல்லாமலே நிம்மதியாக வாழ்கின்றன. மனிதனின் ஆறாவது அறிவின் விளைவே கடவுள் என்கிற "கற்பனை". மனிதனுக்கு கடவுள் தேவைப்படுகிறார். அதனால் உருவாக்கிக்கொண்டான். கடவுள் இருக்கிறாரா என்றால். "இல்லை". கடவுள் தேவையா? ஆமாம் மனிதனுக்கு கடவுள் தேவைப்படுகிறார், அதில் சந்தேகமே இல்லை. அதனால் கடவுளை அவன் தேவைக்காக உருவாக்கிக்கொண்டான். மனிதன் கற்பனை கடவுள் என்பதால் அவருக்கு "அல்லா", ஜீசஸ், சரஸ்வதி, லக்ஷ்மி, சிவா, முருகன் என்று பலவடிவங்கள் அல்லது பல கற்பனை உருவங்கள் அல்லது "உருவமில்லா உருவம்" ஒண்ணு. கடவுள் அறிவா? இல்லை உணர்வா? என்னைக்கேட்டால் கடவுள் மனிதனின் அற்புதமான கற்பனை. Because he/she could solve any unsolved or non-resolvable problem by that "imagination". His imaginative God became a solution for any problem he faces in her life! Who cares whether He exists of not, he solves humans problems! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வலை உலகுக்கு வந்தபுதிதில் எழுதிய பதிவு நான் நாத்திகனா ஆத்திகனா என்பது கடவுளின் எவொலூஷன் பற்றி நான் நினைத்ததை அஙே பதிவாக்கி இருக்கிறேன் சுட்டிக்குச்சென்று பொஅடித்தால் தெரியும் வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  13. கடவுள் என்பதே ஒரு உணர்வு. அதை நம் மனமே உணர்ந்து கொள்ளும்.

    அறிவுப்பூர்வமாய் ஆராய்ச்சி செய்தால் கடைசியில் எல்லை இல்லாப் பெருவெளியில் இருப்போம்.
    உண்டு என்றால் உண்டு. இல்லை என்றால் இல்லை. அவ்ளோதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்மாதிரி வெகு எளிதாக எடுத்துக் கொள்வதே நாம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள முயலவில்லை என்பதைக் காட்டுகிறது மேம் கோமதி அரசின் பின்னூட்டத்தையும் பார்க்க வேண்டுகிறேன் வருகைக்கு நன்றி மேம்

      நீக்கு
  14. அறிவேதான் தெய்வம் மென்றார் தாயுமானவர்
    அகத்ததுதான் மெய்ப் பொருள் என்றெடுத்துக் காட்டி
    அறிவுதென அறிவித்தார் திருவள்ளுவர்
    அறிவறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
    அறிஞர் திருமூலர் அவ்வறிவில் ஆழ்ந்து
    ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்
    அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தார்
    அதை வாழ்ந்து காட்டினோர் நினைவு கூர்வோம்.
    -- வேதாத்திரி மகரிஷி.

    அறிவைக் கொண்டு ஆராய்வது மெய்ஞ்ஞானம்.
    நீங்கள் உங்கள் அறிவு சொல்வதை கேட்பதால் மெய்ஞ்ஞானி.
    சுப்பு சார் பாடல் அருமை.




    பதிலளிநீக்கு
  15. ஆத்திகர்--நாத்திகர் என்ற வார்த்தைகளே பொருளற்ற வார்த்தைகள்.

    தமிழில் கிட்டத்தட்ட வார்த்தைகளை வைத்துக் கொண்டே அதற்கான பொருளைச் சொல்லி விடலாம்.

    சொல்லப்போனால் ஒரு செயலையோ பொருளையோ வைத்துத் தான் தமிழில் பல வார்த்தைகள் உருவாகி இருக்கின்றன.

    சரிதானே?.. அப்படியென்றால் நாத்திகன்-- ஆத்திகன் என்ற வார்த்தைகளுக்குப் பொருளென்ன?..

    ஆத்திகர், நாத்திகர் இந்த வார்த்தைகள் எப்படி உருக் கொண்டன?.. யார் உருவாக்கினார்கள்? அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தான் என்ன?

    ஆத்திகர்-- நாத்திகர் இந்த வார்த்தைகளுக்கு ஏதேனும் பொருள் இருந்தால், நீங்கள் கற்பித்துக் கொள்ளும் பொருளை எப்படிப் பெற்றீர்கள் என்று சொல்லி விட்டால்
    கடவுள் பற்றிய குழப்பமும் தீர்ந்து விடலாம் என்று எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஜீவி பொருள் இல்லாத வார்த்தைகளுக்கு பொருள்தேடி அலையும் போது புரிதலில் தவறு நேர்கிறது வருகக்கும் கருத்துப்பதிவுக்கும்நன்றி சார்

      நீக்கு
    2. அப்படிப் பார்த்தால் எந்த வார்த்தைக்குத் தான் பொருள் உண்டு?

      நீக்கு
    3. ***ஆத்திகர்--நாத்திகர் என்ற வார்த்தைகளே பொருளற்ற வார்த்தைகள்.***

      இந்த வாக்கியத்தை சரியாகப் புரிந்து கொள்வோம். பெரியவர் ஜீ வி யைப் பொருத்தவரையில் இவை இரண்டும் பொருளற்ற வார்த்தைகள். அவர் உங்களையும் என்னையும் இதில் அடக்கி உலகிலுள்ள அத்தனை பேருக்கும் பொருளற்ற வார்த்தைகள் என்று சொன்னதாகத் தவறாக புரிந்ந்து கொள்ளும் அபாயத்தைத் தடுக்க அவர் சொல்ல வந்ததைத் தெளிவு படுத்துகிறேன். அவரைப் பொருத்தவரையில் இவ்வார்த்தைகள் அவருக்கு அர்த்தமற்றவை! Please understand he speaks for himself only. He hardly knows others' intellectual capability. He shares what he thinks of about "நாத்திகர்/ஆத்திகர்"!

      மற்றபடி "கடவுள்" என்பது பொருளற்ற வார்த்தையாகும்போது அதை விமர்சிக்க வந்த வார்த்தைகள்ப் பொருளற்றுப் போக வாய்ப்புண்டு.

      ஒரு வார்த்தைக்கு பொருள், தனிப்பட்ட ஒருவரின் புரிதல், திறந்த மனது, அறிவு சம்மந்தப் பட்டது.

      CH4 என்றால், ஏதோ இரண்டு ஆங்கில எழுத்துக்களும் ஒரு எண்ணும் என்பார் வேதியல் புரியாதவர். இன்னொருவர் அதை "டெட்ராஹெட்ரன் ஜியோமெட்ரி" அதன் டைஹெட்ரல் ஆங்கிள் 109.5 டிக்ரீ என்பார். முன்னவரைப் பொறுத்தவரையில் இதெல்லாம் அவருக்கு பொருளற்றவை. Let us be careful. Let us understand any individual's opinion is HIS OWN and comes out based ON HIS UNDERSTANDING. Never ever think that IT APPLIES to YOU and ME. It DOES NOT!

      நீக்கு
    4. @ அப்பாதுரை முன்பு ஒரு முறை நீங்கள் எழுதிய பின்னூட்டத்தில் பதிவுகள் ஒருகலந்துரையாடலுக்கு வழிவகுக்க வேண்டும் என்று எழுதி இருந்த நினைவு ஜீவியின் கருத்து அது

      நீக்கு
    5. @வருண் ஜீவியின் பாணி அது ஒரு கருத்து கூறுவார் அதிலிருந்து விவாதங்களோ கருத்துப்பறி மாற்றமோ நிகழலாம் பெரும் பாலான நேரம் நான் புரிந்துகொள்ள சிரமப்படுவது உண்டு I AGREE EVERY ONE IS ENTITLED TO HIS VIEW.வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  16. நாத்திகரோ ஆத்திகரோ அது முக்கியமில்லை . ஒரு நல்ல மனிதனாக வாழ்கிறீர்கள் . அதுதான் முக்கியம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவே நாத்திகரா ஆத்திகரா பற்றியது அல்ல. அது பதிவின் ஒரு பக்கம் அது இல்லாமல் நிறைய விஷயங்கள் பகிரப் பட்டிருக்கிறதே கடவுள் அறிவா உணர்வா என்னும்கேள்விக்கு பதில் சொல்ல முயன்றிருக்கிறேன் சுட்டியைப் படிக்க வில்லையா வருகைக்கு நன்றி மேம்

      நீக்கு
  17. சிவாஜி கணேசன் நடித்த ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்த உள்ளம் என்பது ஆமை – அதில்,உண்மை என்பது ஊமைஎன்று தொடங்கும் பாடலில்

    தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
    சிலை என்றால் வெறும் சிலை தான்
    தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
    சிலை என்றால் வெறும் சிலை தான்
    உண்டென்றால் அது உண்டு
    இல்லை என்றால் அது இல்லை
    இல்லை என்றால் அது இல்லை


    என்று எழுதியிருப்பார். இது தங்களின் கடவுள் பற்றிய கேள்விக்கு பதிலாக தெரிகிறது எனக்கு.

    பதிலளிநீக்கு
  18. சிலைக்கும் கடவுளுக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதப்பட்ட பதிவு என்று நினைக்கிறீர்களா ஐயா இது அதற்கும் அப்பால் பட்டது உண்டு இல்லை என்ற கேள்விக்கு பதில் தேடவில்லை கடவுள் என்பது ஒரு கான்செப்ட் கடவுளை ஏற்றுக் கொண்டவருக்கு உங்கள் கருத்து intelectual level ல் தடவிக் கொடுக்கலாம்! அறீவியலில் உரசிப்பார்க்கும் போது கொஞ்சம் சிரமப்படும் ! / முன்பு ஒரு நண்பர் எழுதி இருந்தபின்னூட்டம் இப்போது இங்கே பொருந்தும் என்று தோன்றுகிறதுவருகைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  19. //ஜீவியின் பாணி அது. ஒரு கருத்து கூறுவார் அதிலிருந்து விவாதங்களோ கருத்துப்பறி மாற்றமோ நிகழலாம். //

    என் பாணி பற்றிய தங்கள் கருத்துக்கு நன்றி, ஐயா.

    1. விவாதங்களுக்கும், வாக்கு வாதங்களுக்கும் நிரம்பவே வித்தியாசம் உண்டு. புரிபடாத எந்தப் பொருள் பற்றியும் அலசி ஆராய்வதே விவாதங்களின் நோக்கம். அப்படிப்பட்ட விவாதங்கள் தெளிவை நோக்கி நம்மை வழி நடத்துவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும். இதனாலேயே விவாதங்களில் தனிநபர் வாக்கு வாதங்கள் தவிர்க்கப் பட்டு கருத்துக்கள் முன்னிலைப் படுத்தப் படுகின்றன.

    2. விவாதங்களுக்கு இந்தக் கருத்தை இந்த நபர் சொல்கிறார் என்பது முக்கியமில்லை. அதாவது சொல்லும் நபரை முக்கியப் படுத்தாது அவர் சொல்லும் கருத்தை முக்கியப்படுத்தி அலசுகிறோம். இது தனிநபர் வாக்கு வாதங்களில் நாம் மூழ்கிப் போகாமல் தடுத்தாட் கொண்டு விவாதிக்கும் கருத்துக்களை கூர்மை படுத்துகிறது; மற்றும் வாதங்கள் திசை திரும்பாமல் பார்த்துக் கொள்கிறது.

    3. வாதங்களுக்கு வாதங்களை எடுத்து வைப்போர் குறைந்த பட்சம் இருவரைத் தாண்டி இருக்க வேண்டும். இருவர் மட்டுமே என்றால் மாற்றி மாற்றி இருவருக்குள்ளான கருத்துச் சண்டையே நிகழ்ந்து கொண்டிருக்கும். மூன்றாவதாக ஒருவர் நுழைந்து அவர் கருத்தைப் பதிகையில் கருத்துப் பரிமாற்றம் விரிவடைய வழியேற்பட்டு எடுத்துக் கொண்ட பணி முக்கியப்படும்.

    4. விவாதங்களில் அணி சேர்ப்பது முக்கியப் படுத்தப்படுத்தப்படாது, இறுதியில் எடுத்துக் கொண்ட பொருளில் தெளிவேற்பட்ட நிலையே முக்கியமாகிப் போய் அதுவே விவாதித்த குழுவிற்கே ஒட்டுமொத்த மகிழ்ச்சியாகிப் போகும்.

    இதெல்லாம் சாத்தியப்படுமா என்ற கேள்விக்கு இடமேயில்லை.

    பதிவுலகில் இதெல்லாம் சாத்தியப்படுத்துவதற்குத் தானே பல்வேறு பொருள்களில் மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருக்கிறோம்?

    'எனக்கு இது இப்படித் தோன்றுகிறது; உங்களுக்கு எப்படி இது தோன்றுகிறது?' என்று தெரிந்து கொள்ள ஆவலும் அதுபற்றி ஆராயும் பணியே உங்கள் பதிவுகளின் அடிநாதம். எனக்குத் தெரியும். அதனால் தான் உங்கள் பதிவுகளில் எனக்குத் தோன்றும் என் கருத்துக்களை கொஞ்சமும் மறைக்காது மனசாரப் பகிர்ந்து கொள்கிறேன்.

    என்னைத் தெளிவாகப் புரிந்து கொண்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றி, ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலான நேரங்களில் நான் புரிந்து கொள்ள சிரப்பட்டது உண்டு என்றும் எழுதி இருக்கிறேனே தவறாக ஏதும் சொல்லி விட்டேனா சார்

      நீக்கு
  20. சேச்சே! என்ன சார் இது?.. புரிபவைகளும், புரியாதவைகளும் இரண்டு பேருக்கும் சொந்தம் தானே?.. பரஸ்பரம் அக்கறையுடன் ஒரு விஷயத்தை அலசும் பொழுது அந்த மாதிரி சமயங்களில் மேற்கொண்டான புரிதலுக்கு எந்த மாதிரியான இருவருக்கும் புரிந்த உதாரணங்களைச் சொல்லி இருவருக்குமான புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சிப்பேன்.

    இந்த ஆத்திகர், நாத்திகர் விஷயத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன். இந்த இரு வார்த்தைகளின் வேர் எது, ஏன் இந்த வார்த்தைகள் உருவாயின என்று எனக்குத் தெரியவில்லை. அதற்கான விளக்கத்தை தெரிந்தவர்கள் யாராவது சொல்வார்களா என்று தான் என் பின்னூட்டத்தில் கேட்டேன். அது பற்றித் தெரிந்த இண்டெலெச்சுவர்களும் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்கிறார்களே தவிர எப்படி இந்த வார்த்தைகள் புழக்கத்தில் இருக்கும் அந்த அர்த்தத்தைக் கொண்டன என்று யாரும் சொல்லக் காணோம்.

    யாராவது சொல்வார்களா என்று பார்ப்போம்.

    மேற்கொண்டு யோசிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  21. //தெரிந்த இண்டெலெச்சுவர்களும்//

    தெரிந்ததாகச் சொல்லும் இண்டலெக்ட்களும் --

    என்று திருத்தி வாசிக்கவும்.

    பதிலளிநீக்கு
  22. I usually avoid visiting here as I make lot of people uncomfortable with my agnostic beliefs. When I don't agree with someone, I SAY IT LOUDLY.

    What is sweet?

    Can you explain it?

    What is the difference between sweet mango's taste and sweet pomegranate taste?

    Both are sweet but it has a difference it taste.

    To solve such an issue, you ask other guy to taste it. Now he finds the difference!

    Now, here is a special case there are some people who DONT have the same "tasting ability" like others. TRUST ME it is a FACT!!!

    READ THIS!!!!
    ***************************

    PTC The Genetics of Bitter Taste

    ****In 1931, a chemist named Arthur Fox was pouring some powdered PTC into a bottle. When some of the powder accidentally blew into the air, a colleague standing nearby complained that the dust tasted bitter. Fox tasted nothing at all. Curious how they could be tasting the chemical differently, they tasted it again. The results were the same. Fox had his friends and family try the chemical then describe how it tasted. Some people tasted nothing. Some found it intensely bitter, and still others thought it tasted only slightly bitter.
    *********************

    Some DO NOT HAVE the "right enzyme" to feel the same taste others' have.

    When Scientists analyze they understand and offer an explanation and later prove that one carries "one enzyme" so he feels one particular taste. The other does not feel the same taste as he has "another enzyme".

    Now, let us take an illiterate who is being the judge here. He does not know any scientific knowledge or open mind. He is going to call one of them as "foolish"! BUT THE REAL FOOL is the JUDGE himself. Because he lacks open mind. He does not understand that two people can have two different enzymes to taste and so they feel differently about the taste of "same thing"

    First of all, one need to have an open mind in any issue. One should be able to understand others experience. Most of the time IT LACKS with the God believers. They lack the ability to rationalize or analyze facts carefully. I see that all the time with these people.

    It is best agree to disagree and move on!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பதிவுகள் ஒரு மனம் திறந்த கலந்தாடல்களுக்கு வழிவகுக்கும் என்றே எண்ணினேன் பதிவின் அடிநாதமாக சில அறியாமைகளை எடுத்துக் கூற முயற்சித்திருக்கிறேன் ஆனால் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களேதோ எனக்கு நான் நாத்திகனா ஆத்திகன என்று சந்தேகம்போல் இருக்கிறது பதிவினூடே என் எண்ணம் திற்ந்தமனத்தோடு கேட்கப்பட்ட கேள்விகளைநோக்க வேண்டும் என்பது இருப்பது புரியும் ஆனால் பதிவை முழுமையாகவாசித்து உள்வாங்கி கருத்திடுவது குறைந்து விட்டதாகத் தெரிகிறது பொதுவாகக்வந்து கருத்திடும் சிலரைக் காணவில்லை. சில பின்னூட்டங்கள் acrimonius ஆகப் போகிறதோ என்றும் தோன்றுகிறது பதிவுலகம்பல்வேறு மனித இயல்புகளைக் கொண்டது என்பதிவுகளில் நான் என் எண்ணங்களை பிறர் மனம் நோகாதபடி இருக்கும் படி எழுத முயற்சிக்கிறேன் இருந்தும் அறியாமையால் இருப்பவர்கள் அது தங்களது நம்பிக்கைகளுக்கு எதிராக இருப்பது போல் உணர்கிறார்கள் விவாதங்கள் கருத்துப் பரிமாற்றமாக இருக்கலாமெண்ணங்களுக்கு அவரவர்கள்சொந்தக் காரர்கள் பலரும் சும்ம இருப்பதே சுகம் என்று நினைக்கிறார்கள் பதிவுகள் பல வித கருத்துகளுக்கு இடமளிக்கும்போது கூடியவரை பிறர் மனம்நோகாமல் இருக்க வேண்டும் என்பதே என் அவா. ஒரு சில வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்ப ட ஏதுவாக இருக்கலாம் எதையும் தனிப்பட்ட முறையில் அணுகாமல் இருக்கலாம் என்றே நினைக்கிறேன்

      நீக்கு
  23. ***அது பற்றித் தெரிந்த இண்டெலெச்சுவர்களும் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்கிறார்களே தவிர எப்படி இந்த வார்த்தைகள் புழக்கத்தில் இருக்கும் அந்த அர்த்தத்தைக் கொண்டன என்று யாரும் சொல்லக் காணோம்.***

    People generally want to spend their time in a meaningful way. Because they have a limited to time to live. 30,000 days or so. It is very short time period human beings live.

    A student does not know what is "C" or its atomic number or valency but he wants to learn about Cholesterol biosynthesis and asking the experts to "PLEASE EXPLAIN ME how cholesterol is biosynthesized?" in a very HUMBLE manner. The experts may feel sorry for him because they find the time they spend on him is MERE WASTE as he lacks they basic skills, and so they ignore him. Because the experts want to spend their time in a meaningful way. They dont want to teach grammar to one who does not even know English alphabets. The one who wants to learn NEED TO UNDERSTAND that everyone has their priorities. I am sure he will find someone who will explain one day. He just has to wait for a while until he meets the guy!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருண் பதிவுகளால் பிறரை மாற்ற முடியாது ஆனால் ஒரு சுய விமரிசனத்துக்கு வழி வகுக்கலாம் என்று தெரிகிறது பின்னூட்டங்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க முயற்சி வேண்டும் என்பதே என் விருப்பம் தொடர்ந்து வாருங்கள் நன்றி

      நீக்கு
  24. ஆத்திகரா நாத்திகரா என்பதைவிட
    நல்ல மனிதராக வாழ்வது முக்கியம்என்று எண்ணுகின்றேன்
    தாங்கள் நல்ல மனிதர்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல புரிதலோடு இருக்க வேண்டும் என்றும் என்று எண்ணுகிறேன் சார் வருகைக்கு நன்றி

      நீக்கு
  25. When I really want to learn, if I dont understand meaning for a word or its antonym, I look it up in dictionary.


    Let us say, a theist or an atheist..

    Dictionary says

    theist
    /ˈθiːɪst/
    noun
    1. a person who believes in the doctrine of theism

    2.a person who believes in the existence of God or gods

    -------------------
    a·the·ist
    ˈāTHēəst/
    noun
    noun: atheist; plural noun: atheists

    a person who disbelieves or lacks belief in the existence of God or gods.
    "he is a committed atheist"
    synonyms: nonbeliever, disbeliever, unbeliever, skeptic, doubter, doubting Thomas, agnostic; nihilist
    "why is it often assumed that a man of science is probably an atheist?"
    antonyms: believer

    --------------------------

    I UNDERSTAND what is the meaning of theist now and an atheist now.

    You can learn as long as YOU REALLY want to LEARN!
    ------------------

    If someone claims that HE STILL DOES NOT understand the "பொருள்" of theist and an atheist..

    I am NOT going to explain him one more time. Because it is obvious his intention is NOT learning. It is an ATTITUDE problem he has. In Tamil, there is a proverb, தூங்குறவனை எழுப்பலாம்...:)

    பதிலளிநீக்கு