ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

மீண்டும் நான்


                                மீண்டும்  நான்
                                ----------------------
       அதிகாலை   நடை பயிலுகையில் 
         
எழுதுவதற்கு   விஷயங்கள்  யோசிக்க
        
நடையினூடே   வார்த்தைகளும்
        
அழகாக  வந்து   வீழும்.

சற்றே  மலர்ந்து  வீடு  வந்து, 
பேனா   பிடித்தால்   என்னதான்  
எழுதுவதுஒன்றும்   தோன்றாது
நினைப்பது   ஏன்  மறக்க  வேண்டும்..?

இது நான் எழுதி இருந்த செய்யாதகுற்றம் என்னும்பதிவிலுள்ளது இதை நான் இங்கே குறிப்பிடக் காரணம் உள்ளது நான் என்னை வெளிப்படுத்தும்  விதத்தில் எழுதி நாட்களாகி விட்டன. என்ன எழுதலாம் என்ற யோசனையில் இருந்தபோது வந்தமர்ந்த வார்த்தைகள் கணினி முன்  அமர்ந்து எழுதத் துவங்கும் போது மக்கர் செய்கிறது . இருந்தாலும் என்ன. ? எண்ணங்கள் எனது தானே எழுத்தில் கொண்டு வருகிறேன் albeit with some difficulty.

 அண்மையில் தேனம்மை அவர்களின் பதிவு ஒன்றை வாசித்தேன்  அது இந் திய நாத்திகமும்  மார்க்சீய தத்துவமும் என்னும் தலைப்பில் வானாமாமலையின்  நூல் மதிப்பீடு
/வெஸ்டர்ன் பொலிட்டிக்கல் தாட்ஸ் என்னும் சப்ஜெக்டில் கார்ல் மார்க்ஸ் பற்றிப் படித்ததுண்டு. வரக்கபேதம் அற்ற சமுதாயம் அவரது கனவு. தாஸ் கேப்பிடல் என்னும் நூலைப் படைத்தவர்/. 
ஆஹா இதைப் பற்றிதானே முன்பெல்லாம் நான்  எழுதிக் கொண்டிருந்தேன்  என்னும் நினைப்பு வந்தது என் பதிவுகளில் எந்த இசமும்  தெரியாது  எனக்குத் தோன்றியதைஎழுதி இருக்கிறேன்  வர்க்க பேதங்களின் முக்கிய காரணமாக  நான் கருதியது நம்மவரின்  மதக் கோட்பாடுகளின்  விளைவே என்பதுதான் வர்ணாசிரமும் மதக் கோட்பாடுகளும் நம்மைசுயமாக சிந்திக்க விடாமல் செய்து விட்டன. ஆண்டைகளும் அடிமைகளும் சர்வசாதாரணமாகஎடுத்துக் கொள்ளப்பட்டஒன்று. ஆனால் பலரும் இதெல்லாம் கடந்த இறு நூறு ஆண்டுகளில் வந்தவை என்றும்  ஆதியில் அப்படி இல்லை என்றும் எண்ணங்கள் தெரிவித்தனர் பொது வாகவே நாம் அடிமை மனப் பான்மையில் ஊறி இருக்கிறோம்  சுயமாக சிந்திக்க முடியாதவண்ணம் வளர்ந்திருக்கிறோம் இவற்றுக்கெல்லம் நம்  மத கோட்பாடுகள்துணை நின்றன இந்த பேதங்கள் எல்லாம் சாதியாகவும் உயர்ந்தவன் தாழ்ந்தவனென்றும் சாதிக்கத் துணை போயின.  திரு அப்பாதுரை அவர்களெழுதி இருந்த சில வரிகளை நான்  கையாண்டிருக்கிறேன்   அவை மீண்டும் இங்கு  நம்மால் ஏன்  இந்த அடிமை மனப் போக்கிலிருந்து மீள முடிவதில்லை  அடிமைத்தனம்  என்பதை அவர் இவ்வாறு விளக்க முயன்றிருக்கிறார்

"அடிமைத்தனம் என்பது.. ஏன் செய்கிறோம் என்றச் சிந்தனையில்லாமல் ஒரு செயலில் திரும்பத் திரும்ப ஈடுபடுவது.." 

"
எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"

"
ஏனென்று கேட்டால் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு வித அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் உடன்படுவதாகும்"

"
ஒரு விருப்பத்தை நிறைவேற்றினால் அதிகாரமுள்ளவர் மனமிரங்கி ஏதாவது பலன் வழங்குவார்கள் என்றக் கீழ்த்தட்டு எதிர்பார்ப்பே அடிமைத்தனமாகும்"

"
விருப்பத்துக்கு மாறாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றத் தீராத பயம்.."

"
தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."

"
பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"

"
மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாத முறைக்குட்பட்டு நடப்பது.."

"
அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.."

நம்மை பொறுத்தவரை இதில் கூறப்பட்டிருப்பவை சிந்திக்கப் பட வேண்டும்
இதற்கெல்லாம் தீர்வாக நான் நம்மக்கள் கல்விஅறிவு பெற்றிருந்தால் (அதுதானே முன்பெல்லாம்  மறுக்கப்பட்டவை ) சுயமாக சிந்திப்பார்கள் அந்த சிந்தனையின்  வெளிப்பாடாக சமுதாயத்தில் மாற்றங்கள் நிகழலாம்  என்று எண்ணினேன்  அதற்காக எல்லோருக்கும்  கல்வி  அதிலும்  சமகல்வி  அதுவும்  இலவசமாகஎல்லோருக்கும் வழங்கப் படவேண்டும்  என்றெல்லாம் எழுதி இருக்கிறேன் இலவசக் கல்வி என்பது கட்டாயமாக்கப் படவேண்டும்  ஏழை பணக்காரன்  என்னும்  வித்தியாசமில்லாமல் இலவச உணவு சீருடை உட்பட வழங்கப்படவேண்டும்  என்றும் நம்புகிறேன்  அந்த சூழ்நிலையில் வளரும் சிறார் உண்மையிலேயே பிறப்பொக்கும்   என்று எண்ணத் துவங்குவர் நாளாவட்டதில் எல்லோரும் சமம் என்று எண்ணத் துவங்குவர்  வாழ்க்கையில் வாய்ப்புகளும்சமமாக இருந்தால் பேதங்களொழியும் என்று நம்புகிறேன் இன்னொரு விஷயம் பொருளாதார  சுதந்திரம்  மிகவும்  முக்கியமானது
நீங்கள் ஒன்றைக் கவனித்திருக்கலாம் நகரங்களில் இந்த மாதிரியான பேதங்கள் அதிகமாக தெரிவதில்லை  என் கிராமம் பாலக்காட்டில் உள்ள கோவிந்தராஜபுரம்  என்பதாகும் அங்கு நான்  என் சிறுவயதில் ஓராண்டுகாலம் இருந்திருக்கிறேன்  வீட்டின் கடைக் கோடியில் கக்கூஸ் இருக்கும்  இரண்டு மலத் தொட்டிகளையும் தாழ்ந்தசாதிக்காரர் ஒருவர் வந்து  மலத்தை அள்ளிப் போட்டு எடுத்துச் செல்வார் அவருக்கு வருவதற்கென்றே பின் புறம்  அகலம்  குறைந்த வழி இருந்தது சந்தின் கோடியிலிருந்து அவர் கொடுப்பார் தம்புரான்  தம்புராட்டிகளே ஞான் வருந்னு என்று குரல் கொடுப்பார் பிறகு வந்து சுத்தம் செய்து போவார்  அவர்களுக்கெல்லாம்  கிராம வீதிகளில் வரத் தடை என்றிருந்தது இதெல்லாம்  சுமார் எழுபது வருடங்களுக்கு முன்  சாதாரணமாக நிகந்தது  சில ஆண்டுகளுக்கு முன்  என் வாரிசுகளுக்கு அவர்கள் ஊரையும் வேரையும்  காட்டப் போயிருந்தேன்  இப்போது பெரியமாற்றம் வந்திருக்கிறது  யாருக்குத் தெருவில் போகத் தடை இருந்ததோ அவர்களில் சிலர் கிராமத்திலேயே வீடு வாங்கி வசிக்கிறார்கள் இந்த மாற்றம் நிகழ அரை நூறாண்டுக்கும்  மேலாகி இருக்கிறது இதேபோல் தமிழ் நாட்டிலும் அக்கிரகாரங்களில் பிற சாதியினர் இடம் வாங்கி  வசிக்கிறார்கள்  என்று அப்பாதுரையின் பதிவு ஒன்றில் வாசித்த நினைவு  ஏன்  நாங்கள்சென்னையில் என்  சிறுவயதில் எனக்கு சுமார் ஐந்து வயதிருக்கலாம்  பைக்ராஃப்ட்ஸ் ரோட் க்ராசில் எங்கள்வீடு இருந்ததாக நினைவு தெருவின்  கடை ஓரத்தில்  கீழ் சாதியினர் வசிக்க என்று சேரி இருந்த நினைவு ஆனால் இப்போது  அதெல்லாம் வெறும்  நினைவுகளாகி விட்டது
 பொருளாதார மேம்பாடு வர்க்கபேதங்களை ஒழிக்கும் அல்லது நாளாவட்டத்தில் குறைக்க வழிவகுக்கும்  அதற்கு கல்வி அறிவு அடிகோலும் என்று நினைக்கிறேன் 
 இதில் ஒரு சாராரைக் குறை சொல்வதை விடகாரணங்களைக் கண்டறிந்து நீக்குவதே சிறப்பாக இருக்கும்   ஆனாலும் அந்த மாற்றங்கள்வர முதலில் மனம்வேண்டும் சிந்தனைச் சுதந்திரம்வேண்டும்

 ஆனால் இம்மாதிரியான மாற்றங்களை வளர விடாமல் இருக்க மதத் தலைவர்கள் கூறுவதை சிந்தனை ஏதும்  செய்யாமல் பின்பற்றுகிறார்களென்பது வருத்தம்  தருகிறது  ஒரு படி மேலே போய் இம்மாதிரியான வர்க்கபேதங்கள் சரி என்னும் விதத்திலும் வாதங்கள்வைக்கப் படுகின்றன
 மாதிரிக்கு  தெய்வத்தின் குரலிலிருந்து
 /யோசித்துப் பார்த்தால்நம் தேசத்திலும்கூட பழைய வர்ண தர்மங்களில் பிடிப்புக்குறைந்துபோய்எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்ற அபிப்ராயம் வந்தபிற்பாடுதான்மத உணர்ச்சி குன்றிநாஸ்திகம் அதிகமாகியிருக்கிறது என்று தெரிகிறது/
Unity in diversity என்பதற்கு இன்னொரு வியாக்கியானம் இதோ பல்வேறு சாதிகள் தேவை என்பதுபோல் தெரியும் கருத்து
ஏகப்பட்ட சுல்லிக் கட்டைகளை சேர்த்துப் பிடித்து ஒரு கட்டாகக் கட்டுவதுஎன்றால் அது சிரம சாத்தியமான காரியம்அப்படியே சிரமப்பட்டு ஒரு கட்டாகக்கட்டினாலும்கூட அது சுலபத்தில நெகிழ்ந்து கொடுத்துத் தளர்ந்து விடும்.முதலில் ஒரு சுள்ளியை ஆட்டி எடுக்கிற மாதிரி நெகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டாலேபோதும்அந்த ஒன்றை எடுத்ததால் தளர்ச்சி ஜாஸ்தியாகி இன்னொருசுல்லியைச் சுலபமாக உருவி விடலாம்இப்படி இரண்டு மூன்று என்று எடுத்துவிட்டால் அப்புறம் கட்டு ஒரேயடியாக தொள தொளவென்று தளர்ந்துபோய்அத்தனை சுள்ளிகளும் தனியாக விழுந்துவிடும்
மாறாக முதலிலேயே அத்தனை சுள்ளிகளையும் ஒரே கட்டாகக் கட்டாமல்கைக்கு அடக்கமாகப் பத்துப் பதினைந்து என்று சேர்த்து சின்னக் சின்னக்கட்டுகளாகப் போடுவதாக வைத்துக் கொள்ளுங்கள்இது ஒவ்வொன்றும்கையடக்கமாக இருப்பதால் தளராதபடி நல்ல பிகுவாகக் கட்டிவிட முடியும்.அப்புறம் இந்தச் சின்ன சின்னக் கட்டுகளையெல்லாம் சுலபத்தில் ஒன்றாகஅடுக்கி எல்லாவற்றையும் சேர்த்து பெரிய கட்டாகப் போடலாம்ஒட்டுமொத்தமாக அத்தனை சுள்ளிகளையும் வைத்துப் போடுகிற கட்டைவிடஇப்போது நாம் போடுகிற பெரிய கட்டு இன்னும் விறைப்பாகஉறுதியாகஇருக்கும்அது மட்டுமில்லைஇந்தப் பெரிய கட்டு கொஞ்சம் தளர்ந்தால்கூடஒரு தனிச் சுள்ளி விழுகிற மாதிரிச் சின்னச் சுள்ளிக்கட்டு விழாதுஅதாவதுபெரிய கட்டு பந்தோபஸ்தாகவே இருக்கும்என்றைக்கும் அது கட்டுவிட்டுப்போகாது

ஒரு பெரிய ஜனசமூகத்தை ஒரே அமைப்பிலே போட்டு கட்டுகிறேன் என்றால்அது முடியாத காரியம்ஆண்டளிக்க முடியாத சமுதாயத்தை யார்எப்படிக்கட்டுப் பாட்டில் வைத்து நிர்வகிப்பதுஇதற்காகத்தான் ஒவ்வொரு தொழிலைச்செய்யப் பரம்பரையாக ஒரு ஜாதி என்று பிரித்து தனித் தனிக் கட்டுகளாகவைத்தார்கள்இதிலிருக்கிற கட்டுக் கோப்பை யாரும் புரிந்து கொள்ளலாம்.ஒவ்வொரு வர்ணத்தினரும் சிறு கட்டுகளாக - ஜாதிகளாக - பிரிந்தார்கள்.அவரவருக்கும் "ஜாதி நாட்டாண்மைஎன்று ஒன்று இருந்ததுஅந்தந்தநாட்டாண்மைக்காரக்கள் தங்கள் தங்கள் சமூகத்தினர் ஒழுங்கு தப்பினால் கண்டித்தார்கள்
 தண்டனை அளித்தார்கள் என்னதண்டனை தெரியுமா ஜாதிப் பிரஷ்டம்

எனக்கு வருத்தம்  தரும் விஷயம் என்னவென்றால்  இந்த மாதிரியான  எண்ணங்களை மீறி சிந்திக்க நாம் தயங்குகிறோம்
மேலும்  இம்மாதிரியானகருத்துகள்  பலரும் தெய்வமாக மதிக்கும் திரு சங்கராச்சாரியாரது என்பதால்  பலரும் கருத்து சொல்ல மறுக்கிறார்கள்இதையே நான் அப்பாதுரையின்  வார்த்தைகள் மூலம் கூற முயன்றிருக்கிறேன்
 "தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."
காலம் ஒருநாள் மாறும்  என்  ஆயுசுகாலத்திலேயே நிறைய மாற்றங்களைக் கண்டு விட்டேன்  மாற்றம்  மட்டும்தான் மாறாதது என்று கூறி நிறைவு (?)செய்கிறேன்

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்   அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு
காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்களாய்தல் சறிவுடையார் கண்ணதே காய்தலின் கண் நிறையும்  உவத்தலின்  கண் குறையும் காணாக்கெடும்  

   







26 கருத்துகள்:

  1. பொருளாதார மேம்பாடும் நகரமயமாக்குதலும் மனிதர்களிடையே நிலவும் வேற்றுமையை ஒழிக்க உதவும். மாற்றங்கள் மெதுவாகத்தான் நிகழும். ஆனாலும், முன்பு 'கல்வி மறுக்கப்பட்டது' என்பதெற்கெல்லாம் என்ன ஆதாரம் என்பது தெரியவில்லை. அப்போது கல்வி என்பது விஞ்ஞானம், கணக்கு போன்றவை இல்லை.

    மதத் தலைவர்கள் சொன்னாலும் நியாயமான ஒன்றாக இல்லாத பட்சத்தில் காலப்போக்கில் அவை நீர்த்துப்போகும். நான் பரமாச்சாரியாரின் மொழிகளை எப்படிப் பார்க்கிறேன் என்றால், அவர் ஒரு 'கொள்கையின்/மடத்தின்' தலைவர், அவர் நம்பும் கொள்கைகளுக்கு, வழிமுறைகளுக்கு ஏற்றவாறுதான், அவர் சொல்லுவதும் இருக்கும் என்று. ஆனாலும் காலத்திற்கேற்றவாறு நிறைய மாற்றங்கள் எல்லா இடத்திலும் ஏற்பட்டுள்ளன. (இது எல்லா மதங்களிலும், நாடுகளிலும் நிகழ்ந்துள்ளன)

    "எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்" - இது நல்ல கருத்துதான். ஆனாலும் வாழ்க்கையில் ஆராய்வதற்கும் அதற்கேற்றவாறு தன்னுடைய நிலைப்பாட்டினை மேற்கொள்வதற்கும் சாதாரண மனிதர்களுக்கு எங்கு நேரமும் வாய்ப்பும் இருக்கிறது? காலத்தை மீறிச் சிந்திக்கும் அபூர்வப் பிறவிகள்தான், 'தலைவர்' ஆகின்றனர் (மதத்தில்).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆராயவும் சிந்திக்கவும் தனியாக நேரம் ஒதுக்க வேண்டுமா வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  2. அன்பின் ஐயா..

    தாங்கள் கூறியுள்ள பலவற்றையும் நேரில் கண்டிருக்கின்றேன்..

    மாற்றம் ஒன்று தான் மாறாதது போலிருக்கின்றது..

    நம்புவோம்..நல்லது நடக்கும் என்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சிறுவயதில் பார்த்தது. இன்றும்சாக்கடைகளை சுத்தம் செய்ய தாழ்ந்த சாடியினரைத் தேடுகிறார்கள் ஆனால் மெஷின்கள் வந்து நிலைமை சீராகும் என்று நம்புவோம்

      நீக்கு
  3. வணக்கம் ஐயா நல்ல அலசல் இப்பொழுது எல்லோரும் புரட்சியான கருத்துரையை முன் வைக்கின்றார்கள் யாரும் பயப்படுவது இல்லை ஐயா.

    எதுவாயினும் நமது நாட்டைப் பொருத்தவரை மாற்றங்கள் நிகழ்த்த காலங்கள் நிறைய தேவைப்படுகிறது அதாவது ஒரு சந்ததிகள் அழிந்தே மறு சந்ததிகளுக்கு பலனை கொடுக்க முடிகிறது.

    இன்றைக்கு தாழ்ந்த சாதி என்று சொல்லப்பட்டவர்கள் சமமாக இடம் வாங்கி வீடு கட்டி நிம்மதியாக வாழ்கின்றார்கள் என்றால் இதற்கு முன்னோர்கள் கொடுத்த விலை பல உயிர்கள்.

    த.ம. 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துகளில் புரட்சி எங்கே இரூகிறது மனதி ந் ஆறாத வருத்தம்தான் காலம் மாற்றும் என்பதைவிட நாமே மாற்ற முயற்சிக்க வேண்டும் உயிர்ப்பலி ஏதும் தேவை இல்லை மன மாற்றம் போதுமே

      நீக்கு
  4. நண்பர் திரு KILLERGEE அவர்களின் கருத்தே என் கருத்தும். இந்த ஏற்றத் தாழ்வுகள் மறைந்து எல்லோரும் சமமாக நடத்தப்படும் காலம் வர இன்னும் சிறிது காலம் பிடிக்கும். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. மாற்றம் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது என்பதுதான் அது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றங்களைத் துரிதப்படுத்துவது மக்கள் சுயமாக சிந்தித்தால் நடக்ககூடியதே

      நீக்கு
  5. நல்ல சிந்தனை.

    சுதந்திரதின நாள் வருகிறது.

    பாரதி சொன்னது போல்

    ஜாதி மதங்களை பாரோம்- உயர்
    ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
    வேதிய ராயினும் ஒன்றே- அன்றி
    வேறு குலத்தினராயினும் ஒன்றே.

    வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில மாற்றங்கள் சொல்லி இருக்கிறேன் கல்வியே மனமாற்றம் நிகழ்த்தக் கூடியது சுதந்திர தினம் முதலாவது சுயமாக சிந்திக்கப் பழகுவோம்

      நீக்கு
  6. நகரமயமாக்கலில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது சரி . கிராமங்களில் காலம் எடுக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்துல் கலாம்சொன்னதாக நினைவு நகரவசதிகள்கிராமங்களுக்கு வரவேண்டும்மாற்றங்கள் துரிதமாகவரும்

      நீக்கு
  7. பதில்கள்
    1. எதுவுமே தானாக நடப்பதில்லை சார் நாம் முன் நின்று நடத்தவேண்டும்

      நீக்கு
  8. எண்ணங்களைத் தூண்டுவதுதானே படிப்பதின் பயன்? நல்ல அலசல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் சமம் என்று கல்விகாலத்திலேயே உணர்த்தப்படவேண்டும் ஸ்ரீ

      நீக்கு
  9. உழைக்காமல் ஏய்த்து பிழைக்க எண்ணுவோரின் தத்துவங்கள் எல்லாம்தோற்று வருகின்றன :

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரையும் எப்போதும் ஏய்த்துப் பிழைக்க முடியாது ஜி

      நீக்கு
  10. நன்றாகவே ஆய்ந்து உங்கள் கருத்துகளை முன் வைத்துள்ளீர்கள்...மாற்றங்கள் ஏற்படும் சார் கண்டிப்பாக. அது ஒன்றுதானே மாறாதது அதையும் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்..

    துளசி, கீதா

    கீதா: அதிகாலை நடை பயிலுகையில்
    எழுதுவதற்கு விஷயங்கள் யோசிக்க
    நடையினூடே வார்த்தைகளும்
    அழகாக வந்து வீழும்.

    சற்றே மலர்ந்து வீடு வந்து,
    பேனா பிடித்தால் என்னதான்
    எழுதுவது, // ஸார் இது எனக்கு நிகழ்ந்து நான் அடிக்கடிச் சொல்லுவது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றங்கள் தானாக நிஅழ்வதில்லை துளசி அவை நிகழ்த்தப்பட வேண்டும் கீதா உங்களுக்கும் அப்படி நிகழ்கிறது என்றால் உங்களுக்கு வயதாகிறது என்று அர்த்தம்

      நீக்கு
  11. பதில்கள்
    1. எல்லோரும் என்று சேர்த்துச் சொல்லி இருக்கவேண்டும் டிடி

      நீக்கு
  12. கல்வி பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் அளவிற்கு சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றே கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. இப்போது நிலவிவரும் கல்வியால் சிலருக்குப் பொருளாதார மாற்றம் நிகழ்ந்திருக்கிறது கல்வியில் உயர்வு தாழ்வு நிலவுவதால் எல்லோர் சிந்தனையும் ஒருபோல் இல்லை அதற்கே கல்வியிலும் சமத்துவம் வரவேண்டும் என்கிறேன் அதுஎல்லோருக்கும் கட்டாயக்கல்வி கட்டாய உணவு கட்டாயசீருடை ல்எலோருக்கும் இலவசமாக வழங்கப்படுமானால் சிந்தனைகள்மாறலாம் சமுதாயமாற்றம் விரைவில் நிகழலாம் என்கிறேன் இதனைப்பலரும் ஏற்க மாட்டார்கள் சமுதாயத்தில் மாற்றம் நிகழ்வதை மனதளவில் ஏற்பவர் மிகக் குறைவே என் பதிவை மீண்டும் வாசித்துப் பாருங்கள் முரளி. கல்வித் துறையில் இருப்பவர் நீங்கள் புரிதல் அவசியம் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு