புதன், 30 ஆகஸ்ட், 2017

பதிவுலக வாசகர்களே என்ன நினைக்கிறீர்கள்


                              பதிவுலக வாசகர்களே என்ன நினைக்கிறீர்கள்
                              ------------------------------------------------------------------------
ஒரு சிறுகதை எழுதத் துவங்கினேன் வழக்கம் போல் கற்பனை மக்கர் செய்தது அப்போது உதித்த ஐடியாதான் இது. கதையின்  போக்கை கொண்டு இப்படித்தான்  முடிவு இருக்கும் என்று நினைப்பவர்கள் முயற்சி செய்யலாமே நானே ஒரு முடிவை யோசித்து வைத்திருக்கிறேன் எழுத சோம்பல் முடிவு பற்றியும்  சங்கேதமாகக் குறிப்பிட்டு இருக்கிறேன்  வாசகர்கள் முடிக்கலாமே ஒரு கதை பல வடிவில் கிடைக்குமே நன்றி

 காலையில் எழுந்ததிலிருந்து வேலை வேலை  அலுப்பு தீர சிறிது நேரம் ஓய்வெடுக்க உடலைக் கிடத்தினாள் மாலதி  எப்படித்தான் இவர்களுக்கு மூக்கில் வேர்க்கிறதோ  தெரியலை  வாசல் கதவு தட தடவென்று  தட்டப்படும்  சப்தம்  அலுத்துக் கொண்டே எழுந்து வந்து கதவைத் திறந்தாள் மாலதி ,
தூங்கிக் கொண்டிருந்தீர்களா ? டிஸ்டர்ப் செய்து விட்டேனா “(டிஸ்டர்ப் செய்தாயிற்று .பின்  ஏன்  இந்தக்கேள்வி ) இருந்தாலும்  வலிய ஒருபுன்னகையைவரவழைத்துக் கொண்டு
 “ சேச்சே அதெல்லாம்  பரவாயில்லை “ என்றாள்
” உங்களிடம் மனம்  விட்டு பேச வேண்டும் இதைவிட நல்லநேரம்  எனக்குக் கிடைக்காது  மாலையில் என் மகனும்  வந்து விடுவான் உங்கள் கணவரும்  வந்துவிடுவார் மனம்விட்டுப் பேச முடியாது” பெரிய பீடிகையுடந்துவங்கினாள் கல்யாணி
என்ன சொல்லப் போகிறாரோ என்று கொஞ்சம் பயத்துடனும்    கொஞ்சம் ஆர்வத்துடனும் காது கொடுத்தாள் மாலதி
கல்யாணியின்  மகன் மாலதியின்  கணவரது அலுவலகத்தில்தான்  வேலை செய்கிறார் சொல்லப் போனால் அவர் மாலதியின்  கணவரின்  கீழ் வேலை பார்க்கிறார்
 “ நீ என் தங்கை மாதிரி. எனக்கு என் மன பாரத்தை யாரிடமாவது சொல்லணும்போல் இருக்கிறதுஇந்தக் காலத்துப் பெண்களுக்கு மாமியார் என்னும் மரியாதையே தெரிவதில்லை இத்தனை நால் பொத்திப் பொத்தி  வளர்த்த மகனை தாயிடமிருந்து பிரிப்பதில்தான்  குறி. மரியாதை மட்டு என்பதெல்லாம்கொஞ்சம் கூட இல்லை”

“பொதுவாகவே மாமியார்கள் சொல்லும் குறைதானே இது.விவரமாகச் சொன்னால்தானே புரியும்” என்றாள் மாலதி.

“அப்படி என்னதான் குசுகுசுவென்று பேசுவார்களோ தெரியவில்லை.  வீட்டுக்குப் பெரியவரகள் இருக்கும் போதே இப்படி தலையணை மந்திரமா. என்னவோ போம்மா எனக்கு ஒன்னுமே புரியலை
(உங்களுக்குப் புரிகிறதோ இல்லையோ சத்தியமா எனக்கு ஒன்னுமே புரியலெ என்று நினைத்துக் கொண்டாள் மாலதி)
‘கார்த்தால எழுந்ததும்  குளிச்சுப்பூஜை செய்து மடியாய் இருக்க வேண்டாமா. விடிந்ததும் விடியாததும் தொடங்கிவிடும் கொஞ்சலும் குலாவலும்  நாம எல்லாம் இப்படியா இருந்தோம்” ( சந்தடி சாக்கில் கல்யாணி மாலதியையும் தன்னோடு இணைத்துக் கொண்டாள்) 
நான் என்ன செய்ய வேண்டும் மாமி சொல்லுங்கோ “
(இந்த மாமி சொல்ல வேண்டியதை சீக்கிரம் சொல்லி விட்டுப்போனால் கொஞ்சமாவதுஅசரலாம் என்னும் நினைப்பும்மாலதிக்கு வந்தது)
இதப்பாரும்மா மாலதி என் தங்கை மாதிரி உன்னை நினைத்துக் கொண்டு என்  ஆற்றாமையை எல்லாம் உன்னிடம் கொட்டுகிறேன் நேரம்  வரும்போது அவளுக்கு நீ எடுத்துச்சொல்லு “ என்று கூறிக்கொண்டே எழுந்தாள்மாலதி இந்தமாமிக்கு நான் ஒரு வெயிலிங் வால் ( wailing wall) மாதிரி போல் இருக்கிறதுஎன்று நினைத்துக் கொண்டே “ அவ்வப்போது வந்து போய்க் கொண்டுஇருங்கள் மாமி
 என்று வலிய வரவழைத்த புன்னகையோடு விடை கொடுத்தாள் மாலதி

இந்த கல்யாணி மாமிக்கு ஒரு மகன் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் ஊர் ஏதோ காவேரிப்பட்டினம் என்றுசொன்னதாக மாலதிக்கு  நினைவு
மாமியும் மருமகளும் சரியான பொருத்தம்  மாமி வந்து போனது தெரிந்தால் மருமகள் வந்து விடுவாள்  அவள் பங்குக்கு ஒரு பாட்டம் கம்ப்ளெயிண்ட் செய்வாள் கணவனிடம்  வேலைசெய்பவரின் சொந்தங்கள்  கேட்காமல் இருக்கமுடியவில்லை
எல்லா மாமியார்களும் இப்படியா அவர்களும்  மருமகளாய் இருந்தவர்கள் தானே ஒருவருக்குஒருவர் அன்பு செலுத்தி அரவணைப்போடுஇருக்கக் கூடாதா
(உனக்கு என்ன தெரியும்  மாமியாருடனிருந்திருக்கிறாயா இல்லை மருமகள்களுடன்  இருந்திருக்கிறாயா/ எல்லாம் அனுபவிப்பவர்கள் பேச்சைக்கேட்டுத்தெரிந்து கொள்) மாலதிக்கு தனக்குத்தானே பேசிக் கொள்ளும் வழக்கம் உண்டு
கணவன் வரும்  நேரத்துக்கு முன் கல்யாணியின் மருமகள் வந்து விட்டாள்
வரும்போதே
 ”என் மாமியார் இன்றைக்கு என்னைப் பற்றிஎன்ன சொன்னார்கள்” என்று கேட்டும்வைத்தாள் ”

”இதப்பாரும்மா பெரியவர்களோடு சற்று  அனுசரித்துப் போகக் கூடாதா. இத்தனை வருஷம் வளர்த்து ஆளாக்கியவர் அல்லவா அவரை ஒதுக்க முடியுமா?”
”அக்கா உங்களுக்குத் தெரியாததா ( இவர்கள் பேசும்போது நம்மையும் அவர்கள் கட்சியில் சேர்க்கிறார்களே?)எப்போது பார்த்தாலும் ஏதாவது குற்றமும் குறையும்  சொல்லிக் கொண்டே இருப்பார்கள் உங்களுக்குத் தெரியுமா .நான் என்வீட்டுக்காரரிடம் மனம் விட்டுப் பேசக்கூட முடிவதில்லை பாவம் அவருக்கும் யார் பக்கமும் பேச முடியாத நிலை .” சொல்லிக் கொண்டே வந்தவள் கண்களைக் கசக்கத் துவங்கி விட்டாள் மாலதிக்கு ஒன்றுமே புரியவில்லைதான்  ஒரு குறை கேட்கும் ஜடமாகி விட்டோமோ என்றே தோன்றியது நல்ல வேளை அவளது கண்வன் வந்து விட்டான் உடனே கண்களைத் துடைத்துக் கொண்டு”நல்லா இருக்கீங்களா அண்ணா என்று சொல்லிக் கொண்டே கல்யாணியின் மருமகள் சென்று விட்டாள்
‘என்ன இன்றைக்கும்  கோர்ட்டா  வழக்கா  என்ன தீர்ப்பு சொன்னாய் “ மாலதியின் கணவன்  வம்புக்கு இழுத்தான்
“உங்களுக்கென்ன  நானல்லவா மத்தளம் மாதிரி இரு புறமும்  அடி வாங்குகிறேன் சின்னஞ் சிரிசுகள்  சிரித்துப்பேசினால்  இந்த மாமியார்களுக்கு ஆவதில்லை ஆனால் இதை கல்யாணி அம்மாவிடம்  சொல்ல முடிவதில்லை”
அடுத்த நாள் மருமகள் முன்னால் வந்து விட்டாள் வரும்போதே சொரியும் கண்களும் சிந்திய மூக்கும் விஷயம் ஏதோ பெரிசாகிவிட்டது போல் இருந்தது

 “அக்கா நான் என்புருஷனுடன் பேசுவதே இரவில் மட்டும்தான் ஆனால் இந்த மாமியார்க்காரி அதையும்தடுக்கிறாள் என்ன ராத்திரி நேரத்தில் குசுகுசு என்று  என்று அதட்டுகிறாள் கனவனுடன் சேரவே விட மாட்டேன் என்கிறாள் எதற்கு உயிரோடுஇருக்க  வேண்டும் போல் இருக்கிறது அக்கா”
 வாசகர்கள் கதையைத் தொடரலாமே
            



81 கருத்துகள்:

  1. ஆஹா சுவாரஸ்யத்தை சட்டென நிறுத்தி விட்டீர்கள் ஐயா

    தொடரட்டும் அடுத்த பதிவர்களின் முடிவு.

    பதிலளிநீக்கு
  2. மாலதி "பேசாம தனிக்குடித்தனம் போயிடு.. சரியாப்போயிடும்" என்றாள்.

    "அவங்க எங்க போவாங்கக்கா? அவங்களும் ஒண்டியாத்தானே இருப்பாங்க?"

    "முதியோர் இல்லத்துல சேர்த்துடறேன்னு சொல்லு"

    " சரியா வருமாக்கா?"

    "ஒரு பயமுறுத்தல்தானே? வரலாம்... வராமலும் போகலாம்... அந்த பயத்தில் அவங்க மாறிட்டா சரி.. இல்லைன்னா என்ன? இப்போதானே ஸ்ரீராம்டேருந்து முதல் ஐடியா .வந்திருக்கு.... ஜி எம் பி ஸார் பக்கத்தை பார்த்துக்கொண்டே இரு... இன்னும் யார் யார் என்னென்ன ஐடியாக்கள் தருகிறார்கள் என்று பார்...."

    "சரிக்கா... நல்ல ஐடியா... ஆக்கப் பொறுத்துட்டோம்... ஆறப்பொறுத்துடுவோம்!"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///ஸ்ரீராம்.August 30, 2017 at 7:25 PM
      மாலதி "பேசாம தனிக்குடித்தனம் போயிடு.. சரியாப்போயிடும்" என்றாள்.///
      ஹா ஹா ஹா படித்து முடிக்கும்போதே என் மனதில் எழுந்த அடுத்த வசனத்தை ஸ்ரீராம் எழுதிட்டார்ர்.. மெய்சிலிர்த்துப்போனேன்ன்ன்:))

      நீக்கு
    2. ஸ்ரீ ராம் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை வாசகர்கள் தொடரலாமே என்றால் கதையை எழுதி தொடர்வீர்கள் என்று நினைத்தேன் சில ஐடியாக்களை அல்ல வருகைக்கு நன்றி

      நீக்கு
    3. அதிரா கதையை நான் எழுதி இருக்கும் போக்கில் மீதியை எழுதி முடிப்பீர்கள் என்று நினைத்தேன் நீங்கள் என்னடா என்றால் .....

      நீக்கு
    4. ஹாஹாஹாஹா ஸ்ரீராம் அதிரா சொல்லுவது போல் எனக்கும் முதலில் தோன்றியது அதுதான் தனிக்குடித்தனம் போய்டு....

      //இப்போதானே ஸ்ரீராம்டேருந்து முதல் ஐடியா .வந்திருக்கு.... ஜி எம் பி ஸார் பக்கத்தை பார்த்துக்கொண்டே இரு... இன்னும் யார் யார் என்னென்ன ஐடியாக்கள் தருகிறார்கள் என்று பார்...."

      "சரிக்கா... நல்ல ஐடியா... ஆக்கப் பொறுத்துட்டோம்... ஆறப்பொறுத்துடுவோம்!"// ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    5. கதையை தொடர்ந்து எழுத வேண்டினால் ஐடியாக்கள் மாடுமே வருகின்றன

      நீக்கு
  3. ஜிஎம்பீ சார்! வேறொருவர் எழுதிய பாதிக்கதை மாதிரி நினைத்துக் கொண்டு நீங்களும் தொடரலாமே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெப்படி சார் முடியும் நான் எழுதி ஒரு முடிவும் நினைத்திருந்தேன் ஆனால் வார்த்தைகள் வரவில்லை. ஒரு மாற்றத்துக்கு வாசகர்களில் எத்தனைபேர் என் போல் நினைக்கிறார்கள் என்று பார்க்கத் தோன்றியது ஆனால் பின்னூட்டங்கள் வேறு பாதையில் போகிறது

      நீக்கு
  4. கண்ணீர் கசிந்தபடி நின்ற கல்யாணியின் மருமகளை பார்க்கவே மாலதிக்கு பரிதாபமாக இருந்தது
    அன்றிரவே நடந்த விஷயத்தை மாலதி தன் கணவரிடம் கூற , அதற்க்கு அவர் தன் மேலதிகாரியிடம் ( பகவான் ஜீ ) சொல்லி கல்யாணியின் மகனுக்கு பெங்களூரு கிளைக்கு மாற்றல் வாங்கி தருவதாகவும் இப்படி செய்வதால் மாலதிக்கும் கல்யாணிக்கும் அவளது மருமகளுக்கும் நல்ல விடிவு கிடைக்கும் என்றும் நம்பினார் .
    மறுநாள் வழக்கம் போல கல்யாணி மாலதி வீட்டு கதவை தட்டினாள் (வந்துட்டியா திரும்ப வந்துட்டியா? ) கதவை திறந்த மாலதி பேச்சுக்கு சிரித்து வரவேற்றாள் .
    வழக்கம் போல கல்யாணி மருமகளின் குறை கூற மாலதி இடைமறித்து கல்யாணியின் மகனுக்கு மாற்றல் கிடைக்க போவதாக கூறினாள்
    இதை கேட்டதும் கல்யாணியின் முகம் கருத்து போனது காரணம் தெரிந்த மாலதி மனதுக்குள் சிரித்துக்கொண்டாள் காரணம் பெங்களூரு கிளையின் தலைமை அதிகாரி, தன் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரிடமும் அன்பும் பாசமும் வைத்திருப்பவர் அதே நேரம் நாளொரு கேள்வியும் மண்டையை பிய்த்துக்கொள்ளும் அளவுக்கு சித்ரவதை செய்யும் எங்கள் ப்ளாகுக்கு சொந்தக்காரர்
    இதற்கும் கல்யாணிக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா ?
    ஏனென்றால் அந்த ( ஸ்ரீ ராம் )அதிகாரியின் தொல்லை தாங்காமல் வலெண்டரி ரிட்டயர்மெண்ட் வாங்கியவர்தான் கல்யாணி !!!
    ரிட்டயர்மெண்ட் வாங்கியவர்தான் கல்யாணி
    அன்றுமுதல் கல்யாணியின் புலம்பல் காணாமல் போயிற்று கல்யாணியின் மருமகளும் காரணம் புரியாமல் திகைத்தாள் மருமகளும் மாமியாரும் சேர்ந்தே கோவில் சினிமா ஹோட்டல் என சுற்ற தொடங்கினார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மருமகளும் மாமியாரும் சேர்ந்தே கோவில் சினிமா ஹோட்டல் என சுற்ற தொடங்கினார்கள்///

      ஹா ஹா ஹா இதை நான் இப்போதானே படிக்கிறேன்ன்.. சேம் முடிவு:).. இது வேற சேம்:).

      நீக்கு
    2. //தே நேரம் நாளொரு கேள்வியும் மண்டையை பிய்த்துக்கொள்ளும் அளவுக்கு சித்ரவதை செய்யும் எங்கள் ப்ளாகுக்கு சொந்தக்காரர்//


      :))))))))))

      நீக்கு
    3. விமல் ஓரள்வு கதையைத் தொடர முயன்றிருக்கிறீர்கள் ஆனால் சத்தியமாக பகவான் ஜீயோ எங்கள் பிளாக் ஸ்ரீ ராமோ கதாபாத்திரங்கள் ஆக முடியாது அவர்களும் விரும்புவார்கள் என்று தோன்றவில்லை

      நீக்கு
    4. அதிரா இரண்டாம் முறையாக நீங்களும் bereft of ideas என்று தெரிகிறது

      நீக்கு
    5. ஸ்ரீராம் அது விமலின் கற்பனை

      நீக்கு
    6. விமல் செம ரசித்துச் சிரித்துவிட்டோம்....ஸ்ரீராம் இப்படியா மாட்டிக்கிவீங்க ஹாஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    7. ராம் அதை ரசிப்பாரா தெரியலையே

      நீக்கு
    8. மேலதிகாரியாக பதவிஉயர்வு கொடுத்ததற்கு நன்றி !டபிள் இன்க்ரிமென்ட் உண்டா :)

      நீக்கு
    9. ஏற்கெனவே மேலே ரசித்திருக்கிறேனே... பார்க்கவில்லையா!

      நீக்கு
    10. ஐயா அவர்களுக்கு வணக்கம் . சிரிக்கவேண்டி கற்பனை பாத்திரங்களாக திரு ஸ்ரீராம் அவர்களையும் , திரு பகவான்ஜீ அவர்களையும் சேர்த்துக்கொண்டேன் வரம்பு மீறிய செயலாக இருப்பின் மன்னிக்க கோருகிறேன் என்னையும் மதித்து பதிலிட்ட அனைவர்க்கும் நன்றிகள் பல அன்புடன் நான்.

      நீக்கு
    11. ப்-அகவான் ஜி உங்கள் சந்தோஷமே பதிவர் விருப்பு டபிள் இன்க்ரிமெண்ட் என்ன ப்ரொமோஷனே தரலாம்

      நீக்கு
    12. தில்லையகத்து கீதா யாராவது யரையாவது ஓட்டினால் போதுமே அதுவும் ஸ்ரீ ராமையுமா

      நீக்கு
    13. விமல் சிரிக்க வேண்டி பகவான் ஜியும் ஸ்ரீராமும் பதிவுலகில் எல்லாம் ஏற்றுக் கொள்ளப்படும் மன்னிக்க ஒன்றும் இல்லை

      நீக்கு
  5. முதல்ல மருமகளை கையில பிடிச்சு இழுத்துக்கொண்டுபோய் மாமியார் முன் நிறுத்தி விட்டு.. இருவருக்கும் என்ன பிரச்சனை என்பதனை மாலதி நேரிடையாகவே கேட்டா..

    இருவரும் வாதங்களும் சுமார் 2 மணி நேரங்கள் நீடித்தன.. அப்போதே இருவருக்கும் தெரிந்தது தம் குற்றச்சாட்டுக்கள் உப்புச் சப்பில்லாதவை என..

    அப்படி இருக்க மாலதி முடிவா சொன்னா...
    நான் அருகில் இருப்பதால்தால் அடிக்கடி தனித்தனியே இருவரும் வந்து என்னிடம் சொல்லுவதால் உங்கள் பிரச்சனை பெரிதாகுது, இனிமேல் நான் இங்கு இல்லை என நினைத்துக் கொண்டு நேரிடையாகவே பிரச்சனைகளைப் பேசி நேர்படுத்திக் கொள்ளுங்கோ...

    முடியவில்லை எனில் நானே.. உங்கள் கணவரிடமும் மகனிடமும் பேசி தனிக்குடித்தனம் போக ஏற்பாடு செய்து விடுவேன்.. என மிரட்டிப்போட்டு மாலதி வீடு வந்து சேர்ந்தா...

    அடுத்த நாள் மாலை மாமியும் மருமகளும் மாலதி வீட்டுப் பக்கம் எட்டியும் பார்க்காமல் கை கோர்த்து சிரித்தபடி கோயிலுக்குப் போவதை... ஜன்னலில் நின்று பார்த்த மாலதியைப் பார்த்து.. மாலதியின் கணவர் சொன்னார்.. பார்த்தாயா இதுக்குத்தான் சொல்றது உள் வீட்டுப் பிரச்சனையை தூக்கி தலையில் வைக்காதே என.. இப்போ அவர்கள் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.. நீ அந்நியப்பட்டு விட்டாய் என்றார்ர்.....

    சரி விடுங்கோ என்னோடு பேசவேண்டாம் அவர்கள் சந்தோசமாக இருக்கட்டும் என முணுமுணுத்துக் கொண்டே .. இனிமேல் என் தூக்கம் கெடாது என சொல்லிக்கொண்டு நித்திரைக்குச் சென்றா....

    டொட் ட டொயிங்... ஜி எம் பி ஐயா.. பரிசேதும் உண்டோ?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "இதுக்குத்தான் சொல்றது உள் வீட்டுப் பிரச்சனையை தூக்கி தலையில் வைக்காதே என.. இப்போது அவர்கள் ஒன்றுசேர்ந்துவிட்டார்கள். நீ அந்நியப்பட்டுவிட்டாய்" - அதிரா அரசிலை கதைல கொண்டுவராதீங்க. எல்லாரும் பிரசுரிக்க மாட்டார்கள். இதைப் படித்தால் அதிமுக பாஜக பற்றிப் படித்ததுபோல் இருக்கிறது.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா அப்போ எனக்கும் அரசியல் வந்திட்டுதூஊஊஊஊஊஊஊஊஊஊ.. இதை இப்பவே போய் ட்றுத்துக்குச் சொல்லோணும்:).

      நீக்கு
    3. அதிரா முதலில் நான் கேட்டிருந்தபடி நீங்கள் கதையைத் தொடரவில்லை முடிவைச் சொல்லி இருக்கிறீர்கள் நான் ஒரு முடிவை நினைத்திருந்தேன் அதன்படி யாராவது எழுதி இருந்தால் பரிசு கொடுக்கலாம் என்ற எண்ணமிருந்தது நான் என் தளத்தில் சங்கேதமாக முடிவைக் குறிப்பிட்டு இருக்கிறேன் நீங்கள் மீண்டும் முயற்சிக்கலாம்

      நீக்கு
    4. நெல்லைத் தமிழன் அரசிய வந்ததா அதிரா எழுதியதில் நான் விரும்பியது வேறு இங்கு நடப்பது வேறு சீரியசாக அணுக வேண்டிய கதையை நகைச் சுவையாகக முயல்கிறார்கள்

      நீக்கு
    5. அதிரா உங்களுக்கு அரசியல் வராது என்றே தோன்றுகிறது

      நீக்கு
    6. அதிரா நல்ல முயற்சி. நன்றாக இருக்கிறது

      கீதா

      நீக்கு
    7. அப்படி நினைக்கிறீர்களா

      நீக்கு
    8. அப்போ எனக்குப் பரிசு இல்லயா?:)...போங்கோ ஜி எம் பி ஐயா:).. உங்களுக்கு ரசனை பத்தாது:)... நீங்க நினைச்சதத்தான் நாங்க சொல்லோணும் எனில் அது கஸ்டம்.. அப்போ நீங்களே முடிச்சிடுங்கோ கதையை:)...

      ஹா ஹா ஹா.. பிடிச்சால்தானே வரும்.. எனக்கு அரசியல் பிடிக்கவே பிடிக்காது.. பயங்கர அலர்ஜி:)..

      நன்றி கீதா.. ஹா ஹா ஹா..ஜி எம் பி ஐயா இப்போ குழம்பிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

      நீக்கு
    9. ஜிஎம்பி ஸார் நான் கண்டிப்பாக அதிரா மற்றும் விமல் இருவரின் முயற்சிகளையும் வரவேற்கிறேன். இருவருமே நன்றாக எழுதியிருக்கிறார்கள். மேபி உடனே என்றில்லாமல் நாளையோ மறு நாளோ என்றால் இன்னும் அவர்கள் அழகான வடிவில் தந்திருப்பர்கள் எனபதில் சந்தேகம் இல்லை சார். உடனே எழுதுவது என்பது கலை. எனக்கெல்லாம் வராது ஸார். டைம் கொடுத்தாலே அதற்கென்று மன நிலை நன்றாக இருந்தால்தான் அந்த ஃப்ளோ வரும். நிஜமாகவே அவர்கள் இருவரும் உடனே எழுதியதை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன் ஸார்.

      இங்கு கமென்ட் கொடுத்திருப்பவர்கள் எல்லோருமே ரஸனையோடு கொடுத்திருக்கிறார்கள். ரசித்துக் கொடுத்திருக்கிறார்கள். நானும் ரசிக்கின்றேன் அவர்களது கமென்ட்களை....ஸார் ரசனைதான் வாழ்க்கை.

      நீங்கள் மனதில் வைத்திருக்கும் முடிவை பிறர் எழுதவேண்டும் என்று நினைத்தால் அதெப்படி ஸார் முடியும்? ஒவ்வொருவரது அணுகு முறையும் வேறு வேறுதானே. உங்கள் வீட்டிலேயே ஒரு பிரச்சனை என்றால் நீங்கள் எல்லோருமெவா ஒரே மாதிரி சிந்திக்கின்றீர்கள் இல்லைதானே? ஒவ்வொருவரும் ஒவ்வௌர் சொல்யூஷன் கொடுப்பார்கள் தானே! ஒவ்வொருவரும் யுனீக் தானே...உங்கள் கதையில் வரும் அந்தப் பெண் அதாவது மருமகள் எதற்காக வாழவேண்டும் என்று சொல்லுவதாக சொல்லியிருந்தீர்கள். உண்மைச் சம்பவம் என்றும் சொல்லியிருக்கிறீர்கள். அதே மருமகள் பொசிஷனில் அதிரா இருந்திருந்தால் அப்படிச் சிந்திக்கணும்னு அவசியம் இல்லையே ஸார்...

      ஒவ்வொருவரும் ஒரு முடிவு தருவார்கள். அதை ரசிப்போம் ஸார். பாராட்டுவோம். அவர்களது முயற்சியையும்பாராட்டுவோம் ஸார்.

      கீதா

      நீக்கு
    10. வணக்கம் நன்றியுடன்.

      நீக்கு
    11. ஹா ஹா ஹா கீதா இந்தாங்கோ மங்கோ யூஸ் குடிச்சிட்டுத் தொடருங்கோ...:)..

      ஹையோ ஜி எம் பி ஐயா என்னைக் கலைக்கிறார்ர்ர்ர்.. மீ எஸ்கேப்ப்ப்:).

      நீக்கு
    12. அதிரா/அப்போ எனக்குப் பரிசு இல்லயா?:)...போங்கோ ஜி எம் பி ஐயா:).. உங்களுக்கு ரசனை பத்தாது:)... நீங்க நினைச்சதத்தான் நாங்க சொல்லோணும் எனில் அது கஸ்டம்.. அப்போ நீங்களே முடிச்சிடுங்கோ கதையை:).... எனக்கு ரசனை போறாதுதான் ஒரு வித்தியாசத்துக்கு வாசகர்களை கதையை தொடரக் கேட்டால் சும்மா பிச்சுப் பிச்சு கிழித்து விட்டீர்கள்கதையை தொடங்கி ஒரு பாதை போட்டிருந்தேன் அதன் முடிவு ஒரு உண்மைசம்பவமாகும் அதைத்தான் யாராவது யூகிகிறார்களா என்று பார்த்தேன் ஆனால் எதுவுமே நினைத்ததுபோல் இல்லை

      நீக்கு
    13. தில்லயகத்து கீதா நீண்ட கொதிப்புடன் ஆன பின்னூட்டத்துக்கு நன்றி உடனே முடிக்க நான் கூறவே இல்லையே கதையின் தொடரை அவர்கள் தளத்தில் வெளியிட்டு எனக்கும் தெரியப்படுத்தி இருக்கலாமே யாருடைய கற்பனையையும் குறை சொல்ல வில்லை கதையின் முடிவை சாங்கேதமாகக் கூறி இருந்தேன் கதையின் போக்குப்படி முடிவுமிருக்க வேண்டும் அல்லவாநான் என் யூகப்படி எழுத வேண்டு என்றும்சொல்ல வில்லை ஆனால் கதையை படித்தால் முடிவின் போக்கு புரிந்து கொள்ளப்படலாம்/..உங்கள் கதையில் வரும் அந்தப் பெண் அதாவது மருமகள் எதற்காக வாழவேண்டும் என்று சொல்லுவதாக சொல்லியிருந்தீர்கள். உண்மைச் சம்பவம் என்றும் சொல்லியிருக்கிறீர்கள். அதே மருமகள் பொசிஷனில் அதிரா இருந்திருந்தால் அப்படிச் சிந்திக்கணும்னு அவசியம் இல்லையே ஸார்.../ அந்த மருமகளின் நிலையில்தான் சிந்திக்க வேண்டும் கதைக்காக நான் என்ன செய்திருப்பேன் எப்படி செய்திருப்பேன் என்று அல்ல ஒவ்வொரு முடிவையும் ரசித்தேன் ஆனால் அது நான்கேட்டுக்கொண்டபடி இல்லை என்பதே சாராம்சம் வருகைக்கு நல்ல டிஃபென்சுக்கும் பாராட்டுகள்

      நீக்கு
  6. அதிராவின் முடிவு நன்றாக இருக்கிறது. இப்படியே வைத்து கொள்ளலாம். மாலதி அந்த பக்கமும் இந்த பக்கமும் சொல்லி சண்டையை பெரிது செய்யாமல் சமரசத்திற்கு வழி செய்தது நல்லதாக போச்சு. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி அக்கா.. அப்போ உடனேயெ பரிசைத் தரச்சொல்லி ஜி எம் பி ஐயாவிடம் சொல்லுங்கோ.. இல்லை எனில் அடுத்த பிக்பொஸ்.. புளொக்கேர்ஸ் கலக்கும் நிகழ்ச்சிக்குப் பெயர் அனுப்பி விடுவேன் எனவும் மிரட்டுங்கோ.. ஹா ஹா ஹா:).. எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:).

      நீக்கு
    2. கோமதி அரசு வாழ்க்கையில் இம்மாதிரி சமரசங்கள் கதைகளில் தான் வரும் என் கத்சைக்கு நிஜ வாழ்வில் ஆதாரம் இருக்கிறது. அதை யாராவது யூகிக்கிறார்களா என்பதேஎன் தேடல்

      நீக்கு
    3. அதிரா மிரட்டி எல்லாம் பரிசுபெற முடியாது பிளாகர்ஸ் கலக்கும் நிகழ்ச்சி எங்கே எப்போது

      நீக்கு
  7. எப்படியோ சந்தோஷமாக் குடும்பம் நடத்தினால் சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா மேடம் மாமியார் மருமகள் சச்சரவுகள் சுமூக மாக முடிகிறதா உங்கள் எண்ணம் எது

      நீக்கு
    2. கண்டிப்பாக சுமூகமாக முடிகிறது சார். சேர்ந்து வாழும் குடும்பங்களை நான் பார்க்கிறேன் ஸார். நல்ல விதமாகத்தான். ஸார் நீங்கள் சொல்லும் இந்த சச்சரவுகள் என்பது மகள் அம்மாவுக்கிடையிலும் வரத்தானே செய்கிறது. எத்தனையோ மகள்களே தங்கள் அம்மாவை துச்சமாகப் பேசி சண்டை போட்டு விலகி இருப்பதும் நடக்கத்தான் செய்கிறது சார். கருத்து வேறுபாடு என்பது எல்லா உறவுகளுக்குள்ளும் வருவதுததானே. மாமியார் மருமகளுக்கிடையிலும் எழலாம். ஆனால் சேர்ந்து வாழ்ந்து நல்லபடியாகக் குடும்பம் நடப்பதையும் நான் பார்க்கிறேன் ஸார்.

      கீதா

      நீக்கு
    3. நன்குறிப்பிட்டுக் கேட்டது கீதா சாம்பசிவமிடம் உங்களிடம் என்று நினைத்து பதில் எழுதி இருக்கிறீர்கள்

      நீக்கு
  8. எனக்கு வீட்டுக்கு வீடு வாசப்படி..

    ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்ப்போம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையில் கூடஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லையா வேடிக்கை பார்ப்பதே வழக்கமாகி விட்டது

      நீக்கு
  9. ''அடி பைத்தியக் காரி ,இதுக்கு நீ ஏன் தற்கொலை பண்ணிக்கணும் ,உன் மாமியார்காரி காதில் இருக்கும் ஹியரிங் எய்டின் பாட்டரியை கழட்டிவிட்டா போச்சு,எப்படி ஒட்டு கேட்பார்?அவர் கண்ணு முன்னாடியே உன் கணவரோட சீண்டி விளையாடு....பார்க்க சகிக்காம கிழவி ஓடிடும் ''

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹியரிங் எய்டின் பாட்டரியை கழட்டிவிட்டா போச்சு,எப்படி ஒட்டு கேட்பார்? அருமையான யோசனை சார் .

      நீக்கு
    2. ஹையோ பகவான் ஜீ.. என்னால முடியவே இல்லை ஹா ஹா ஹா.. நிட்சயம் ஜி எம் பி ஐயா எல்லோரையும் அடிச்சுக் கலைக்கப்போகிறார்ர்:)

      நீக்கு
    3. பகவான் ஜி வந்த பின்னூட்ட முடிவுகளிலேயே இது தேவலாம் ஆனால் மாமியார்காரிக்கு காது மட்டும் பிரச்சனை என்று உங்கள் யூகம் ஆனால் அவர்கள் எதையும் கண்களாலும் கண்காணிக்க முடியுமே

      நீக்கு
    4. விமல் ஒட்டுக்கேட்பது மட்டும் அல்ல மாமியார் கணவனிடம் ஒட்டவும் விடுவதில்லையே

      நீக்கு
    5. அதிரா எல்லாவற்றையும் நகைச்சுவையாக்கும் உங்கள் குணம் பிடித்திருக்கிறது ஆனால் எனக்குத்தான் அவற்றை ரசிக்கத் தெரியவில்லை

      நீக்கு
  10. மறுநாளும் வந்தாள் கல்யாணியின் மருமகள். "மாலதிக்கா மாலதிக்கா.." என்று தயங்கியவளைக் கேள்வியுடன் பார்த்தாள் மாலதி. "உங்க கிட்டே நேத்து பேசிட்டுப் போனதும் யோசிச்சேன்.. இந்த விஷயத்துக்கெல்லாம் சாகணும்னு நினைச்சது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்னு தோணிச்சு.. என் மாமியார் கிட்டே பேசித்தீர்த்துக்கிட்டேன்.. இனி அப்படி பேச மாட்டாங்கனு நினைக்கிறேன்.."

    "ரொம்ப நல்லது.. அனுசரிச்சுக்கிட்டு போயிடறது தான் உசிதம்"

    "நானும் அதைத்தான் என் மாமியார் கிட்டே சொன்னேன்.. ஆனா அவங்க பதிலுக்கு என்ன சொன்னாங்கனு புரியவே இல்லே"

    "ஏன்?"

    "ஏனா? என்னைப் பத்தி ஊர்ல வம்பு பேசுவியாடினு கேட்டு அவங்க நாக்கை அறுத்திட்டேன்.. அதான்" என்றாள் கல்யாணியின் மருமகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகர்களைத் தொடரக் கேட்டதில் சில கட்டறுத்தோடும் சில அதீதக் கற்பனைகளைப் பார்க்க முடிகிறதுசத்தியமாகச் சொல்கிறேன் என்னால் முடியாது வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  11. உங்கள் நடையினைத் தொடர்ந்து எங்களால் எழுத முடியுமா என்பது எனக்கு ஐயமே ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் நடையினைத் தொடர்ந்து யார் எழுதி இருக்கிறார்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது சார்

      நீக்கு
  12. //என்னைப் பத்தி ஊர்ல வம்பு பேசுவியாடினு கேட்டு அவங்க நாக்கை அறுத்திட்டேன்.. அதான்" என்றாள் கல்யாணியின் மருமகள்.//

    அடிப்பொலி!

    ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. புதிதாய்த் திருமணமான மகள் அம்மாவுக்கு ஃபோன் செய்கிறாள்.

    "அம்மா.... காலைல எனக்கும் அவருக்கும் வழக்கம்போல தகராறு ஆயிடுச்சும்மா........"

    "இதெல்லாம் கல்யாண வாழ்க்கைல சகஜம் கண்ணே.... மறந்துட்டு அடுத்த வேலையைப் பாரு....."

    "அது சரிம்மா.... பாடியை என்ன பண்றது?"

    பதிலளிநீக்கு
  13. "சே! சே! என்ன பேசற? இந்த மாதிரி வார்த்தைகள் நம் வாயில் வரவே கூடாது. " மாலதி சுகன்யாவை(ஜி.எம்.பி. சார் நீங்கள் மருமகளுக்கு கொடுக்காத பெயரை நான் கொடுத்து விட்டேன்..ஹி..ஹி ) சோபாவில் அமர வைத்து, கொஞ்சம் தண்ணீரும் கொடுத்தாள்.

    "சொல்லு என்ன நடந்தது?"

    "இன்னிக்கு காலைல நான் எழுந்து கொள்ள கொஞ்சம் நேரமாகி விட்டது. நேற்று இரவு ஒரே தலை வலி..தூக்கம் வரவில்லை.. எழுந்து வந்ததும், என் மாமியார், மணி என்ன? தெரியுமா? என்றார்.
    நான் யதார்த்தமாக நேத்து ராத்திரி தூங்க நேரமாகி விட்டது என்றேன்.. அதற்கு என்னவெல்லாம் அசிங்கமாக பேசி விட்டார்..!
    சே! கல்யாணம் செய்து கொள்வது செக்ஸுக்காக மட்டும்தானா?"

    மாலதி, சுகன்யா தன் துயரத்தை ஆற்றிக் கொள்ளட்டும் என்று கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தாள். பிறகு, "நீ ஏன் வேலைக்குச் செல்லக் கூடாது ?" என்றாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வேலைக்கு போய்க் கொண்டுதான் இருந்தேன். கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போக வேண்டாம் என்று இவர்கள்தான் வேலையைவிடச் சொன்னார்கள்.

      "அதை எல்லாம் விடு, இனிமேல் வேலைக்குச் செல். சம்பளத்துக்காக இல்ல, உனக்கு ஒரு அவுட் லெட் கிடைக்கும்."

      ஸ்ரீகாந்த் ஒத்துக்கணுமே..?

      ஓத்துக்க வை.. நா வேணா என் ஹஸ்பெண்டு கிட்ட சொல்லி ஸ்ரீ காந்த் கிட்ட பேச சொல்றேன்.

      ஐயையோ அதெல்லாம் வேண்டாம் .. என்று அவள் சொன்னாலும் பேசினால் பாதகமில்லை என்பது போல்தான் இருந்தது அவள் ரியாக் ஷன் .

      அவளோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த பொழுது அவள் மாமியாருக்கு அவள் கணவன் வீட்டாரோடு அத்தனை நல்ல உறவு இல்லை என்பது புரிந்தது.

      இவ மட்டும்(வார்த்தையை கவனியுங்கள் இவ..சுகன்யாவின் மாமியார் எப்படி தன் மரியாதையை குறைத்துக் கொண்டு விட்டார்?) கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே புருஷனை அழைத்துக் கொண்டு தனிக் குடித்தனம் வந்துட்டா.. ஆனா நான் மட்டும் என் ஹஸ்பெண்ட் கூட பேசினாலே தப்பு.. ஹும் என்ன நியாயமோ?

      இங்கதான் நீ உன் மாமியாரை புரிஞ்சுக்கணும்.. அவங்களுக்கு ஒரு இன்-செக்கூரிட்டி பீலிங்,அவங்க புகுந்த வீட்டில் நல்ல விதமா நடந்து கொண்டிருந்தால் இந்த மாதிரி பீலிங் வராது, ஆனால் சின்ன வயதில் அவங்க செஞ்ச தப்பு, இப்போ அவங்களை பயமுறுத்துது..எங்க தன் மருமகளும் தன்னைப் போலவே தன்னிடமிருந்து தன் மகனை பிரித்து கூட்டிக் கொண்டு போய் விடுவாளோ என்று. இதை சவலைக் குழந்தை உணர்வு என்று சொல்லலாம்.

      அப்படீன்னா..?

      நீக்கு
    2. கதை எழுதுவதைவிட கதாபாத்துரங்களுக்குப் பெயர் சூட்டுவது கடினம் சுகன்யா பெயர் நன்றாகத்தான் இருக்கிறது

      நீக்கு
    3. இந்தக்கதைக்குப் பெயர் சூட்டவில்லை. முடியாத கதையாக இருந்ததே ஒரு காரணமோ மிகவும் தாமதமான பின்னூட்டம் பிறரது ஐடியாக்களை உபயோகித்து கதையின் முடிவை ட்ராஃப்ட் செய்திருக்கிறேன் இன்னும் டிங்கரிங் செய்வது கடினம்

      நீக்கு
  14. ஒரு குடும்பத்தின் மூத்த குழந்தை எல்லா சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது, அதற்கு ஒரு தங்கையோ, தம்பியோ பிறந்தால் அந்த மூத்த குழந்தை எப்படி பீல் பண்ணும்?
    ......

    இத்தனை நாட்களாக தனக்கு கிடைத்த அம்மாவின் மடி,கொஞ்சல், எல்லாவற்றையும் பங்கு போட்டுக் கொள்ள இன்னொரு ஆள் வந்ததும், அவற்றை இழக்க மனமில்லாமல் கோபம், ஆத்திரம், லேசான பொறாமை எல்லாம் வரும். அதைப் போலத்தான் உன் மாமியாருக்கும் தன் மகன் மீது தனக்கு இருக்கும் உரிமையை மருமகள்வந்து பறித்துக் கொண்டு விடப்போகிறாளே என்று பயம்..

    சரிதான், அப்படினா மகனுக்கு கல்யாணமே செய்து வைத்திருக்கக் கூடாது.

    சுகன்யா சொன்னதை கேட்டு மாலதி மெல்ல சிரித்தாள், ஓகே.. நீ இதை சரியாக ஹாண்டில் பண்ணினால் எல்லாவற்றையும் சரி செய்து விடலாம்.

    நீங்க என்னை வேலைக்கு போகச் சொல்கிறீர்களே...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனைவி வேலைக்குப் போவதுஒரு தீர்வைக் கொடுக்கு மென்று நினைக்கிறீர்களா ஆனால் அதுவே இக்காலத்தில் உறவுகள் முறியக் காரணமாகலாம் என்று தோன்றுகிறது

      நீக்கு
  15. ஆமாம். இப்போ உனக்கு டைம் இருப்பதால், காலையிலிருந்து மாலை வரை ஸ்ரீகாந்தை பார்த்து கவனித்து எல்லாம் செய்து கொடுக்கிறாய். உன் மாமியாருக்கு செய்வதற்கு ஒன்றும் இல்லை, தன் கையிலிருந்து அதிகாரம் பறிபோய் விட்டது போல ஒரு உணர்வு.அதான் சொன்னேனே சவலை குழந்தை சிண்ட்ரோம்..!

    நான் பிறந்த பொழுது என் அண்ணா, என்னை என் அம்மா தூக்கவே கூடாது என்று அழுவானம், என் அம்மாவும், பிறந்த குழந்தையான என்னை பாயில் போட்டு விட்டு, அவனைத்தான் மடியில் வைத்துக் கொள்வாளாம். அதை போல நீயும் கொஞ்சம் விட்டுக் கொடு, அல்லது அப்படி நடி..

    பிக் பாஸ் சினேகன் மாதிரியா?

    ஹா ஹா! நல்ல கம்பாரிசன்! நீ வேலைக்குச் சென்றால் பாதி வேலைகளை உன் மாமியார் செய்ய வேண்டி இருக்கும். பிள்ளைக்கு வேண்டியதை செய்து கொடுக்கிறோம் என்று ஒரு திருப்தி வரும், அதிலேயே பாதி சரியாகி விடும்.

    என்னால் வேலை செய்ய முடியவில்லை என்றால்..?

    அப்படி சொன்னால் பார்த்துக்கலாம். ஒரு சர்வெண்ட் மெய்டு அரேஞ்சு பண்ணிக்கலாம். உனக்கும் ஆஃபிஸில் இதை விட மோசமான மாமியார் கதைகளை கேட்டல் நாம் எவ்வளவோ பெட்டர் என்று தோணலாம்...

    மாலதி பேசப்பேச சுகன்யாவின் முகம் தெளிந்தது. நீங்க எதுக்கும் அண்ணாகிட்ட சொல்லி ஸ்ரீயிடம் பேசச் சொல்லுங்கள். நான் இன்னிக்கே நௌக்ரி டாட் கமில் ரெஜிஸ்டர் செய்கிறேன். என்று கூறி விட்டு வீட்டிற்கு கிளம்பினாள்.

    மாலை மாலதியின் கணவன் வீடு திரும்பியதும், அவனிடம் நடந்த விஷயங்களை மாலதி விவரித்தாள்.

    "ஏது..? பயங்கரமா கவுன்சிலிங் கொடுத்திருக்கியே..? சைக்காலஜி படிச்சிருக்கியா?"

    "இதுக்கு சைக்காலஜி படிக்கணுமா? நான் பெரிய குடும்பத்தில் வளர்ந்திருக்கிறேன். வீட்டற்குள்ளேயே பல வகையான மனிதர்களை பார்த்திருக்கிறேன்."

    "எல்லாம் சரி, நான் எப்படி ஸ்ரீகாந்த்திடம் அவனுடைய பர்சனல் விஷயங்கள் பேசுவது?"

    "சுகன்யாவை ஏன் வேலையிலிருந்து நிறுத்தி விட்டாய்? நம்ம ஆஃபீஸிலேயே ஒரு வேகென்சி இருக்கு என்று ஆரம்பியுங்களேன்... இதெல்லாம் நான் சொல்லி கொடுத்துதான் உங்களுக்கு தெரியனுமா.? ரொம்பத்தான்.."

    "அப்புறம் அவனை அவன் அம்மாவோடு கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ண சொல்லுங்கோ, வாரம் ஒரு முறை கோவிலுக்கு அழைத்துச் செல்வது இப்படி.."

    "ஓகே! பார்க்கலாம்," என்று பிடி கொடுக்காமல் பேசினாலும், அவர் ஸ்ரீகாந்தோடு பேசியிருக்கிறார் என்பது ஸ்ரீகாந்த் அவன் அம்மாவோடு மாலைவேளைகளில் எங்கேயாவது செல்வதிலும், சுகன்யா வேலைக்கு செல்ல தொடங்கியதிலும் தெரிந்தது.

    இப்போதெல்லாம் மாலதியின் பகல் தூக்கம் கெடுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரவர் வாழ்க்கைக்கு அவரவரே தீர்வு காண வேண்டும் கஷ்ட காலங்களில் பிறர் உதவி நாடுவது ஒரு பாரத்தை மாற்றி வைக்க உதவலாம் நிறையவே மெனக்கெட்டிருக்கிறீர்கள் நீங்களே கதை எழுதி இருந்தால் அதன் போக்கே ஒரு வேளை மாறலாம்

      நீக்கு
    2. பானுமதி, மருமகள் வேலைக்குச் செல்வது ஒரு வகையில் தீர்வு தான். ஆனால் பல மாமியார்கள் அந்த மருமகள் வேலைக்குச் செல்லக் கிளம்புவதற்குள்ளாக வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டுப் போக வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அவங்க பிரச்னை வேலை செய்யணும் என்பதில் இருக்காது. தன் மகனிடம் தனக்குத் தான் அதிக உரிமை, அதிலும் முதல் உரிமை என்பதை நிலை நாட்டுவதில் தான் இருக்கும். ஆகவே வேலைக்குப் போனால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கலாம்! நான் பார்த்தவரைக்கும் மாமியார்கள் மருமகள் சமைத்து வைத்ததும் அவளை அப்பால் போகச் சொல்லிவிட்டுத் தாங்களே மகனுக்கு சாப்பாடு போடுவார்கள். அப்படிச் சாப்பாடு போடும்போது மருமகள் வந்தப்புறம் தான் மகன் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், உடம்பைக் கவனிக்கணும் என்றும் மருமகள் காதுபடப் புலம்புவார்கள்! மருமகள் சமையலிலே தான் மகன் உடல் கெட்டுப் போவதாகவும் சொல்வார்கள். இப்படியும் பார்த்திருக்கேன். ஆனால் இப்போதெல்லாம் இது நிறையவே குறைஞ்சிருக்கு! பல மாமியார்களும் மரும்களோடு சுமுகமான உறவையே கடைப்பிடிக்கின்றனர்.

      நீக்கு
    3. எனக்குத் தெரிந்த ஒரு மாமியார் மகன் தன் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்தபோது கூட மரும்கள், பேத்தி ஆகியோரின் மேல் உள்ளார்ந்த வெறுப்பைக் காட்டி நடந்து கொண்டதைப் பார்த்திருக்கேன். தன் மகளுக்கு அந்தப் பிள்ளை ஒரு சகோதரனாகச் செய்ததை விட அதிகமாகத் தன் பிள்ளை தன் மகளுக்குச் செய்வதை அதாவது அந்த மாமியாரின் சொந்தப் பேத்திக்குச் செய்வதை அவரால் ஏற்க முடியவில்லை! விவரிக்கப் போனால் பெரிசாக ஆகும்.

      நீக்கு
    4. மாமியார் மருமகள் உறவு பற்றி கீதா மேடம் சொல்லி இருப்பது இக்காலத்துக்கும் பொருந்துமா இருந்தாலும் அவர் அனுபவசாலி சரியாகத்தான் இருக்கும்

      நீக்கு
    5. இருக்காங்க! நேரில் பார்ப்பதை/கேட்பதை, உணர்வதைத்தான் சொல்கிறேன். சமீபத்தில் கூட எங்கள் உறவுக்காரப் பெண்ணின் மாமியார் தனக்கு, கணவன் மற்றும் பிள்ளைக்கு மட்டும் சமைத்துக் கொண்டு சாப்பிட்டுப் பாத்திரங்களைத் தேய்த்துக் கவிழ்த்து விடுவாராம். குழந்தையை அம்மா வீட்டில் விட்டுச் செல்வதால் அந்தப் பெண் அம்மா வீட்டில் சாப்பிட்டு விட்டு வருவாளாம்! இப்போத் தான் எல்லோரும் சேர்ந்து மாமியாரைக் கணவரோடு தனியாகவும், பிள்ளை மருமகளைத் தனியாகவும் குடித்தனம் வைத்திருக்காங்க. இத்தனைக்கும் அந்த மாமியாருக்கு இரண்டாவது மகன் இருக்கிறார். அவரிடம் இந்தக் கெடுபிடி எல்லாம் செல்லுபடி ஆகவில்லை. மூத்த பிள்ளை, மருமகளிடம் மட்டுமே! குழந்தையும் இப்போது வளர்ந்து பள்ளி செல்ல ஆரம்பித்து விட்டதால் பிரச்னை இல்லை.

      நீக்கு
    6. பெண் எடுத்த மாமியார், மாமனார் தங்கள் பிள்ளையின் மாமனார், மாமியாருக்கு உதவி செய்ததையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். முழுக்க முழுக்க அவங்க உடல்நிலை சரியில்லாதபோது அங்கேயே தங்கி இருந்து வேண்டிய உதவிகள் செய்தனர்! அப்படியும் மனிதர்கள் உண்டு!

      நீக்கு
    7. இதனால் தெரிவது என்னவென்றால் சில பிரச்சனைகளுக்கு ஜெனெரிக் தீர்வு என்பதுகிடையாதுஅவரவர் மனப் பாங்கும் அனுபவமுமே தீர்வு சொல்லவேண்டும் மேற்படிக்கதையில் ஒரு நடந்த சம்பவம் ஆக இருண்டாலும் முழு விபரங்கள் இல்லாததாலும் முடிவும் வித்தியாசமாகவே இருந்திருக்கிறது அடுத்து முடிக்கிறேன்

      நீக்கு
  16. இந்த கதைக்கு நீங்கள் தலைப்பும் கொடுக்கவில்லை. 'சவலை குழந்தை சிண்ட்ரோம்' அல்லது 'தொடரும் தூக்கங்கள்' என்று தலைப்பிடலாம்(என் கற்பனையை கொண்டு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கற்பனை நன்றாகத்தான் இருக்கிறது தொடரும் தூக்கங்களா துக்கங்களா வருகைக்கு நன்றி மேம்

      நீக்கு