இடை வேளையில்
-----------------------------
-----------------------------
இத்துடன்
இரண்டு படங்கள் வெளியிடுகிறேன் முன்பு
போல் இருந்தால் இப்படங்களை கண்ணாடி ஓவியங்களாக்கி இருப்பேன் இப்போதும் ஒன்றும்
குறைந்து விடவில்லை. எனக்குத் தெரிந்தே பதிவுலகில் நன்கு ஓவியம் வரைபவர்கள் உண்டு, இதையே அவர்கள் ஓவியமாக்க
முயற்சிக்கலாமே
கீழே காணப்படுவது காணொளி. பதிவுலகில் பலரும்
காணொளிகளைத் தாண்டிச் சென்றுவிடுகிறார்கள் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இதை அவசியம் பாருங்கள் ஒரு வேளை ஏற்கனவே
பார்த்திருக்கலாம் ஒரு குழந்தையிடம் எப்படி அணுகக் கூடாது என்பது புரியும் மேலும்
சில குழந்தைகளின் அடமும் விளங்கலாம்
என்
வீட்டுச்சின்ன தோட்டத்து மலர்களைநான்
பார்த்துப் பார்த்து பரவசமாகிறேன்
அழகான ரோஜா ஆனால் ரோஜா என்றால் அது பற்றி நினைக்கும் போது வரும் வண்ணமா இது.
என்வீட்டுத்தோட்டத்தில்
நிறைய செடிகள் இருந்தாலும் இது வரை பூத்தது ஓரிரு முறைதான் நான்சொல்வது இந்த நிஷாகந்தியை விடியற்காலையில்
மலரும் இந்த மலரை விரிந்துஇருக்கும் போது விழித்திருந்துபுகைப்படமெடுக்க முடியுமோ தெரியவில்லை மலராதமொட்டாக
இந்தநிஷாகந்தி அல்லது பிரம்மகமலம் உங்கள் பார்வைக்கு
தெச்சி
செடியில் மலர்களைப் பார்ப்பதே அழகு என்
வீட்டுச் செடியில் பூத்த மலர்கள்
இதுவும்
ஒரு எக்சோடிக் வகை பூ. கீதா மதிவாணனிதை லாப்ஸ்டர் க்ளாஸ் என்று சொன்ன நினைவு. வீட்டைப் பராமரிக்கும் போது நிறையவே செடிகள்
பாழாகி விட்டன. மிஞ்சியதில் சில பூக்கள் இப்போது
முதலிரண்டு படங்கள் அட்டகாசம். அட!
பதிலளிநீக்குவிழி இமைக்காமல் பார்த்து ரசித்தேன்.
நான் பெற்ற இன்பம் வருகைக்கு ரசிப்புக்கும் நன்றி சார்
நீக்குவினோதமான படங்கள் காணொளி ஏற்கனவே கண்டது இப்போதும் கண்டேன் ஐயா.
பதிலளிநீக்குகாணொளி வைரலாகி வந்தது தெரியும் இருந்தாலும் பகிர்ந்தேன்
நீக்குதோட்டத்து மலர்கள் கொள்ளை அழகு. ஓவியங்களை ரசித்தேன். காணொளி திறக்கவில்லை.
பதிலளிநீக்குகாணொளி காண வேண்டிய ஒன்று குழந்தைகள் பற்றியது
நீக்குஒன்றில் இரண்டு (two in one)படங்களை ரசித்தேன். முன்பு ஒருமுறை இதேபோன்று வேறு படங்களையும் உங்கள் பதிவில் பார்த்ததாக நினைவு. ஆனால் அவற்றில் இவைபோல சுலபமாக கண்டறியவில்லை என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குநீங்கள் குறிப்பிட்ட தெச்சியை இங்கு இட்லிப்பூ என்பார்கள். இலக்கியத்தில் இதன் பெயர் வெட்சி. இந்த மலர்ச் செடி எங்கள் வீட்டிலும் உள்ளது. இதுபற்றிய எனது வலைப்பதிவும் உண்டு.
பாடம் படிக்கும் சிறுவன். எனது மற்றும் என்னுடைய பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தை நினைவில் கொணர்ந்தன.
ஆம் நான் வரைந்து இருந்த இரு ஓவியங்களைப் பகிர்ந்திருக்கிறேன் அவற்றில் உள் இருக்கும்படங்களை அடையாள்ம் தெரிவதே சவாலாகும் தெச்சி வெட்சி இட்லிப்பூ தெரிந்து கொண்டேன் உங்கள் குழந்தைப் பருவம் நினைவில் வந்ததா பாவம் நீங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சார்
நீக்குமுதலிரண்டு படங்களும் நல்லா இருந்தது. இதுபோன்ற பல படங்களைக் கண்டு ரசித்திருக்கிறேன். ரோஜா என்றால் ஒரு நிறம்தான் மனதில், வந்துபோகும்.
பதிலளிநீக்குரோஜா என்றதும் நினைவுக்கு வரும் நிறம் போல் இல்லை. பச்சை ரோஜாவுமிருக்கிறதாமே
நீக்குகடைசிபடத்தில் நனைந்த வாழைஇலை மழை நின்றபின் எடுத்த படமாக இருக்குமோ ? புகைப்படங்கள் அழகு.
பதிலளிநீக்குஅவை வாழையல்ல சார் வாழைபோல் தோற்றமளிக்கிறதா வருகைக்கு நன்றி சார்
நீக்குஎல்லா புகைப்படங்களும் அழகு.
பதிலளிநீக்குகாணொளி வாட்ஸ் அப்பில் பார்த்து விட்டேன், மீண்டும் பார்த்தேன். தொலைக்காட்சியிலும் காட்டினார்கள்.
இந்தக் காணொளி வைரலாகி புகழ் பெற்றது அரசு படம்வரைவார் இல்லையா வருகைக்கு நன்றி மேம்
நீக்குஒன்றுக்குள் ஒன்றாக ஒன்றி நிற்கும் படங்கள்..
பதிலளிநீக்குமற்றும் பூத்திருக்கும் செடிகள் - அருமை.. அழகு..
காணொளி திறக்கவில்லை.. அப்புறமாகப் பார்க்கிறேன்..
பார்க்க வேண்டிய காணொளி சார் வருகைக்கு நன்றி
நீக்கு/ விடியற்காலையில் மலரும் இந்த மலரை / சுமார் பதினொரு மணி அளவிலேயே மணம் பரப்பி மலரத் தொடங்கி விடும். பூக்கள் அனைத்தும் அழகு. லாப்ஸ்டர் க்ளாஸ் நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் படமாக்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. காணொளி திறக்கவில்லை. மீண்டும் முயன்று பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஒரு நாள் இரவு விழித்துஇப்பூவைக் காணச் சென்றேன் வாடத்துவங்கி இருந்தது காணொளி பாருங்கள் வருகைக்கு நன்றி மேம்
நீக்குகாணொளி திறந்தது. சமூக வலைத் தளங்களில் பலராலும் பகிரப்பட்டு இரு வேறு கருத்துகளோடு அணுகப்பட்ட ஒன்று.
பதிலளிநீக்குசரியே வைரலாகப் பரவிய காணொளிஅக்குழந்தையின் பெற்றோர்களும் வருந்தியதாகக் கேள்வி
நீக்குதுளசி: முதல் இரண்டு படங்களும் அசாத்தியமாக இருக்கின்றன. வீட்டுப் பூக்களும் அழகு சார். காணொளி என் மொபைலில் திறக்கவில்லை.
பதிலளிநீக்குமுதல் இரண்டு படங்களும் அட்டகாசம் ஸார்!!! ரொம்பவே ரசித்தோம். உங்கள் வீட்டுத் தோட்டத்தின் மலர்கள் ரொம்ப அழகு! லேப்ஸ்டர் நான் புகைப்படம் எடுக்கவில்லை எடுக்க நினைத்திருக்கும் பூ!
காணொளி வாட்சப்பில் வந்தது ஸார். ரொம்பக் கொடுமை! இப்படியா குழந்தையை அதட்டுவது மிரட்டுவது? அணுகுமுறை ரொம்பத் தவறுதான்..
பாராட்டுக்கு நன்றி துளசி வைரலான காணொளி
நீக்குஓவியம் வரைவது சத்தியமா என்னால முடியாது.. முயற்சிக்கவும் மாட்டேன்ன்:) கதை எழுதினதுக்கே நீங்க ஏசிப்போட்டீங்க ஹா ஹா ஹா:)..
பதிலளிநீக்குஜி எம் பி ஐயா.. கதை எழுதினதுக்கு எனக்கு பரிசு இல்லையா?? உந்த ரோசாப்பூவையாவது தந்திருக்கலாம்ம்.. சரி விடுங்கோ:).
உங்கள் வீட்டுச் செடிகள் அழகு.. பராமரிப்பவர் யாரோ???
சித்திரமும் கைப்பழக்கம் அல்லவா அதிரா நான் ஓவியம் வரையக் கற்றதே யாருடைய உதவியுமில்லாமல் ஏகலைவன் மாதிரி என் அறு பது வயதுகளில் வருகைக்கு நன்றி ம்மா
நீக்குஎல்லாப் படங்களும் அழகு. முதல் இரண்டு படங்களும் பார்க்கப் பார்க்கப் புதிய புதிய பரிமாணங்கள் (என்று சொல்லலாமா?)
பதிலளிநீக்குகாணொளி வாட்ஸாப்பில் தொலைக்காட்சியிலும் வந்து பிரச்சனையானது. ஹிந்திப் பாடகர் ஒருவரின் உறவுக்காரக் குழந்தை என்று விளக்கம் சொல்லியிருந்தார்கள்.
முன்புபோல் இருந்திருந்தால் நானே ஓவியமாக்கி இருப்பேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ
நீக்குஅனைத்துப் புகைப்படங்களும் அருமை. குறிப்பாக முதல் இரு படங்கள்.
பதிலளிநீக்குபாராட்டுக்குரியவன் நான் அல்ல என் பங்கு பகிர்ந்ததே
நீக்குமுதலிரண்டு படங்களும் வியப்ப்பு...
பதிலளிநீக்குகாணொளி ஏற்கனவே பார்த்ததுதான்..
உங்க கிளிக்கும் சூப்பர்.
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி
நீக்குவீடொன்றிருப்பது நல்லது. அதில் தோட்டமொன்று அமைந்திருப்பது விசேஷம். பூக்கள் அங்கே காணப்படுவது அழகு. அவற்றை ரசிக்கும் மனநிலை பெற்றிருப்பது பாக்யம்.
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி சார்
நீக்குமுதல் இரண்டு படங்களும் வரைவது கடினம். படங்களை இரசித்தேன். காணொளியை பார்த்தபோது கோபம் தான் வந்தது. ஒரு குழந்தைக்கு எப்படி பாடங்களை சொல்லிக் கொடுக்கக்கூடாது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
பதிலளிநீக்குபூக்கள் அருமை. அதுவும் அந்த Hanging lobster claw மற்றும் False bird of paradise என்கிற Heliconia rostrata வின் அழகே தனி. பகிர்ந்தமைக்கு நன்றி!
நீங்கள் படம் வரைவீர்கள் என்று தெரியும் உங்களை நினைத்துதா ந் எழுதினேன்
பதிலளிநீக்குஎன்னை நினைத்து எழுதியது அறிந்து மிக்க மகிழ்ச்சி ஐயா! நிச்சயம் இந்த படங்களை வரைய முயற்சிப்பேன்.
நீக்குமுயற்சி உடையார் இகழ்ச்சி அடையார், விரைவில் உங்கள் ஓவியதைப் பதிவில் காண அவா
நீக்குமுதல் இரண்டு படங்கள் வெகு சிறப்பு. காணொளி முன்னரே பார்த்திருக்கிறேன். பாவம் அந்த குழந்தை.
பதிலளிநீக்குமகள் ரோஷிணியிடம் வரையச் சொல்லலாமே குழந்தையும் சரி பெற்றோரும் சரி சளைத்தவர்கள் அல்ல வருகைக்கு நன்றி சார்
நீக்கு