விழாக்காலங்கள்
----------------------------
|
குருவாயூரில் ஓணம் |
எல்லாப்
பண்டிகைகளும் மக்கள் உறவுகளோடு கூடி மகிழ்ச்சியாய் இருக்கவே கொண்டாடப் படுகின்றன.
அதை ஏதோ அவதாரக் கதையின் மிச்சம் என்று
சொல்லும்போதுதான் மனம் கேட்பதில்லை நல் ஆட்சி கொடுத்த பரிபாலனம் செய்து வந்த
மகாபலிச் சக்ரவர்த்தி அசுர குலத்தில் பிறந்து விட்டான் அவன்
தான தர்மங்கள் செய்து சொன்ன சொல் தவறாமல் ஆட்சி புரிந்து வந்தான் அவனை
துஷ்ட நிக்ரஹம் என்று சொல்லி அவதாரம் எடுத்து மூன்றடி நிலம் கேட்டு வஞ்சித்துக்
கொன்றார் மஹாவிஷ்ணு இது கர்ண பரம்பரைக்கதை அல்ல ஒரு அவதாரக் கதை இதுபற்றி முன்பே எழுதி இருக்கிறேன் பார்க்க
இதெல்லாம்
பக்தர்களுக்குச் சொன்னால் பிடிக்காது அவர்கள் நம்பிக்கை அப்படியானால் நான் யார்
எடுத்துச் சொல்ல.- இருந்தாலும் நெருடலைத் தெரிவிக்கிறேன்
கேரளத்தில் சாதி மதம்பார்க்காமல் கொண்டாடப்படும்
பண்டிகை ஓணம் அதன் முக்கிய நோக்கமே
உறவுகளுடனும் நட்புகளுடனும் மகிழ்ச்சியாய்
இருப்பதே
நான்
சிறுவனாக இருந்தபோது வீட்டு வாசலில்
மாதேறு என்னும் உருவம் களிமண்ணால் செய்து தினம் வழிபடுவார்கள் அதைச் சுற்றி ஆட்டமும்பாட்டமும்
மிகுதியாய் இருக்கும் அந்தப் பண்டிகை வெகுவாக
மாறி இருக்கிறது மாதேறுவுக்குப் பதில் பூக்களங்கள் இடப்பட்டு ரசிக்கப் படுகின்றன.புள்ளினங்கள்
கூடுகளுக்குப் போவதுபோல் மலையாளிகள்
தத்தம் ஊருக்குச் செல்கிறார்கள்
என் இளைய மகன். அவனது மனைவியின் ஊரான சாலக் குடிக்குச் சென்றிருக்கிறான்
|
சாலக்குடியில் மருமகள் தாயாருடன் |
|
சென்னையில் மகன் வீட்டுப் பூக்களம் |
மகளுக்கு பட்டமளிப்பு விழா இருந்ததால் அவள்
செல்ல வில்லை ஓணம்பண்டிகை எங்களுடன் கழித்தாள்
|
எங்கள் வீட்டில் பேத்தி |
|
தாத்தாவுடன் பேத்தி |
|
சாலக் குடியில் பேரன் |
அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் என் நண்பரும் அவர் மனைவியும் அவர்கள் பணி நிமித்தம் சென்னை சென்று விட்டார்கள் எல்லோரும் ஓணாஷ்ம்சகள் என்று வாழ்த்துகள் பரிமாரிக்கொண்டோம்
இனிதாக பண்டிகை கழிகிறது
இது
ஒரு விழாக்காலம் விநாயகச் சதுர்த்தி முடிந்து முஹரம் ஓணம் இன்னும்
சில நாட்களில் நவராத்திரி. கலகல வெண்ரிருக்கும் எங்கள் தெரு பொழுது போக்க
உதவும் சில புகைப்படங்களை பகிர்கிறேன்
|
விநாயகர் எங்கள் தெருவில் விசர்ஜனத்துக்குப் போகிறார் n |
அருமையான பகிர்வு.
பதிலளிநீக்குநன்றி மேம்
நீக்குஇனிய ஓணாஷ்ம்சகள் ஐயா.
பதிலளிநீக்குபுகைப்படங்கள் நன்று.
ஓணம் முடிந்தாலும் நினவுகள் மிச்சம். வருகைக்கு நன்றி சார் /ஜி
நீக்குbeautiful photos.. onam greetings
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குவட இந்தியர்களுக்கு தீபாவளி போன்று மலையாளிகளுக்கு ஓணம். தமிழர்களுக்கு பொங்கல், 50 வருடத்துக்கு முன்பு இருந்ததுபோல்.
பதிலளிநீக்குபடங்கள் நல்லா இருக்கின்றன. ஓணம் நல்வாழ்த்துகள்.
ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொருத்த்ருக்கு முக்கியம் ஏன் என்றுதான் தெரியவில்லை வருகைக்கு நன்றி சார்
நீக்குஅருமை. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீ
நீக்குஇனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் சார் .எல்லா படங்களும் அழகு
பதிலளிநீக்குதாத்தாவும் பேத்தியும் பொக்கிஷமான அழகிய புகைப்படம்
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஏஞ்செல்
நீக்குமகிழ்ந்தேன் ஐயா
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுக்கு நன்றி சார்
நீக்குமுதலில் ஓணாஷ்ம்சகள்! ஸார்!
பதிலளிநீக்குஅருமையான பதிவு! கோலங்கள் வெகு அழகு! உங்கள் பேத்தியுடன் நீங்கள் இருப்பது சூப்பராக இருக்கு ஸார்! பேத்தி செம க்யூட்! பேரனும்..க்யூட்! அம்மா இன்று ஓண சட்த்யா செய்திருப்பாங்களே!!!
கீதா
ஓணம் சத்தியா இரண்டு மூன்று நாட்களுக்கு ஓடும் வருகைக்கு நன்றி கீதா
நீக்குநல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் வாழ்த்துக்கள் சார் .
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குஅன்பின் இனிய ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குஅனைத்துப் படங்களும் அழகு..
வாழ்க நலம்..
இந்தப்படங்கள் நினைவுகளை மீட்ட உதவும் வாழ்த்துகளுக்கு நன்றி சார்
நீக்குபூக்களப் படங்கள் அருமை.ஓணம் பற்றிய தங்களின் பதிவு, 7 ஆண்டுகள் கேரளத்தில் நான் பணி புரிந்தபோது, எங்கள் வங்கியில் நடந்த ஓணம் விழாவும், கோட்டயத்தில் இருந்த வங்கிகளுக்கிடையே நடந்த அத்தப்பூக்களப் போட்டியில் எங்களது கிளை முதல் பரிசு பெற்றதும் மனதில் நிழலாடுகிறது. நினைவுகளை மீட்டெடுத்த தங்களுக்கு நன்றி!
பதிலளிநீக்குஎங்கள் வீட்டில் பூக்களம் வைக்கவில்லை.என் பேத்தி அவள் வீட்டுக்குச் சென்றபின் பூக்களம்வைத்திருக்கிறாள் நினைவுகள் இனிமைதானே ஐயா
நீக்குஓணம் சிறப்பாக கழித்திருக்கும் என நினைக்கிறேன். பூக்களங்களும், புகைப்படங்களும் அருமை!
பதிலளிநீக்குஓணம்கழிந்த விதம்தானே பதிவில் குருவாயூர் பூக்களமும் சேர்த்துதானே பாராட்டு கள்
பதிலளிநீக்குபூக்களம் மிக அழகு. பகிர்வும் படங்களின் தொகுப்பும் அருமை.
பதிலளிநீக்குபேத்தி, பேரன், மருமகள் என்று குடும்ப படங்கள் மிக அருமையான பொக்கிஷபகிர்வு. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபண்டிகைக் காலங்களில் உறவுகளின் அருகாமை இல்லாததைப் படங்கள் போக்குகிறது என்று தோன்றுகிறது வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்குவிழாக் கால இனிமையான பகிர்வு அருமையாக இருந்தது.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குநல்லதொரு பதிவு .. பண்டிகைகளை இங்கே ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம்..... பேத்தியுடன் மகிழ்ச்சியாக நிற்பது கண்டு சந்தோஷம். இப்படிபட்ட வாய்ப்புக்கள் எல்லா தாத்தாக்களுக்கும் கிடைக்காது... வாழ்க வளமுடன்
நானும் பண்டிகைகளை வரவேற்கிறேன் ஆனால் அதனை தொடர்பு படுத்திச் சொல்லப்படும் கதைகள்விரும்புவதில்லை. கடந்த தீபாவளி யன்று எல்லோரும் வந்திருந்தார்கள் அந்தமாதிரி மன நிலைக்காக ஏங்கும் உள்ளம் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்குவிழாக்கோலப்படங்கள் ப்ரமாதம். பேரன், பேத்தியுடன் பொழுது இனிதாகக் கழிந்திருக்கும். இப்போதெல்லாம் வீட்டு மனிதர்கள் சேர்வதற்கே நாள், நட்சத்திரம் பார்க்கவேண்டியிருக்கிறது..
பதிலளிநீக்குபேத்தி மட்டும்தான் உடனிருந்தாள் மற்றபடி பண்டிகை எல்லாம் அவரவர் இடத்தில்தான் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு