எதிரும் புதிரும் கணவன் மனைவி
----------------------------------------------------------
கணவன் – இந்த தீபாவளிக்கு உனக்குப் பட்டுப்புடவை
மனைவி- எதை வெச்சு சொல்றீங்க
கணவ - உன் வளையலை வெச்சுத்தான் சொல்றேன்
=========
மனைவி- ஏங்க நம்ம பெண்ணுக்கு வயசாகிகிட்டே போகுதே.அவளுக்கு சீக்கிரமா ஒரு
மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா
கணவன் அழகா லட்சணமா மாப்பிள்ளை
கிடைக்கும் வரை காத்திருக்கட்டும்டி
மனைவி- எங்கப்பா அப்படியா காத்திருந்தார்
==========
கணவன் –என்ன இது மிக்சி க்ரைண்டர் புடவைன்னு ஏகப்பட்ட சாமான்களோட
வேன்ல வந்து இறங்கறெ
மனைவி- நீங்கதானே சொன்னீங்க பேங்ல
இருக்கற நம்ம ஜாயிண்ட் அக்கௌண்டை க்லோஸ்
செய்யணும்னு அதைத்தான் செய்திட்டு வரேன்
=========
கணவன் -ஏன் நான் உள்ளார
வந்தவுடன் கண்ணாடியை எடுத்துப்
போட்டுக்கறெ
மனைவி- டாக்டர்தானே சொல்லி இருக்கார். தலைவலி வந்தவுடன் கண்ணாடி போட்டுக்கணும்னு
===========
கணவன் = உங்கப்பா பெரிய ஒலிம்பிக் ரசிகரா இருக்கலாம் அதுக்காக தங்க
நகைகளுக்குப் பதில் வெண்கல நகைகளை செய்து போட்டால் என்ன அர்த்தம்
மனைவி – நீங்க எனக்கு மூன்றாவதா வந்த புருஷன்னு அர்த்தம்
==========
மனைவி- நேத்து ராத்திரி கனவுலஎனக்கு நீங்க நிறைய நகை வாங்கித்தந்தீங்க
தெரியுமா
கணவன் – ஓ தெரியுமே உங்கப்பா கூட அதுக்குப் பணம் கட்டினாரே
==========
கணவன் –ஏண்டி எப்பப் பார்த்தாலும்
எரிஞ்சு விழரே
மனைவி நீங்கதானே சொன்னீங்க
கோபப்படும்போது நான் அழகா இருக்கேன்னு
=========
மனைவி – நமக்குக் கல்யாணமாகி 10 வருஷங்கள் ஆச்சு
கணவன் -எனக்கு மறந்து போச்சு
மனைவி- இது கூடவா
கணவன் நல்லவிஷயங்கள் மட்டும்தான்
எனக்கு நினைவில் இருக்கு
==========
கணவன் -ஏன் இந்த மாசம் போன் பில்
அதிகமா வந்திருக்கு
மனைவி – உங்கம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா தினமும் எஸ்டி டி போட்டு சண்டை போட வேண்டியதா இருக்கு
================
கணவன் – உனக்குத்தான் ரெண்டு
கண்ணும் ஒழுங்கா இருக்கெ ஒழுங்கா அரிசில
கல்லப் பொறுக்க மாட்டியா
மனைவி =உங்களுடைய 32 பல்லும் ஒழுங்காத்தானே இருக்கு ரெண்டு மூணு கல்லைக் கடிச்சு சாப்ப்ட முடியாதா
==============
மனைவி- என்ன பார்த்துகிட்டு இருக்கீங்க
கணவன் –ஒண்ணுமில்ல
மனைவி –ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மாரேஜ் சர்ட்டிஃபிகேட்ட பார்த்துட்டு
இருக்கீங்க
கணவன் – எங்கேயாவது எக்ஸ்பைரி டேட்
போட்டிருக்கான்னு பார்க்கிறேன்
=============================
(எதுவும் என் கற்பனையல்ல)
இந்தக் காணொளி பார்த்து ரசிக்கவும் பொறாமை படவும்
(எதுவும் என் கற்பனையல்ல)
இந்தக் காணொளி பார்த்து ரசிக்கவும் பொறாமை படவும்
உங்களின் நகைச்சுவைத் தொகுப்பை ரசித்தேன் ,காணொளி கண்டு ஒரு ஆறுதல் ,நாம் பொறாமைப் படவேண்டியதில்லை :)
பதிலளிநீக்குகாணொளியை நாம் ரசிக்கலாம் அல்லவா வருகை மகிழ்ச்சி தருகிறது
நீக்குஜோக்ஸ் மற்றும் காணொளி மறுபடியும் ரசித்தேன்.
பதிலளிநீக்குதம முதலாம் வாக்கு.
பகிர்வுகள் பலவும் ஏற்கனவே வலம் வந்தவை போல் இருக்கிறது ரசிப்புக்கும் தம வாக்குக்கும் நன்றி ஸ்ரீ
நீக்குjokesஅநேகமாப் படிச்சவை! காணொளியும் அதிசயமாத் திறக்குதேனு பார்த்தால் ஏற்கெனவே பார்த்தது! பாட்டும் ரசிக்க முடியும்!
பதிலளிநீக்குமுன்பே பார்த்ததானாலும் ரசிக்கலாமே
நீக்குநகைச்சுவைத் துணுக்குகளின் தொகுப்பு.. ரசித்தேன்..
பதிலளிநீக்குசில பதிவுகளில் காணொளி திறப்பதில்லை..
வாழ்க நலம்..
காணொளி திறாக்காமல் இருப்பது பல வாசகர்களுக்குப் பழகிவிட்டது போல ரசிப்புக்கு நன்றி சார்
நீக்குFunny
பதிலளிநீக்குit was meant to be so
நீக்குஜோக்ஸ் மற்றும் காணொளி ரசித்தோம் சார். காணொளி வாட்சப்பில் வந்திருந்தது....
பதிலளிநீக்குதுளசி, கீதா
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி சார்/ .மேம்
நீக்குஹா ஹா ஹா ஜி எம் பி ஐயா நான் சிரிப்பது கேக்குதோ.. அத்தனையும் அருமை.. கீரியும் பாம்புமான கணவன் மனைவி ஜோக்ஸ்ஸ்:))..
பதிலளிநீக்குவீடியோப் பார்த்துப் பொறாமை வரவில்லை.. சங்கடமாக இருக்கு... எதுக்கு இந்தாப்பெரிய மயிர்... பராமரிப்பது எவ்ளோ கஸ்டம் தெரியுமோ?.. அத்தோடு இன்னொன்று.. கூந்தல் குடியைக் கெடுக்கும் என்பினம்.. தெரியல்ல:)..
எங்கள் ஸ்கூலில் ஒரு பிள்ளைக்கு இப்படித்தான் துடைவரை கூந்தல் இருக்கும்... சில நாட்களில் காலை 6 மணிக்கு ரியூசன் வகுப்பிருக்கும்.. அப்போ அவ 5 மணிக்கு பஸ் எடுத்து வந்து அப்படியே ஸ்கூல் க்கு வரோணும் என்பதால், நைட் லயே தலைபின்னி விட்டு, படுக்காமல் சோபாவிலயே சாய்ந்து நித்திரை கொள்ளுவாவாம்ம்ம்... ஹையோ ஹையோ:)
இந்த கூந்தல் பிரச்சனை வீட்டிலும் உண்டு. பேன் வராமல் தடுப்பது தான் சவாலாக உள்ளது.
நீக்குஅதிரா நிஜ வாழ்க்கையின் தொகுப்புதானே கணவன் மனைவி சமாச்சாரங்கள் கூந்தல் குடியைக் கெடுக்கும் என்று ஏதாவது சொல்லி ஆற்றாமையைப் போக்கிக்க வேண்டியதுதான் நானந்தக் கூந்தலை ரசித்தேன் எத்தனை ஆசை இருந்தால் அப்படி வள்ரும் வரை விட்டு வைக்க முடியும்
நீக்குஜோதிஜி பேன் சமாச்சாரம் கூந்தல் குறைவாக இருப்போருக்கும் இருக்கிறது-
நீக்குவருகைக்கு நன்றி சார்
அந்தப் பெண்ணின் கணவனை நினைத்தால் கவலையாக இருக்கிறது...காரணம் உங்களுக்கே தெரியுமே! -இராய செல்லப்பா சென்னை
பதிலளிநீக்குஎனக்கு என்று என்ன விசேஷமாகத் தெரிய . நீண்ட இடைவெளிக்குப் பின் வருகைக்கு நன்றி சார்
நீக்குநகைச்சுவைகள் அனைத்தும் ரசிக்க வைத்தன ஐயா
பதிலளிநீக்குகாணொளி முதல் முறை காண்கிறேன் பெருமையான விடயம்தானே பொறாமை எதற்கு ?
ஆண்கள் ரசிக்கவு பெண்கள் சால்ஜாப்பு சொல்லி ப் போகவும் . இல்லாதவர் பொறாமைப்பட சான்ஸிருக்கிறது
நீக்குநகைச்சுவைகளில் பலவற்றை ஏற்கனவே படித்திருந்தாலும் ரசிக்க முடிந்தது.
பதிலளிநீக்குகாணொளியைப் பார்த்தேன். அதிரா பொறாமையில் சொல்லியிருக்கிறாரோ என்று நினைத்துத்தான் காணொளியைப் பார்த்தேன். அளவுக்கு மிஞ்சியது எதுவும் நல்லதல்ல. பாவம் அவள் ஹஸ்பண்டு. இவள் சிங்காரித்து வருவதற்குள், சமையல் போன்ற எல்லாவற்றையும் முடிக்கவேண்டும். வெளியே போவதென்றால் 10 மணி நேரத்துக்கு முன்னால் மனைவியை ரெடியாகச் சொல்லவேண்டும்.
//அதிரா பொறாமையில் சொல்லியிருக்கிறாரோ என்று நினைத்துத்தான் காணொளியைப் பார்த்தேன். ///
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..
///பாவம் அவள் ஹஸ்பண்டு. இவள் சிங்காரித்து வருவதற்குள், சமையல் போன்ற எல்லாவற்றையும் முடிக்கவேண்டும். வெளியே போவதென்றால் 10 மணி நேரத்துக்கு முன்னால் மனைவியை ரெடியாகச் சொல்லவேண்டும்.///
ஹா ஹா ஹா அவரவர்க்கு அவரவர் கவலை:)
நெத- மீண்டும் ரசித்ததற்கு நன்றி சார் அதிரா பொறாமைப் படவில்லை அவருக்குத் தோன்றியதை கூறி இருக்கிறார்
நீக்குஅதிரா உங்களுக்குத் தெரியுமா நெத. அவரது மனைவியை ஹஸ்பண்ட் என்றே சொல்லுவார்
நீக்குஹா ஹா ஹா யேஸ் இப்போ தெரியும் ஐயா:).. ஆரம்பம் குழம்பி பின்பு தெளிவாகிட்டேன்... அப்போ இவர் வைஃப்தானே?:) ஒரு ஹஸ்பண்ட்தானே ஒரு வீட்டில் இருக்க முடியும்?:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).
நீக்குஉறவுகளை மாற்றிக் குறிப்பிடுவதில் உள்ள சிக்கல் குழப்பம் என்றே தோன்று கிறது
நீக்குஏற்கனவே படித்த நகைச்சுவை துணுக்குகள் என்றாலும் திரும்பவும் படித்து இரசித்தேன். காணொளியைக்கண்டு வியந்தேன்! பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குஉண்மைதான் ஐயா கூந்தல் வியப்பு தருகிறது
நீக்குரசித்து மகிழ நல்ல நகைச்சுவை தொகுப்புகள்
பதிலளிநீக்குவருகைக்கு ம் ரசிப்புக்கும் நன்றி சார்
நீக்குநீங்களுமாப்பா?! இருங்க இந்த பதிவைலாம் அம்மாக்கிட்ட காட்டுறேன்
பதிலளிநீக்குஏன் நான் நகைச்சுவையாக எழுதக் கூடாதா என் மனைவிக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும்
நீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குசில குடும்பங்களில் இதான் சண்டைக்கு ஆரம்பம். இந்த மாதிரி பாவ்லா கிண்டல்கள் கூட கோபத்தைக் கிளப்பி விட வாய்ப்பிருக்கிறது.
பதிலளிநீக்குகணவன் மனைவி இருவருக்கும் புரிதல் இல்லாவிட்டால் ஒரு வேளை சண்டை சாத்தியமாகலாம்
நீக்குநகைச்சுவை அருமையாக உள்ளது ஐயா!
பதிலளிநீக்குபடித்ததும் கண்டதும் பகிர்ந்திருக்கிறேன் அவ்வளவுதான்
நீக்குநகைச்சுவைகளை ரசித்தேன் ஐயா
பதிலளிநீக்குதம +1
நன்றி சார்
நீக்குOld is gold :-)
பதிலளிநீக்குwhat is old here
நீக்குஇந்த மாதிரி கூந்தலைத்தான் பழைய இலக்கியங்கள் மயில்தோகை போன்ற குழல் எனப் பொருத்தமாக வர்ணிக்கின்றன .பதிவுக்கு நன்றி .
பதிலளிநீக்குஇதைத்தான் இலக்கியங்கள் மயில் தோகை போல் என்கிறதா வருகைக்கு நன்றி சார்
நீக்குதொகுப்பு நன்று!த ம 8
பதிலளிநீக்குவருகைக்கும் தம வாக்குக்கும் நன்றி ஐயா என்னால்தான் யாருக்கும் தம வாக்கு அளிக்க முடிவதில்லை
நீக்குஒன்றை ஒன்றும் அளவு உள்ள நகைச்சுவைகள். உங்களின் பல்துறை திறமையறிந்து வியக்கிறோம் ஐயா.
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி சார்
பதிலளிநீக்குநகைச்சுவைத் துணுக்குகள் சிரிக்க வைத்தன. காணொளி பிரமிக்க வைத்தது.
பதிலளிநீக்குஉங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது
பதிலளிநீக்குnalla nagaichuvai pagirvu. ungaL thirai-isai paadal pathivum rasithen. Angu eno pathivida mudiyavillai. ... neengal pathitha mudhal paadal enakku theriyathu. Matra paadalgaL ellaame arupadhaamaana ninaivugaL kiLarubavai
பதிலளிநீக்குவருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி மேம் திரை இசைப் பாடல்களில் முதலில் பதிவிட்டதைப் பலரும் கேட்டிருக்க வாய்ப்பில்லை அது மிகப் பழைய பாடல் எனக்கே அது எந்த படத்தில் என்பதில் சந்தேகம் உண்டு
பதிலளிநீக்கு