Thursday, September 28, 2017

நவராத்திரி விழா


                                                     நவராத்திரி விழா
                                                     ----------------------------
நவராத்திரி விழா களை கட்டிக் கொண்டிருக்கிறது தேவியின்  உருவமாக நாளுக்கு ஒரு பெயருடன் அன்னையை வணங்குகிறர்கள் பலரது பதிவுகளைப் படிக்கும்  போது இன்ன நாளுக்கு இன்ன பெயர் கொண்டவள் தேவி  , அவளை வணங்கும் முறைகளும்  கூறு கிறார்கள் ஆனால் எனக்கு அது எல்லாம்  உடன் பாடு இல்லை. இருந்தாலும் ஆண்டாண்டுகாலமாக  வண்ங்கி வருபவர்களின் மனம்  புண்படாதவாறு அதே சமயம்  கடவுளை  எந்த பெயரில் அழைத்தாலும்  அன்னையின்  சொரூபமாக  வணங்குவதே சரியாகும்   என்று தோன்றியதால் நானும்  விழாக்காலத்துக்கு  ஏற்பஒரு துதி பாடலை எழுதி இருக்கிறேன் ஒவ்வொரு ஆண்டும்  வீட்டில் கொலு வைப்பது என்மனைவியின்  வழக்கம்  ஆனால் அவளுக்கும் வயதாகி வருகிறதல்லவா சென்ற இரு ஆண்டுகளாககொலு வைப்பது நின்று விட்டாலும்   தினமும்  தவறாது  லலிதா சஹஸ்ர நாமத்துடன்  பூஜை செய்வது தொடர்கிறது

ணு அண்டம் பேரண்டம் அனைத்தையும்
இயக்கும் சக்தியே உன்னை நான் வணங்குகிறேன்.
உருவமும் பெயரும் ஏதுமில்லா உன்னை என்ன சொல்லி
போற்றுவேன் .மலையத் துவசன் பெற்ற பெரு வாழ்வென்பேனா-
புவி மடந்தை- நாமருவிய கலை மடந்தை- ஜெய மடந்தை என்பேனா-
சர்வசக்தி பொருந்திய  சர்வாங்க சுந்தரி என்பேனா--நான்
அவலத்தில் அழுந்தும்போது என் நாவினில் வந்தமரும்
முருகனும் நீயே,- கண்ணனும் நீயே- ஏனையோர் துதிக்கும்
எல்லா நாமங்களும் கொண்டவளும் நீயல்லவா- நீ என்
அப்பனல்லவா, அம்மையல்லவா, கண் துஞ்சாது எனைக்
காக்கும் தாரமல்லவா.- யாதுமாகி நிற்கும் தேவியே
கலை மகளே, அலை மகளே, மலைமகளே
உயிருள்ள,உயிரற்ற, அனைத்திலும் இருப்பவளே,
எனை ஈன்ற தாயின் தாயே- எல்லாம் நீயே
உனை நான் வணங்குகிறேன் .! காத்தருள்வாய் சக்தியே


முன்பு வைத்த கொலுவின்  ஒரு படம்


 இந்தப் பாடலின் வரிகளை சுப்புத்தாத்தாவின்   குரலில் கேட்கலாமே 59 comments:

 1. தாங்கள் எழுதியுள்ள அருமையான துதிப்பாடலை திரு சுப்பு தாத்தாவின் இனிய குரலில் கேட்டு மகிழ்ந்தேன். வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் வாழ்த்துடன் பாராட்டுக்கும் நன்றி ஐயா

   Delete
 2. பாடல் நல்லா இருக்கு. உங்கள் துணைவியார் பூஜை செய்வது இருக்கட்டும், அதைச் சாக்கிட்டு உங்களுக்கு பிரசாதம் வருகிறதா?

  புவி மடந்தை- நாமருவிய கலை மடந்தை- ஜெய மடந்தை - இது மெய்கீர்த்தியில் இருக்கும் வாக்கியம்போல் இருக்கிறது. (ஸ்வஸ்திஸ்ரீ பூமருவிய திருமந்தையும் புவிமடந்தையும் புயத்திருப்ப, நாமருவிய கலைமடந்தையும் நலம் சிறப்பக்)

  ReplyDelete
  Replies
  1. எங்கள் வீட்டில் என் துணைவியார் பூஜைக்கு முக்கியத்துவம் கொடுப்பார் மற்றபடி தின்பண்டங்களுக்கு அல்ல. நாங்கள் விரும்புவதை எங்களுக்குப் பிடித்தது என்றுதான் உண்போம் கடவுள் பெயர் சொல்லி அல்ல எனக்குப் புரியாததை எல்லாம் இன்சினுவேட் செய்கிறீர்களோ மெய் கீர்த்தி யார் எங்கு எப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்

   Delete
  2. //மற்றபடி தின்பண்டங்களுக்கு அல்ல. நாங்கள் விரும்புவதை எங்களுக்குப் பிடித்தது என்றுதான் உண்போம் கடவுள் பெயர் சொல்லி அல்ல //முக்கியத்துவம் கொடுக்கிறோமோ இல்லையோ சாப்பிடறோம் இல்லையா, அந்த அந்தப் பண்டிகைக்கு உரியதுனு இல்லாமல் நம் விருப்பத்துக்கு ஏற்பப் பண்ணி உண்கிறோம். நாங்களும் அதையே செய்கிறோம். கடவுள் பெயரைச் சொல்லி. அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் கொண்டே! ஏனெனில் ஆண்டவன் அருள் இல்லை எனில் இவை எல்லாம் எல்லோருக்கும் எப்போதும் கிடைப்பதில்லை! கிடைப்பதே கடவுள் அருளால் தான்! அவனன்றி ஓரணுவும் அசையாது! அன்றன்றைய அரிசியிலேயே அவன் பெயர் எழுதி இருப்பதாகவும் சொல்வார்கள். நமக்கு இவ்வளவு தூரம் செய்ய முடிகிறது, செய்கிறோம் என்பதே கடவுள் அருளால் தான்!

   Delete
  3. முதல் மழைக்காலம் முடிந்து அடுத்த மழைக்காலம் தொடங்கும் முன் வருவது நவராத்திரி. கொஞ்சம் சூடும் இருக்கும், இரவில் குளிரும் அவ்வப்போது தலைகாட்டும். ஆகவே உடலுக்குத் தேவையான ஆகாரங்களாகப் புரதம் நிறைந்ததாக உண்ண வேண்டும். அதற்குப் பருப்பு வகைகள். அந்தப் பருப்பு வகைகளைச் சுண்டலாகச் சாப்பிட்டால் உடலுக்கும் நல்லது. சக்தியும் வரும். சாப்பிடுவதை இறைவன் பெயரைச் சொல்லி உன் அருளால் கிடைத்தது என்று சொல்லிச் சாப்பிடுகிறோம். இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. கடவுள் பெயரைச் சொல்லித் தான் தினம் தினம் நாங்கள் சாப்பிட்டு வருகிறோம்.இனியும் சாப்பிடுவோம். உங்கள் விருப்பத்துக்கு நீங்கள் செய்து சாப்பிடுவது என்பது தனி என நினைக்கிறீர்கள். அதையே கடவுள் முன் படைத்து விட்டுச் சாப்பிட்டுப் பாருங்கள். பிரசாதமாக ஓர் புனிதமான ஒன்றாகத் தோன்றும். பண்டிகை கொண்டாடி விட்டு, பூஜை, புனஸ்காரங்கள் செய்து விட்டு இறைவனுக்கு எதுவுமே படைக்க மாட்டீர்களா உங்கள் வீட்டில்??????????????????????? ஆச்சரியம் தான். எதைப் படைக்கிறோமோ அதைக் கடவுள் பெயரால் அவன் அருளால் கிடைத்ததாகச் சொல்லி நாங்கள் உண்ணுவோம்.

   Delete
  4. கொஞ்சம் சூடு அல்ல நிறையவே இருக்கிறது எழுதுவதைப் புரிந்து கொள்ளாமல் கோபம்கொள்வது சரியல்ல. நான் என் முந்தைய பதிவுகளில் கேட்டிருக்கிறேன் இன்ன கடவுளுக்கு இன்னதுதான் பிடிக்கும் என்று சொல்லி அவன் பெயரைச் சொல்லி உண்பது எனக்கு உடன்பாடில்லை. மற்றபடி எனக்கு யார் எதை எப்போது உண்டாலும் ஆட்சேபணை கிடையாது என் மனை இறைவனுக்கு என்று படைப்பதில்லை வீட்டில் செய்வதையே நிவேதனமாக்குவாளது அவள் விருப்பம் என்னிடம் பிரசாதம் கேட்டதாலேயே என் மனசுக்குப் பட்டதை எழுதினேன்

   Delete
  5. பலமுறை எழுதி இருக்கிறேன் பண்டிகைக்கு உகந்தது என்று அல்ல என்று எழுதி இருப்பது நடை முறையில் இல்லை என்றே தெரிகிறதுகடவுள் பிரசாதம் என்பதெல்லாம் ஒரு மாயையே

   Delete
  6. வீட்டில் செய்வதைத் தான் நாங்களும் பிரசாதமாக்கி உண்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அந்த அந்தப் பருவங்களுக்கு ஏற்பக் கிடைப்பவற்றைச் சமைத்து அதை இறைவனுக்குப் படைத்து அவன் பெயரால் பிரசாதமாக உண்ணும் வழக்கம் பெரியோர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதை எல்லோருமே தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். இதில் எந்தத் தவறும் இல்லை. பருவங்களுக்கு ஏற்றாற்போல் பண்டிகைகளும் வருகின்றன. ஆகவே படைப்பவை அந்தக் கடவுளுக்குப் பிடித்தமானவை என்ற பெயரால் வழங்குகிறோம். பெருமாள் கோயில் எனில் புளியோதரை என்று யார் கொண்டு வந்தது? எப்போ வந்தது? ஆனாலும் பெருமாள் கோயிலுக்குப் போனால் புளியோதரையைத் தேடாதவர் யார் இருக்கிறார்கள்? நீங்க எழுதுவது புரிந்து கொண்டே பதில் சொல்கிறேன், சொல்லி இருக்கேன். பிள்ளையார் சதுர்த்தி என்றால் கொழுக்கட்டை இல்லாமலா கொண்டாடுவீர்கள்? கொழுக்கட்டை படைப்பதின் அர்த்தம் புரிந்தும் கொழுக்கட்டை பண்ணாமல் தான் இருக்க முடியுமா? அந்த அந்தப் பருவங்களை ஒட்டி வரும் பண்டிகைகளுக்கு அப்போது என்ன கிடைக்கிறதோ அவற்றால் சமைத்து நிவேதனம் செய்து சாப்பிடுகிறோம். இதில் சாப்பிடுவது மட்டுமே பிரதானம் என்னும் தொனியில் நீங்கள் சொல்லுவது தான் புரியறதே இல்லை! எல்லோருமே சாப்பிடுகின்றனர். சமைப்பதை இறைவனுக்குப் படைத்துவிட்டுப் பிரசாதமாக உண்பதில் என்ன தவறு?

   Delete
  7. நாம் கொண்டாடும் வெளிநாடுகளில் கூட நன்றி அறிவிக்கும் விழா என நவம்பர் மாதம் ஒரு வாரம் கொண்டாடுகின்றனர். அப்போது என்ன விளைகின்றதோ அதைக் கடவுளுக்குப் படைப்பார்கள். அவற்றால் பற்பல உருவங்கள் செய்து மகிழ்கின்றனர். இது உலகெங்கும் இருக்கும் வழக்கம்.

   Delete
  8. தினம் தினம் உண்ணும் உணவைக் கூட இறைவனுக்குப் படைத்துவிட்டுத் தான் உண்ணுகிறோம். பிரசாதம் என்பது மாயை எல்லாம் இல்லை! உங்கள் எண்ணமே மாயை!

   Delete
  9. நாம் நம் எண்ணங்களில் வேறுபட்டுஇருக்கிறோம் வாதங்களும் பிரதிவாதங்களும் ஒரு கோட்டில் சந்திக்க வாய்ப்பில்லை. நான் இந்த பழக்க வழக்கங்களுக்கு மாறான கருத்துகொண்டவன் நீங்களோ அதையே ஸ்தாபிக்க விரும்புபவர் பிறர் எண்ணங்கள் புரிந்தால் சரி என்று நினைப்பவன் எதையும் சாதிக்கவிரும்பவில்லை

   Delete
  10. GMB Sir. Am not insinuating. உங்கள் பாடலின் அந்த வரியைப் படித்தபோது மெய்கீர்த்தியில் வருவதுபோல் இருந்தது. பொதுவா கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் அரசனின் மெய்கீர்த்தி-அதாவது அரசனின் பெருமை, பட்டங்கள், வென்ற போர்கள் போன்றவற்றைச் சொல்லி ஆரம்பிக்கும். அவற்றில் படித்த வரிபோல் இருந்தது என்று உதாரணத்துடன் குறிப்பிட்டிருக்கிறேன். வாழ்த்துக்கள்.

   Delete
  11. ///முக்கியத்துவம் கொடுக்கிறோமோ இல்லையோ சாப்பிடறோம் இல்லையா, அந்த அந்தப் பண்டிகைக்கு உரியதுனு இல்லாமல் நம் விருப்பத்துக்கு ஏற்பப் பண்ணி உண்கிறோம். நாங்களும் அதையே செய்கிறோம். கடவுள் பெயரைச் சொல்லி.///

   ஹா ஹா ஹா கீதாக்கா இது தான் உண்மை... ஆனா அப்படியாவது கடவுளுக்குப் படைக்கிறோமே என ஒரு திருப்தி... நான் வடை, சுண்டல் செய்து படைத்துவிட்டு, ஃபோனிலே என்ன படைத்தீங்கள் இன்று.. எனக் கேட்போருக்கு சொல்லுவேன்ன்.. டெய்லி இனிப்பா சாப்பிட்டு அம்மாள் ஆச்சிக்கு வயிற்ரைப்பிரட்டுதாம் அதனால இன்று உறைப்பா கொடுத்தேன் என... பிரட்டு உங்களுக்கா அம்மனுக்கா எனத் திருப்பிக் கேட்பினம் ஹா ஹா ஹா... ஏதோ எம்மால் முடிந்தது... காட்டிலே கடவுளுக்கு தான் பிடித்த விலங்கைப் படைத்தாரே ஒருவர்.. அவரையும் கடவுள் ஏற்றுக்கொண்டார்தானே....

   கடவுள் இருக்கிறாரோ இல்லையோ அது அவரவர் தனிப்பட்ட கருத்து, யாரும் யாருக்கும் திணிக்க முடியாது, ஆனா ஏதோ ஒரு சக்திக்கு பயந்தே நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...

   நாம் விரும்பும் உணவைத்தானே அடுத்தவருக்குக் கொடுக்கோணும் நமக்குப் பிடிக்காததை அடுத்தவருக்கும் செய்யக்கூடாது...

   நாம் விரும்பும் உணவைக் கடவுளுக்குப் படைப்பது தப்பெனில், நாம் விரும்பி வாங்கும் கொலுவை வைத்து அழகு பார்ப்பதும் தப்பென்றாகிடுமே...

   ஹையோ எனக்கும் நிறைய எழுத வருதே.. ஜி எம் பி ஐயா... ஒவ்வொருத்தரும் நம் கருத்தைப் பரிமாறிக்கொள்கிறோம் அவ்வளவே.. .. பாருங்கோ நெல்லைத்தமிழன் பயந்திட்டார்ர் ஹா ஹா ஹா:)..

   Delete
  12. நெத . எனக்கு மெய் கீர்த்தி என்றால் என்னவென்றே தெரியலை தமிழ் ஒரு பிரமாத மொழி. நான் எழுதியவற்றி இதுபோல் அதுபோல் என்றால் மனதுக்குக் கஷ்டமாகிறது கண்ணதாசன் எழுதியதுபோல் ஜெயகாந்தன் எழுதியது போல் என்றெல்லாம் ஒப்பிடப்படுவதையும் நான் விரும்புவதில்லை என்னாலேயே இதே கருத்தைஇன்னொரு முறை எழுத முடியுமா தெரியாது

   Delete
  13. அதிரா என்னால் அப்படி எல்லாம் நினைக்க முடிவதில்லை என் செயல்களுக்கு நானே பொறுப்பு கடவுள் எனப்படுபவர் அல்ல என்பதே என் எண்ணம்
   யாரையும்காயப்படுத்த அல்ல. வித்தியாசமாய் சிந்திக்கிறவர்களு மிருக்கிறார்கள் அல்லவா
   காட்டிலே கடவுளுக்கு தான் பிடித்த விலங்கைப் படைத்தாரே ஒருவர்.. அவரையும் கடவுள் ஏற்றுக்கொண்டார்தானே..../ இவையெல்லவற்றையும் கத்சைகள் என்கிறேன் நான் நமதுசெயல்களுக்கு நியாயம்சொல்கிறோம்

   Delete
  14. உண்மைதான் ஐயா... நம் முன்னோர்கள் சொல்லி விட்டுப் போனது உண்மையோ கற்பனையோ அது ஒரு பக்கம் போகட்டும்.. ஆனா இந்த மத நம்பிக்கைகளை மக்களுக்குள் புகுத்துவதற்குக் காரணமே.. மக்களை நல்வழிப்படுத்துவதற்கே...

   விரதம் கூட எதுக்காக ஏற்படுத்தப்பட்டதெனில்.. நமக்குள் ஒரு மனக்கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதற்கே... என்கிறார்கள்.

   Delete
  15. மத நம்பிக்கைகள் பலவும் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது இந்த ஏற்றதாழ்வுக்கெல்லாம் இந்த மத போதனைகளே காரணம் விரதம் மனக் கட்டுப்பாட்டைக் கொண்டு வருகிறதா என்பதே கேள்வி உதாரணத்துக்கு சபரிமலைக்குப் போகசில கட்டுப்பாடுகளுட கூடிய விரதம் உண்டு ஆனால் நட முறையில் எல்லாமே மீறப்படுகின்றன விரதகாலம் ஒரு மண்டலம் என்பார்கள் ஆனால் இப்போதெல்லாம் இன்றுமாலை போட்டு நாளை மலைக்குப் போகிறார்கள் நானும் மூன்று முறை மலைக்குப் போய் இருக்கிறேன் மலக்குப் போய் வந்ததும் காய்ந்தமாடு கம்பங்கொல்லழிக்குள் புகுந்த மாதிரி எல்லா விரதஙளும் மீறப்படுகின்றன இவற்றை எல்லாம் தான் நான் எழுதுகிறேன் மத நம்பிக்கைகள் என்னும் பெயரில்பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல செயல்கள் என்னுடைய பல பதிவுகளில் எழுதி வருகிறேன் பொதுவாக சுயமாக சிந்திக்கும் அறிவை நாம் இழந்துவிட்டோமா இன்னும் பல கோட்பாடுகளால் ஊட்டி வளர்க்கப்படுகிறோமா என்னும் எண்ணம் எனக்குண்டு நிறையவே சொல்லிப்போகலாம் தூங்குகிறவர்களை எழுப்பலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை என்னழ் செய்ய முடியும்

   Delete
  16. ஏற்றதாழ்வுக்கெல்லாம் இந்த மத போதனைகளே காரணம் - அப்படி எனக்குத் தோன்றவில்லை. கறுப்பர் வெள்ளையர் பேதத்திற்கும் பைபிள்தான் காரணம் என்று சொல்வீர்கள் போலிருக்கிறதே... மனிதன் பொதுவாக மற்றவர்களைவிட தான் பெரியவன் என்று பேதம் பார்க்கும் இயல்புடையவன்.

   என் செயல்களுக்கு நானே பொறுப்பு கடவுள் எனப்படுபவர் அல்ல - அப்படி கடவுள் பொறுப்பு என்று யார் சொன்னார்கள்? 'கடவுள் பொறுப்பு' என்று சொல்வது எஸ்கேபிசம். நாம் செய்யும் செயல்களுக்கு நாமே பொறுப்பு. அதற்கான பலன் கொடுப்பது, நீதிபதி என்ற ஸ்தானத்தில் இருக்கும் 'கடவுள்' என்று இறை நம்பிக்கை உடையவர்கள் நினைக்கிறார்கள், அப்படி எண்ணுவதால் ஓரளவு ஒழுங்கு சமுதாயத்தில் இருக்கிறது என நம்புகிறேன்.

   சபரிமலைக்குப் போகசில கட்டுப்பாடுகளுட கூடிய விரதம் உண்டு ஆனால் நட முறையில் எல்லாமே மீறப்படுகின்றன - இதுவும் தவறான கருத்து. இரயிலில் யாரும் பயணச் சீட்டே எடுப்பதில்லை என்று போகிற போக்கில் சொல்லும் கருத்து போன்றது இது. ஏராளமான சின்சியர் பக்தர்கள் இருக்கின்றனர். அதில் நிறைய அவசரக் குடுக்கைகளும், எக்ஸ்கர்ஷன் போகும் பாங்கில் செல்பவர்களும் கலந்திருக்கின்றனர் (மனிதர்களில் பலவகைப் பட்டவர்கள் இருப்பதுபோல). எதையும் ஒரு மண்டலம் செய்தால் அது ஒரு பழக்கமாகிவிடும் என்பது அறிவியல் ரீதியாகச் சொல்லப்படுவது. ஆனால் நடைமுறையில் சின்சியராக இல்லாமல் கட்டுப்பாடு இருக்கிறதே என்று கஷ்டப்பட்டுக்கொண்டு செய்தால், அந்த விரதம் முடிந்ததும் எல்லாவற்றையும் மீற அத்தகையவர்களின் மனம் எண்ணும்.

   தூங்குவது போல் நடிப்பவர்களை - அனேகமாக எல்லாருமே இந்த விளக்கத்தில் வருவார்கள் (பெரும்பான்மையாக) என்று நினைக்கிறேன்.

   ஆனாலும் எனக்கு உங்களின் விளக்கங்கள் பலவும் கன்வின்சிங் ஆக இல்லை. சிலர் சொல்லுகிறோம், நிறையபேர் சொல்வதில்லை. நானே சொல்லவேண்டாம் என்றுதான் நினைத்தேன்.

   Delete
  17. /நானும் சொல்லத் தான் நினைத்தேன் நெ.த. ஆனால் ஏற்கெனவே சொன்னதுக்கு "சாதிக்கிறேன்" என்று சொன்னதால் வேண்டாம்னு இருந்தேன். அவரவர் கருத்தை வலியுறுத்துவது சாதித்தல் என்றால் எல்லோரும் அதைத் தானே செய்கின்றனர்! ஜிஎம்பி சார் உட்பட! திரும்பத் திரும்பக் கடவுளையும் அவர் இருப்பையும் ஒரு பக்கம் சாடிக்கொண்டு, எல்லாவற்றுக்கும் கடவுளே காரணம் என்று கூறிக்கொண்டு இன்னொரு பக்கம் அம்பிகை மேலும், முருகன் மேலும் பாடல்கள் எழுதும் மனப்போக்கு இருந்தால் என்னனு சொல்றது! புரியத்தான் இல்லை! அவரவர் செயலுக்கு அவரவரே பொறுப்பு! தீதும் நன்றும் பிறர் தர வாரா!

   Delete
  18. நெத ஏதோ ஒரு சிலரே விரதங்களைக் கடைப்பிடிக்கிறர்கள்நம்மை கட்டுப்பாட்டுக்குள் இருக்க வைக்கவும் அப்படி இருந்தால்தான் அந்தக் காலத்தில் சபரி மலை ஏற முடியும் என்று நம்பியதால் அவைகள் கடை பிடிக்கப்பட்டன நான் பார்த்த அளவில் இப்போதெல்லம் இவை வெறும்பேச்சளவிலேயே பெரும்பாலும் இருக்கின்றன. நான் எழுதுவது என் அனுபவ அடிப்படையில் தான் யாருமே கடைப் பிடிப்பதில்லை என்று சொல்ல வில்லை நானே மலௌஇக்குப் பொயிருந்தபோது அட்சர ம் தவறாமல் கடை பிடித்தவன் மலையில் ஐயப்பன் ஜோதி உருவில்வெளிப்படுகிறான் என்று திரிக்கப்பட்ட கதை அம்பலத்துக்கு வந்து அந்த ஜோதி மனிதர்களா ல் ஏற்றப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டு விட்டது gullible மக்கள் இன்றும் அதை நம்புகிறார்களாண்டவனைத் தொழ சபரிமலைக்குச் செல்ல வேண்டும் என்றில்லை இருந்தாலும் உடலையும் மனதையும் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட நியதிகள் புறக்கணிக்கப்படும்போது ஆதங்கத்துடன் எழுதுகிறேன் யாரையும் கன்வின்ஸ் செய்ய அல்ல. நடை முறைகள் தெரிய வேண்டும் என்பதே குறி இன்று கூட சதாப்தி ரயிலில் கொடுக்கப்பட்ட எலுமிச்சை நீர் கண்டாமினேட் ஆகி இருப்பதைக் காட்டினர் அதுரயிவேயில் தரப்படும் எல்லாநீரும் கண்டாமினேட் ஆக உள்ளதா என்று கேட்பதுபோல் இருக்கிறது உங்கள் வாதம் என் எழுத்துக்களில்குறை சொல்ல முடியாது என்னை வேண்டுமானால் குறை சொல்லலாம் நடை முறையில் இல்லாத கட்டௌபொபாடுகளை மீற முயல்வது சரியென்று கூறும் வாதம் ஏற்புடையதாய் இல்லை நான் சொல்ல்லவருவதை பலரும் உணருகிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும் மத போதனைகள் கூடவே உயர்வு தாழ்வு எண்ணங்களையும் விதைத்திருக்கிறது அதை ஒப்புக் கொள்ள பலரும் விரும்புவதில்லை என்பதே உண்மை

   Delete
  19. கீதா சாம்பசிவம் கடவுள் என்பதே ஒரு கான்செப்ட் அதை ஏற்றுக் கொள்ள என்னால் முடியவில்லை எம்ன் பதிவுகளை உன்னிப்பாய் கவனித்தால் நான் முருகன் மீதும் அம்பிகையின் மீதும் நம்பிக்கை கொண்டு எழுத வில்லை என்று தெரியும் கடவுளுக்கு என்று கூறப்படும் குணங்களை விவரித்துவேண்டுமானால் எழுதி இருப்பேன் முருகா நீ அப்பாவியா என்றும் எழுதி இருக்கிறேன் அதில் முருகனின் சில செயல்களாக சொல்லப்படுவதையும் விமரிசித்து இருப்பது தெரியும் நான் என்ன செய்கிறேன் என்பதில்கவனம் செலுத்துவதை விட்டு நான் சொலவதில் எவ்வளவு சரி என்பதில் கவனம் கொள்ளுங்கள் கடவுளே ஒரு கான்செப்ட் என்று சொல்லும் நான் அவரே காரணம் என்று சொல்லி இருக்கிறேனா மேம்

   Delete
  20. //நான் சொலவதில் எவ்வளவு சரி என்பதில் கவனம் கொள்ளுங்கள் கடவுளே ஒரு கான்செப்ட் என்று சொல்லும் நான் அவரே காரணம் என்று சொல்லி இருக்கிறேனா மேம்// நீங்கள் சொல்வதைத் தான் நானும் எடுத்துச் சொல்கிறேன். நீங்கள் என்ன செய்தாலும் அதைக் குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்? :) உங்கள் செயலுக்கு நீங்கள் தானே பொறுப்பு! :)

   Delete
  21. புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி

   Delete
 3. அன்னையின் பல்வேறு நாமங்களையும் சொல்லித் துதித்திருக்கும் உங்கள் பக்தி ஆத்மார்த்தமாக உள்ளது! பகிர்வுக்கு நன்றி. இந்த உலகமே அவள் உள்ளே அடக்கம் என்பார்கள். நீங்களும் அதைத் தான் சொல்லி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு மனதில் பட்டது பாடல் வடிவில் வருகைக்கு நன்றி மேம்

   Delete
 4. பாடல் நன்றாக இருக்கிறது. நவராத்திரி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி மேம்

   Delete
 5. உங்கள் உள்ளிருந்து இயக்கம் சக்தி கவியை அருமையாகப் படைக்க உதவி இருக்கிறது.​

  சுண்டல் கிடைத்ததா? தம முதலாம் வாக்கு.

  ReplyDelete
  Replies
  1. என் தளத்தின் முகப்பு வரிகளே என்னை இயக்குகிறது சுண்டல் தேவைப்படும்போது என் மனைவி செய்து கொடுப்பாள் தமக்கு நன்றி

   Delete
  2. ////சுண்டல் தேவைப்படும்போது என் மனைவி செய்து கொடுப்பாள் தமக்கு நன்றி///

   ஹா ஹா ஹா என்னால முடியல்ல முருகா.. இன்று எல்லோரும் பொல்லுக் கொடுத்தே அடி வாங்கினம் ஐயாவிடமிருந்து:)... ஹா ஹா ஹா ஜி எம் பி ஐயா நீங்கள் நாகேஷ் ஐ விட மேலே போயிட்டீங்க கொமெடியில்:) ஹா ஹா ஹா:).

   Delete
  3. நான் சீரிய்சாகப் பேசுவது காமெடி போல்தெரிகிறதா

   Delete
  4. அதிரா... எனக்கும் புன்னகைக்கத் தோன்றுகிறது. ஜி எம் பி ஸார் கோபித்துக் கொள்வார்!

   Delete
  5. உள்ளத்து உணர்ச்சிகளை சக்தியாக எடுத்துக் கொள்ளக் கூடாதா ஜி எம் பி ஸார்? சக்தி என்றாலே சாமிதானா?

   :))

   Delete
  6. புன்னகை நல்லதுதான் ஸ்ரீ கோபிக்க என்ன இருக்கிறது

   Delete
  7. உள்ளத்து உணர்ச்சிகள் உண்மையாக இருக்க வேண்டும் முதலிலேயே முடிவெடுத்து அலசக்கூடாதுசக்தி என்றாலே சாமிதான் என்று எங்கே கூறினேன் சாமி என்பதே ஒரு கோட்பாடு என எண்ணுகிறவன் நான்

   Delete
 6. Replies
  1. முதல் வருகை(?) க்கு நன்றி

   Delete
 7. >>> எனை ஈன்ற தாயின் தாயே - எல்லாம் நீயே
  உனை நான் வணங்குகிறேன்!. காத்தருள்வாய் சக்தியே! <<<

  நல்லார் எல்லாருக்கும் நல்லருள் பொழிவாளாக!..
  ஓம் சக்தி..ஓம்..

  ReplyDelete
  Replies
  1. தாயின் உருவமே முதல் தெய்வம் அல்லவா வருகைக்கு நன்றி சார்

   Delete
 8. ஸார் இவ்வுலகமே ஏன் அண்டமே பேரண்டமே அந்த சக்தியால்தானே இயங்குகிறது!!! சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்றுதானே ஆகிறது. உங்கள் உள்ளுணர்விலிருந்து வெளி வந்த பாடல் நன்றாக இருக்கிறது ஸார். உங்களின் உண்மை உள்ளம் பளிச்!!!

  கீதா: அக்கருத்துடன்..... என்ன பிரசாதம் ஸார் உங்கள் வீட்டில்?!! அம்மாவுக்கு நவராத்திரி வாழ்த்துகளைச் சொல்லிவிடுங்கள் ஸார்.

  ReplyDelete
  Replies
  1. தெய்வம் பற்றிய என் கருத்துகளை நான் நிறையவே எழுதி இருக்கிறேன் என் வீட்டில் என் மனைவிக்கு என்னைப்பற்றி நன்கு தெரியும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் வருகைக்கு நன்றி சார்/மேம்

   Delete
 9. உள்ளம் உருகுதைய்யா. உள்ளார்ந்த பாடல்.

  ReplyDelete
  Replies
  1. உள்ளம் உருகுதையா போலவா இருக்கிறது ரசிப்புக்கு நன்றி சார்

   Delete

 10. துதிப்பாடல் அருமையாக இருக்கு ஐயா!

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி சார்

   Delete
 11. நவராத்திரி வாழ்த்துக்கள் ஐயா.. பாருங்கோ இம்முறை எனக்கும்:).. இன்னொருவருக்கும்:) மட்டுமே அம்பாள் அருள் கிடைக்கும்:).. ஏனெனில் என் வோட் இங்கு 2ம் வோட்:) ஹா ஹா ஹா..

  சாப்பாட்டு ராமர்/கிருஸ்ணர்:) என்பதனை நெ.தமிழனும்.. ஸ்ரீராமும்.. புதுசா இணைந்திருக்கும் சமையல் வித்தகி கீதாவும்.. எழுத்தில் அதை நிரூபிச்சிட்டினம்:)..

  ஊசிக்குறிப்பு:
  சாப்பாட்டைப்பற்றி இங்கு நான் கேய்க்கவே இல்லையாக்கும்:).

  ReplyDelete
  Replies
  1. பாடல் பற்றியும் பொருள் பற்றியும் கூறவில்லையே அதிரா சிலருக்கு விழாக்கள் எல்லாவற்றிலும் கடவுள் பெயர் சொல்லி தின்பதற்கே முக்கியத்துவம் தருகிறார்கள் நீங்கள் வித்தியாசமா வருகைக்கு நன்றி

   Delete
  2. ஊரோடு ஒத்தோடு எனத்தானே சொல்லித்தந்தார்கள்.. அதுக்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன?:)..

   Delete
  3. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை வேண்டும்தானே எல்லாவற்றிலும் ஊரோடு ஒத்துப்போக முடியுமா

   Delete
  4. நீங்கள் சொல்லுவது சரிதான் ஆனா சிலவிசயங்களில் மனம் பயப்படுகிறதே... கடவுள் நம்பிக்கை இல்லையெனில் இப்பயம் வராது..

   Delete
 12. பாடலைக் கேட்டேன். லயித்தேன் ஐயா. நீங்கள் கூறுவதுபோல அவரவர் எண்ணப்படி வணங்குவோம். மன நிறைவு பெறுவோம்.

  ReplyDelete
  Replies
  1. அவரவர் எண்ணப்படி என்றால் புரிதல் இல்லாமலா வருகைக்கு நன்றி சார்

   Delete
 13. மனம் மகிழ்ந்தேன் ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் மன மகிழ்வுக்கும் நன்றி சார்

   Delete
 14. தாத்தாவின் குரலில் தங்களது பாடலைக் கேட்டேன் ஐயா அருமை
  த.ம.5

  ReplyDelete
  Replies
  1. பாடல் அருமையா தாத்தாவின் குரலினால் அருமையா ஜி வருகைக்கு நன்றி

   Delete
 15. பாட்டும் வரிகளும் அருமை. கூடவே காணொளியில் கொலுப் பொம்மைகள்.. அதில் மரப்பாச்சிகள் அழகு! நவராத்திரி வாழ்த்துகள்!

  ReplyDelete
 16. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி மேம்

  ReplyDelete