நவராத்திரி விழா
----------------------------
நவராத்திரி விழா களை கட்டிக் கொண்டிருக்கிறது தேவியின் உருவமாக நாளுக்கு ஒரு பெயருடன் அன்னையை
வணங்குகிறர்கள் பலரது பதிவுகளைப் படிக்கும்
போது இன்ன நாளுக்கு இன்ன பெயர் கொண்டவள் தேவி , அவளை வணங்கும் முறைகளும் கூறு கிறார்கள் ஆனால் எனக்கு அது எல்லாம் உடன் பாடு இல்லை. இருந்தாலும் ஆண்டாண்டுகாலமாக வண்ங்கி வருபவர்களின் மனம் புண்படாதவாறு அதே சமயம் கடவுளை
எந்த பெயரில் அழைத்தாலும்
அன்னையின் சொரூபமாக வணங்குவதே சரியாகும் என்று தோன்றியதால் நானும் விழாக்காலத்துக்கு ஏற்பஒரு துதி பாடலை எழுதி இருக்கிறேன் ஒவ்வொரு
ஆண்டும் வீட்டில் கொலு வைப்பது
என்மனைவியின் வழக்கம் ஆனால் அவளுக்கும் வயதாகி வருகிறதல்லவா சென்ற
இரு ஆண்டுகளாககொலு வைப்பது நின்று விட்டாலும்
தினமும் தவறாது லலிதா சஹஸ்ர நாமத்துடன் பூஜை செய்வது தொடர்கிறது
அணு அண்டம் பேரண்டம் அனைத்தையும்
இயக்கும்
சக்தியே உன்னை நான் வணங்குகிறேன்.
உருவமும் பெயரும் ஏதுமில்லா உன்னை என்ன சொல்லி
போற்றுவேன் .மலையத் துவசன் பெற்ற பெரு வாழ்வென்பேனா-
புவி மடந்தை- நாமருவிய கலை மடந்தை- ஜெய மடந்தை என்பேனா-
சர்வசக்தி பொருந்திய சர்வாங்க சுந்தரி என்பேனா--நான்
அவலத்தில் அழுந்தும்போது என் நாவினில் வந்தமரும்
முருகனும் நீயே,- கண்ணனும் நீயே- ஏனையோர் துதிக்கும்
எல்லா நாமங்களும் கொண்டவளும் நீயல்லவா- நீ என்
அப்பனல்லவா, அம்மையல்லவா, கண் துஞ்சாது எனைக்
காக்கும் தாரமல்லவா.- யாதுமாகி நிற்கும் தேவியே
கலை மகளே, அலை மகளே, மலைமகளே
உயிருள்ள,உயிரற்ற, அனைத்திலும் இருப்பவளே,
எனை ஈன்ற தாயின் தாயே- எல்லாம் நீயே
உனை நான் வணங்குகிறேன் –.! காத்தருள்வாய் சக்தியே
முன்பு
வைத்த கொலுவின் ஒரு படம்
இந்தப் பாடலின் வரிகளை சுப்புத்தாத்தாவின் குரலில் கேட்கலாமே
