Thursday, September 7, 2017

விட்ட கதை மனம் தொட்ட கதை


                           விட்ட கதை மனம் தொட்ட கதை
                            ----------------------------------------------
இது பதிவுலக வாசகர்களே  என்ன நினைக்கிறீர்கள்  என்னும்  கதையின் தொடர்ச்சி பார்க்க

 “அக்கா நான் என்புருஷனுடன் பேசுவதே இரவில் மட்டும்தான் ஆனால் இந்த மாமியார்க்காரி அதையும்தடுக்கிறாள் என்ன ராத்திரி நேரத்தில் குசுகுசு என்று  என்று அதட்டுகிறாள் கனவனுடன் சேரவே விட மாட்டேன் என்கிறாள் எதற்கு உயிரோடுஇருக்க  வேண்டும் போல் இருக்கிறது அக்கா”
 வாசகர்கள் கதையைத் தொடரலாமே
என்று முடிந்திருந்தது
நீ உன் கணவனுடன்  சேர்ந்து இருந்ததே இல்லையா.?
ஏன் இல்லாமல்  அக்கா  அதனால்தானே எனக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள்.””
“ அப்போது விஷயம்  இன்னும் சுலபமாக முடியுமேமனைவியிடம்  சுகம் கண்ட கணவன்மார்களை  ஈர்ப்பது எளிது”
‘ஆனால் இந்த மாமியார்க்காரிதானே நந்தி  மாதிரி குறுக்கே …..”
மாலதி "பேசாம தனிக்குடித்தனம் போயிடு.. சரியாப்போயிடும்" என்றாள்.

"அவங்க எங்க போவாங்கக்கா? அவங்களும் ஒண்டியாத்தானே இருப்பாங்க?"


"முதியோர் இல்லத்துல சேர்த்துடறேன்னு சொல்லு"


" சரியா வருமாக்கா?"


"ஒரு பயமுறுத்தல்தானே? வரலாம்... வராமலும் போகலாம்...
 எனக்கு நம்பிக்கை இல்லை அக்கா அவளது ஈரமனம்  மாலதியை என்னவோ செய்தது 
 கண்ணீர் கசிந்தபடி நின்ற கல்யாணியின் மருமகளை (சுகன்யாவை)   பார்க்கவே மாலதிக்கு பரிதாபமாக இருந்தது 
அன்றிரவே நடந்த விஷயத்தை மாலதி தன் கணவரிடம் கூற , அதற்  அவர் தன் மேலதிகாரியிடம் சொ ல்லி கல்யாணியின் மகனுக்கு (ஸ்ரீகாந்த்துக்கு)   பெங்களூரு கிளைக்கு மாற்றல் வாங்கி தருவதாகவும் இப்படி செய்வதால் மாலதிக்கும் கல்யாணிக்கும் அவளது மருமகளுக்கும் நல்ல விடிவு கிடைக்கும் என்றும் நம்பினார் .
மறுநாள் வழக்கம் போல கல்யாணி மாலதி வீட்டு கதவை தட்டினாள் (வந்துட்டியா திரும்ப வந்துட்டியா? ) கதவை திறந்த மாலதி பேச்சுக்கு சிரித்து வரவேற்றாள் . 
வழக்கம் போல கல்யாணி மருமகளின் குறை கூற மாலதி இடைமறித்து கல்யாணியின் மகனுக்கு மாற்றல் கிடைக்க போவதாக கூறினாள்
இதை கேட்டதும் கல்யாணியின் முகம் கருத்து போனது காரணம் தெரிந்த மாலதி மனதுக்குள் சிரித்துக்கொண்டாள் காரணம் பெங்களூரு கிளையின் தலைமை அதிகாரி, தன் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரிடமும் அன்பும் பாசமும் வைத்திருப்பவர் அதே நேரம் நாளொரு கேள்வியும் மண்டையை பிய்த்துக்கொள்ளும் அளவுக்கு சித்ரவதை செய்யும்  ஒரு பிரகிருதி அவரது தொல்லைகள் தாங்காமல்  வாலண்டியரிங்  ரிடைர்மெண்ட் வாங்கியவ ர்  கல்யாணி  அன்றுமுதல் கல்யாணியின் புலம்பல் காணாமல் போயிற்று கல்யாணியின் மருமகளும் காரணம் புரியாமல் திகைத்தாள் சில நாட்கள் மாலதி கல்யாணியையும்  மருமகளையும்   கோவிலில் சேர்ந்தே பார்த்தாள்
சில நாட்களுக்குப் பின் பழைய குருடி கதவைத் திறடி என்பதுபோல்  வழக்கு தொடர ஆரம்பித்தது
உன் மாமியார் இரவில் உன் புருஷனுடன்  பேச விடாமல்  ஒட்டுக் கேட்கிறாள் என்கிறாயே பேசாமல் உன்மாமியாரின் ஹியரிங் எய்டின்  பாட்டரியைப் பிடுங்கி எடுத்து விடு ஒட்டுக்கேட்க முடியாதே
அவருக்குச் சரியான பாம்புச் செவி ஹியரிங் எய்டே  இல்லையே’
இல்லாவிட்டால் ஒன்று செய்யேன் பேசாமல் உன் மாமியாரின் நாக்கை அறுத்து விடு
’’பிரச்சனைக்கு முடிவு  கேட்டு வந்தால் கொலைபாதகம் செய்யச் சொல்கிறீர்களே’’’
’ மாலதிக்கு இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணும்  ஆசை வந்தது
முதல்ல மருமகளை கையில பிடிச்சு இழுத்துக்கொண்டுபோய் மாமியார் முன் நிறுத்தி விட்டு.. இருவருக்கும் என்ன பிரச்சனை என்பதனை மாலதி நேரிடையாகவே கேட்டா..

இருவரும் வாதங்களும் சுமார் 2 மணி நேரங்கள் நீடித்தன.. அப்போதே இருவருக்கும் தெரிந்தது தம் குற்றச்சாட்டுக்கள் உப்புச் சப்பில்லாதவை என..

’இனிமெல் உங்கள் சண்டையை சமாளிக்க நான்  இருக்க மாட்டேன்  என்கணவருக்கு மாற்றல் ஆகி விட்டது இருவரும்  சேர்ந்து இருப்பது அவரவர் சாமர்த்தியம் என்று மாலதி கூறி விட்டாள்’ அதுதான் நிஜமும் கூட
ஆண்டுகள் பல ஓடி விட்டன ஒரு நாள் சுகன்யாவின்  கணவன்   வேறு ஒரு பெண்ணுடனும்  கையில் ஒரு குழந்தையுடனும்  போவதை ஒரு ரயில் நிலையத்தில் பார்த்தாள் மாலதி
‘என்னங்க அங்கே போவது உங்களிடம்பணி புரிந்து வந்தவர்தானே சுகன்யாவின்   கணவர் ஸ்ரீகாந்த்  மாதிரி இருக்கிறதே”
ஓ உன்னிடம்  சொல்ல மறந்து விட்டேன் போல் இருக்கிறது அது சுகன்யாவின்    கணவன் தான்  ஆனால் கூடப் போவது அவனது இரண்டாம்  மனைவி “
ஐயையோ அப்போ அப்போ சுகன்யா 
அவள் தற்கொலை செய்து கொண்டாளாம்  தனக்கே நெருப்பு வைத்துக் கொண்டு அவள் கணவனுக்குஎந்த கேள்வியும்வரக் கூடாதுஎன்று அந்த விஷயத்தை போலீசுக்குப்பணம் கொடுத்து அமுக்கி விட்டார்கள் பாவம் அவனது மூத்த பெண்…..”
என்னதான் ஆனாலும்  தற்கொலை செய்யத் தூண்டும்அளவுக்கு மாமியார் கொடுமையா என்று பரிதாபப் பட்டாள்மாலதி
( என்ன வாசகர்களே  உங்களிடம் கதையை முடிக்கச்சொல்லிக் கேட்டிருந்தேன் ஒரு உண்மை சம்பவத்தின்  முடிவு தெரிந்திருந்தது காரணங்கள் சரியாகத் தெரிந்திருக்கவில்லை தெரிந்த அளவு கூறி முடிக்கக் கேட்டிருந்தேன்  நீங்கள் சொல்லி இருந்த முடிவுகளை ஒதுக்காமல்  இந்தக் கதையைமுடித்து இருக்கிறேன் பின்னால் வந்த பின்னூட்டமொன்றில் சுகன்யா ஸ்ரீகாந்த் என்று பெயர் கொடுத்திருந்தார் பானுமதி வெங்கடேசன் )     


31 comments:

 1. எனது வரிகள் உள்ளிட்ட அனைத்து நண்பர்கள் வரிகளையும் வைத்து நகர்த்திக் சென்று முடித்திருப்பது நன்று. ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. இப்படிக்கூட எழுதலாம்தானே ஸ்ரீ

   Delete
 2. கதை ஓகேதான். 'புருஷன்'காரன், கிடைச்சது லாபம் என்று நினைத்துவிட்டான் போலிருக்கிறது. (ஆனால் எப்போதுமே பெண் பாவம் பொல்லாதது. அது யுகம் யுகமா நம்மைத் துரத்திவரும்).

  ReplyDelete
  Replies
  1. மனைவியின் துர்மரணத்துக்கு காரணம் ஆராயாமல் தடுக்க எவ்வளொவோ சிரப்பட்டி இருப்பார். அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை விபத்து என்று முடித்து விட்டார்கள்

   Delete
 3. பரிதாபம்.. ஆனாலும் என்ன செய்வது?..

  ReplyDelete
  Replies
  1. வெட்ட வெளிக்கு வராமல் போன கேஸ்களில் இதுவும் ஒன்று

   Delete
 4. மருமகளா இறந்தாள்? அவள் பெயர் சுகன்யா என அடைப்புக்குறிக்குள் போட்டிருந்தீர்கள்! இங்கே மாலதி என்று வருகிறதே! மத்தியஸ்தம் பண்ணிக் கொண்டிருந்த மாலதி தான் நெருப்பு வைத்துக் கொண்டு இறந்தாளா? அல்லது கல்யாணியின் மருமகளா?

  ReplyDelete
 5. கதை எழுதும் போது ஏற்பட்ட பெயர்குழப்பங்கள் திருத்ட்க்ஹி விட்டே என்று நினைக்கிறேன் தவறைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி மேம்

  ReplyDelete
 6. தங்கள் கதையின் முன் பகுதியைப் படித்தேன். அதை எப்படி முடிப்பது எனத் தெரியாததால் பின்னூட்டம் இடவில்லை. கதை என்பது சுபமாக முடியவேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற கருத்தில் கதையை முடித்திருக்கிறீர்கள். தற்கொலை செய்துகொண்ட அந்த சுகன்யாவிற்காக வருந்தினாலும் நாட்டு நடப்பைத்தான் முடிவாகத் தந்திருக்கிறீர்கள் என எடுத்துக்கொண்டேன்.

  தாங்கள் சென்ற பதிவில் பாதியில் விட்ட கதை இப்போது மனதைத் தொட்ட கதையாகிவிட்டது. பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. கதை சுபமாக முடியவில்லை என்று தெரியும் மணவாழ்க்கையே ஒரு லாட்டரிபோல் ஆகி விட்டது வருகைக்கு நன்றி ஐயா

   Delete
 7. கதை என்றாலும் சோக முடிவு பிடிக்க மாட்டேன் என்கிறது.
  சுகன்யாவை வாழ வைத்து இருக்கலாம்.

  மாலதி இருந்து இருந்தால் இப்படி ஆகி இருக்காது அவர்கள் கோபதாபங்களுக்கு ஒரு வடிகால் கிடைத்துக் கொண்டு இருந்தது. அது இல்லாமல் தன்னை மாய்த்துக் கொண்டாளா சுகன்யா?

  ReplyDelete
  Replies
  1. உண்மை நிகழ்வுதான் ஆனால் விவரங்கள் இருக்கவில்லை. ஒரு உத்திக்காகவே வாசகர்களை முடிக்கக் கேட்டேன் ஆனால் வாசகர்கள் பலரும் அதை நகைச்சுவையாக்கி விட்டார்கள் காரணங்கள் முழுவதும் தெர்ரியாத ஒரு முடிவு அது

   Delete
 8. முடிவில் சுபமில்லை எனினும் சமூகத்தில் இப்படியான நிகழ்வுகள் பெறுகி விட்டது உண்மையே...

  ReplyDelete
  Replies
  1. கதைகள் சுபமாக முடிய வேண்டும் என்னும் விதி இருக்கிறதா ஜி வாழ்க்கையே ஒரு லாட்டரி ஆகிவிட்டது

   Delete
 9. அடடா இப்படி ஒரு சோக முடிவா....

  ReplyDelete
  Replies
  1. முடிவு தெரிந்த காரணம் தெரியாதஒரு கதை என்ன செய்ய சார் வருகைக்கு நன்றி

   Delete
 10. தற்கொலை செய்து கொண்டார் என்பதை மாற்றி இருக்கலாம் ஐயா

  ReplyDelete
  Replies
  1. ஒரு நிகழ்வை மாற்றி எழுத மனம் வரவில்லை சார்

   Delete
 11. கதையை நகர்த்தி சென்ற விதம் அருமை ஐயா முடிவு சோகம் எனினும் இன்று இது போன்ற சம்பவங்கள் நடக்கத்தான்
  செய்கின்றன .

  ReplyDelete
  Replies
  1. கதையை நகர்த்திச் செல்ல பதிவர்களின் பின்னூட்டங்கள் உதவியதுமுடிவு முன்பே தீர்மானிக்கப்பட்டு நடந்த ஒன்று வருகைக்கு நன்றி

   Delete
  2. விமல் ஆணா பெண்ணா விவரமில்லையே முகமன் அறியாத பதிவரா பதிவும் ஏதும் காணவில்லையே

   Delete
  3. ஆண்தான் அய்யா. பணி நிமித்ததால் பதிவராக தொடர முடியவில்லை கருத்துரையாளராகவே இருக்க விரும்புகிறேன் நன்றி அய்யா

   Delete
  4. தகவலுக்கு நன்றி சார்

   Delete
 12. இது உண்மைக் கதை எனச் சொன்னதாக நினைவு, அதனால் ஒன்றும் பண்ண முடியாது, ஆனா கற்பனையில் எழுதச்சொன்னால் நமக்கு இப்படிக் கொடுமையாக எழுத வராதே.

  ReplyDelete
  Replies
  1. முடிவை முதலிலேயே கோடி காட்டி இருந்தேன் பின்னூட்டங்கள் அதனைப் பின்பற்றி இருக்கும் என நம்பினேன் ஆனால் வந்தபின்னூட்டங்கள்கதையை நகர்த்த உதவியது நன்றி அதிரா

   Delete
 13. Replies
  1. இதைப் பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன் அதாவது பின்னூட்டங்களைக் கொண்டு கதையை நகர்த்திய உத்திக்கு நன்றி சார்

   Delete
 14. முன் பகுதியைப் படித்தபோது அடுத்து என்ன வரும் என்று ஆவலோடு இருந்தேன். என் ஆவலை அதிகப்படுத்தியது இப்பதிவு. கதையின் பாணி மிகவும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கதையின் பாணியைப் பாராட்டியதற்கும் நன்றி சார்

   Delete
 15. சார் இதுவும் நன்றாகவே இருக்கிறது சார்..ஒருவர் சொல்லியது அல்லாமல் அன்று சொல்லியிருந்தவர் அனைவரின் கதை முடிவுகளையும் சேர்த்து.....அருமையாக வந்துவிட்டதே....உண்மையாக இருந்தாலும் எனோ தற்கொலை என்பது மட்டும் மனதுக்குக் கஷ்டமாக இருக்கு...சார். கதையிலாவது சுபம் போடலாமே.. கற்பனை சுகம்தான்....அதனால்தான் எல்லோரும் அப்படி சுபமாகச் சொல்லியிருந்தார்களாக இருக்கலாம்....

  ரொம்ப நல்லாருக்கு சார்...இந்த முறையும் நன்றாக இருக்கிறது...இதுவும் ஒரு சவால்தான்... ரசித்தோம் சார்

  கீதா

  ReplyDelete
 16. கதைகள் எழுதுவதில் பல உத்திகள் வாசகர்களின் கருத்டுகளுக்கு மதிப்புகொடுத்து நடந்ததையும் முடிந்தவரை நிறைவாகச் சொல்ல முயன்றிருக்கிறேன் எல்லோரும் சுபமாகச் சொல்லி இருந்தாலும் அது நகைச் சுவையாக்கி விட்டார்கள் என்று தோன்றியது தற்கொலை என்பது வருத்தமளித்தாலும் அதுதான் முடிவாக இருந்தது வருகைக்கு நன்றி கீதா

  ReplyDelete