குறுநாவலுக்குக் கரு.
------------------------------
கல்கியில் ஒரு குறுநாவல் போட்டி
அறிவித்திருக்கிறார்கள் என்றும் அதில் பரிசு வலையுலக எழுத்தாளர்களுக்கே கிடைக்க
வேண்டும் என்றும் தேனம்மை லக்ஷ்மணன் எழுதி இருந்தார். போட்டிக்கு எழுத வல்லவர்கள்
என்று பலரது பெயர்களைக் குறிப்பிட்டிருந்தார். அதில் என் பெயரும் இருந்தது. இது
எனக்கு போட்டிக்கு நாமும் ஏன் கதை எழுதக் கூடாதுஎன்னும் எண்ணத்தைத் தோறுவித்தது.
எண்ணம் இருந்தால் போதுமா. கதை எழுத ஒரு கரு வேண்டாமா.? அண்மைக்காலமாக
பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சியிலும் ஷீனா போராவின் கொலை பற்றிய செய்திகள் வந்த வண்ணமாய்இருக்கிறது எனக்கு ஒரு சந்தேகம் . கேள்விப்படும் நிகழ்வுகள் அருமையான கதைக்கு
வித்தாக இருக்கிறது. ஆனால் உண்மை நிகழ்வுகள் என்ன என்று எதையும் அறுதியாகச் சொல்ல
முடியவில்லை. 2012-ம் ஆண்டு நடந்த கொலை பற்றி இப்போது சூடாகச் செய்திகள்
வந்தவண்ணம் இருக்கிறது. சில நிகழ்வுகள் என்று சொல்லப் படுபவற்றை சில புனைவுகள்
சேர்த்து நாம் ஏன் எழுதக் கூடாது என்று
தோன்றுகிறது என் பிள்ளைகளும் உன் பிள்ளைகளும் நம் பிள்ளைகளுடன் விளையாடுகிறார்கள்
என்று ஒரு கதையில் எழுதிய நினைவு, அதற்குப் பதில் தன் கணவனிடம் என் மகளும் உன்
மகனும் காதல் செய்வதைத் தடுக்க வேண்டும் என்னும் ரீதியில் எழுதினால் தவறா. ?
ஹேஷ்யங்களை நிஜமாக்கலாமா? அப்படியே எழுதினாலும் நம் மேல் குற்றச்சாட்டு பதிவு
செய்ய வாய்ப்பிருக்கிறதா. ?பொதுவாகவே எழுதும் புனைவுகள் பெரும்பாலும் ஏதோ
நிகழ்வையே ஆதாரமாகக் கொண்டிருக்கும். இல்லையா. ?வாசகர்களே குறுநாவலுக்கான கரு
கிடைத்து விட்டது என்று நான் எழுதட்டுமா.? எழுதுகிறேனோ இல்லையோ ஒரு பதிவு தேற்றி
விட்டேன்
.
கருவுக்கே ஒரு பதிவுனா கதைக்கு..
பதிலளிநீக்குஅருமை தொடரட்டும் கதை
கருவுக்கே ஒரு பதிவுனா கதைக்கு..
பதிலளிநீக்குஅருமை தொடரட்டும் கதை
எழுதுங்கள்.... காத்திருக்கிறேன் ஐயா...
பதிலளிநீக்குநீங்கள் விழாவில் கலந்து கொள்ள வேண்டும்... நன்றி....
http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-2.html
எழுதுங்கள். பரிசு கிடைக்கட்டும். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபுனைவு தானே, முயன்று பாருங்கள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇந்தக் கதை முற்றிலும் கற்பனையே என்று முன்னுரையில் எழுதிவிட்டால் போதும். யாரும் ஒண்ணும் பண்ண முடியாது.
பதிலளிநீக்குஆகா
பதிலளிநீக்குகதைக்கு கரு கிடைத்த செய்தியைக் கொண்டே ஒரு பதிவு
அருமை
பதிலளிநீக்குபோட்டியில் முதல் பரிசு பெற எமது வாழ்த்துகள் ஐயா காத்திருக்கிறேன்
எழுதுங்கள் ஐயா...
பதிலளிநீக்குவெற்றி நிச்சயம்...
நிகழ்வில் சற்று கற்பனை கலந்து எழுவது கதை என்று சிறுகதை எழுத்தாளரான தங்களுக்கு தெரியாதா என்ன? எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறோம். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ செந்தில் குமார்
கருவுக்கே ஒரு பதிவுனா கதைக்கு ... பல பதிவுகள் தேற்றிவிடலாம் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
நீங்கள் காத்திருந்தாலும் நான் எழுதுவதைப் படித்து விட முடியாது. பரிசுக்குத் தேர்வானால்தான் பிரசுரமாகும் வருகைக்கு நன்றி. பதிவர்விழாவில் கலந்து கொள்வது பற்றி இப்போது என்னால் ஏதும் சொல்ல முடியவில்லை.
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
கதைக்குக்கரு என்று எழுதிவிட்டேனே தவிர கற்பனை சண்டித்தனம் செய்கிறது. வாழ்த்துக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
நிகழ்வுகளைக் குறித்து விட்டேன் கற்பனை ஊற வேண்டுமே. நன்றி மேம்
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
நிஜ நிகழ்வுகளை கற்பனையில் கோர்ப்பது சிரமம். வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
கதையின் கரு இந்தப் பதிவோடு நின்று விடும் போல் இருக்கிறது. வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
வாழ்த்துக்களுக்கு நன்றி ஜி.
பதிலளிநீக்கு@ பரிவை சே குமார்
என் மீதான அபரிமித நம்பிக்கைக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ வே நடன சபாபதி
ஏதோ பதிவு எழுதிவிட்டேனே தவிர எங்கு எப்படி தொடங்குவது என்பதே பிடிபடவில்லை. வருகைக்கு நன்றி சார்
கருதான் கிடைச்சாச்சே உரு கொடுங்களேன் :)
பதிலளிநீக்குஎழுத்தாளனின் கற்பனையில் குறுக்கிட வாசகனுக்கு அனுமதியில்லை! எழுதுங்கள்! வெற்றிபெற வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ பகவான் ஜி
கருதான் கிடைச்சாச்சே/ எந்த உருக்கொடுக்க என்பதுதான் பிரச்சனை. வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ தளிர் சுரேஷ்
கற்பனைதான் கைகொடுக்க மாட்டேன் என்கிறது. வாழ்த்துக்களுக்கு நன்றி சார்
அச்சில் அரைப்பக்கத்தில் சிறுகதை; பதினாறு பக்கத்தில் குறுநாவல்!
பதிலளிநீக்குகாலம் மாறித் தான் போச்சு!
பதிலளிநீக்கு@ ஜீவி
காலம் மாறித்தான் போகிறது அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள முயற்சி தேவை/ வருகைக்கு நன்றி சார்