வியாழன், 20 ஆகஸ்ட், 2015

உரிமைகள்


                                           உரிமைகள்
                                           -----------------


என்ன எழுதுவது என்று அறியாமல் தவித்துக் கொண்டிருந்த எனக்கு திரு, ரமணியின் பதிவு ஒன்றைப் பார்த்ததும் பொறி தட்டியது போல் இருந்தது. கம்யூனிச நாட்டுக் கொழுத்தநாயும் இந்திய நாட்டு வற்றல் நாயும் பற்றி எழுதி இருந்தார். கம்யூனிச ,முதலாளித்துவ கோட்பாடுகள் பற்றிப் பேசும் போது ஓரிடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. ஒரு அமெரிக்கனும் ரஷ்யனும் சந்தித்துக் கொண்டார்களாம். அமெரிக்காவில் இருக்கும் பேச்சு சுதந்திரம் பற்றி அமெரிக்கன் பெருமையாகக் கூறினானாம் . என்நாட்டில் வெள்ளை மாளிகை முன்பு நின்று என்னால் அமெரிக்க ஜனாதிபதி ஒரு முட்டாள் என்று கூற முடியும் ரஷ்யர்களால் முடியுமா என்று கேட்டானாம் அதற்கு ரஷ்யன் ஏன் எங்களாலும் முடியும். வெள்ளை மாளிகை முன் நின்று அமெரிக்க ஜனாதிபதி ஒரு முட்டாள் என்று கூற முடியும் என்றானாம் .....!
ஒரு முறை குருஷ்சேவ் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தாராம் அப்போது கூட்டத்தில் ரஷ்யாவில் பேச்சு சுதந்திரம் இல்லை என்று யாரோ பின்னாலிருந்து கூறினார்களாம் உடனே குருஷ்சேவ் “ யார் சொன்னதுஎன்று உரக்கக் கேட்டாராம் கூட்டமே கப்சிபென்று ஆகிவிட்டதாம்
ஒரு முறை  நேரு ரஷ்யாவுக்குப் போய் இருந்தபோது, அவரிடம் இந்தியர்கள் பொது இடங்களில் மலஜலம் கழிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப் பட்டதாம் அதற்கு நேரு ரஷ்யாவிலும் தான் அப்படிச்செய்வோரைப் பார்த்ததாகக் கூறினாராம் குருஷ்சேவ் இருக்க முடியாது என்று கூறி நேருவிடம் தகவல்கள் கேட்டாராம். அவர் தந்த தகவல் படி அவ்வாறு மலஜலம் கழித்தவரைத் தேடிக் கண்டுபிடித்து வந்தார்களாம் அப்படிக்கண்டுபிடிக்கப்பட்டு வந்தவனைப் பார்த்தால் அவன் ஒரு இந்தியன் என்று தெரிய வந்ததாம்                        :      .               .



.


45 கருத்துகள்:

  1. படிக்க ஜோக்கா இருந்தாலும்... உரிமைகள் என்பதை நம்ம மக்கள்ஸ் தவறாகப் புரிஞ்சுக்கிட்டு இருக்காங்கன்னுதான் தோணுது.

    பொறுப்பாகத் தன் கடமைகளைச் செய்பவர்கள்தானசுரிமைகளுக்கு உரியவர். அதையும் கேட்டுத்தான் வாங்கணும். ஆனால்..... ஒன்னுமே செய்யாமல் உரிமைகளை எதிர்பார்க்கும் கூட்டம் ஒன்னு இருக்கே:-(

    பதிலளிநீக்கு
  2. சுதந்திரம் இவர்களிடம் சிக்கிக் கொண்டது - பாவம் தான்!..

    பதிலளிநீக்கு
  3. இந்தியர்கள் எங்கு சென்றாலும் தவறு செய்வார்கள் என்று நம்மை நாமே தரம் தாழ்த்திக் கொள்ளவேண்டாமே. ஹிப்பிகள் என்ற பெயரில் வெளிநாட்டினர் வந்து இங்கு செய்யும் அசிங்கத்தை ஏன் யாரும் எழுதுவதில்லை?

    பதிலளிநீக்கு
  4. எவரும் எங்கும் எதையும் எப்பொழுதும் செய்ய வாய்ப்புண்டு. இந்தியர்கள் விதிவிலக்கல்ல என்பது எனது தாழ்மையான கருத்து.

    பதிலளிநீக்கு
  5. ஹ்ம்ம் இப்படி ஒரு அவப்பெயரா.. நமக்கு நீர். அவர்களுக்கு டிஷ்யூ. இதுதான் அவர்கள் சுத்தம்.

    பதிலளிநீக்கு
  6. எங்கே போனாலும் இந்தியர்களைத் தாழ்த்திச் சொல்லுவது ஒரு நாகரிகம்! தவறு என்றால் இந்தியர்கள் மட்டுமே; பேராசையா, மூட நம்பிக்கையா? அதுவும் இந்தியாவில் மட்டுமே! :)))) இதுவும் விதிவிலக்கல்ல போலும். :)

    பதிலளிநீக்கு
  7. இந்தியர்கள் உள்நாட்டில் வேண்டுமானால் அப்படிச் செய்வார்கள். வெளிநாட்டில் ஒழுங்காகத்தான் இருப்பார்கள்.

    முதல் விஷயம் படித்ததும் ஒரு பழைய முத்த ஜோக் நினைவுக்கு வந்தது!!

    பதிலளிநீக்கு
  8. இந்தியர்கள் என்றாலே ஒரு மட்டமான அபிப்ராயம் வந்துவிட்டது...மட்டுமல்ல சமீபத்தில் சகோதரி க்ரேஸ் ஒரு பதிவு போட்டிருந்தார்கள் நம்மவர்கள் அங்கும் - அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் எப்படி நடந்து கொண்டார்கள் என்று...எழுதியிருந்தார்....

    பதிலளிநீக்கு
  9. உரிமைகளும் சுதந்திரமும் நம்மவர்களால் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றுதான் தெரிகின்றது...

    பதிலளிநீக்கு

  10. @ துளசி கோபால்
    சுதந்திரம் உரிமைகள் பற்றிய நம்மவர்கள் புரிதலே வேறு. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  11. @ துரை செல்வராஜு
    அமெரிக்கர்களி சுதந்திரமும் ரஷ்யர்களின் சுதந்திரமும் வேறு வேறு. வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  12. @ வே.நடன சபாபதி
    உங்கள் ஆதங்கம் எனக்குப் புரியவில்லை. வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  13. @ ஜம்புலிங்கம்
    பிறநாட்டினர் விதி விலக்காகச் செய்வதை நம்மவர் சாதாரணமாகச் செய்கின்றனர் என்பதும் என் தாழ்மையான கருத்து.

    பதிலளிநீக்கு

  14. @ தேனம்மை
    நம்மவர் பற்றி சிறிதாகக் குறை கூறி எழுதினாலும் நமக்குப் பொறுப்பதில்லையே வருகைக்கு நன்றி மேம் . பதிவர் ஒற்றுமை ஓங்குக.

    பதிலளிநீக்கு

  15. @ கீதா சாம்பசிவம்
    சில நடப்புகளைக் குறித்து எழுதி இருக்கிறேன் விதி விலக்காக நம்மவர்களும் உண்டு.வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு

  16. @ ஸ்ரீராம்
    உண்மை ஸ்ரீ. நான் துபாயிலிருந்து திரும்பி வந்து கொண்டு இருந்தபோது என் அருகே ஒரு தமிழர் உட்கார்ந்து கொண்டிருந்தார், பொதுவாக நம்மவர் துபாயில் வேலை செய்வது பற்றிக் கேட்டுத்தெரிந்து கொண்டேன் சென்னை வந்ததும் விமான நிலையத்தை விட்டு வெளியே வரும்போது அவர் காறி உமிழ்ந்தார். இதையே அவர் துபாயில் செய்திருப்பாரா. ?

    பதிலளிநீக்கு

  17. @ துளசிதரன் தில்லையகத்து
    நம்மவர்கள் சட்டத்துக்கும் தண்டனைக்கு பயப்படுகிறவர்கள். மற்றபடி சிவிக் சென்ஸ் மிகவும் குறைவு என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  18. @ துளசிதரன் தில்லையகத்து
    சுயமாக சிந்திக்கும் சுதந்திரம் நம்மவரிடம் இல்லை என்று பல முறை எழுதி இருக்கிறேன் த்ன்னுரிமை பற்றி நினைக்கும் நம்மவர் அடுத்தவரின் உரிமைபற்றிக் கவலைப் படுவதில்லை. என்பதே கசப்பான உண்மை. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. http://thaenmaduratamil.blogspot.com/2015/08/blog-post_18.html

    இங்கே பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  20. நமக்கென்ன பேச்சு சுதந்திரம் உள்ளது ,பொது இடத்தில் மைக் வைத்து பேசி விட முடியுமா ?

    பதிலளிநீக்கு

  21. ஹாஹாஹா முடிவின் வரிகள் ரசிக்க வைத்தது ஐயா...

    பதிலளிநீக்கு
  22. நமது மக்களுக்குச் சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  23. வெகு சுவாரஸ்யம்
    விஷயமும் அப்படி
    சொல்லிச் சென்றவிதமும் அப்படி
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  24. பொதுச்சுகாதாரத்தில் நமக்கு அக்கறை இல்லைதான்!

    பதிலளிநீக்கு

  25. @ துளசி கோபால்
    நீங்கள் கொடுத்திருந்த சுடிக்கான பதிவை வாசித்தேன் பலருக்கும் ஆதங்கம் இருக்கிறது. சுட்டிக்கு நன்றி மேம்.

    பதிலளிநீக்கு

  26. @ பகவான் ஜி

    நமக்கென்ன சுதந்திரம் இருக்கிறது. எது இல்லை. மைக் வைத்துப் பேச முடியாதா. ஆனால் நம் சுதந்திரம் அடுத்தவனுக்கு துன்பம் தரலாகாது. வருகைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு

  27. @ கில்லர் ஜி
    முடிவின் வரிகள் மனத் தாங்கலை ஏற்படுத்தி இருக்கும் என்று எண்ணினேன் வருகைக்கு நன்றி ஜி.

    பதிலளிநீக்கு

  28. @ கரந்தை ஜெயக்குமார்
    நம் மக்களுக்கு எது உண்மையான சுதந்திரம் என்று தெரியவில்லை. வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  29. @ ரமணி.
    எழுத ஐடியா கொடுத்தவருக்கு உங்களுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  30. @ டாக்டர் கந்தசாமி
    வந்து ரசித்ததற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  31. @ தளிர் சுரேஷ்
    பொது சுகாதாரத்தில் நமக்கு அக்கறை குறைவுதான் . சுதந்திரம் எது என்றும் தெரிவதில்லை. வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  32. இன்னொன்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
    ஒரு மியூசியத்தில் உலக மூளையளவுகள் பற்றி விவரங்களும் மாடல்களும் வைத்திருந்தார்கள். அமெரிக்கரின் மூளையளவு 20%, ஜப்பான் 23%, இங்கிலாந்து 25%.. என்ற வரிசையில் இந்தியரின் மூளையளவு 98% என்று விவரிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ஒரு இந்தியர் (மோடி என்று வைத்துக்கொள்வோம்) "ஆகா! இந்தியரின் மூளையளவு அமெரிக்கரை விட எவ்வளவு அதிகம் பார்த்தீர்களா?" என்றார். அதைக் கேட்ட அமெரிக்கர் (ஒபாமா என்று வைத்துக்கொள்வோம்) "நாங்கள் எங்கள் மூளையை உபயோகிக்கிறோம்" என்றாராம்.

    பதிலளிநீக்கு
  33. வருத்தமாக இருக்கிறது ஐயா
    நம் அனைவரின் ஆதங்கமும் நல்ல மாற்றம் கொண்டுவந்தால் நன்றாய் இருக்கும்

    பதிலளிநீக்கு
  34. தன்னை தானே தரம் தாழ்த்தி மகிழும் இனம் ஒன்று என்றால் அது இந்தியனாகத்தான் இருக்கும். இந்தியனை மட்டப்படுத்த வெளிநாட்டினரைவிட நாம்தான் அதிக கதைகள் வைத்திருக்கிறோம். இதற்கு அடிப்படை காரணம் நமக்கு வரலாறு தெரியாததுதான். மறைக்கப்பட்ட வரலாறுகளில் நம் பெருமை மிளிர்கிறது. ஆங்கிலேயன் தன்னை உயர்த்தியும் நம்மை தாழ்த்தியும் எழுதிய வரலாரைதான் நாம் இன்னமும் படித்துக் கொண்டிருக்கிறோம். வரும் தலைமுறையாவது இதை மாற்றுமா என்று பார்ப்போம்!

    பதிலளிநீக்கு

  35. @ அப்பாதுரை
    இந்தக் கதை நானும் கேட்டிருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  36. @ தேன்மதுரத் தமிழ் கிரேஸ்
    நம்மை நாமே புரிந்துகொள்ள மனத்தடைகள் இருப்பதையும் பார்க்கிறேன் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  37. @ எஸ் பி. செந்தில்குமார்
    நாம் பழங்கதைகளைப் பேசிக் கொண்டிருப்பது, இன்றைய நம்மை அறிந்து கொள்ளத் தடையாக இருக்கிறது என்று நினைக்கிறேன் வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  38. மேலே திரு.செந்தில் குமார் கூறியிருப்பது உண்மை. வெள்ளைக்காரர்கள் எழுதியவற்றை நாம் விழுந்து விழுந்து படிப்போம். அது நம்மைப்பற்றிய அபத்தமாக இருந்தாலும் சரிதான். நாம் நம்புவோம். இந்தியாவின் பாரம்பரியம், சிறப்புகள் பற்றிய தெளிவோ, அதற்குத்தகுந்த கர்வமோ, பெருமையோ நம்மிடம் இல்லை. நம்மை நாம் சரியாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற முயற்சியோ, விழைவோகூட நம்மிடம் காணப்படாதது வேதனை தரும் விஷயம். வெள்ளைத்தோலைப் பார்த்து இளிக்கும் கோமாளித்தனம் நம்மிடமிருந்து அகலவில்லை. நம் மனதைவிட்டு அடிமைக்குணம் இன்னும் போனபாடில்லை. இதுதான் நிதர்சனம்.

    பதிலளிநீக்கு

  39. @ ஏகாந்தன்
    செந்தில் குமாருக்கு எழுதிய மறு மொழியையும் கவனிக்கவும். வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  40. நேருவின் கதை அருமை... நம் மக்கள் எல்லா இடத்திலும் உரிமையை எடுத்துக் கொள்வார்கள் என்பது தெரிந்ததுதானே...

    பதிலளிநீக்கு

  41. @ பரிவை.சே.குமார்
    வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  42. சிறந்த ஆய்வுப் பதிவு


    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு