உரிமைகள்
-----------------
என்ன எழுதுவது என்று அறியாமல்
தவித்துக் கொண்டிருந்த எனக்கு திரு, ரமணியின் பதிவு ஒன்றைப் பார்த்ததும் பொறி
தட்டியது போல் இருந்தது. கம்யூனிச நாட்டுக் கொழுத்தநாயும் இந்திய நாட்டு வற்றல்
நாயும் பற்றி எழுதி இருந்தார். கம்யூனிச ,முதலாளித்துவ கோட்பாடுகள் பற்றிப் பேசும்
போது ஓரிடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. ஒரு அமெரிக்கனும் ரஷ்யனும்
சந்தித்துக் கொண்டார்களாம். அமெரிக்காவில் இருக்கும் பேச்சு சுதந்திரம் பற்றி
அமெரிக்கன் பெருமையாகக் கூறினானாம் . என்நாட்டில் வெள்ளை மாளிகை முன்பு நின்று ”என்னால்
அமெரிக்க ஜனாதிபதி ஒரு முட்டாள் என்று கூற முடியும் ரஷ்யர்களால் முடியுமா” என்று
கேட்டானாம் அதற்கு ரஷ்யன் ”ஏன் எங்களாலும் முடியும். வெள்ளை மாளிகை முன் நின்று
அமெரிக்க ஜனாதிபதி ஒரு முட்டாள்” என்று கூற முடியும் என்றானாம் .....!
ஒரு முறை குருஷ்சேவ் ஒரு கூட்டத்தில் பேசிக்
கொண்டிருந்தாராம் அப்போது கூட்டத்தில் ரஷ்யாவில் பேச்சு சுதந்திரம் இல்லை என்று
யாரோ பின்னாலிருந்து கூறினார்களாம் உடனே குருஷ்சேவ் “ யார் சொன்னது” என்று உரக்கக் கேட்டாராம்
கூட்டமே கப்சிபென்று ஆகிவிட்டதாம்
ஒரு முறை நேரு
ரஷ்யாவுக்குப் போய் இருந்தபோது, அவரிடம் இந்தியர்கள் பொது இடங்களில் மலஜலம்
கழிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப் பட்டதாம் அதற்கு நேரு ரஷ்யாவிலும்
தான் அப்படிச்செய்வோரைப் பார்த்ததாகக் கூறினாராம் குருஷ்சேவ் இருக்க முடியாது
என்று கூறி நேருவிடம் தகவல்கள் கேட்டாராம். அவர் தந்த தகவல் படி அவ்வாறு மலஜலம்
கழித்தவரைத் தேடிக் கண்டுபிடித்து வந்தார்களாம் அப்படிக்கண்டுபிடிக்கப்பட்டு
வந்தவனைப் பார்த்தால் அவன் ஒரு இந்தியன் என்று தெரிய வந்ததாம் :
.
.
.