சின்னச்சின்ன செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சின்னச்சின்ன செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 ஜூலை, 2017

ஒரு துணுக்குத் தோரணம்


                                           ஒரு துணுக்குத் தோரணம்
                                           -----------------------------------------
அம்மாவுக்கு
 உனக்கு வலி கொடுத்து பிறந்த காரணத்தால்தானோ என்னவோ எனக்கு வலி ஏற்படும்போது அம்மா என்று அழைக்கிறேன் 
                     -------------------------------------

இந்த தமிழ் மணம் எனக்கு ஒரு புதிராகவே இருக்கிறது, அதுவும்  இந்த ராங்கிங்  பற்றி நினைத்தால் புரிவதே இல்லை. கடந்த மூன்று மாதங்களில்  வாசித்தவர் எண்ணிக்கை கொண்டு ராங்கிங்  கொடுக்கப் படுகிறது நான் என்னவோ என்றும்போல்தான் எழுதி வருகிறேன்   போன இரண்டு மூன்று  பதிவுகளின்  போது 20/21 ராங்கில் இருந்த என்பதிவு கடந்த இடுகையின் போது 13 ஆக  உயர்ந்திருக்கிறது  வாசகர் எண்ணிக்கையில் பெரிய மாற்றம்  ஏதும் இல்லை
                       ------------------------------------------

ஒரு செய்திப்பகிர்வு
 மும்பையில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை அங்குள்ள ஒர் ரேடியோ ஜாக்கி கிண்டலடித்துப் பாட்டு இயற்றிப் பாடி இருக்கிறார்  தொலைக் காட்சியில் பார்த்தபோது பலரும் ரசிப்பதைக் காண முடிந்தது ஆனால் அதிகாரத்தில் இருப்பவரைக் கேலி செய்தால் என்ன பலன் கிடைக்கும்  தெரியுமா  அவர் வீட்டில் டெஙுகு கொசு வளர்க்கிறார்  என்று வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள் …….!
                   ----------------------------------------------  

மகனுக்கு பேண்ட் வாத்திய வரவேற்பு 
என் இரண்டாவது மகனை ஒரு கல்லூரி விழாவுக்குத் தலைமை தாங்க அழைத்திருக்கிறார்கள் அழைப்பிதழ் கீழே  ஒரு தந்தையாக பெருமிதம் கொள்கிறேன்
மகனுக்கு வந்த அழைப்பிதழ்





மகன் பட்டம் வழங்குகிறான்

எங்கள் வீட்டில் மீண்டும்  மகளிர் சக்தியைக்கண்டேன்  பெண்கள் குழுவாக வந்து விஷ்ணு சஹஸ்ர நாமம் ஜபித்தார்கள் வழக்கம்  போல் நான்  என் அறையில் முடங்கிக் கிடந்தேன் 
வீட்டில் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்  (மகளிர் சக்தி )




ஒரு சிறுகதை
 அந்தப் பெரியவர் தன்னுடைய , ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த தோட்ட வீட்டில் தனியாக இருந்தார். அந்தப் பெரிய வீட்டின் ஒரு பகுதியில் நான்கைந்து பேர்களுடைய நடமாட்டம் இருந்ததை உணர்ந்தார். ஒரு அறையில் கதவைச் சாத்திக்கொண்டு அவசர போலீசுக்கு போன் செய்தார்.
“ என் வீட்டில் திருடர்கள் நடமாட்டம் தெரிகிறது. நீங்கள் உடனே வந்து என்னையும் என் பொருள்களையும் காப்பாற்ற வேண்டும் “ என்று கூறினார். அவர்கள் அவரது இருப்பிடம் போன்றவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு
“ நீங்கள் இப்போது எங்கிருக்கிறீர்கள்.?” என்று கேட்டனர். “ தோட்ட பங்களா வின் ஒரு கடைசி அறையில் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே இருக்கிறேன் “ என்றார். “ நீங்கள் எங்கேயும் வெளியே செல்ல வேண்டாம், அங்கேயே இருங்கள். தற்சமயம் எங்களிடம் போதிய ஆட்கள் இல்லாததால் உடனே வர முடியவில்லை” என்று கூறி தொடர்பைத் துண்டித்தனர். .

சரியாக ஒரு நிமிஷம் கழித்து மறுபடியும் போன் செய்தார். “ என் தோட்டத்தில் திருட வந்தவர்களை நான் சுட்டு விட்டேன். நீங்கள் அவசரமாக வரவேண்டும் “என்றார்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஒரு போலீஸ் ஜீப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு போலீஸ் படையுடன் பங்களா முன் வந்து திருடிக் கொண்டிருந்தவர்களைக்
கைது செய்தது. வெளியே வந்த பெரியவரிடம்” நீங்கள் சுட்ட நபர் எங்கே .?” என்று கேட்டனர். பெரியவர் “ நான் யாரையும் சுடவில்லை “ என்றார். “ பின் ஏன் சுட்டதாகப் பொய் சொன்னீர்கள் ?” என்று கேட்டதற்கு “ நீங்களும்தான் இங்கு வர ஆட்கள் இல்லை என்று சொல்ல வில்லையா “ என்றார் அந்த அனுபவம் வாய்ந்த உலகம் தெரிந்த பெரியவர்.
                             ------------------------------------

மலர்களின் பெயர்கள்
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்
திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்
எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி’
ஏதாவது தெரிகிறதா. ?
மணிமேகலையில்  சாத்தனார் கூறி இருக்கும் பெயர்களாம்
                             ---------------------------------------

Give us the serenity, to accept what can not be changed, courage to change that which should be changed, and wisdom to know one from the other
                                                  ------------------------------------

பத்துவிரல் மோதிரம் எத்தனைப் பிரகாசமது,
பாடகம் தண்டை கொலுசும் பச்சை வைடூரியம் 
இச்சையா யிழைத்திட்ட  பாத சிலம்பின் ஒலியும்
முத்து மூக்குத்தியும் இரத்தினப் பதக்கமும் மோகன மாலையழகும்
முழுதும் வைடூரியம் புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலி அழகும்
சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலும் செங்கையின் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம் ஒளியுற்ற சிறு காது கொப்பின் அழகும்
பாடலின்  கடைசி வரிகள் இரண்டை நீக்கி இருக்கிறேன் 
இந்தப்பாடல் உங்களிடம்  ஏதாவது நினைவலைகளைத் தோற்று விக்கிறதா ?
              ------------------------------------------------------------------------