சாய் சரோவரில் பீதி.....!
------------------------------------
சாய் சரோவரில் பீதி
பெங்களூருவை விட்டு
வந்து ஒரு வார காலத்துக்கும் மேலாகியும் நிலைமை சகஜ நிலைக்கு வரவில்லை. நான் சென்னை
வந்த நோக்கமும் நண்பர்களைசந்திப்பது நிறைவேறவில்லை. நேரத்தைக் கழுத்தைப்பிடித்துத்
தளளுவதுபோல் இருந்தது. பெங்களூரிலாவது கணினி என் வசம் இருந்தது. எதையாவது படித்து
எதையாவது எழுதி என்னைஓரளவாவது பிசியாக வைத்துக் கொள்வேன் ஒன்றுமில்லாவிட்டல் என் வீட்டைச் சுற்றி
வருவேன் ஒரு காலத்தில் வாசிப்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயமாய் இருந்தது. இப்போதெல்லாம் வாசிப்பதில் ஆர்வம் இல்லை. கண் சரியாக
ஒத்துழைப்பதில்லை. படிக்கும்போது கண்முன்னே நிழலாடி படிக்க முடியாமல் செய்யும் அவ்வப்போது வேண்டுமானால் கொஞ்சம் கொஞ்சம்
படிக்கலாம்
இந்த மாதிரியான
சமயத்தில் என் மருமகள் செய்திருந்த க்வில்லிங் வேலைப்பாடுகள் சிலவற்றைக்
கவனித்தேன் ஒரு முறை பதிவர் ஒருவர் பெயர் நினைவுக்கு வரவில்லை அவர் செய்திருக்கும்
சில பொருட்களின் புகைப் படங்களைப்
பதிவிட்டிருந்ததும் அதன் செய்முறையை நான் கேட்டு எழுதி இருந்ததும் நினைவுக்கு
வந்தது நாமும் ஏன் இதைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்று தோன்றியதுநுணுக்கமான சில
வேலைப்பாடுகளுக்கு you need deft fingers.
என் கை அமைப்பே அதற்கு சரியாகாது. இருந்தாலும் என்னால் முடியும் என்னும் தன்னம்பிக்கையே என் பலம் என் மருமகளிடமிருந்த
பொருட்களைக் கொண்டே என் பயிற்சியை ஆரம்பித்தேன் முதலில் இரு ஜிமிக்கிகள் செய்தேன்
. நன்றாக வந்திருப்பதாக என் மருமகள் உற்சாகமூட்டினாள் அதை அணிந்தும் காட்டினாள்.
ஆனால் அதை நான் பெங்களூரு வந்ததும் தொடர்வதற்கான ஆதாரப் பொருட்களை என் மகன்
வாங்கிக் கொடுத்தான்
என் மகனுக்கு 23-ம்
தேதி முதல் டூர் இருந்தது. 22-ம் தேதி காலை சதாப்திக்கு பயணச்சீட்டு வாங்கினான்
அதிகாலை ஆறு மணிக்கு ரயில் புறப்பாடு. ஏறத்தாழ 18 கி மீ தூரம் போகவேண்டும் ஆகவே
நாங்கள் காலை மூன்றரை மணிக்கு எழுந்து புறப்படுவதாகத் திட்டம் அனைவரும் சீக்கிரமாகவே படுக்கப் போய் விட்டோம்
சுமார் பத்தரை
மணிவாக்கில் குடியிருப்பில் இருந்த சிலர் கதவைப் படபடவெனத் தட்டி எங்களை எழுப்பி
அனைவரும் கீழ்தளத்துக்குச் செல்லப் பணித்தனர் என்ன வென்று தெரியவில்லை. ஆனால்
கட்டிடத்திலிருந்து ஏதோ புகையும் வாசனை வந்தது. ஏதோ மின்சாரப் பிரச்சனை ஒருவேளை
கட்டிட வைரிங் எரிந்து போகிறதோ என்று சந்தேகம் சாய் சரோவர் ஒரு பத்துமாடிக்
கட்டிடம் மொத்தம் 89 குடியிருப்புகள் உள்ளன. அனைத்துக் குடும்பங்களும் கீழ்தளத்துக்கு
வந்து விட்டனர் மெயின் பவரை ஆஃப் செய்து விட்டனர் ஈபி க்கு தகவல் கொடுக்கப் பட்டது
அவர்கள் வந்து பார்த்தனர் சப்ளையில் ஏற்ற
இறக்கம் இருந்ததால் பல மின் சாதனங்கள் பழுதாகி விட்டன. கட்டிடத்துக்கான
ஜெனரேட்டரில் சில விளக்குகள் எரிந்தன. ஓரிரு
மணிநேரத்துக்குப் பின் ஆல் க்லியர் சிக்னல் கிடைத்ததும் எல்லோரும் அவரவர்
இடத்துக்குத் திரும்பினோம் மின்சாரம் அதிகம் தேவைப்படும் சாதனங்களை இயக்க வேண்டாம்
என்று அறிவுறுத்தினார்கள்/
பிறகென்ன சென்னையில் கடைசிநாளும் அரை குறைத் தூக்கத்தோடு
கழிய விடிகாலை மகன் ரயில் நிலையத்துக்குக் கூட்டி வந்து எங்களை ரயிலேற்றினான் பதினொரு மணி அளவில் பெங்களூரு ரயில்
நிலையத்தில் இரண்டாம் மகன் காத்திருந்து அழைத்து வந்தான் சென்னையில் மழை குறையத்
தொடங்கி விட்டது என்று எண்ணும்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுமண்டலம் உருவாகி
சென்னையையும் தமிழகத்தையும் மழை விட்ட பாடில்லை