பழையன கழிதலும் புதியன புகுதலும்......
----------------------------------------------------------
எனக்கு பழைய நிகழ்வுகளைப் புதுப்பித்துக் கொள்ள புகை
படங்கள் பேருதவியாய் இருக்கும். எண்ண அலைகள் ABSTRACT-ஆகத்
தோன்றும்போதுபுகைப்படங்கள் தெளிவாக்கும்
எனக்கு இன்னொரு பழக்கமும் உண்டு. என் பேரக் குழந்தைகள் பிறந்த பிறகு
அவர்களது புகைப் படங்களை பத்து பனிரெண்டு வயதுவரை chronological
ஆக எடுத்து வைத்திருக்கிறேன் அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும்போது அவற்றை
எடுத்த நேரங்கள் மனசில் விரியும் இதுவுமல்லாமல் என்னுடைய டேப் ரெகார்டரில் எனக்கு
வேண்டியவர்களது குரலையும் பதிவு செய்து வைத்திருக்கிறேன் இம்மாதிரிக் குரல்
பதிவுகள் ஏறத்தாழ முப்பது வருடத்தவையும் உண்டு. ஆனால் இப்போதைய தொழில் நுட்ப
வளர்ச்சியில் டேப் ரகார்டர்கள் காலாவதி ஆகிப் போகின்றன. என் டேப் ரெகார்டர்
பழுதானபோது டாக்டர் கந்தசாமி ஐயா என் வீட்டுக்கு வந்திருந்தபோது அவர் குரலைப்
பதிவு செய்யவோ ஏற்கனவே பதிவு செய்திருந்த குரல்களைப் போட்டுக் காண்பிக்கவோ
முடியவில்லை. என் இருபது முப்பது வருடகுரல் பதிவுகளைக் கேட்க முடியாமல்
போனதுமிகவும் வருத்தத்தைக் கொடுத்தது.
இதற்கு மாற்றுவழி
என்னிடம் இருக்கும் காசட் டேப்புகள் எல்லாவற்றையும்
குறுந்தகடுகளாக்க வேண்டியதுதான் அந்தக் காலத்தில் முப்பது ரூபாய்க்கும் நாற்பது
ரூபாய்க்கும் டேப்புகள் வாங்கி அவற்றில்குரல்களைப் பதிவு செய்து வைத்திருந்தேன்
இப்போது குறுந்தகடுகளாக மாற்ற நிறையவே செலவாகலாம். நான் அந்தமாதிரி மாற்றி
வைத்தாலும் அவை என் பிள்ளைகளுக்கோ அவர்களது பிள்ளைகளுக்கோ தேவை என்று உணரப்படுமா
தெரியவில்லை. என் இந்த டேப்பில் பதிவான குரல்களை கணினியில் இணைக்க டேப்பை ஓடவிட்டுக் கைபேசியில் அதைப் பதிவு
செய்து கணினியில் இணைத்துப் பார்த்தால் திருப்திகரமாக இல்லை
.இதேபோல் நாங்கள் பல இடங்களுக்குச் சென்று வந்ததும்
புகைபடமாக இருக்கிறது நான் இதையெல்லாம் குறிப்பிடுவதே நாங்கள் சில ஆண்டுகளுக்கு
முன் ஹம்பி –க்கு சென்று வந்ததை எழுத முயன்றபோது படங்கள் இல்லாமல்
பதிவு நிறைவைத் தராது என்று தோன்றியதே காரணம் நாங்கள் ஹம்பியில் எடுத்த புகைப்
படங்களை மீண்டும் என் காமிராவில் எடுத்து அந்தக் குறையை ஓரளவு நிவர்த்தி செய்து
பதிவாக்கினேன்
தொழில் நுட்பங்கள் மிகவும் முன்னேறி வளர்ச்சி அடைந்துள்ள
இந்தக் காலத்தில் என் போன்றோர் அன்று பெரிதாய் எண்ணி செயல் பட்டதும் காலாவதியாகப்
போய் விடுகிறது. எண்ண அலைகள் மனசில் தோன்றலாம் அவற்றைப் பதிவாக்கி நான் சக
பதிவர்களுடன் பகிரவும் செய்யலாம். ஆனால் குரல்கள். அந்தநாளையக் குரல்கள்....?அதில்
இருப்பவர் குரல்களும் உண்டு இருந்தவர்
குரல்களும் உண்டு. என் பேரக்குழந்தைகள் மழலையில் பேசத்துவங்கியது முதல் பாடியது
வரை டேப்புகளில் பதிவாகி இருக்கின்றன
விஜயவாடாவில் இருந்தபோது நண்பர் ஒருவர் வந்து நிறையப்
பாடல்கள் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.என்னைப் பார்க்க வந்திருந்த பதிவர்கள்
பாடி இருப்பதும் பதிவு செய்திருக்கிறேன் டேப் ரெகார்டரைப் பழுது பார்க்கச்
சொன்னால் அதெல்லாம் மிகவும் சிரமம் வேஸ்ட் என்கிறார்கள். இருந்தாலும் அதைப் பழுது
பார்த்து வைத்திருக்கிறேன். அந்த மாதிரிய டேப் ரெகார்டர்கள் இப்போது யாரும்
வைத்துக் கொளள விரும்புவதில்லை. வைத்துக் கொள்வதும் இல்லை. ஏதோ நான் இருக்கும்வரை
கேட்டு மகிழவாவது அவை எனக்குத் தேவை
அதேபோல் என் மகன்களின் திருமண வைபவங்களை டேப்பில் பதிவாக்கி
வைத்திருந்தேன் நாள்பட்டதில் fungus வந்து கெட்டு விட்டன. இருப்பதை குறுந்தகடாக்க
டேப் சரியில்லாததால் யாரும் முன் வரவில்லை. சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில்
இருந்து வந்திருந்த நண்பன் மிகவும் சிரமப் பட்டு அவற்றைக் குறுந் தகடுகளாக்கிக்
கொடுத்தான் அவை அவ்வளவு தரமாயில்லை. இருந்தாலும் காட்சிகள் தெரிகின்றனவே என்று
திருப்தி பெற்று கொள்கிறேன்
காமிராவில் படமெடுத்துப் பிரிண்ட் போட்டு சேமித்து
வைத்திருக்கும் படங்கள் நிறைய இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. நாளாவட்டத்தில்
களை இழந்துபோய் விடுகின்றன. ஒரு முறை என் நண்பன் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
சுட்டிப் பையன்கள் இருவரை புகைப் படம் எடுத்தேன் மறு வினாடியே அவர்கள் ஓடிவந்து படத்தை
காண்பிக்கச் சொன்னார்கள்.அவர்கள் இந்தக் கால டிஜிடல் காமிராக்களையே பார்த்து
இருக்கின்றனர். ....!அவர்களுக்கு என் காமிரா புதிதாயிருந்திருக்க வேண்டும்....!