தொலைக்காட்சி படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொலைக்காட்சி படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

நீருக்கு நன்றி



                                                                   நீருக்கு நன்றி
                                                                   ---------------------
 
நீருக்கு நன்றி
 அண்மையில் சிலரது பதிவுகளில் ஆறுகள் நீரின்றி வறண்டு இருப்பது கண்டு ஆதங்கத்துடன் எழுதி இருந்தார்கள் நானும்  ஆடிப்பெருக்கு என்பதெல்லாம் வருங்காலத்தில் நம் கலாச்சாரத்தின்  நினைவுகளாவும் எச்சங்களாகவும்  மாறலாம் என்றும்  பின்னூட்டமிட்டிருந்தேன் இன்று ஞாயிறு பொதிகைத் தொலைக்காட்சியில் நீருக்கு நன்றி என்னும்  விழா எடுத்து நேரடி ஒளிபரப்பினார்கள் மித்ரஷிவா என்னும்  குருவின் வேண்டுகோளுக்கு இணங்கி கங்கையிலிருந்துசிலகுருமார்கள் கல்லணையிலும்   கங்கைக்கு ஆர்த்தி எடுப்பது போலவே நீருக்கு நன்றி சொல்லும் விதமாக ஆர்த்தி எடுத்து விழா எடுத்தார்கள்கல்லணை நீரின்றி வற்றி வறண்டிருக்கும்  என்று எண்ணி கொண்டிருந்த நான் அங்கு நீருக்கு நன்றிசொல்லும்  விதமாக ஆரத்தி எடுப்பது கண்டும்   கல்லணையில் நீர் இருப்பதுகண்டும்  மகிழ்ச்சி அடைந்தேன்
ஏழெட்டு பேர் ஒரே சிங்க்ரனைசிங்காக  எடுத்தனர் மொத்தம் ஏழு பேர்  இருந்தனர் என்று நினைக்கிறேன்  எல்லா தூப தீபங்களும் காட்டப்பட்டன.சாமரமும்வீசப்பட்டது தொலைகாட்சிப் பெட்டியில் கண்டதைப் புகைப்படமாக்கி இருக்கிறேன் மனசுக்கு இதம்  தரும்   நிகழ்வல்லவா

தொலைக்காட்சியில்  ஒளிபரப்பானதை  புகைப்படமெடுத்தது


இந்த நிகழ்ச்சியைப் பார்க்காதவர்களுக்காக இப்பதிவு