விடுமுறைத் துவக்கம்= நாய் பட்ட பாடு
--------------------------------------------------------------
பதிவுகள்
எழுதிக் கொண்டே இருக்கவேண்டும் இல்லாவிட்டால் தொய்வு ஏற்பட்டு எங்கு
துவங்குவது எதை எழுதுவது என்பது புரிபட சில நேரம் ஆகிறது. 15 நாள் இடைவெளியில்
எழுத நிறையவே விஷயங்கள் இருக்கின்றன.The dilemma is where to begin how to
begin and what to start with. நான்
ஒரு எழுத்தாளன் அல்லவா சம்பவங்களின்
வரிசைப்படி எழுதுவது என்று
தீர்மானித்து விட்டேன்
நான்
என் மகன் வீட்டு செல்ல நாய்க்குட்டி பற்றி எழுதி இருக்கிறேன் . நாங்களும் ஒரு
காலத்தில் செல்ல நாய் வளர்த்திருக்கிறோம் என்றாலும் அனுபவம் காரணமாக அதை
வளர்ப்பதில் இருக்கும் இடர்பாடுகளை என் மகனுக்கு எடுத்துச் சொல்லியும்
கேட்காமல் ஒரு கோல்டென் ரெட்ரீவர்
நாய்க்குட்டியைக் ரூ10000-/ கொடுத்து வாங்கி வந்து விட்டான் முன்பே எழுதி
இருக்கிறேன் இவனும் மருமகளும்
வேலைக்குப் போகிறவர்கள் பெண்காலேஜ்
போகிறவள் கடைக்குட்டி பள்ளிக்குச் செல்பவன்
பகல் பொழுதில் வீட்டில் யாருமே இருக்க மாட்டார்கள். இவன் இருப்பதோ
அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஏழாவது
தளம் நாய் குட்டியாய்த் திரியும் போது வீட்டில் ஆங்காங்கே மலஜலம் கழித்து
அசிங்கப் படுத்தும் அவற்றை அவ்வப்போது சுத்தப் படுத்த வேண்டும் சிறிது
வளர்ந்ததும் அதை வெளியே கூட்டிப்
போகவேண்டும் அதன் இயற்கை உபாதைகளைக் கழிக்கப் பழக்க வேண்டும் வீடு ஏழாவது
தளத்தில் இருப்பதால் நாயை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கவேண்டும் அது விருப்பப்படி வீட்டுக்குள் வளைய
வரும்போது ஆங்காங்கே எதையாவது கடித்து வைக்கும் நாற்காலியின் ஓரங்கள் போன்று
பல இடங்களிலும் வாயை வைக்கும் கட்டிப்போட்டால் குரைத்தே உயிரை வாங்கும் இதை எல்லாம் எதிர் நோக்கியே நாய் வேண்டாம்
என்றோம் கேட்கவில்லை. மகன் அடிக்கடி
டூர் போபவன் நாயைக் கூட்டிப்போவது
பேத்தியின் பொறுப்பாகும் கல்லூரி மாணவி படிப்பில் கவனம் சிதறும் பிரச்சனைகளைச்
சந்தித்தவர்கள் நாயைக் கொடுத்து விட முடிவெடுத்தார்கள். ஆனால் யாருக்குக் கொடுப்பது . நாய் நன்றாக
வளர்ந்திருந்தது. மகனின் மாமனார் அதைக் கேரளாவில் தான் வளர்ப்பதாக முன்
வந்தார். அப்போதும் சொன்னோம். அவருக்கும் வயதாகிறது. நாயுடன் மல்லுக் கட்ட
முடியாது என்றோம் . கேட்கவில்லை. நாய்க்காக ஒரு பெரிய கென்னெல் செய்தார்கள்.
வீட்டைச் சுற்றி இடம் இருந்தது சௌகரியமாகிப் போனது. ஒரு நாள் பூஜா விடுமுறையில் குடும்பத்துடன்
நாயையும் காரில் ஏற்றிக் கொண்டு கேரளா சென்றார்கள். ஒரு வாரம் போல் இருக்கலாம்
. அவர்களால் நாயைப் பராமரிக்க முடியவில்லை. நாயை நீங்களே கூட்டிப் போய் விடுங்கள்
என்றனர்.
இதனிடையில்
எங்கள் வீட்டுக்கு முன் ரோந்து வரும் காவல்துறைப் பெண்மணி ஒருவர் பக்கத்து
வீட்டில் இருக்கும் நாயை கேட்க அவர்கள் தரவில்லை. இதை அறிந்த நாங்கள் அப்பெண்மணி
எங்கள் நாயை வளர்க்க விரும்புவார்களா என்று கேட்டோம் அவர் மிகுந்த அக்கறையும் ஈடுபாடும் காட்ட
மகனிடம் சொன்னோம் அவன் அவர்கள் நாயை நன்கு பராமரிப்பார்களா அதை கவனித்துக்
கொள்ள வீட்டில் ஆட்கள் இருக்கிறார்களா
என்பது போன்ற கேள்விகளை சரமாரியாகக் கேட்டான் . நாங்கள் அப்பெண்மணியிடம் இதைக் கூறவும் அவர் அவரது உறவினர் ஒருவரை நல்ல
திடகாத்திரமானவர் அழைத்து வந்து அவர்
கவனித்துக் கொள்வார் என்றார்.
எங்களால் நாயை உடனே காண்பிக்க முடியவில்லை. அதுதான் கேரளாவில்
இருந்ததே. மகனை ஓரளவு திருப்திப் படுத்தி அதை கேரளாவில் இருந்து எடுத்துவரச்
சொன்னோம் இவர்கள் மீண்டும் கேரளாவுக்குக் காரில் பயணித்து நாயை இந்த மாதம்
பத்தாம் தேதி மதியம் கூட்டி வந்தனர். பத்தாம் தேதி தீபாவளி. அன்று தீபாவளி
உறவினர்களோடு கொண்டாடலாம் என்னும் திட்டம் பிசு பிசுத்து விட்டது
மதியம்
மூன்று மணி அளவில் அந்தக் காவல் துறைப் பெண்மணி அவரது உறவினருடன் வந்து
விட்டார். என் மகனும் சிறிது நேரத்தில் நாயுடன் கேரளாவிலிருந்து வந்து
சேர்ந்தான் வந்தவன் அவர்களிடம் ஒரு பெண்ணை மணம் முடிக்கக் கேட்பவர்போல் துருவித்துதுருவி கேள்விகளைக் கேட்டான்.
எங்களுக்குத் தெரிந்து விட்டது அவன் அவர்களிடம் நாயைக் கொடுக்கப் பிரியப்படவில்லை
என்று. இருந்தாலும் இவன் குடும்பத்துடன்
நாயையும் கூட்டிக் கொண்டு நாய் வளரப்
போகும் சூழ்நிலையை அறிந்து வர காவல்துறைப் பெண்மணியுடன் சென்றான் சென்ற சிறிது
நேரத்தில் போனமச்சான் திரும்பிவந்தான் என்பது போல் நாயை கொடுக்காமல் கூட்டிக்
கொண்டு வந்து விட்டான் அவர்கள் குடி
இருக்கும் இடம் மிகவும் சிறியது என்றும் நாய் குடி இருக்க இடமே
இல்லைஎன்றும் அதை வளர்க்கப் போகும்
உறவினருக்கு நாயின் மேல் பாசமே இல்லை என்றும் ஏதேதோ சொன்னான் இப்படியாக எங்கள்
தீபாவளி கழிந்தது. அன்றிரவு நாயை எங்கள் வீட்டிலேயே வைத்துக்
கொண்டோம் அந்த நாய் கட்டிப்போடுவதை
விரும்பவில்லை. எங்கள் மத்தியில்
எங்களில் ஒரு ஜீவனாக இருக்கவே விரும்பியது.
மறு நாள் என் பிறந்த நாள். எங்களை அழைத்துப் போக எங்கள் மூத்தமகன்
வந்திருந்தான் காலை பத்து மணி அளவில்
புறப்படுகிறோம் என்றான் ஆகபிறந்தநாள்
மண நாள் கொண்டாட்டமும் சவசவத்து விட்டது.
11-ம் தேதி காலை நாங்கள் சென்னை நோக்கிப் பயணிக்க சின்னவன் நாயைக் கூட்டிக்
கொண்டு அவன் வீடு நோக்கிச் சென்றான்
நாங்கள்
சென்னையில் இருந்தபோது தொலைபேசியில் நாயை அதைக் கவனிக்கும் டாக்டரிடமே கொடுத்து
விட்டதாகவும் இப்போது நாய் ஒரு நல்ல
இடத்தில் வளரும் என்றும் நம்பிக்கையுடன்
சொன்னான்
அவனுக்குத்
திருப்தி என்றால் எல்லாம் சரிதான்
பேரக் குழந்தைகளிடம் அடிக்கடி செல்லத்தைக் காணச் செல்ல வேண்டாமென்று
கூறி இருக்கிறோம் நாயும் புது இடத்தில்
ஒன்ற வேண்டும் அல்லவா இப்படியாக தீபாவளியும் பிறந்தநாள் மற்றும் மண நாளும்
இன்னொரு நாளாகிப் போயிற்று.
 |
| BUDDY IN OUR DINING HALL |
|
 |
| BUDDY IN OUR MAIN HALL |
|
 |
| BUDDY PART OF THE FAMILY |
 |
| THE LADY CONSTABLE INTERESTED IN BUDDY |
 |
| DISCUSSION IN PROGRESS |