நாயும் நிகழ்வுகளும்
--------------------------------
என்
மகன் வீட்டில் ஒரு நாய்க்குட்டி (கோல்டென் ரெட்ரிவர்) வாங்கி இருக்கிறான் என்று
நான் முன்பே எழுதி இருக்கிறேன் அடுக்கு மாடிக் குடியிருப்பில் செல்ல நாய்களை
வளர்ப்பதில் இருக்கும் சங்கடங்களை நாங்கள் சொல்லியும் தெரிந்தே வாங்கி
வளர்க்கிறார்கள். மகன் வேலைக்குப் போய் விடுவான் மருமகள் ஆசிரியை. பேத்தி கல்லூரி
மாணவி. பேரன் பள்ளி செல்பவன் செல்லங்களை வளர்ப்பது ஒரு கஷ்டமான காரியம் அதுவும்
குட்டி வளர்ந்து பெரிதாகும் போது சிரமங்கள் அதிகம் என் மகன் வீட்டு
நாய்க்குட்டிக்கு இப்போது நான்கு மாதங்கள் வயது. வீட்டில் ஒரு குழந்தை இருந்தால்
அதைப் பராமரிப்பதுபோல் இதையும் கவனிக்க வேண்டும் அது வளரும்போது செய்யும்
சேட்டைகள் ஒரு பக்கம் மகிழ்ச்சி தந்தாலும் சில நேரங்களில் தவிர்க்க முடியாமல்
பொறுத்துக் கொள்ள வேண்டும் அதற்கு பல் துரு துருக்கும் எல்லா இடங்களையும்
கடித்துப் பார்க்கும் கதவோரம் சோஃபா செட், மேசை ஓரம் வீட்டில் இருக்கும் காலணிகள்
நடக்கும் போது புடவை ஓரம் சில நேரங்களில்
நம் கால்களையும் கடித்துப் பார்க்கும். மிகவும் சாக்கிரதையாகக் கையாள வேண்டும்.
செல்ல நாயைக் கட்டிப் போடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறியதால் அதிக சுதந்திரம்
. சொல்லிச்சொல்லி இப்போது அதற்கு லீஷ் வாங்கி இருக்கிறார்கள் இப்போது அதை வெளியில்
உலவக் கூட்டிக்கொண்டு போகிறார்கள். என் மகன் என் வீட்டுக்கு வருவதும் பிரச்சனையாக
இருந்ததால் நான் அவர்கள் வரும்போது நாய்க் கூட்டியையும் அழைத்து வரச்சொல்லி
இருக்கிறேன் ஒரு நாளைக்கு நாய்க்குட்டிக்காகச் செய்யும் செலவு மனிதருக்காவதை விட
அதிகம். இதல்லாமல் தடுப்பூசி ரெகுலர் மருத்துவ செக் அப். வகையறா. இதெல்லாம் எதிர்பார்த்ததுதான்
ஆனால் நான் சொல்லப் போவது எதிர்பாரா ஒரு நிகழ்வு.
அடுக்குமாடிக்
குடியிருப்புகளில் ஏழெட்டு அடுக்குகள் உண்டு. ஒவ்வொரு அடுக்கிலும் பத்து தளங்கள்
ஒரு தளத்தில் நான்கு வீடுகள் என் மகன் ஏழாவது மாடியில் இருக்கிறான் இரண்டாம் தேதி
என் பேத்தி நாயை வாக்கிங் கூட்டிப் போயிருக்கிறாள் அங்கிருந்த நீச்சல் குளம் அருகே
யாரோ நீச்சல் தொப்பியை மடித்து வைத்துப் போய் இருக்கிறார்கள் வாக்கிங் போகும் போது
இந்த நாய்க்குட்டி அந்த தொப்பியைக் கௌவி இருக்கிறது.பேத்தி அதைப்பிடுங்கும் முன்
அதை முழுங்கி விட்டது. பேத்தி சற்றும் எதிர்பார்க்காதது. வீட்டில் வந்து சொல்லி
அழுதிருக்கிறாள். விலங்கியல் மருத்துவரிடம் அழைத்துப் போய்க் காட்டி
இருக்கிறார்கள். அவர் அதை பரிசோதித்து ஓரிரண்டு நாளில் மலத்துடன் வெளி வந்து
விடும் என்றும் அது உண்பது, மலம் கழிப்பது எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கவனிக்கும்
படியும் கூறினார் அது உண்பதில் ஏதும் மாற்றம் இருக்கவில்லை. ஒழுங்காகவே மலமும்
கழித்தது மூன்றாம் தேதி அனைவரும் என் வீட்டுக்கு வந்திருந்தார்கள், அன்று என்
மனைவியின் பிறந்த நாள் மறுநாளும் வெளியே
வரவில்லை. அத்தனை பெரிய தொப்பி வயிற்றினுள்ளேயே இருந்தால் செல்லத்துக்கு ஏதாவது
நேர்ந்து விடும் என்று எல்லோரும் பயந்திருக்கிறார்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி
எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தார்கள் வயிற்றில் அது இருப்பது தெரிந்தது. அடுத்த நாள்
பேரியம் மீல் கொடுத்துப் பார்த்தார்கள். அந்த தொப்பி சற்றே இடம் மாறிய நிலையில்
தெரிந்ததாம் அறுவைச் சிகிச்சை செய்துதான் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்
அபிப்பிராயப்பட்டார். என்னிடம் மகன் சொன்னபோது நான் வேண்டாம் இன்னும் ஓரிரு
நாளில் அது வெளியே வரலாம் என்று சொன்னேன்
. நாய்க் குட்டியாய் இருந்தபோதிலிருந்து அதைக் கவனித்துக் கொண்ட மருத்துவரிடம்
மீண்டும் காட்டி அவரது ஒபினியன் கேட்டிருக்கிறார்கள். அவர் ஒரு இஞ்செக்ஷன்
போட்டுப்பார்ப்பதாகவும் அதனால் அது சற்றே மயக்கமாக இருக்கக் கூடும் என்றும் அந்த
இஞ்செக்ஷன் வாந்தி எடுக்க வைக்கலாம் என்றும்
கூற அந்த இஞ்செக்ஷன் போடப் பட்டது. அங்கேயே அவர்கள் இருந்த அரைமணி
நேரத்தில் நாய்க்குட்டி வாந்தி எடுக்க ஹுர்ராஹ் அந்த தொப்பி வெளியே வந்து விட்டது.
இவர்கள் அனைவருக்கும் மிகவும் மன ஆறுதல்
கிடைத்தது என்று சொல்லவும் வேண்டுமா?
ஐந்தாம் தேதி டாக்டர் கந்தசாமி ஐயாவும் அவரது
துணைவியாரும் என் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அப்போது தொப்பி வெளியே வந்த விஷயம்
எங்களுக்கும் தெரிவிக்கப் பட்டது ஆறாம் தேதி நாய்க்குட்டியைப் பார்க்க நானும் என்
மனைவியும் போனோம் அதற்குள் ஆளுக்கு ஒரு வேண்டுதல் அவரவருக்கு இஷ்டப்பட்ட
கோவிலுக்கு . இந்த நாய்க்குட்டியின் விளையாட்டால் ரூ மூவாயிரத்துக்கும் அதிகம்
செலவாயிற்று, வேண்டுதலை நிறைவேற்ற இன்னும் எவ்வளவு செலவோ.? செலவைப் பற்றி
என்னைத்தவிர யார் கவலைப்பட்டார்கள்?
நாங்கள்
அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தபோது எடுத்த புகைப்படமும் ஒரு காணொளியும் இத்துடன்
![]() | ||
| என் மகனும் நானும் நாய்க்குட்டியுடன் |
என் மகன் வீட்டில் எடுத்த காணொளி
இது இன்னொரு நிகழ்வு. நாய் சம்பந்தப்பட்டதுதான் என்
மனைவியின் அக்காள் மகள் வீட்டில் ஒரு நாய் வளர்க்கிறார்கள் சைபீரியன் ஹஸ்கி
வகையைச் சேர்ந்தது, அதை ஒரு நாள் மச்சினியின் பெண்வீட்டில் எதிரில் இருந்த காலி
இடத்தில் யாருக்கோ சொந்தமானது .அங்கு நாயை உலவ விட அனுமதி கேட்டிருக்கிறாள் அவர்களும்
சரியென்று சொல்ல நாயை விட்டிருக்கிறாள், சிறிது நேரத்டில் அந்த வீட்டின் சொந்தக் காரரின் மாங்கிரல் நாய் ஒன்று இந்த
நாயை அட்டாக் செய்திருக்கிறது, எங்கள் வீட்டுப் பெந்தன் நாயைக் காப்பாறப் போக இவளை
அந்த நாய் கடித்து விட்டதாம் அந்த நாயின் சொந்தக்காரர்களிடம் நாய்க்குத் தடுப்பு
ஊசி போடப்பட்டிருக்கிறதா என்று கேட்க அவர்கள் சரியாகப் பதில் சொல்லாமல் ஆறு மாதம்
முன்பு போட்டதாகக் கூறினார்களாம் பின் என்ன இந்தப் பெண்ணுக்கு ஊசி போட்டுக்
கொள்ள வேண்டும் என்று மருத்துவர் கூற ஐந்து ஊசி போட வேண்டுமாம். ஒன்றோ இரண்டோ முடிந்திருக்கிறது.
![]() |
| ZUKO The Siberiyan Hasky மச்சினியின் மகள் வீட்டு நாய் |
நாய் வளர்ப்போர் ஜாக்கிரதை...!
.

