கூட்டாஞ்சோறு
-------------------------
முதலில் ஒரு கர்நாடகப் பாட்டு மேற்கத்திய இசையில்
செய்யாத
குற்றமென்னும் பதிவு எழுதி இருந்தேன்
அதில் முதுமையால் வரும் சில பிரச்சனைகளைச் சொல்லி
வயோதிகம் செய்யாத குற்றத்துக்கு
விதிக்கப்பட்ட தண்டனையா என்று கேட்டிருந்தேன்
அது சில பின்னூட்டங்களைக் கொண்டுவந்தது
அதன் மூப்பு இயற்கையானது; யதார்த்தமானது. தவழந்த பருவத்திலிருந்து தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறதே! உள்ளம் சோர்வுற்றாலும் அதற்கும் சேர்ந்து இதுவும் சோர்வுற்றது. இப்பொழுது இதற்கு சோர்வு வரும் பொழுது…….?.
உள்ளம்--உடல் என்னும் இரட்டை மாட்டு வண்டி சவாரியில், மாடுகள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவு தானே தவிர பிரித்துப் பார்க்க முடியவில்லை. இரண்டையும் தட்டிக் கொடுத்து பயணிக்க வேண்டியது தான்!
உள்ளம்--உடல் என்னும் இரட்டை மாட்டு வண்டி சவாரியில், மாடுகள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவு தானே தவிர பிரித்துப் பார்க்க முடியவில்லை. இரண்டையும் தட்டிக் கொடுத்து பயணிக்க வேண்டியது தான்!
வயொதிகம் என்பது புறத்தோற்றமே உள்ளம் இளமையாய் இருப்பதே
முக்கியம்
அயல் நாடுகளில் பெரும்பாலான சாதனைகள் பணி முதிர்வுக்குப்பின்தான் வயது முதிர்ந்தோரால்தான் நிகழ்த்தப்படுகின்றன. இது உண்மை.
முதுமை வரமாகவோ சாபமாகவோ ஆக்கப்படுவது
இம்மாதிரியான பின்னூட்டங்கள் என்னை முதுமை ஒரு பரிசு
என்னும் ரீதியில் எழுத வைத்தது
முதலில் முதுமையின் சில பயன்பாடுகளைப் பட்டியலிட்டேன் அதில்
நரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்
கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
என் இளமையின் சிரிப்பே என்
முகச் சுருக்கத்தின் அடையாளம்
சிரிக்காமலும் தோல் சுருங்காமலும்
இருந்து இறந்தோர் ஏராளம்.
கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
என் இளமையின் சிரிப்பே என்
முகச் சுருக்கத்தின் அடையாளம்
சிரிக்காமலும் தோல் சுருங்காமலும்
இருந்து இறந்தோர் ஏராளம்.
அனுபவ முதிர்ச்சியாலும், உண்மைத் தன்மையாலும் முதுமையினை வென்ற இளமையான மனத்தினை பாடல் வரிகளில்
கொண்டுவர விரும்பினேன்
.
வயதாகும்போது உள்ளதை உணர்வது
எளிதாகிறது. ஏனையோர் நினைப்பேதும்
என்னை பாதிக்க விடுவதில்லை.
விட்டு விடுதலையான ஒரு நினைப்பு இருப்பதைக்காட்டினேன்
என்னதானெழுதினாலும் முதுமையை அனுபவிக்க நோயற்ற உடல்
வேண்டும்
கற்பனை உலகில் வாழப் பழக வேண்டும்
சில வேடிக்கை மனிதர் போல் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று
பாரதி எழுதினான் ஆனால் சில சம்பவங்கள் நிகழும்போது வேடிக்கை மனிதர் போல் கை கட்டி
இருக்கத்தான் வேண்டி இருக்கிறது நான் அவற்றுக்கு எதிராக என்ன செய்ய முடியும் எதைச்
செய்வதானாலும் உடலில் உறுதி வேண்டுமல்லவா
ஆண்டுகள் கழியும்போது சில நேரம்
மனமுடைந்து போயிருக்கிறேன்.- உற்றார்
இழப்பும்,சிறார்களின் தவிப்பும்,அன்பின்
புறக்கணிப்பும்,போதாதா மனமுடைக்க?.
நிலவும் ஏற்ற தாழ்வு கண்டு இதயம்
நொருங்காதவர் வாழ்வின் நிலை உணராதவர்.
மனமுடைந்து போயிருக்கிறேன்.- உற்றார்
இழப்பும்,சிறார்களின் தவிப்பும்,அன்பின்
புறக்கணிப்பும்,போதாதா மனமுடைக்க?.
நிலவும் ஏற்ற தாழ்வு கண்டு இதயம்
நொருங்காதவர் வாழ்வின் நிலை உணராதவர்.
முதுமையை அனுபவிக்கும்போது மேலே வரும் வரிகள் என்ன
சொல்ல வருகிறது என்னும் கேள்வியும் எழுந்தது முதுமையை ரசிக்கும் போதுஎல்லாவித உணர்வுகளும்தானே
கூடவே வருகிறது
என் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களை நான் ரசித்துப் படிப்பேன் அது என் எழுத்தை நான் ரசிப்பது போல் என்று நண்பர் ஒருவர் கூறி இருந்தார் அதுவும் சரிதான் என் எழுத்துகளின் முதல் ரசிகன் நான் பின்னூட்டங்கள் எனக்கு வாசிப்பவர் பற்றி பல விஷயங்களைக் கூறும் பலரது பின்னூட்டங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை மொய்க்குமொய் என்று வரும் பின்னூட்டங்கள் பற்றி நான் அதிகம் கூற வேண்டாமே நான்யார் யாருடைய பதிவுகளைத் தொடர்கிறேனோ அவற்றுக்கு என்கருத்துகளைக் கூறிவிடுவேன் என்பதிவுகளுக்கு 172 பின் தொடர்பவர்கள் இருப்பதாக கூகிள் கூறு கிறது ஆனால் எல்லோரும் படிக்கிறார்களா இல்லையா என்பதுதெரிவதில்லை சிலருக்கு என்பதிவு பற்றிய செய்தி அனுப்பினால் வருகிறார்கள் எதையும் நேராகச் சொல்வது பலருக்கும் விருப்பமில்லை காழ்ப்பு இல்லாமல் கருத்து சொல்வது சரியே என்று நினைக்கிறேன் என் பதிவுகளின் நோக்கத்தைக் கூறி இருக்கிறேன் சில மாதங்களுக்குமுன் இது பற்றி சற்று விரிவாகவே எழுதி இருந்தேன் பார்க்க
அதிகம்பாராட்டாத வலைப் பதிவர் என்னைப் பாராட்டி கே பாலசந்தர் பாசமலர் என்னும் படத்தில் வந்த வசனம் அப்படம்வெளிவருவதற்கு முன்பே அதேபோல் என் நாடகத்திலும் இருந்ததைப் பாராட்டி எழுதி இருந்தார் இதையெல்லாம் நினைவு படுத்த நான் எனக்கு வந்த பின்னூட்டங்களை மீண்டும் படித்து உற்சாகப் படுத்திக் கொள்வது தவறில்லையே என் எழுத்துகளை நான் ரசித்துப்படிப்பது மட்டுமல்லாது பின்னூட்டங்களையும் பின் நோக்கிப் பார்ப்பேன்
உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தையில் உயிர் கொடுக்கும் முயற்சிதான் என் எழுத்துகள் பலவும் பொழுதுபோக்குவதோடு என் எண்ணங்களையும் பகிரவும் வழி அல்லவா என் எழுத்துகள்