பதிவர் சந்திப்பு மதுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர் சந்திப்பு மதுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 நவம்பர், 2014

மதுரைப் பதிவர் திருவிழா


                             மதுரைத்  தமிழ்ப் பதிவர் பேரவை
                            ----------------------------------------------


அக்டோபர் 26-ம் நாள் நடந்து முடிந்த தமிழ் வலைப் பதிவர் திருவிழா பற்றி ஆறு நாட்கள் கழிந்தபின்  பதிவு எழுதுகிறேன். அக்டோபர் 24-ம் தேதிவரை பதிவர் விழா நடக்குமா என்னும் அளவில் தமிழகத்தில் மழை கொட்டிக் கொண்டிருந்தது. திரு தனபாலனிடம் மழை பற்றி விசாரித்து நிலைமை அறிந்து கொண்டேன். போகமுடியுமா என்பது கடைசிவரை நிச்சயமில்லாத நானே 25-ம் தேதி காலை சென்னையிலிருந்து என் மகன் காரில் கூட்டிப்போக  அன்று மதியம் 12 மணி அளவில் மதுரையில் ஹோட்டல் எடுத்து ரூம் போட்டு விட்டோம். மாலை மீனாட்சி அம்மையை தரிசனம் செய்து 26-ம் தேதி காலை ஒன்பது மணி அரங்கத்துக்கு வந்து விட்டோம். ஆனால் என்ன ஒரு ஏமாற்றம். பதிவில் பழக்கமுள்ள ஆனால் நேரில் பரிச்சயப்படாத பல பதிவர்கள் வரவில்லை. இத்தனைக்கும் வருவதாக் உறுதி செய்தவர்கள். என்னவோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் நான் ஏமாந்தது நிஜம் புலவர் ராமானுசம், சேட்டைக்காரன், துளசிதரன் தில்லையகத்து, நண்டு @ நொரண்டு, வெங்கட் நாகராஜ். ரஞ்சனி நாராயணன். மற்றும் பார்த்துப் பரிச்சயப்பட்ட கவியாழி கண்ணதாசன். டாக்டர் கந்தசாமி.செல்லப்பா யக்ஞசுவாமி மற்றும் பலர் வருகை தரவில்லை. ஆனால் பார்த்துப் பரிச்சயப் படாத முனைவர் ஜம்புலிங்கம். தருமி முத்து நிலவன் கில்லர்ஜி ஜோக்காளி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ரத்னவேல் நடராஜன் மற்றும் திருமதி சீனா ஆகியோரை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சியே, இளம் பதிவர்களில் பரிச்சயப்பட்ட ஸ்கூல் பையனை முதலில் அடையாளம் தெரியாமல் வழிந்ததும் உண்மை. இளம் பதிவர்கள் பலர் வந்திருந்தும் அவர்களுடன் உரையாடி மகிழ சந்தர்ப்பங்கள் ஏற்படவில்லை.
மதுரைக்குப் பல முறை சென்றிருந்தும் ஜிகிர் தண்டா சாப்பிட்டது பதிவர் விழாவில் மட்டும்தான்.
பல பதிவர்கள் விழா குறித்து எழுதி இருந்தாலும்  என் இப்பதிவு ஒரு காணொளிப் பதிவாக இருக்கும். துண்டு துண்டாக இருக்கும் படப் பிடிப்பு என் மகனும் மனைவியும். ஒன்று சொல்ல மறந்து விட்டது. நான் சற்றும் எதிர்பாராவிதத்தில் எனக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.  என் கையால் தமிழ்வாசிக்கும், திண்டுக்கல் தனபாலனுக்கும் நினைவுப் பரிசு கொடுக்கச் சொன்னார்கள் நான் சென்ற ஆண்டு பதிவர் விழாவுக்குச் செல்ல முடியாமல், சென்றிருந்தால் என்ன சொல்ல நினைத்திருப்பேனோ அதை இங்கு உரையாக வாசித்து விட்டேன் வாசித்ததைக் காண ”இங்கே” சொடுக்கவும்
 ( காணொளி  அப்லோட் ஆகததால் பதிவிட முடியவில்லை)
பலரது வலைகளில் விழாபற்றி என்னதான் எழுதி இருந்தாலும் எனக்கு நிறைவாகவே இருந்தது. மறுநாள் என் மகனுக்கு வேலைக்குச் செல்ல   வேண்டி இருந்ததால் அன்று மதியம் இரண்டு மணி அளவில் சென்னைக்குப் பயணப்பட்டோம். போகும் முன் பால கணேஷ் மறக்காமல் விழாக்குழுவினர் கொடுக்க ஏற்பாடு செய்திருந்த ஒரு மஞ்சள் பையை அதில் ஒரு பாகுடன்(bag) மறக்காமல் கொடுத்தார்.குறும்பட வெளியீட்டுக்கும் பதிவர்கள் எழுதிய நூல்கள் வெளியீட்டையும் காணக் கொடுத்து வைக்கவில்லை.பெங்களூரு விஜயத்தின் போது என் வீட்டுக்கு வந்து கௌரவித்த திருமதி துளசியையும் அவர் கணவர் கோபாலையும் மீண்டும் விழாவில் சந்த்தித்தது நிறைவாக இருந்தது.இனிகாணொளிகள் சில. காணொளிகள் பலவும் 100mb -க்கும் மேலாக இருப்பதால் அப்லோட் ஆவதில்லை

 


நாங்கள் இருந்தவரை எல்லா நிகழ்ச்சிகளையும் cover செய்திருந்தும் அவற்றைப் பதிவிட முடியாமல் போவது வருத்தமளிக்கிறது. நிபுணர்கள் ஆலோசனை ஏதாவது உள்ளதா.?ஏறத்தாழ அநேக காணொளிகள் 100mb-க்கு மேற்பட்டவையே.       .