Saturday, November 1, 2014

மதுரைப் பதிவர் திருவிழா


                             மதுரைத்  தமிழ்ப் பதிவர் பேரவை
                            ----------------------------------------------


அக்டோபர் 26-ம் நாள் நடந்து முடிந்த தமிழ் வலைப் பதிவர் திருவிழா பற்றி ஆறு நாட்கள் கழிந்தபின்  பதிவு எழுதுகிறேன். அக்டோபர் 24-ம் தேதிவரை பதிவர் விழா நடக்குமா என்னும் அளவில் தமிழகத்தில் மழை கொட்டிக் கொண்டிருந்தது. திரு தனபாலனிடம் மழை பற்றி விசாரித்து நிலைமை அறிந்து கொண்டேன். போகமுடியுமா என்பது கடைசிவரை நிச்சயமில்லாத நானே 25-ம் தேதி காலை சென்னையிலிருந்து என் மகன் காரில் கூட்டிப்போக  அன்று மதியம் 12 மணி அளவில் மதுரையில் ஹோட்டல் எடுத்து ரூம் போட்டு விட்டோம். மாலை மீனாட்சி அம்மையை தரிசனம் செய்து 26-ம் தேதி காலை ஒன்பது மணி அரங்கத்துக்கு வந்து விட்டோம். ஆனால் என்ன ஒரு ஏமாற்றம். பதிவில் பழக்கமுள்ள ஆனால் நேரில் பரிச்சயப்படாத பல பதிவர்கள் வரவில்லை. இத்தனைக்கும் வருவதாக் உறுதி செய்தவர்கள். என்னவோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் நான் ஏமாந்தது நிஜம் புலவர் ராமானுசம், சேட்டைக்காரன், துளசிதரன் தில்லையகத்து, நண்டு @ நொரண்டு, வெங்கட் நாகராஜ். ரஞ்சனி நாராயணன். மற்றும் பார்த்துப் பரிச்சயப்பட்ட கவியாழி கண்ணதாசன். டாக்டர் கந்தசாமி.செல்லப்பா யக்ஞசுவாமி மற்றும் பலர் வருகை தரவில்லை. ஆனால் பார்த்துப் பரிச்சயப் படாத முனைவர் ஜம்புலிங்கம். தருமி முத்து நிலவன் கில்லர்ஜி ஜோக்காளி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ரத்னவேல் நடராஜன் மற்றும் திருமதி சீனா ஆகியோரை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சியே, இளம் பதிவர்களில் பரிச்சயப்பட்ட ஸ்கூல் பையனை முதலில் அடையாளம் தெரியாமல் வழிந்ததும் உண்மை. இளம் பதிவர்கள் பலர் வந்திருந்தும் அவர்களுடன் உரையாடி மகிழ சந்தர்ப்பங்கள் ஏற்படவில்லை.
மதுரைக்குப் பல முறை சென்றிருந்தும் ஜிகிர் தண்டா சாப்பிட்டது பதிவர் விழாவில் மட்டும்தான்.
பல பதிவர்கள் விழா குறித்து எழுதி இருந்தாலும்  என் இப்பதிவு ஒரு காணொளிப் பதிவாக இருக்கும். துண்டு துண்டாக இருக்கும் படப் பிடிப்பு என் மகனும் மனைவியும். ஒன்று சொல்ல மறந்து விட்டது. நான் சற்றும் எதிர்பாராவிதத்தில் எனக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.  என் கையால் தமிழ்வாசிக்கும், திண்டுக்கல் தனபாலனுக்கும் நினைவுப் பரிசு கொடுக்கச் சொன்னார்கள் நான் சென்ற ஆண்டு பதிவர் விழாவுக்குச் செல்ல முடியாமல், சென்றிருந்தால் என்ன சொல்ல நினைத்திருப்பேனோ அதை இங்கு உரையாக வாசித்து விட்டேன் வாசித்ததைக் காண ”இங்கேசொடுக்கவும்
 ( காணொளி  அப்லோட் ஆகததால் பதிவிட முடியவில்லை)
பலரது வலைகளில் விழாபற்றி என்னதான் எழுதி இருந்தாலும் எனக்கு நிறைவாகவே இருந்தது. மறுநாள் என் மகனுக்கு வேலைக்குச் செல்ல   வேண்டி இருந்ததால் அன்று மதியம் இரண்டு மணி அளவில் சென்னைக்குப் பயணப்பட்டோம். போகும் முன் பால கணேஷ் மறக்காமல் விழாக்குழுவினர் கொடுக்க ஏற்பாடு செய்திருந்த ஒரு மஞ்சள் பையை அதில் ஒரு பாகுடன்(bag) மறக்காமல் கொடுத்தார்.குறும்பட வெளியீட்டுக்கும் பதிவர்கள் எழுதிய நூல்கள் வெளியீட்டையும் காணக் கொடுத்து வைக்கவில்லை.பெங்களூரு விஜயத்தின் போது என் வீட்டுக்கு வந்து கௌரவித்த திருமதி துளசியையும் அவர் கணவர் கோபாலையும் மீண்டும் விழாவில் சந்த்தித்தது நிறைவாக இருந்தது.இனிகாணொளிகள் சில. காணொளிகள் பலவும் 100mb -க்கும் மேலாக இருப்பதால் அப்லோட் ஆவதில்லை

 


நாங்கள் இருந்தவரை எல்லா நிகழ்ச்சிகளையும் cover செய்திருந்தும் அவற்றைப் பதிவிட முடியாமல் போவது வருத்தமளிக்கிறது. நிபுணர்கள் ஆலோசனை ஏதாவது உள்ளதா.?ஏறத்தாழ அநேக காணொளிகள் 100mb-க்கு மேற்பட்டவையே.       .      

64 comments:

 1. ரயில் டிக்கெட் புக்கிங்கில் ஒரு குளறுபடி நடந்து விட்டபடியால் என் பயணத்தை ரத்து செய்யும்படியாக ஆகிவிட்டது. வருத்தமாக இருக்கிறது.

  ReplyDelete
 2. மதுரை பதிவர் சந்திப்பு பற்றி ஆர்வத்துடன் பங்குகொண்டு பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்.!

  ReplyDelete
 3. பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கும் காணொளிக்காட்சிகளுக்கும் நன்றி. விழா சிறப்பாக நடைபெற்றது குறித்தும் மகிழ்ச்சி.

  ReplyDelete
 4. இங்கேயும் வேர்ட் வெரிஃபிகேஷன்?????? சில நாட்களாக எந்தப் பதிவுக்குச் சென்றாலும் வேர்ட் வெரிஃபிகேஷன்!

  ReplyDelete
 5. நீங்கள் பதிவர் திருவிழாவிற்கு வருகை தந்த செய்தியை உலகிலுள்ள பல பதிவர்களும் எழுதிவிட்டார்கள். இப்போது உங்கள் ஒரிஜினல் பதிவைப் பார்க்கிறேன். எந்த விழாவிலும் நாம் நினைக்கும் எல்லாவற்றையும் செய்யமுடிவதில்லை தானே! அதற்காக வருந்தவேண்டியதில்லை. (2) எனது காலில் நடந்த அறுவை சிகிச்சையின் காரணமாக ஓய்வில் இருக்கவேண்டி நேரிட்டதால் நான் மதுரைக்கு வர இயலாமல் போனது. எனினும் தங்களின் மலர்ந்த முகத்தைப் பல படங்களில் முகநூலில் பார்த்துவிட்டேன். (தங்கள் திருமதியையும் கூட!)

  ReplyDelete
 6. தாங்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளது மிகச்சிறப்பு. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 7. மதுரை வலைப்பதிவர் காட்சிகளைப் பகிர்ந்து கொண்ட அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி! அடுத்த ஆண்டு புதுக்கோட்டையில் நிகழவிருக்கும் சந்திப்பிற்கும் வந்திருந்து தாங்கள் வாழ்த்துரை வழங்க வேண்டும்.

  மதுரையில் நீங்கள் எனக்கு தந்த, நீங்கள் எழுதிய “ வாழ்வின் விளிம்பில்” என்ற நூலை படித்து முடித்து விட்டேன். எனது கருத்துரையை பதிவாக எழுத இருக்கிறேன்.

  நன்றி!

  ReplyDelete

 8. @ டாக்டர் கந்தசாமி
  @ இராஜராஜேஸ்வரி
  @ கீதா சாம்பசிவம்
  @ செல்லப்பா யக்ஞசுவாமி
  @ கோபு சார்
  அனைவரது வருகைக்கும் நன்றி கீதா சாம்பசிவம் --வேர்ட் வெரிஃபிகேஷனா? என் பதிவுகளுக்கு இல்லையே...

  ReplyDelete

 9. @ தி தமிழ் இளங்கோ
  வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஐயா. தமிழ் பதிவர் விழாவைக் காணொளியாகப் பகிர விரும்பினேன். ஆனால் 100 mb சைசுக்கு மேல் அப்லோட் ஆவதில்லை. நூல் விமரிசனத்துக் காத்திருக்கிறேன்

  ReplyDelete
 10. நேரடி ஒளி பரப்பில் சில காட்சிகளை அன்றே பார்த்தேன் எனினும்
  சிலவற்றை இன்றும் பார்த்து மகிழ்ந்தேன்.

  சென்னைக்கு வந்தால் எங்கள் வீட்டுக்கும் வரவும்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 11. பதிவர் சந்திப்பு வரமுடியாத எனக்கு தாங்கள் பகிர்ந்துள்ள காணொளிகள் பரிச்சியமான பதிவர்களை காண உதவியது. நன்றி!

  ReplyDelete
 12. தங்களை மீண்டும் சந்திக்க வாய்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.

  ReplyDelete
 13. மதுரை பதிவர் சந்திப்பு விழா பற்றிய் செய்திகளைப் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி - ஐயா!..

  ReplyDelete
 14. எல்லோரையும் எப்போதும் திருப்திப் படுத்திவிட முடியாது. குறைகளும் இருக்கும், நிறைகளும் இருக்கும். நிறைகள்தான் அதிகம் தெரிகிறது.

  காணொளிகளை விட புகைப்படங்கள் அதிகம் பகிர்ந்திருக்கலாம்.

  வர்ட் வெரிபிகேஷன் இருக்கிறதா என்று தெரியவில்லை. இனிதான் பின்னூட்டம் இடப் போகிறேன். ஆனால் எங்கள் ப்ளாக்கிலும் இதே மாதிரி சொல்லியிருப்பதால் இது கூகிளே ஏற்பாடு செய்திருப்பதோ ( ! )என்று தோன்றுகிறது!

  ReplyDelete
 15. என்னை வர்ட் வெரிபிகேஷன் கேட்கவில்லை.

  ReplyDelete
 16. @ஶ்ரீராம், என்னோட பதிவுக்குப் போறச்சே கூட வேர்ட் வெரிஃபிகேஷன் கேட்குது! நீங்க வேறே! :))))

  முதலில் நான் நினைச்சேன். அன்றைய நாளின் தொடக்கத்தில் தான் கேட்குமோ என! ஆனால் இதோ இப்போதும் வேர்ட் வெரிஃபிகேஷன் சாளரம் திறந்து எண் 650 காட்டுது! :))) அதனால் எனக்கு மட்டும் வேர்ட் வெரிஃபிகேஷன் கேட்குதோனு! அநியாயமா இல்லை? :)

  ReplyDelete
 17. எனக்கு வர்ட் வெரிபிகேஷன் கேட்கவில்லை!

  அது சரி.. அதனால்தான் எங்கள் ப்ளாக் பக்கம் உங்களைக் காணோமா?

  :))))))

  ReplyDelete
 18. @ஶ்ரீராம், அட??? வந்தேனே! குட்டி நாயோட விளையாட்டை எல்லாம் பார்த்துட்டுக் கருத்தும் சொல்லி இருந்தேனே! ஹிஹி, காக்காய், கொ.போ???

  ReplyDelete
 19. இல்லை. உங்கள் கமெண்ட் அங்கே கா......ணோ........ம்!

  ReplyDelete

 20. @ சூரி சிவா
  நேரடி ஒளிபரப்பு சரியாக வந்ததா.?வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 21. அருமையான காணொளி
  அன்று தங்கள் உரை மிகச் சிறப்பாக இருந்தது
  வரிவடிவிலேனும் அதை பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்

  ReplyDelete

 22. @ வே.நடன சபாபதி
  வந்து கண்டு கருத்திட்டதற்கு நன்றி சார்

  ReplyDelete

 23. @ துளசி கோபால்
  வருகைக்கு நன்றி மேடம் நியூஜிலாந்த் சென்று விட்டீர்களா.?

  ReplyDelete

 24. @ துரை செல்வராஜு
  வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்

  ReplyDelete

 25. @ ஸ்ரீராம்
  /
  காணொளிகளை விட புகைப்படங்கள் அதிகம் பகிர்ந்திருக்கலாம்/ எழுதுபவர் பலரும் புகைப்படங்களைப் பகிர்கிறார்கள் நான் சற்று வித்தியாசமாக காணொளிகளைப் பகிர விரும்பினேன். முழு வெற்றி கிடைக்கவில்லை. என் உரையை முகநூலில் இட்டிருக்கிறேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ.

  ReplyDelete

 26. @ கீதா சாம்பசிவம்
  @ ஸ்ரீராம்
  வேர்ட் வெரிஃபிகேஷன் பற்றி ஒரு ஜுகல் பந்தி.?

  ReplyDelete

 27. @ ரமணி
  /வரிவடிவிலேனும் அதை பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்/ பதிவிலேயே லிங்க் கொடுத்திருக்கிறேனே. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்.

  ReplyDelete

 28. @ ரமணி
  /வரிவடிவிலேனும் அதை பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்/ பதிவிலேயே லிங்க் கொடுத்திருக்கிறேனே. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 29. காணொளிகள் கண்டு மகிழ்ந்தேன் ஐயா
  த்ங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி

  ReplyDelete
 30. தம்பதி சமேதராய் வந்திருந்து சிறப்பான உரையை தந்ததற்கு நன்றி அய்யா !
  தங்களை சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி நிறைந்த தருணம் ,மீண்டும் புதுக்கோட்டை விழாவில் சந்திக்கிறேன் !
  தங்களின் வீடியோவில் தங்களை வரவேற்கும் காட்சியில் என்னைக் கண்டு மகிழ்ந்தேன் ,மிக்க நன்றி !

  ReplyDelete

 31. @ கரந்தை ஜெயக்குமார்
  அரை நாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் காணொளியில் என் மகன் எடுத்திருந்தார். இருந்தும் துரதிர்ஷ்டவசமாக அவற்றின் நீளம் காரணமாக அப்லோட் ஆக மாட்டேன் என்கிறது. மகிழ்ச்சிஎனக்கும் உண்டு. நன்றி ஐயா.

  ReplyDelete

 32. @ Bagawanjee KA.
  உங்கள் பரிச்சயம் கிடைத்தது மகிழ்ச்சியைத் தருகிறது.நிறையக் காணொளிகள் பதிவேற்ற முடியவில்லை. வருகைக்கு நன்றி ஐயா, என் உரையை முக நூலில் பகிர்ந்திருக்கிறேன் காணொளியோடு

  ReplyDelete
 33. பல காணொளிகள் எனக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்... நன்றி ஐயா... உங்களை சந்தித்து உரையாடியதில் (சிறிது நிமிடங்கள் ஆயினும்) மிகமும் சந்தோசம்...

  // எனக்கு நிறைவாகவே இருந்தது. //

  இது ஒன்றே போதும் ஐயா... மனம் முழுவதும் மகிழ்ச்சி... சொல்ல வார்த்தைகள் இல்லை...

  நன்றி... நன்றி... நன்றி...

  ReplyDelete
 34. // நியூஜிலாந்த் சென்று விட்டீர்களா.?//

  இல்லை ஐயா. இன்னும் 2 வாரங்கள் இந்தியாவில்தான்.

  ReplyDelete
 35. விடியோ பார்க்க முடியவில்லை.

  மழையையும் சிரமங்களையும் பொருட்படுத்தாமல் சென்றதற்காகவே இன்னொரு பொன்னாடை போர்த்தலாம்.

  ReplyDelete
 36. புகைப்படமெல்லாம் சும்மா ஜுஜுபி, நான் காணொளியே வெளியிடுறேன் பாருங்கனு, இளம் பதிவர்கள் களுக்கு ஒரு படி மேலேயே போயிடுறீங்க!

  பதிவர் சந்திப்பெல்லாம், கோயில் திருவிழா அல்லது திருமணம் நடப்பதுபோல் பிரமாதமாகவே நடக்கிறது.

  நீங்க கலந்து அதை இன்னும் சிறப்பித்தது இன்னும் ஒரு படி மேலே எடுத்துச் செல்கிறீர்கள், சார்! :)

  ReplyDelete
 37. அய்யா G.M.B அவர்களுக்கு வணக்கம்! உங்களுடைய இந்த பதிவினை எனது ” மதுரையில் வலைப்பதிவர்கள்!” என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி!

  ReplyDelete
 38. ஆகா. அருமை GMB சார். காணொளிகள் அனைத்தும் என்னை ஒருவாரம் பின்னோக்கி அழைத்து சென்றன. தங்களின் ஆர்வமும் , உழைப்பும் பொறாமைப்பட வைக்கின்றன. மாலையில் தங்களிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்று தேடினேன்.
  தங்கள் அளித்த வாழ்வின் விளிம்பில் இன்னும் நான் படிக்க ஆரம்பிக்கவில்லை என் மனைவி படித்து முடித்து விட்டார் அருமையாய் இருப்பதாய் சொன்னார். . குறிப்பாய் கடைசி இரு கதைகள் "நச்"சென்று இருப்பதாக சொன்னார்.
  மிக்க நன்றி அய்யா.

  ReplyDelete
 39. இனிய சந்திப்பு. எப்போதும் மனதில் இருக்கும்.

  காட்டிய பெரு நட்புக்கு பெருத்த நன்றி

  ReplyDelete
 40. அன்புள்ள G.M.B அய்யா அவர்களுக்கு வணக்கம்! நீங்கள் எழுதிய “ வாழ்வின் விளிம்பில்” என்ற நூலை பற்றிய எனது கட்டுரையை எனது வலைத்தளத்தில் இன்று வெளியிட்டு இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்க்கவும். நன்றி.

  ReplyDelete

 41. @ திண்டுக்கல் தனபாலன்
  உங்களிடம் அதிக நேரம் உரையாட முடியாமல் போனது என் தவறு என்று சொல்லலாமா.? உங்களுக்கு நினைவுப் பரிசு என் கையால் கொடுக்கச் சொன்னது என் மகிழ்ச்சிக்கு கூடுதல் காரணம். வருகைக்கு நன்றி டிடி.

  ReplyDelete

 42. @ துளசி கோபால்
  உங்கள் மீதிப் பயணம் இனிதே நிறைவேற விரும்புகிறேன். தொடர்பில் இருக்க வேண்டுகிறேன்.நன்றி.

  ReplyDelete

 43. @A Durai
  ஏன் வீடியோக்கள் திறக்கவில்லையா.?அந்த ஒருபொன்னாடையே எதிர்பாராத மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி துரை சார்

  ReplyDelete

 44. @ வருண்
  காணொளிகளை வெளியிட்டது ஒரு மாற்றத்துக்காகத்தான் புகைப் படங்களை குறைவாக எண்ணவில்லை. உங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete

 45. @ தி இளங்கோ
  என் பதிவினை மேற்கோள் காட்டுவதற்கு நன்றி. இன்னும் சிலர் படிக்க அது ஒரு வாய்ப்பாக அமையும்.

  ReplyDelete

 46. @ சிவ குமாரன்
  உங்கள் சுய அறிமுக காணொளியை பார்க்க முடிந்ததா.? என் கதைகளைப் படித்து முடிந்தால் விமரிசிக்கவும் நன்றி

  ReplyDelete

 47. @ தருமி
  The pleasure was mine ,too/ thanks.

  ReplyDelete

 48. @ தி தமிழ் இளங்கோ
  நூல் விமரிசனத்துக்கு நன்றி. பலரும் படித்து அபிப்பிராயம் கூற ஒரு வாய்ப்பாக இதை நான் கருதுகிறேன் நன்றி.

  ReplyDelete
 49. காணொளி தான் பெஸ்ட். ஒரு கல்யாண வரவேற்பு ஹால் போல் களைகட்டியிருப்பதைக் காண முடிந்ததும் பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள வாய்பில்லாதவர் களுக்கு அந்த அனுபவத்தை ஓரளவானும் ஏற்படுத்தியதும் அதன் சிறப்பு.

  திண்டுக்கல் தனபாலன் அவர்களுக் கும் மற்ற விழாக்குழு நண்பர்களு க்கும் அன்பான வாழ்த்துக்கள்.

  ஜிஎம்பீ சார்! அந்த தமிழக மழையிலும் எப்படியாயினும் கலந்து கொள்ள வேண்டும் என்று கிளம்புவதற்கான உந்து சக்தி உங்களுக்கு கிடைத்து உறுதியுடன் கிளாம்பியது பாராடுக்குரியது.

  கார் பயணம் ஆதலால் பெங்களூரு, சென்னை, மதுரை என்று மூன்று இடங்களை வரிசையாகக் கடந்த
  அனுபவத்தை அந்தந்த சூழ்நிலைகளுடன் விவரித்து ஒரு பதிவிட்டீர்களென்றால் அது சிறப்பாக இருக்கும்.

  ReplyDelete
 50. உங்கள் காணொளி கண்டு மகிழ்ச்சி. அலுவலகத்தில் இடைவிடா பணி..... விடுமுறை கிடைப்பதிலும் சில சிக்கல்கள்....

  அடுத்த முறை வந்துவிடுவேன்!

  கடைசி காணொளியில் சீனு உங்கள் மீசையை மட்டும் புகைப்படம் பிடித்த மாதிரி இருக்கிறது! :)

  ReplyDelete

 51. @ ஜீவி
  உங்கள் பாராட்டுக்கு நன்றி சார்.பதிவர் சந்திப்புக்கு முன்னான ஒரு வார நிகழ்ச்சிகளைப் பதிவிட உத்தேசம் வருகைக்கு நன்றி

  ReplyDelete

 52. @ வெங்கட் நாகராஜ்
  /கடைசி காணொளியில் சீனு உங்கள் மீசையை மட்டும் புகைப்படம் பிடித்த மாதிரி இருக்கிறது! :)/ ஹஹஹா.! சீனு அந்தப் புகைப் படத்தை வெளியிடவில்லையே....! வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 53. சார் முதலில் எங்களை தயை கூர்ந்து மன்னித்து விடுங்கள்!

  னீங்கள் வருத்தமடைந்து ஏமாற்றம் அடைய காரண்மாக இருந்ததற்கு.

  முதலில் துளசி வருவது கடினம் என்று சொல்லிவிட்டார். கீதா வருவதற்கு எல்லா ஏற்பாடுகலும் செய்திருந்த நிலையில் கடைசியில் பயணத்தை ரத்து செய்யும்படி ஆகிவிட்டது. தங்கலச் சந்திக்கும் ஆவல் எங்களுக்கும் நிறைய இருந்தது/இருக்கின்றது.

  தங்கள் பதிவு கண்டு மிகவும் சந்தோஷ்ம சார்.

  காணொளி கண்டதும் அது இன்னும் இரட்டிப்பாகியது.

  நீங்கள் உங்களிடம் உள்ள காணொளிகளை ஒன்றிணைத்து, ஆன்லைனில் வசதி உண்டு. wmv, mpeg4 ஃபைலாக, யூடுயூபிலேயேஎடிட் செய்ய வசதி இருப்பதகாப் பார்த்திருக்கின்றோம். ஆனால் இதை ச் செய்து பார்க்க வில்லை.

  அப்படி ஒன்றாக்கிவிட்டு யுட்யூபில் அப்லோட் செய்து விட்டு பின்னர் வலைத்தளத்தில் அதன் லிங்க் கொடுக்கலாம் இல்லைஎன்றால் அப்படியே கணொளியாகவும் பதிவிடலாம் சார். அவ்வாறு ஒன்றாக இணைக்கும் போது யூடூயூபில் ஒரு சமயத்தில் எத்தனை எம்பி பதிவிட முடியும் என்பதை பார்த்து அதற்கு ஏற்றார் போல் ஒன்றிணைத்து, யூட்யூப் ஏற்கும் ஃபார்மாட்டில் (இது அன்லைனிலெயெ செய்ய முடியும்) செய்து பதிவேற்றிவிடலாம் சார். உங்கள்ளுக் யுடூயூபில் தனி அக்கௌன்ட் இல்லையென்றால், ஜிமெயில் ஐடி வைத்தே ஓபென் செய்து உங்கள் சானலில் பதிவேற்றம் செய்யலாம் சார்.

  மீண்டும் மன்னிபுக் கோரி, உங்களை சந்திக்கும் ஆவலிலும், நம்பிக்கையுடனும்,

  அன்புடன்,

  துளசிதரன், கீதா

  வெர்ட் வெரிஃபிகேஷன் கேட்கிறதே!

  ReplyDelete
 54. முதலில் தாங்களும் வருவீர்களோ உங்கள் உடல்னிலை காரணமாக வர இயலாதோ என்றுதான் நினைத்தோம். பின்னர் பல பதிவர்களின் பதிவுகளிலும் தங்களைக் கண்டதும்தான், எங்களுக்கு மிகவும் வருத்தமாகி, சொல்லிக் கொண்டோம், ஜிஎம்பி சார் வந்திருக்காங்க ...நாம சந்திக்க முடியாம ஆகிப்போச்சேனு.....தங்கலயும், தங்கள் மனைவியையும், மகனையும் ஒரு புகைபடத்தில் பார்த்தோம் சார்.

  ReplyDelete

 55. @ துளசிதரன் தில்லையகத்து
  மன்னிப்பு எல்லாம் பெரிய வார்த்தை. பதிவர் விழாவுக்கு வருகையை உறுதி செய்திருந்தவர்களைக் எதிர்பார்த்துச்சென்றது ஏமாற்றத்துக்குக் காரணம் . எனக்கு கணினி பற்றிய ஞானம் குறைவு. யூட்யூபில் இணைக்க முடிகிறதா என்று யாருடைய உதவியாலோதான் அறியமுடியும். வேர்ட் வெரிஃபிகேஷன் பற்றி இன்னும் சில பதிவர்கள் எழுதி இருக்கின்றனர். நான் வைக்கவில்லை. கூகிளின் சதியோ என்னவோ.என் உடல் நலன் சரியாக இருக்கிறது. பிறருக்குத்தான் (என் மகன்கள் மனைவி) அதுபற்றி அதிகக் கவலை. உங்கள் குறும்படம் பெங்களூருவில் வெளியிடும் தேதி குறித்து முடிவு ஆகிவிட்டதா. ?வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி துளசி & கீதா

  ReplyDelete
 56. என்னை மறந்திவிட்டீர்கள்.

  ReplyDelete
 57. உங்கள் மனைவியும், மகனும் எடுத்த காணொளிகள் அருமை.
  பதிவர் திருவிழாவை நேரில் கண்ட மகிழ்ச்சி.

  உங்கள் தன்னம்பிக்கை பாராட்டபடப்வேண்டிய விஷயம்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete

 58. @ மதுரை சரவணன்
  மதுரை மண்ணின் மைந்தன் சரவணனை மறந்து விட்டேன் என்று சொல்வது அபாண்டம். ஒருவேளை பதிவில்குறிப்பிடாததுபற்றியானால், நான் கண்டு பரிச்சயப்படாதவர்கள் பெயர்களையும். வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் பெயர்களையும் மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன் திரு ரமணி, சீனா சிவகுமாரன் ஆகியோர் பெயர்களும் குறிப்புடப் பெறாமல் விடுபட்டிருப்பதைக் கவனியுங்கள். மதுரை என்றாலேயே எனக்கு சரவணன் நினைவுதான் முதலில் வரும். காணொளிகள் அப்லோட் ஆகாத குறை உண்டு,வருகைக்கு நன்றி சரவணன் .

  ReplyDelete

 59. @ கோமதி அரசு
  என்ன இன்னும் வரவில்லையே என்று எண்ணி இருந்தேன், வந்துவிட்டீர்கள். நிறையவே காணொளிகள் அப்லோட் ஆகாமல் இருக்கிறது. என் உரையை முகநூலில் வெளியிட்டிருக்கிறேன் நன்றி மேடம்.

  ReplyDelete
 60. சார், குறும்படம் வெளியிடுவது பற்றி இன்னும் தேதி முடிவாகவில்லை. எங்கள் லிங்க் அவர்களுக்கு அனுப்பி உள்ளோம். முடிவு தெரிந்தால் தங்களுக்குக் கண்டிப்பாகத் தெரிவிக்கின்றோம் சார்.

  மிக்க நநன்றி! தங்கள் அக்கறைக்கும், ஊக்கத்திற்கும்!

  ReplyDelete
 61. மதுரை வலைப்பதிவர்கள் திருவிழா குறித்த பதிவும், இணைப்புகளும் அருமை. நன்றி.

  - சித்திரவீதிக்காரன்
  http://maduraivaasagan.wordpress.com/2014/11/04

  ReplyDelete

 62. @ சித்திர வீதிக்காரன்
  முதல் வருகைக்கு நன்றி ஐயா. உங்கள் பதிவுக்குச் சென்று படித்தேன். பின்னூட்டம் இட முடியவில்லைபெட்டியே காணவில்லை. பலரை சந்தித்தும் பேசிப்பழக நேரம் இன்மையால் முடியவில்லை.

  ReplyDelete

 63. வணக்கம் ஐயா இந்த பதிவை நான் இன்றுதான் பார்க்கிறேன் நானும் இருக்கிறேன் காணொளியில்...

  ReplyDelete
 64. வணக்கம்!
  மிக்க மகிழ்ச்சி காணொளியை காண தந்தமைக்கு
  சிறப்பான பணி!
  நன்றி அய்யா!
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete