Sunday, November 23, 2014

காந்தி கனவு 10 கேள்விக் கண்ணியில் நான்


                                      கில்லர்ஜியின் கேள்விக்கண்ணியில் நான்
                                     --------------------------------------------------------------
                                           (டாக்டர் ஜம்புலிங்கத்தின் வேண்டு கோளில்)


தமிழ்ப் பதிவுலகில் கில்லர்ஜி ஒருவர். அபுதாபிவாசி. அண்மையில் மதுரை வலைப் பதிவர் விழாவில் சந்தித்தேன். சுவாரசியமானமனிதர். அவருக்கு ஒரு கனவு வந்தாலும்வந்தது  பதிவுலகையே அதைக் கொண்டு கலக்குகிறார். அவர் கனவில் காந்தி வந்தாராம் 10 கேள்விகள் கேட்டாராம். இவர் பதில் சொன்னதைவிட மற்ற பதிவர்கள் என்ன பதில் கூறுவார்கள் என்னும் ஆவலில் கனவுக் கேள்விகளை ஒரு தொடர் பதிவாக்கி பலரையும் எழுதத் தூண்டுகிறார். டாக்டர் ஜம்புலிங்கத்தின் கண்ணியில் என்னைக் கோர்த்து விட்டிருக்கிறார். எனக்கு இந்த ஹைபொதெடிகல் கேள்விபதில்களில் நம்பிக்கை இல்லை. இருந்தும் நண்பர் கேட்கிறார் மறுக்க முடியவில்லை
 இதோ கேள்விகளும் பதில்களும்

நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கின்றாய்?
யார் கேட்டாலும் என் பதில் இதுதான். எனக்கு மறு பிறவியில் நம்பிக்கை இல்லை
ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால் சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கின்றதா?

ஓ...இருக்கிறதே ஏற்ற தாழ்வற்ற  ஒரு சமுதாயம் அமைய பிஞ்சு உள்ளங்களின் நெஞ்சில் அந்த எண்ணம் வராமல் தடுக்க அனைத்துப் பள்ளிகளிலும் இலவச போதனை,இலவசசீருடை இலவச உணவு என்றுஎல்லோருக்கும் பொதுவாக எல்லாப் பள்ளிகளையும் கட்டாயப் படுத்த கல்வித் துறையை அரசே கையகப் படுத்தும். சாதிமத பேதம் ஏழை பணக்கார வித்தியாச எண்ணம் எல்லாம் அறவே ஒழிந்தால் ஒரு ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் நாளாவட்டத்தில் உருவாகும்.

இதற்கு வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் என்ன செய்வாய்?

எதிர்ப்பு வெளி நாட்டில் இருந்து வராது. இதனால் பாதிக்கப் படப் போகும் கல்வி வியாபாரிகள் எதிர்க்கலாம். துணிவாக இறங்கினால் நாளாவட்டத்தில் பிசு பிசுத்துப் போகும்
முதியவர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கிறாயா?
அவரவர் பாடு என்று விட்டு விடுவேன். வளரும்போதே முதுமையை எதிர்கொள்ள அவர்களே கற்க வேண்டும்குடும்பத்தை ஒழுங்காக நிர்வகித்தால் அவர்களது குடும்பமே அவர்களைக்கவனித்துக் கொள்ளும்

மதிப்பெண்கள் தவறென மேல் நீதிமன்றங்களுக்குப் போனால்?
ஏன் போகவேண்டும்.?என் கல்வி முறையில் அதற்கு வாய்ப்பிருக்காது.
விஞ்ஞானிகளுக்கென்று....ஏதும் இருக்கின்றதா?
இதென்ன கேள்வி. ஒவ்வொருவருக்கும் திட்டம் போட முடியுமா.?ஆர்வமுள்ளவர்கள் எங்கும் செய்து முடிப்பார்கள்
இதை உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?
நிச்சயம் செய்வார்கள். பலன்களை அனுபவித்த மக்கள் செய்யாவிட்டால் தூக்கி எறிவார்கள்.
மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?
இதெல்லாமே புதுமைதானே.எனக்கு என் நாடுதான் முக்கியம்.அவர்கள் வேண்டுமானால் என் நாட்டைப் பின் பற்றலாம்
எல்லாமே நீ சரியாக சொல்வது போல் இருக்கு, ஆனால் நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்துவிட்டாய் உனக்கு மீண்டும் மானிடப்பிறவி கொடுக்க முடியாது ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென்று இறைவன் கேட்டால்?
இதற்கு நான் பதில் சொல்ல பிரியப் படவில்லை. இறைவன் மறு பிறவி என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.அடுத்தவனை அடிமைப் படுத்த சிலர் ஏற்படுத்திய பூச்சாண்டி கதைகளேஇவைகள்.

என்னோடு  இத்தொடர் நிற்கட்டும். யாரையும் துன்பத்தில் ஆழ்த்த என் மனமிடங்கொடுக்கவில்லை. For every beginning there must be en end….!
  
 
 
 37 comments:

 1. சுருக்கமான பதில்களாக இருந்தாலும் நறுக்குத் தெரித்தாற்போல் இருந்தன.
  அடுத்து யாரேனும் இது போல் ஆரம்பிக்காமல் இருக்க வேண்டும்

  ReplyDelete

 2. ஆஹா அருமையான பதில்கள் ஐயா ஒன்பதாவது பதில் ஸூப்பர்

  மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?
  இதெல்லாமே புதுமைதானே.எனக்கு என் நாடுதான் முக்கியம்.அவர்கள் வேண்டுமானால் என் நாட்டைப் பின் பற்றலாம்

  இப்படியெல்லாம் சொல்வதற்க்கு நெஞ்சுரம் வேண்டும் அற்புதம் ஐயா என்னைப்பற்றி எழுதியமைக்கும் நன்றி.

  ReplyDelete
 3. #இறைவன் மறு பிறவி என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.அடுத்தவனை அடிமைப் படுத்த சிலர் ஏற்படுத்திய பூச்சாண்டி கதைகளேஇவைகள்#
  உங்களின் இந்த கருத்தை நானும் முழுமையாக நம்புகிறேன் அய்யா !
  உங்களின் நல்ல கருத்துகள் அனைவருக்கும் போய் சேர ,பதிவை தமிழ்மணத்தில் இணைத்து வாக்களித்து விட்டேன் !

  ReplyDelete

 4. பதில்களை இரசித்தேன்! என்னையும் இந்த தொடர் பதிவெழுத நண்பர் திரு KILLERGEE அவர்கள் பணித்திருக்கிறார். விரைவில் எழுதுவேன்.

  ReplyDelete
 5. எல்லா பதில்களையும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 6. நல்ல பதில்கள். வலைச்சரப் பணி காரணமாக இரண்டு வாரங்களாக யாருடைய பதிவுகளும் படிக்க இயலாத சூழல். நேரம் எடுத்து உங்கள் மற்ற பதிவுகளையும் படிக்க வேண்டும்.....


  ReplyDelete
 7. ஆணித் தரமான பதில்கள் தந்து இருக்கிறீர்கள். நல்லவேளை இன்னும் பத்துபேரை நீங்கள் சொல்லவில்லை. தொடர்பதிவு என்றாலே எல்லோரும் அலறி அடித்து ஓடி விடுகிறார்கள்.

  ReplyDelete
 8. உங்கள் கருத்துரைப் பெட்டியில் இருக்கும் WORD VERIFICATION – ஐ எடுத்து விடவும். இந்த VERIFICATION கருத்துரையாளர்கள் எண்ணிக்கையை குறையச் செய்யும்.

  ReplyDelete
 9. படித்து முடித்த பின் இப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டுக்கு இல்லாமல் போனார்களேயென்று மனசு ஏங்கியதென்னவோ உண்மை.

  ReplyDelete
 10. கேள்விபதில்களில் தங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் வேண்டுகோளை ஏற்று மறுமொழி தந்தமைக்கு நன்றி. உங்களுடைய கருத்துக்களை ஆவலோடு நாங்கள் எதிர்பார்த்ததன் விளைவே இந்த இணைப்பு. ஆழமான மறுமொழிகள்.

  ReplyDelete
 11. பட்... பட்... பட்டாசு பதில்கள்... ரசித்தேன் ஐயா...

  ReplyDelete

 12. @ டி.என்.முரளிதரன்
  பலரது பதிவுகளைப் படிக்கும் போது தொடர் பதிவுகளின் பீதி தெரிந்தது. வருகைக்கும் கருத்த்துப் பதிவுக்கும் நன்றி.

  ReplyDelete
 13. தனித்துவமானவை - தங்களுடைய மாறுபட்ட விடைகள்.. அருமை..

  ReplyDelete

 14. @ கில்லர்ஜி.
  நீங்கள் ஆரம்பித்த தொடர் கண்ணியினை என் மூலம் தொடரா வண்ணம் நிறுத்தியது கோபமில்லையே. எப்போதும் எனக்குச் சரியெனப் பட்டதையே எழுதுவேன். வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 15. @ பகவாஜி
  பொதுவக என் பதிவுகளைப் பதிவிட்ட அடுத்தநாளில்தான் தமிழ் மணத்தில் இணைப்பது வழக்கம். இன்றே நீங்கள் இணைத்தௌ நன்றே. வருகைக்கு நன்றி ஜி.

  ReplyDelete

 16. @ வே. நடன சபாபதி
  எழுதுங்கள். ஆவலோடு எதிர்பார்க்கிறேன். வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 17. @ கீதா சாம்பசிவம்.
  வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி மேடம்

  ReplyDelete

 18. @ வெங்கட் நாகராஜ்
  கீதை பற்றிய என் எண்ணப் பகிர்வுகளைப் படித்துக் கருத்திடுங்கள் நன்றி.

  ReplyDelete

 19. @ தி தமிழ் இளங்கோ
  நான்காண்டுகளுக்கும் மேலாகப் பதிவுலகில் இருக்கிறேன் பதிவர்களைப் பற்றி ஓரளவு தெரிந்ததால் கண்ணியைத் தொடரவிடவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete

 20. @ தி.தமிழ் இளங்கோ
  /உங்கள் கருத்துரைப் பெட்டியில் இருக்கும் WORD VERIFICATION – ஐ எடுத்து விடவும். இந்த VERIFICATION கருத்துரையாளர்கள் எண்ணிக்கையை குறையச் செய்யும்/ நானாக என் தளத்தில் வைக்க வில்லை. ஒரு சிலர் வெரிஃபிகேஷன் கேட்பதாகச் சொல்வது புரியவில்லை. எப்பொழுதும் கேட்கிறதா.?

  ReplyDelete

 21. @ உமேஷ் ஸ்ரீனிவாசன்
  பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete

 22. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  ஹைபோதெடிகல் கேள்வி பதில்களில் தான் நம்பிக்கை இல்லை என்றேன் ஐயா போன்றவர் என் மீது வைத்த நம்பிக்கையைப் பொய்க்க செய்ய முடியுமா.? வருகைக்கு நன்றி சார்,

  ReplyDelete

 23. @ திண்டுக்கல் தனபாலன்
  பட்டாசு பதில்களை ரசித்ததற்கு நன்றி டிடி. .

  ReplyDelete

 24. @ துரை செல்வராஜு.
  /தனித்துவமானவை - தங்களுடைய மாறுபட்ட விடைகள்.. அருமை/ ரசித்ததற்கு நன்றி ஐயா. குவைத் சேர்ந்து விட்டது அறிந்தேன். நலம் வேண்டி.

  ReplyDelete

 25. இல்லை ஐயா இதில் கோபப்பட ஒன்றுமில்லை அதன் அலை ஓய்ந்து வருகிறது உண்மையே....

  ReplyDelete
 26. #பொதுவக என் பதிவுகளைப் பதிவிட்ட அடுத்தநாளில்தான் தமிழ் மணத்தில் இணைப்பது வழக்கம்.#
  நான் அதிகப் பிரசங்கித்தனமாய் செய்திருந்தால் மன்னியுங்கள் அய்யா !
  வாக்குப் பெட்டி இல்லாததை பிறகுதான் கவனித்தேன் !

  ReplyDelete
 27. ரசிக்கவைத்தன பதில்கள்...

  ReplyDelete
 28. அருமையான பதில்கள் ஐயா
  அதிலும்
  //வளரும்போதே முதுமையை எதிர்கொள்ள அவர்களே கற்க வேண்டும்//

  ReplyDelete
 29. மிகவும் தனித்துவமான ஜிஎம்பி சாரின் அக்மார்க் பதில்கள்.

  முதியோர் பற்றிய பதில் மிகவும் அருமை. அது போன்று மற்ற் நாடுகளில் இல்லாத புதுமை....ஆஹா என்ன அற்புதமான பதில். சத்தியமாக நீங்கள் ஆண்டிருந்தால் இந்தியா உருப்பட்டிருக்கும் சார்!

  ReplyDelete

 30. @ கில்லர்ஜி
  புரிதலுக்கு நன்றி.

  ReplyDelete

 31. @ பகவான்ஜி
  இந்த வாக்குப்பெட்டி விஷயத்தை அதிகம் நினைத்ததில்லை மன்னிப்பு எல்லாம் பெரிய வார்த்தை ஜி. don't worry. மீண்டும் வந்ததற்கு நன்றி.

  ReplyDelete

 32. @ இராஜராஜேஸ்வரி.
  வருகைதந்து பார்வை இட்டதற்கு நன்றி மேடம்.

  ReplyDelete

 33. @ கரந்தை ஜெயக்குமார்
  வருகைதந்து கருத்திட்டதற்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 34. @ துளசிதரன் தில்லையகத்து.
  பதில்களை ரசித்ததற்கு நன்றி சார்.

  ReplyDelete
 35. நறுக்குத் தெறித்தாற்போன்ற பதில்கள். நீ இந்தியாவின் ஆட்சியாளனா வந்துவிட்டால்? என்ற கேள்விக்கான தங்கள் பதிலொன்றே போதும். பின்தொடரும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தேவைப்படாமல் போய்விடுகிறது. பாராட்டுகள் ஐயா.

  ReplyDelete

 36. @ கீத மஞ்சரி
  . அந்த ஒரு கேள்விக்குத்தான் உள்ளத்திலிருந்து பதில் எழுதினேன் பாராட்டுக்கு நன்றி மேடம்

  ReplyDelete