Wednesday, November 12, 2014

கடவுளுடன் ஒரு நேர்காணல்


            கடவுளுடன் ஒரு நேர் காணல் ( ஒரு புலம்பல் பதிவு.)
          ---------------------------------------------
 எனக்கு அண்மையில் ஒரு காணொளி அனுப்பப் பட்டிருந்தது. வித்தியாசமான எதையும் பகிரும் எனக்கு  இதைக் கண்டவுடன் நான் முன்பு பதிவிட்டிருந்த ;கடவுளுடன் ஒரு உரையாடல்’ என்னும் பதிவு நினைவுக்கு வந்தது. அதை வெளியிட்ட மாதமும்  வருடமும் நினைவுக்கு வரவில்லை. ஏறத்தாழ ஐநூறு பதிவுகளுக்கிடையில் அதைத் தேடுவது சிரமமாக இருக்கவே கூகிளை நாடினேன். தேடு பகுதியில் தமிழில் “கடவுளுடன் ஒரு உரையாடல்” என்று தட்டச்சு செய்தேன் உடனே என் பதிவு வந்தது ஆச்சரியமில்லை. ஆனால் அதே தலைப்பில் இன்னொருபதிவர் எழுதி இருந்ததும் கண்டேன். அதைப் படித்துப் பார்க்கும்போது  என்னுடைய பதிவே வெகு சில மாற்றங்களுடன் எழுதப் பட்டிருந்தது . நான் எழுதியது நவம்பர் மாதம் 2011 ம் ஆண்டு.இந்தப் பதிவு ஃபெப்ருவரி 2012-ம் ஆண்டு.
நாம் பல விஷயங்களைப் படித்து தெரிந்து கொள்கிறோம். பல செய்திகள் நம் எழுத்துக்கு வித்தாகின்றன. கருத்துக்கள் ஒரு போல் இருப்பதை அதிகம் லட்சியம் செய்ய முடியாது. ஆனால் வார்த்தைகள் மிகச் சில மாற்றங்களுடன் என் பதிவையே அச்சு அசலாக ஒத்திருந்தது வேதனை அளித்தது. நான் என் எழுத்துக்கு காப்புரிமை பெற்றதில்லை. ஆனால் அதற்காக இப்படியா. ?
 இந்தப் பதிவு ஒரு காணொளி.நான் அன்று எழுதியது ஒரு வார்த்தை விளையாட்டு. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க லிங்க் கொடுக்கிறேன் ”இங்கே” கூகிளில் தமிழில் “கடவுளோடு ஒரு உரையாடல் என்று தட்டச்சு செய்தால் இரண்டு பதிவையும் பார்த்து வாசகர்களே ஒரு முடிவுக்கு வரலாம். மீண்டும் கூறுகிறேன். நம் எழுத்துக்களுக்கு வித்து நாம் எங்கோ படித்த அல்லது அனுபவித்த விஷயங்களில் இருக்கலாம். கண்ணதாசன் கவிதைகள் பலதும் இதற்கு எடுத்துக் காட்டாக இருக்கும்.
என்ன சொல்ல .? மனம் வேதனை அடைகிறது என்பது தவிர. .இப்போது காணொளியைக் காணுங்கள். கருத்திடுங்கள்.கடவுளின் வியாபிப்பைக் காட்டும் படங்கள் என் முந்தைய பதிவையும் படித்துப்பாருங்கள்(லிங்க் கொடுத்திருக்கிறேன்.)

   .  

45 comments:


 1. இந்தவேதனை தவிர்க்க முடியாத நிலையாகி விட்டது ஐயா எங்கும் திருடர், எதிலும் திருடர்.

  ReplyDelete
 2. வசீகரமான வார்த்தைகளில் காணொளி கவர்கிறது. உங்கள் பதிவை இப்போதுதான் படித்தேன்.

  திருடர்கள் தானாய்த் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுதான்!

  ReplyDelete
 3. பகவத் கீதையின் சாராம்சம் என்று ஒரு கருத்து மக்களிடையே பல வகையான போஸ்டர்களின் மூலமாகப் பரவியிருக்கிறது.

  அதில் "நாம் வரும்போது என்ன கொண்டு வந்தோம், போகும்போது என்ன கொண்டு போகப்போகிறோம்" என்ற கருத்து காணப்படுகிறது.

  அதை எண்ணி ஆறுதல் கொள்ளவேண்டுகிறேன்.

  ReplyDelete
 4. திருட்டு திருட்டு
  இப்பொழுது எழுத்தும் திருடப்படுவது வேதனை அளிக்கிறது ஐயா

  ReplyDelete
 5. படிக்கும் போது வருத்தமாக இருந்தது. என்ன செய்வது எங்குபார்த்தாலும் இவ்விதமான தவறுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு நகலெடுப்பவர்கள் எப்போதுதான் திருந்தப் போகின்றார்களோ?

  ReplyDelete
 6. இந்தப் பதிவை பார்க்கவும்.

  http://swamysmusings.blogspot.com/2014/11/blog-post_12.html

  ReplyDelete
 7. முனைவர் பழனி. கந்தசாமி அவர்களும் இந்த பதிவுத் திருட்டு பற்றி பதிவிட்டிருக்கிறார்கள். ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது.’ என்பார் பட்டுக்கோட்டையார். என் செய்ய! அவர்களுக்கு சிந்திக்க அல்லது எழுத இயலவில்லை என்றே தெரிகிறது.

  ReplyDelete
 8. இதுவும் கட(ல)ந்து போகட்டும்...

  ReplyDelete
 9. Cant seem play the video. Will try again later.

  Blog worldla ithu pol nadakkaama irunthaa thaan pulambanum ;-)

  ReplyDelete
 10. எல்லோருமே புலம்பியாகி விட்டது. ஆனாலும் அந்த திருடர்கள் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களை எல்லோரும் அறிய அடையாளம் காட்டலாம். ”திருடராய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” அவர்கள் எப்போது திருந்துவார்கள் என்பதுதான் கேள்வியே.

  ReplyDelete
 11. ஸ்ரீராம் சொல்வது போல் மிக அருமையான காணொளிதான்.

  போகட்டும் விடுங்கள் என்ன செய்வது?

  உங்கள் கருத்தை பலரும் பார்க்க கொண்டு சென்று இருக்கிறார்.

  ReplyDelete

 12. @ கில்லர்ஜி
  வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றிஜி.

  ReplyDelete

 13. @ ஸ்ரீராம்
  வசீகரமான வார்த்தைகள் கொண்ட அந்தக் காணொளி கண்டதேஎன்னை என் பதிவைத் தேடச் செய்தது.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீ.

  ReplyDelete

 14. @ டாக்டர் கந்தசாமி.
  கீதையில் இல்லாத வார்த்தைகளை இருப்பதுபோல் எழுதிச் செல்வது குறித்து என் கீதைப் பதிவுகள் முடிந்தபின் எழுதுவேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete

 15. @ கரந்தை ஜெயக்குமார்
  என் வார்த்தைகளை அப்படியே எழுதீருந்ததுதான் வேதனை அளித்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

  ReplyDelete

 16. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  என் வருத்தத்தில் பங்கு கொண்டதற்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 17. @ டாக்ட கந்தசாமி.
  உங்கள் பதிவைப் பார்த்துக் கருத்தும் எழுதி விளக்கி இருக்கிறேன் பதிவுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 18. @ வே. நடனசபாபதி
  டாக்டர் கந்தசாமியின் பதிவில் என் விளக்கங்களைப் பதிவிட்டிருக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 19. @ திண்டுக்கல் தனபாலன்
  அப்படித்தான் தேற்றிக் கொள்கிறேன் நன்றி டிடி.

  ReplyDelete

 20. @ A Durai
  நானே உங்கள் பதிவுகளில் இருந்து சில பகுதிகளை எடுத்துக் கையாண்டு பதிவிட்டிருக்கிறேன். ஆனால் எங்கிருந்து என்று சொல்லி விடுவேன் காணொளி பாருங்கள் ரசிப்பீர்கள். வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete

 21. @ தி.தமிழ் இளங்கோ
  திருட்டு என்பதெல்லாம் பெரிய வார்த்தைகள் சார் கருத்துக்கு நன்றி.

  ReplyDelete

 22. @ கோமதி அரசு
  என் கருத்தையும் எழுத்தையும் பலரும் காணச் செய்திருக்கிறார்கள் என்று சமாதானம் செய்து கொள்கிறேன் வருகைக்கு நன்றி மேடம்

  ReplyDelete
 23. இப்படியுமா..?

  "Blogger G.M Balasubramaniam said...

  @ தி.தமிழ் இளங்கோ
  திருட்டு என்பதெல்லாம் பெரிய வார்த்தைகள் சார் கருத்துக்கு நன்றி.

  November 13, 2014 at 12:34 PM"

  உங்கள் பெருந்தன்மையை ரசித்தேன்.

  ReplyDelete
 24. வருத்தமாக இருக்கிறது. எனக்கும் இது போல் நடந்து வருகிறது. :( ஆனால்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :(

  ReplyDelete
 25. இந்த பதிவு திருடர்களின் தொல்லை தாங்க முடியலை! அவர்களே திருந்தினால்தான் உண்டு!

  ReplyDelete

 26. @ வெட்டிப் பேச்சு
  பின்னூட்டமிட்டவர்களில் பெரும்பாலோர் அதைத் திருட்டு என்று எழுதியது உண்மையிலேயே சங்கடமாக இருந்தது. ஏதோ ஒரு ஆற்றாமையால் புலம்பிவிட்டேன்.பின் வருந்தினேன் என்பதும் நிஜம். வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete

 27. @ கீதா சாம்பசிவம்
  /வருத்தமாக இருக்கிறது. எனக்கும் இது போல் நடந்து வருகிறது.ஆனால்......../வருத்தப் பட்டிருப்பீர்களே.

  ReplyDelete

 28. @ தளிர் சுரேஷ்
  ஒரே சிந்தனை என்றால் அவர்கள் வார்த்தைகளில் எழுதி இருக்கலாம் என்றே தோன்றியது. வருகைக்கு நன்றி சுரேஷ் அவர்களே.

  ReplyDelete
 29. அன்புள்ள திரு ஜிஎம்பி அவர்களுக்கு,
  வணக்கம்.

  இன்று காலையிலிருந்தே 'கடவுளுடன் ஒரு உரையாடல்' பதிவினை நிறைய பேர் படித்திருப்பதாக என் வலைப்பதிவின் புள்ளிவிவரம் கூறிக் கொண்டிருந்தது. திடீரென இரண்டு வருடத்திற்கு முன் எழுதிய இந்தப் பதிவு எப்படி முன்னணிக்கு வந்தது என்று வியப்பாக இருந்தது.

  இப்போதுதான் இந்த பதிவைப் பார்த்தேன். நான் உங்கள் பதிவைத் திருடிவிட்டேன் என்று நீங்களும் இன்னும் பலரும் சொல்லியிருப்பது மிகவும் வருத்தத்தைக் கொடுக்கிறது.

  உண்மையில் இந்த பதிவு எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலின் தமிழாக்கம். நான் இதை எழுதி ஒரு மின்னிதழிலும் வெளியாகியிருக்கிறது. இதையும் நான் அந்தப் பதிவின் முடிவிலேயே எழுதியிருக்கிறேன். நிஜத்தில் நீங்கள் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். என்னுடையது மிகவும் சாதாரணமான தமிழாக்கம். அந்த மின்னஞ்சலை வெகு விரைவில் தேடி உங்களுக்கு அனுப்புகிறேன்.

  எனக்கு இந்த விஷயத்தில் என்ன மிகவும் வருத்தம் என்றால் என்னை உங்களுக்கு நன்றாகத் தெரியும். நான் காப்பி அடித்திருப்பதாக உங்களுக்குத் தெரிந்தவுடன் எனக்கு எழுதியிருக்கலாமே. என் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பதிவுகளின் இணைப்புகளை தவறாமல் அனுப்பி வருகிறீர்களே.

  திரு கந்தசாமி ஐயா அவர்களுக்கும் என்னைத் தெரியும். அவராவது எனக்கு எழுதிக் கேட்டிருக்கலாம். நீங்கள் இருவரும் ஏன் இப்படிச் செய்யவில்லை என்று புரியவில்லை.


  உங்களது மொழியாக்கம் என்னுடையதை விட பலமடங்கு சிறப்பாக இருக்கிறது. உங்கள் தமிழ் புலமையை நான் எட்டவே முடியாது.

  நிச்சயமாக நான் உங்கள் பதிவைத் திருடவில்லை. நான் என் சிற்றறிவுக்கு எட்டிய அளவில் சாதாரணமாக எழுதியிருக்கிறேன்.

  இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் எழுதியவர்கள் எல்லோருக்குமே என்னைத் தெரியுமே. ஏன் ஒருவர் கூட நான் என் பாணியில் எழுதியிருக்கிறேன்; நீங்கள் உங்கள் பாணியில் எழுதியிருக்கிறேன் என்று சொல்லவில்லை?

  எல்லோருமே என்னை திருடி என்று நினைத்துவிட்டார்களே. திருட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று யாருமே எழுதவில்லையே.

  திரு வை. கோ சொல்லியிருக்கவில்லை என்றால் எனக்கு நீங்கள் திருடிப் பட்டம் கொடுத்ததே தெரியாமல் போயிருக்கும்.

  நன்றியுடன்,
  ரஞ்சனி

  ReplyDelete
 30. பாதிப்பில் எழுதியதைப் பாராட்ட முடியும்
  இப்படி எடுத்துப்போட்டு பெருமை கொள்வதை
  என்னவென்று சொல்வது ?
  இப்படியும் சில அற்பர்கள்
  என விட்டுப்போகவேண்டியதுதான்

  ReplyDelete
 31. ரஞ்சனி, முதலில் என்னை மன்னியுங்கள். கஷ்டம் தான். ஆனாலும் பதிவைப் படிக்கவும் முதலில் நான் அதிர்ச்சி அடைந்தது என்னமோ உண்மை. ரஞ்சனி இப்படி எழுத மாட்டார் என்னும் எண்ணம் தோன்றியதும் உண்மை. ஶ்ரீராமுக்குக் கூடக் கேட்டு எழுதி இருந்தேன். உங்களுக்கே எழுதி இருக்க வேண்டும். ஆனால் அது சரியா என்பது தெரியவில்லை. நான் சந்தேகப்பட்டுக் கொண்டு கேட்பது போல் ஆகிவிடும் என்பதால் கேட்கவில்லை. ஆனாலும் மனம் உறுத்திக் கொண்டே இருந்தது. உங்கள் மனவேதனை மிகுந்த கடிதம் கண்ணீரை வரவழைத்துவிட்டது. மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோருகிறேன்.

  ReplyDelete
 32. சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் பதிவு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று முன்பே தெரிந்து இருந்தால் கருத்துரை தந்த எல்லோரும் கொஞ்சம் அடக்கியே வாசித்து இருப்பார்கள். நீங்களோ அல்லது அய்யா ப்ழனி. கந்தசாமி அவர்களோ வெளிப்படையாக அந்த பதிவர் இன்னார் என்று தெரிவித்து இருந்திருந்தால் எல்லோரும், வருத்தப்படும்படி ஆகி இருக்காது. நானும் பொதுவாகவே காப்பி பேஸ்ட் பதிவர்களை நினைத்தே கொஞ்சம் காட்டமாக எழுதி விட்டேன்

  ReplyDelete
 33. புரிதலுக்கு நன்றி தமிழ் இளங்கோ ஐயா. நான் கருத்துரை எழுதிய பின்னரே சுட்டிக்குச் சென்றேன். :(

  ReplyDelete
 34. ரஞ்சனி மேடத்துக்கு இங்கேயே பதில் சொல்லி விடுகிறேன்.

  ஜி எம் பி ஸார் பதிவில் லிங்க் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. கூகிளில் டைப் பண்ணிப் பார்க்கச் சொல்லி இருந்தார். நான் பார்க்கவில்லை. மதியம் கீதா மேடம் மெயில் அலைபேசியில் பார்த்தேன். ஒரு விசேஷத்துக்குச் சென்று விட்டு இப்போதுதான் திரும்பினேன். உங்கள் கடிதம் கண்டு வருந்தினேன்.

  மன்னிக்கவும். என் கமெண்ட் சம்பந்தப் பட்டிருப்பது யாரென்று தெரியாமலேயே எழுதியது. தெரிந்திருந்தால் நான் உங்களை அலைபேசியில் நிச்சயம் அழைத்திருப்பேன்.

  ReplyDelete

 35. @ ரஞ்ச்னி நாராயணன்
  உங்கள் மனம் புண்பட வேண்டுமென்று நினைத்து எழுதவில்லை. என்னுடைய இந்தப் பதிவை நன்றாக கவனித்துப் படித்துப் பாருங்கள். ஒரு இடத்திலாவது என் எழுத்து திருடப்பட்டிருக்கிறது என்று நான் எழுதவில்லை.எழுதுவதற்கு வித்து பல இடங்களில் இருந்தும் கிடைக்கலாம்.இந்தப் பதிவில் நான் வெளியிட்டிருக்கும் காணொளியும் எழுதத் தூண்டலாம். என் ஆதங்கங்கள் எல்லாமேஉங்கள்பதிவு ஏறத்தாழ என் பதிவின் வார்த்தைகளையே கொண்டிருந்ததுதான் அப்படித்தான் புலம்பி இருக்கிறேன்.சிலரது பின்னூட்டங்களில் திருட்டு என்று சொல்வதே தவறு என்று குறிப்பிட்டிருக்கிறேன் , நீங்கள் பார்க்கவில்லையா.?யாரையும் புண்படுத்தும் நோக்கத்தைவிட என் ஆதங்கத்தின் வெளிப்பாடே என் பதிவு. பின்னூட்டமிட்டு தெளிவு படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete

 36. @ ரமணி
  இந்தப் பதிவை நான் எழுதி இருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது.

  ReplyDelete

 37. @ கீதா சாம்பசிவம்
  திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களின் பின்னூட்டம் தெளிவு செய்கிறது. all is well that ends well. மீள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 38. @ தி தமிழ் இளங்கோ
  நான் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் கூகிள் லிங்க் கொடுத்திருந்தேன். என் பதிவிலும் நான் காப்பி பேஸ்ட் செய்தது என்று கூறவில்லை. மீள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 39. @ ஸ்ரீராம்
  நான் சொல்ல வந்ததை என் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். கூகிள் லிங்கும் கொடுத்திருந்தேன். திரு கந்தசாமி இரு பதிவுகளையும் கொடுத்திருந்தார். எனக்கு யார் மனதையும் நோகச் செய்யும் எண்ணம் இல்லை. என் ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்தப் புலம்பல்.

  ReplyDelete
 40. ஜி எம் பி சார்!

  வயதிலும் அனுபவத்திலும் சிறியவன் நான்..இருந்தாலும் மனதில் பட்டதைச் சொல்லுகிறேன்..

  ம்ம்ம்..இந்த பதிவை எழுதாமல் இருந்து இருக்கலாம்..ரஞ்சனி அவர்களை ஒரு மூன்றாமவர் தவறு செய்து இருப்பதை-உணராமல் செய்த ஒரு "தவறை" - விமர்சிப்ப்பதுபோல் விமர்சித்துள்ளீர்கள். உங்களுக்கு கொஞ்சம் பரிச்சயமான ரஞ்சனி அவர்களிடம் நீங்க பேசியிருக்கலாம்னு தான் எனக்குத் தோணுது..

  இல்லைனா இருவரையும் நன்கு அறிந்த ஒரு நண்பரிடம் சொல்லி அவரிடம் இது சம்மந்தமாகப் பேசச் சொல்லியிருக்கலாம்.

  கண்ணால் காண்பதும் பொய்
  காதால் கேட்பதும் பொய்
  தீர விசாரித்து தெரிந்து, அறிந்து கொள்ளும் உண்மைகளும் பொய்யாக இருக்கலாம்.

  ரஞ்சனி இதுபோல் ஒரு தவறை கனவிலும் செய்திருக்கமாட்டார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்..It is just impossible if you ask me!

  We need to forget this and move on! Honestly I believe it is a serious misunderstanding. I have not lost respect for both of you! Take it easy. :)

  ReplyDelete
 41. நீங்க நம்பினால் நம்புங்க.. நான் தமிழ்மணத்தில் இந்த தலைப்பைப்பார்த்ததும், முன்னாலேயே பார்த்தது போலிருக்கிறதே என்று மனதில் தோன்றியது.. ஆனால் உங்க பதிவுதான் ஞாபகத்துக்கு வந்த்துனு எனக்குத் தெரியாது..சரி தலைப்பு ஒரே மாதிரி இருக்கு கருத்து வேறவாக இருக்கும்னு நான் வாசிக்காமல் விட்டுவிட்டேன். கடவுளுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் என்பதால். இப்போப் பார்த்தால் ஒரே பதிவு வேறு வேறு பதிவர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்பது தெளிவு படுகிறது. ரஞ்சனி அவர்கள் சொல்வதுபோல்..


  ***உண்மையில் இந்த பதிவு எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலின் தமிழாக்கம். நான் இதை எழுதி ஒரு மின்னிதழிலும் வெளியாகியிருக்கிறது. இதையும் நான் அந்தப் பதிவின் முடிவிலேயே எழுதியிருக்கிறேன். நிஜத்தில் நீங்கள் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். என்னுடையது மிகவும் சாதாரணமான தமிழாக்கம். அந்த மின்னஞ்சலை வெகு விரைவில் தேடி உங்களுக்கு அனுப்புகிறேன். ***

  நடந்து இருக்க சாத்தியம்.
  உங்களுடைய இப்பதிவை அவர் அறியாமலே இருந்து இருக்கிறார் எனபதுதான் உண்மையாக இருக்க முடியும்.

  உங்க பதிவு ஒண்ணு இப்படி வந்து இருக்கிறது தெரிந்து இருந்தால் அவரால் எப்படி இப்படி ஒரு பதிவை (உங்கள் தொடுப்பைக் கொடுக்காமல்) பிரசுரிக்க முடியும்?? Having known you very well she can not just do it.

  பாடம் என்னனா..

  In internet world, if we want to maintain our "reputation" we need to be very careful especially when we "translate" someone else work.

  It is a BIG LESSON we learned today! Let us be careful. Otherwise, it is hard to convince the world.

  Let us not make such fatal errors anymore!

  ReplyDelete

 42. @ வருண்

  /ம்ம்ம்..இந்த பதிவை எழுதாமல் இருந்து இருக்கலாம்./ இதைத்தான் ஒரு மறு மொழியில் குறிப்பிட்டு இருந்தேனே. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்

  ReplyDelete
 43. ஜி எம் பி சார்! நீங்கள் மிகவும் மென்மையாகத்தான் உங்க ஆதங்கத்தை சொல்லியும் சொல்லாமல் எழுதி இருக்கீங்க. அதில் சந்தேகமே இல்லை. கருத்துச் சொன்ன பலருக்கும் ஒரிஜினல் தொடுப்பு தெரியாததால், பலரும் ஒரு தெரியாத மூன்றாமவரை நினைத்து கொஞ்சம் கடுமையாகவே கருத்தளித்து விட்டார்கள். ஆனால் பின்னால்தான் அவர்களுக்கு அது நம்மில் ஒருவரே, நன் மதிப்பு பெற்ற ஒரு நல்லவருடைய "சிறு பிழை" அதுவும் அவர் அறியாமல் செய்த பிழை என்று தெரிய வந்தது!

  இப்போது எல்லோருக்கும் தவறு செய்துவிட்ட ஒரு உணர்வுடன், கவனக்குறைவாக இருந்துவிட்டோமே, என்கிற குற்ற உணர்வு வந்து கொல்லுகிறது.

  ஒரு சில நேரங்களில். நம் வாழ்வில், நாம் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் இது போல் "ஒரு சூழல்" நம்மால் கண்ட்ரோல் செய்ய முடியாமல் உருவாகி விடுகிறது.

  காலம் செய்த கோலம்! அல்லது எல்லாம் தெரிந்த கடவுள் செய்த குற்றம் னு போக வேண்டியதுதான். தேவையானால் கஞ்சவும், கொஞ்சவும், திட்டவும்தானே நமக்கு கடவுள் தேவைப்படுகிறார்?

  Let us move on!

  Not sure I am making the "situation" easy or better now. At least I am trying that because we all have respect for each other. We should not lose such a respect because of a small misunderstanding like this.

  Take care, Sir!

  ReplyDelete
 44. இந்த பதிவுக்காக இணையத்தில் தேடிய போது திரு.கந்தசாமி ஐயாவிற்கு யார் விருது கொடுத்தவர் வலைத்தளத்தில் கண்டேன் , நமக்கு வேண்டியவர் எனில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரியப்படுத்தி இருந்தால் பலருக்கம் மன உளைச்சல் மிச்சமாகியிருக்கும்.

  ReplyDelete