ஒரு காதல் மொட்டிலேயே கருகுகிறதா
----------------------------------------------------------------
யாருடி
அவன்
தலைப்பை
என்னவோ தேர்ந்தெடுத்தாயிற்று இந்தக் கேள்வியை யார்யாரிடம் கேட்பதாகக் கதை பண்ண வேண்டும்கணவன்
மனைவியிடம் கேட்கலாம் தந்தையோ தாயோ மகளிடம்கேட்பதாக இருக்கலாம் அண்ணன் தங்கையிடம்
கேட்பதாக இருக்கலாம் ஒரு தோழி தன் தோழியிடம் கேட்கலாம் எப்படி இருந்தால்
நன்றாக இருக்கும் கதை பண்ணக் களம்வேண்டும் எதைத் தேர்ந்தெடுப்பது சொல்லும்
கதையில் ஒரு உண்மைத்தனம்இருக்க வேண்டுமென்பதில் நான் உறுதியாயிருக்கிறேன்
”யாருடி
அவன்”
”எனக்குத்
தெரியாது”
”தெரியாதவனிடமா
பேசிக் கொண்டிருந்தாய்
”
”நான்
பேச வில்லை அவர்தான் வந்துபேசினார்”
”அவர்
என்னடி அவர்…. மரியாதை வேண்டிக் கிடக்கிறது
என்னதான் பேசினான் அவன்”
”எனக்கு
வெட்கமாய் இருக்கு சொல்ல”
”போட்டேன்னா
ஒரு போடு வெட்கமாம் வெட்கம்
அப்படி
அவன்தான் என்னடி பேசினான்”
”என்னைக்
கல்யாணம் செய்ய விருப்பமான்னு கேட்டார்”
”உனக்கு
என்ன வயசாசுன்னு தெரியுமா”
”பதினைந்து
”
”இந்த
வயசில் கல்யாணமா?”
”அவர்தான் கேட்டார்
மறுபடியும்
மறுபடியும் அவர்தான்னு சொல்லறே”--- சொல்லிக்
கொண்டே பளார் என்று ஒருஅறை விழுந்தது
”என்னடா
அந்தப் பெண்ணைப் போட்டு அடிக்கற” என்று கேட்டுக்
கொண்டே வந்தாள் அவர்களதுதாயார் ”
நீ இப்படிச் செல்லம்கொடுத்துதான் இவள் கெட்டுப்போகிறாள்இந்த வயசில் இவளுக்கு கல்யாணம்
கேட்கிறதாம்”
”எனக்கு
எதுவும் தெரியாது அவர்தான் கேட்டார்”
”அம்மா
அப்பாகிட்ட வந்துகேளுங்கோ என்றுதான் சொன்னேன்
”
”
ஓஒ இப்போ இதுவேறயா”
”நீ
ஏண்டா இவளைப் போட்டு அடிக்கற யார் அந்தபையனென்று விசாரி”
”ஆமா
இவ காதலுக்கு நான் தூது போகணுமா
”
”நீ ஏண்டா காதல் கத்தரிக்காய் என்கிறாய்
”
”நான்
காதல்னு சொன்னேனா
”
”நீ
பேசாம இருடி போட்டேன்னா தெரியும்”
”யாருடி
அவன்
”
”எனக்குத்
தெரியாதம்மா ஸ்கூலுக்குப் போகும்போ வரும்போ பார்ப்பேன் மத்தபடி யார்னு தெரியாது”
”அவனுக்கு
உன்னிடம் கல்யாணம்பற்றிப்பேச என்ன தைரியம்
வந்ததுநீ இளிக்காம்
அவன்
எப்படிக் கேட்டிருப்பான்”
”நான் ஒன்னும்
சிரிக்கலை அவர்தான்……”
.
”டேய்
இதைஇப்படியே விடக்கூடாது நீ அந்தப்பையனைப்பார்த்துக் கேளு இதெல்லாம் தப்பு என்றுசொல்லு”
அன்று மாலை
அந்தப்பையனைப்பார்த்துக்கேட்டான்
”சார்
எனக்கு ஒன்னும் தெரியாது உங்க சிஸ்டர்tதான்
என்னைப் பார்த்துசிரித்தது நானும் சிரித்தேன்
”
”இதோட நிறுத்திக் கொள்தொடர்ந்து தொல்லைதந்தால் தொலச்சு விடுவேன்” என்று அந்தப் பையனைப் பார்த்து
மிரட்டி விட்டுவந்தான்
வீட்டில்
வந்து சொன்னதும் முள்ளில் சேலை சிக்கினாலும் சேலையில் முள் சிக்கினாலும் பாதகம் சேலைக்குத்தான் நம் வீட்டுப் பெண்தான் பாதிக்கப்படுவாள்என்றுசொன்ன
அம்மா அன்றிரவே மந்திராலோசனை கூட்டினாள்
”இவளைச்
சீக்கிரமே கல்யாணம் செய்து கொடுப்பதுதான் நல்லதுவரன்
தேட ஆரம்பியுங்கள்” என்றாள் இது வரை எதுவும் பேசாமல் இருந்த பெண் மெதுவாக
”ஏன் அம்மா அந்தைப்பையனையே பார்க்கக்
கூடாதா” என்று கேட்டாள் இது வரை அடக்கி வைத்திருந்த
கோபத்தை எல்லாம் காட்டி அவள் அண்ணன்
அவளைவாங்கு வாங்கென்று வாங்கி விட்டான்
இப்படியாகத்தானே
ஒரு உலகம் அறியாச் சிறுமிக்கு வரன் பார்த்துக்கல்யாணம் செய்து வைக்கப்பட்டது
(கதை எழுதுவதில்பல உத்திசள் இருக்கின்றன கதைக்கருவில் என்னவெல்லாமோ மாற்றம்
செய்யத் தோன்றும் வாசகர்கள் அவர்களுக்குப்பிடித்தமாதிரி
கதை எழுதலாமே