வெள்ளி, 7 டிசம்பர், 2018

ஒரு காதல் மொட்டிலேயே கருகுகிறதா


                           ஒரு காதல் மொட்டிலேயே கருகுகிறதா
                           ----------------------------------------------------------------


யாருடி அவன்
 
தலைப்பை என்னவோ  தேர்ந்தெடுத்தாயிற்று இந்தக்  கேள்வியை யார்யாரிடம் கேட்பதாகக் கதை பண்ண வேண்டும்கணவன் மனைவியிடம் கேட்கலாம்   தந்தையோ தாயோ  மகளிடம்கேட்பதாக இருக்கலாம் அண்ணன்  தங்கையிடம்  கேட்பதாக  இருக்கலாம்  ஒரு தோழி தன் தோழியிடம் கேட்கலாம் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும்   கதை பண்ணக் களம்வேண்டும் எதைத் தேர்ந்தெடுப்பது சொல்லும் கதையில் ஒரு உண்மைத்தனம்இருக்க வேண்டுமென்பதில் நான் உறுதியாயிருக்கிறேன்

”யாருடி அவன்”

”எனக்குத் தெரியாது”

”தெரியாதவனிடமா பேசிக் கொண்டிருந்தாய்
”நான் பேச வில்லை  அவர்தான் வந்துபேசினார்”

”அவர் என்னடி அவர்….  மரியாதை வேண்டிக் கிடக்கிறது  
என்னதான்  பேசினான் அவன்”

”எனக்கு வெட்கமாய் இருக்கு சொல்ல”

”போட்டேன்னா ஒரு போடு வெட்கமாம்  வெட்கம்
அப்படி அவன்தான் என்னடி பேசினான்”

”என்னைக் கல்யாணம் செய்ய விருப்பமான்னு  கேட்டார்”

”உனக்கு என்ன வயசாசுன்னு  தெரியுமா”

”பதினைந்து
”இந்த வயசில் கல்யாணமா?”

”அவர்தான்  கேட்டார்

மறுபடியும் மறுபடியும்  அவர்தான்னு சொல்லறே”--- சொல்லிக் கொண்டே பளார் என்று ஒருஅறை விழுந்தது

”என்னடா அந்தப் பெண்ணைப் போட்டு அடிக்கற”  என்று கேட்டுக் கொண்டே வந்தாள் அவர்களதுதாயார் ”
 நீ இப்படிச் செல்லம்கொடுத்துதான்   இவள் கெட்டுப்போகிறாள்இந்த வயசில் இவளுக்கு கல்யாணம் கேட்கிறதாம்”

”எனக்கு எதுவும் தெரியாது அவர்தான் கேட்டார்”
”அம்மா அப்பாகிட்ட வந்துகேளுங்கோ  என்றுதான் சொன்னேன்
 
” ஓஒ இப்போ இதுவேறயா”

”நீ ஏண்டா இவளைப் போட்டு அடிக்கற யார் அந்தபையனென்று விசாரி”

”ஆமா இவ காதலுக்கு நான் தூது போகணுமா
 ”நீ ஏண்டா காதல் கத்தரிக்காய் என்கிறாய்
”நான் காதல்னு சொன்னேனா
”நீ பேசாம இருடி போட்டேன்னா தெரியும்”
 
”யாருடி அவன்
  
”எனக்குத் தெரியாதம்மா ஸ்கூலுக்குப் போகும்போ வரும்போ பார்ப்பேன்  மத்தபடி யார்னு தெரியாது”

”அவனுக்கு உன்னிடம் கல்யாணம்பற்றிப்பேச என்ன தைரியம்  வந்ததுநீ இளிக்காம்
அவன் எப்படிக் கேட்டிருப்பான்”

 ”நான் ஒன்னும்  சிரிக்கலை அவர்தான்……”
.
”டேய் இதைஇப்படியே விடக்கூடாது நீ அந்தப்பையனைப்பார்த்துக் கேளு  இதெல்லாம் தப்பு என்றுசொல்லு”

 அன்று மாலை  அந்தப்பையனைப்பார்த்துக்கேட்டான்

”சார் எனக்கு ஒன்னும் தெரியாது உங்க சிஸ்டர்tதான்  என்னைப் பார்த்துசிரித்தது நானும்  சிரித்தேன்
 ”இதோட நிறுத்திக் கொள்தொடர்ந்து தொல்லைதந்தால்  தொலச்சு விடுவேன்” என்று அந்தப் பையனைப் பார்த்து மிரட்டி விட்டுவந்தான்

வீட்டில் வந்து சொன்னதும்   முள்ளில் சேலை சிக்கினாலும்  சேலையில் முள் சிக்கினாலும் பாதகம் சேலைக்குத்தான்   நம் வீட்டுப் பெண்தான் பாதிக்கப்படுவாள்என்றுசொன்ன அம்மா அன்றிரவே மந்திராலோசனை கூட்டினாள்

”இவளைச் சீக்கிரமே கல்யாணம் செய்து கொடுப்பதுதான்  நல்லதுவரன் தேட ஆரம்பியுங்கள்” என்றாள் இது வரை எதுவும் பேசாமல் இருந்த பெண்  மெதுவாக  ”ஏன் அம்மா  அந்தைப்பையனையே பார்க்கக் கூடாதா”  என்று கேட்டாள் இது வரை அடக்கி வைத்திருந்த கோபத்தை எல்லாம் காட்டி  அவள்  அண்ணன்   அவளைவாங்கு வாங்கென்று வாங்கி விட்டான்

இப்படியாகத்தானே ஒரு உலகம் அறியாச் சிறுமிக்கு வரன் பார்த்துக்கல்யாணம்  செய்து வைக்கப்பட்டது
 (கதை எழுதுவதில்பல உத்திசள்  இருக்கின்றன கதைக்கருவில் என்னவெல்லாமோ மாற்றம் செய்யத் தோன்றும்   வாசகர்கள் அவர்களுக்குப்பிடித்தமாதிரி கதை எழுதலாமே    

58 கருத்துகள்:

  1. அந்தப்பெண்ணின் மனதை யாரும் புரிந்து கொள்ளவில்லைபோலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதினைந்து வயது பெண்ணை எண்டமாதிரி புரிந்துகொள்வது அந்தவயதில் எண்ணங்கள் எல்லாம் கற்பனையாகவே இருக்கும்

      நீக்கு
  2. அவளுக்குள் அத்தை மகனுடன் காதல் துளிர் விட்டுள்ளது.

    இந்த வரனையே முடித்து வைப்போம் ஐயா.

    இருபது பவுன் போடுவோம், சீர் பாத்திரம் கொடுத்து முடிச்சிடுவோம்.

    ஜாதிப்பிரச்சனையும் வராதுல... அத்தை மகன்மீதுதானே ஆசைப்பட்டால் மனப்பொருத்தம் இருந்தால் மாலைப்பொருத்தம் கூடி வரும்.

    வரும் தையில் கல்யாணம் வச்சுக்கிருவோம்.

    பதிலளிநீக்கு
  3. யாருடி அவன்?


    "யாருடி அவன்?"

    "கிருஷ்ணகிரில எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுல இருந்தவன்..."

    "இப்ப எதுக்கு வந்துட்டுப் போறான்?"

    "அவன் கூட வந்து இருக்கச் சொல்லிக் கூப்பிடறான்"

    "போகப்போறியா?"

    "உள்ளூர்லயே இருந்துகிட்டு பெத்த பிள்ளைகளே என்னை இங்கே ஆஸ்ரமத்துல சேர்த்துட்டு போயிட்டாங்க.. இவனை எங்க வீட்டுக்காரர்தான் படிக்க வச்சு ஆளாக்கினார்.. அந்த நன்றி, அந்த அன்பு..அவர் காலமாயிட்டார்ங்கறதே இப்பதான் தெரியுமாம்... அதாச்சுப்பா எட்டு வருஷம்னு சொன்னேன். "

    "அப்போ.."

    "இல்லம்மா.. நான் போகவில்லை. தூர இருந்தாதான் நமக்கு மரியாதை. அவன் கூப்பிட்ட சந்தோஷத்துலயே என் மிச்ச நாளை கழிச்சிடுவேன்.. அப்படி ஒண்ணும் ஆள் இல்லாம போயிடலை நான்னு ஒரு பெருமையும் நம்பிக்கையும் வந்திருக்கு"

    எழுந்து செல்லும் 68 வயது கிருஷ்ணம்மாளை அன்புடன் பார்த்துக்கொண்டிருந்தார் அந்த இல்லத்தை நடத்தும் 80 வயது சுந்தரிபாய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை.... 80 வயதுல இல்லத்தை நடத்தும் சுந்தரிபாய்? யாருடீக்கான ஜஸ்டிபிகேஷன்?

      நீக்கு
    2. @ஸ்ரீ கதை நன்றக வந்துள்ளதுஆனால் இல்லம்நடத்தும்80 வயது சுந்தரி பாய் 68 வயது கிருஷ்ணம்மாளிடம் யாருடி அவன் ந்ன்று கேட்பது இயல்பாய் இல்லையோ

      நீக்கு
    3. @நெத அதானே இதுதான் ஜஸ்டிஃபிகேஷனா

      நீக்கு
    4. //யாருடீக்கான ஜஸ்டிபிகேஷன்?//

      ஆமாம் நெல்லை. கொஞ்சம் ஜஸ்டிஃபை செய்ய! ஜி எம் பி ஸாரின் குறையைத் தீர்க்க இருவரும் தூரத்து உறவு என்று சொல்லி விடலாம்!!

      நீக்கு
    5. கதை நல்லா வந்துருக்கு ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
  4. ====================================================================

    யாருடி அவன்?


    "யாருடி அவன்?"

    "என் க்ளாஸ்மேட்ப்பா..."

    "இங்க எதுக்கு வந்துட்டு போறான்?"

    "ஏன்பா? வரக்கூடாதா?"

    "ஒரு ஆம்பிளைப் பையன் வீட்டுக்கு வர்றானே... அதுதான் கேட்டேன்... சொல்லு எதுக்கு வந்தான்?"

    "போப்பா.. அவன் மேத்ஸ் நோட்டு என்கிட்டே வந்துடுச்சு.. அதை வாங்கிட்டுப்போறான்.. நாளைக்கு இனிமே என் வீட்டுப்பக்கம் வர வேலை இனிமே வச்சுக்காதேன்னு சொல்லிடறேன் போதுமா?" என்று கேட்டு விட்டு எழுந்து ஹோம்ஒர்க் செய்யப்போனாள் ஒன்றாம் வகுப்புப் படிக்கும் சுகந்தி.

    =================================================================

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஶ்ரீராம்... ஒண்ணாப்பு படிக்கிற பொண்ணுகிட்ட ஆம்பிளைப் பையன் வீட்டுக்கு வரானேன்னு எந்தப் பெற்றோர் கேட்பாங்க? 6-7ம் வகுப்பு வரை இதை யாராவது கேப்பாங்களா? இப்போ எந்த வயசுலயும் நகரத்துல கேட்பாங்களான்னு அடுத்த சந்தேகம்

      நீக்கு
    2. @ ஸ்ரீ /கதை பண்ணக் களம்வேண்டும் எதைத் தேர்ந்தெடுப்பது சொல்லும் கதையில் ஒரு உண்மைத்தனம்இருக்க வேண்டுமென்பதில் நான் உறுதியாயிருக்கிறேன்/இதில் இல்லையென்று தோன்றியது

      நீக்கு
    3. @நெத நகரத்துல கேட்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்

      நீக்கு
    4. ஆரம்பத்திலேயே ஸ்ட்ரிக்ட்டாக இருக்கும் நிறைய பெற்றோர்கள் இருக்கிறார்கள். மேலும் ஒன்றாம் வகுப்பு என்பது ஒரு சிறு நகைச்சுவை. -:)

      நீக்கு
    5. நெல்லை ஒன்னாப்பு எல்லாம் இப்ப அஞ்சாப்பு போலயாக்கும்...பிள்ளைங்க என்னமா பிஞ்சிலே பழுத்துன்னு...

      ஒரு குட்டிப் பொண்ணை அவங்க மாமா கன்னத்துல தட்டி கிள்ளி முத்தம் கொடுத்தது (டைரக்டா கூட இல்லை) அந்தக் குட்டிப் பொண்ணு மீ டூ ந்னு சொல்லுது அப்புறம் என்ன?

      ஸ்ரீராம் செம...போங்க....

      ஹூம் நான் யாருடி அவன் நு போன பதிவ ஊருக்குப் போகும் போது வாசிச்சதுமே மனசுல டக்குன்னு தோனி எழுதமுடியாம பிள்ளையார் சுழி போட்டு...வழக்கம் போல ட்ராஃப்ட்ல போட்டு ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  5. ====================================================================

    யாருடி அவன்?


    "யாருடி அவன்?"

    பத்மாவுக்கு எப்பவுமே அடுத்தவர்கள் மீது சந்தேகம்தான்.

    "நேத்து 50 ரூபாய்க்கு பூ வாங்கிட்டு 25 ரூபாய்தான் கொடுத்துட்டுப் போனான்.. அந்த மிச்சத்தைக் கொடுத்துட்டுப் போறான்"

    "அதானே வந்து காசு மட்டும் கொடுத்துட்டு பூ வாங்காம போறானேன்னு கேட்டேன்.." என்ற பக்கத்து பூக்கடை பத்மாவை இளக்காரமாகப் பார்த்தாள் தேவி.

    ============================================================================

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு வித்தியாசமாய் அமைக்கப்பட்ட கதைக்களம் பாராட்டுகள்

      நீக்கு
    2. நன்றி.

      இப்படி நிறைய யோசிக்கலாம் என்பதற்காகத்தான்...........!

      நீக்கு
    3. சூப்பர் ஸ்ரீராம் இதுவும்...ஒன் மினிட் கதை!!

      ஆமாம் யாருடி அவன் நிறைய எழுதலாம் இங்கேயே பாதி முடிஞ்சுருச்சு அப்புறம் பானுக்காவும் எழுதிட்டாங்க...

      கீதா

      நீக்கு
    4. @ஆம் ஸ்ரீ நிறைய யோசிக்கலாம் தான் ஆனால் ....... யோசனைகள் பலவிதம் ஒவ்வொன்றுமொரு விதம் கதை என்றாலும் நடக்கக் கூடியதாக இருக்க வேண்டும் அல்லவா

      நீக்கு
    5. கீதா உங்கள் பங்குக்கு ஒன்றும் இல்லையா

      நீக்கு
  6. போற போக்கைப் பார்த்தால் யாருடி அவன் என்ற தலைப்பில் எங்கள் ப்ளாகில் கேட்டு வாங்கிப்போடும் கதையில் ஒரு சிறுகதைத் தொடர் ஆரம்பித்து விடுவார் ஸ்ரீ ராம் என்று தோன்றுகிறது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டு வாங்கிப் போடும்கதையில் கண்டிஷன்கள் இருப்பதில்லை என்றே நினைக்கிறேன் சார்

      நீக்கு
    2. இது ரொம்ப பொதுவான வார்த்தை ஜேகே ஸார். வித்தியாசமாக இருந்தால் நிச்சயம் எடுத்துக்கலாம். எங்கள் கேவாபோவுக்கு யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எந்தத் தலைப்பிலும் கதை அனுப்பலாம்!

      நீக்கு
  7. நிஜத்தில் இதுமாதிரி பலக்கதைகள் நடந்திருக்குப்பா

    பதிலளிநீக்கு
  8. என்னாது... 15 வயசுப் பெண்ணுக்கு லவ்வா? 9 படிக்கற பொண்ணு..... அதுக்குள்ள திருமணம் செய்ய தீர்மானிக்கறாங்களா?

    ஆனால் கதை உரையாடல்கள் இயல்பா இருக்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் சமூக பயம்தான் காரணம் நீங்கள் முயற்சி செய்ய விலையா சார்

      நீக்கு
    2. கேள்வி கன்ஃப்யூசிங்கா இருக்கு. 15 வயசுப் பொண்ணை அந்த வயதில் லவ் பண்ண முயற்சி செய்யலையான்னு கேட்கறீங்களா இல்லை கதை எழுத முயற்சிக்கலையான்னு கேட்கறீங்களா?

      நீக்கு
    3. சில நேரங்களில் சமூக கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்ப்பட்டுதான் ஆக வேண்டும் 15 வயதில் கதல் என்பதை விட ஈர்ப்புதான் அதிகமாயிருக்கும்

      நீக்கு
  9. 15 வயசுப்பெண் கல்யாணம் செய்து கொள்வது இப்போ வேணாப் புதுசா இருக்கலாம். அந்தக் காலங்களில் உண்டே! அதோடு இப்போ வரும் திரைப்படங்களில் தான் பள்ளிக்காதலை ஓர் தெய்விகமாகச் சித்திரித்து எடுக்கிறாங்களே! அதனால் இப்படியும் நடக்கலாம். திருமணம் செய்யவும் தீர்மானிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக்காலத்தில்சின்ன வயதில் திருமணங்கள் நிகழ்ந்தது என்றால்அதுவும் ஒரு தவிர்க்கக் கூடிய நிகழ்வை தவிர்க்கலாம் என்றுதான் அதுவும் உறவில் என்றால் எத்தனையோ லாபங்கள் நம்வீட்டில் திரைப்படத்தில் நடப்பதை நடக்க விடுவோமா முடிந்தவரை தவிர்ப்போம் அல்லவா

      நீக்கு
  10. யாருடீ அவன்? கேட்ல வந்து உங்கிட்டப் பேசிட்டுப் போறவன்?

    அம்மா முகத்தில் கொஞ்சம் கோபம் தெரிந்தது. டைப்பிங் கிளாஸ்ல தெரிஞ்சவன்மா. நல்ல பையன் தான்.

    நீ ஒரு விவரம் தெரியாதவ. பக்கத்துல இருக்கறவங்க தெரிஞ்சவங்க கண்ணுக்கு எதுவும் புரியுமா? தப்பா நினைச்சுக்கப் போறாங்க. சரி... காலை கழுவிட்டு வந்து படிக்க உட்கார். அக்கா பாரு ஒழுங்கா படிச்சுக்கிட்டிருக்கா.

    ***

    என்னடீ ஸ்கூல் விட்டு வந்த உடனேயே எவனோடயே கூட வர்ற?

    ஏம்மா.. உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் தெரியாதா? சும்மா என்கிட்ட யாரேனும் பேசினாலே, உடனே சந்தேகப்பட்டு கேட்கறயே.. இதுவும் அன்னைக்கு வந்த பையன்'தான். ம்ஹும். ஒனக்கு ஒண்ணுமே புரியாது.

    இல்லைடி.. 9வதுதான் படிக்கற. விவரம் புரியாத வயசு. ஒண்ணுக் கிடக்க ஒண்ணு ஆயிடக்கூடாது இல்லையா? அக்காவைப் பாரு.. காலேஜ் இல்லைனா வீடுன்னு எப்படி அக்கறையா இருக்கா. நீ விளையாட்டுப் பொண்ணு. ஜாக்கிரதையா இருக்கணும், ஊர் உலகத்தின் வாய்ல விழுந்துடக்கூடாது இல்லையா?

    ஏம்மா... சும்மா சும்மா பயந்து சாகறயே... காதல் பண்ணினாத்தான் என்ன தப்பு? பொண்ணை வீட்டுலயேவா காலம் பூராவும் வச்சுக்கப்போற. யாருக்காவது தூக்கிக் கொடுக்கத்தானே போற.

    ஏண்டி.. என்ன பேச்சு பேசற.. வாய்த்துடுக்கு ரொம்ப ஜாஸ்தியாகிட்டது உனக்கு. உனக்கு என்ன புரியப்போகுது.. அம்மா அந்தக் காலத்துல இந்த மாதிரி தப்பு பண்ணித்தாண்டீ வாழ்க்கையைக் குலைச்சுக்கிட்டேன். உங்கள ஆளாக்க எவ்வளவு கஷ்டப்படுறேன்னு உங்களுக்கு என்னடி தெரியும்.

    ****

    என்னடீ எவனோ உங்கிட்ட புத்தகத்தைக் கொடுத்துட்டுப் போறான். இவனைப் பாத்த மாதிரியே இருக்கே...

    ஐயோ ஐயோ... இதுவும் அவனேதாம்மா.. ஹிந்தியை சுலபமாக் கத்துக்க நோட்ஸ் எடுத்துவச்சிருக்கேன்னு சொன்னான். கொண்டுவந்து தாயேன்னு சொன்னேன். இன்னைக்குத் தந்துட்டுப் போறான்..

    ஐயோ... எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குன்னு தெரியாத வயசேடி.. என்னை ஏன் இப்படி வயத்தெரிச்சல் பட வைக்கிற. எவனாவது பேச வந்தால் மூஞ்சியைத் திருப்பிக்கொள்ளத் தெரியாதா? அக்கா எவ்வளவு அடக்க ஒடுக்கம். நீயும் இருக்கயே. 6 வருஷம் கழிச்சுப் பொறந்தவனு செல்லம் கொடுத்தா சொன்னதைக் கேட்காத குணம். ம்ஹும் என்று முகத்தைச் சுளித்தாள் அம்மா.

    ***

    மறுவாரம் அக்கா அந்தப் பையனோடு மாயமாகி இருந்தாள். கடிதத் தூதுக்கு உதவிய தங்கைக்கு நன்றி சொல்லி லட்டர் எழுதிவச்சுட்டுத்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸூப்பர் நெல்லை. முதலிலேயே யூகித்தேன். கொஞ்சம் வேறு டைப்பில் சுஜாதா கதை ஒன்று இருக்கிறது.

      நீக்கு
    2. @நெதகடைசியில் ஒரு ட்விஸ்ட் வைத்து கதையை முடிப்பது ஒரு ட்ரெண்ட்பாராட்டுகள்

      நீக்கு
    3. @ஸ்ரீ நிச்சயமாக சுஜாதாவை மனதில் எண்ணி இருக்க மாட்டார் நெத

      நீக்கு
    4. ஜி எம் பி சார்.. நன்றி... நீங்க சொன்ன வேகத்துல பின்னூட்டப் பெட்டியிலேயே கதையை கட கடன்னு தட்டச்சு பண்ணினேன். கதை எழுதும்போதே சரியாக வரும்னு தோன்றியது (இன்ஸ்பிரேஷன் ஶ்ரீராம் எழுதின மூணு கதைகள். எப்படி டக் டக்னு எழுதிட்டார்)

      நீக்கு
    5. ஆனாலெனக்க்லு கதை எழுதுவது மிக்வும்சிரமமானஒன்று ஒரு வழியக எழுதி முடித்தால் அடைப்படிப்பவர்கள் சொல்லும் கருத்துகள்பெரும்பாலும் உடன்படாதவையாஇருக்கும் ஒரெ வாசகர் என் கதைகள் என் அறச்சீற்றத்தின் பிரதிபலிப்பு என்றார் உண்மைதானோ

      நீக்கு
    6. பொதுவா கதை எழுதறது இரண்டுவகைப்படும் சார். ஒன்று அவங்க மனசுல இருக்கறதை வெளிப்படுத்த அல்லது பார்த்த சம்பவம் தந்த பாதிப்பில் கதை எழுதுவாங்க. இன்னொன்று 'நல்ல செயல்களை' வாசகர்கள் மனம் நெகிழுமாறு எழுதுவாங்க (ஆனா எழுதறவங்களுக்கு அதுல நம்பிக்கையோ அல்லது அத்தகைய நல்லனவைகளை அவங்க ஃபாலோ பண்ணும் பழக்கமோ இருக்காது).

      உங்களுடையது பெரும்பாலும் உங்கள் எண்ணங்களின் புனைவு என்றுதான் தோன்றும்.

      நீக்கு
    7. நான் கடை எழுதும் போது கதை மாந்தர்கள் பற்ற்யதாக இருக்கும் அல்லதுநிகழ்வுகளின் பாதிப்பில் இருக்கும் நான் பெரும்பாலும் கதை எழுதும்போது என்கருத்துகள் ஆங்காங்கே தலை காட்டும்

      நீக்கு
    8. நெல்லை கதை சூப்பர்!! அக்காவை அடக்க ஒடுக்கன்னு அம்மா சொல்லும் போதே தோனிருச்சு அவளுக்காக இந்தப் பையன் வரானோன்னு...
      கதை சூப்பர் நெல்லை...உடனே அழகா எழுதிடறீங்க நீங்க ஸ்ரீராம், பானுக்கா எல்லாரும்...

      இப்ப நான் போட்ட பிள்ளையார் சுழிய என்ன செய்யனுன்னு யோசிச்சுக்கிட்டுருக்கேன்! ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    9. ஒரெ பின்னூட்டத்தில் நண்பர்கள் பலரையும் திருப்தி செய்யும் நோக்கம் ரசித்தேன் நான் போட்ட பிள்ளையார் சுழிதான் புரியவில்லை

      நீக்கு
    10. ஒரெ பின்னூட்டத்தில் நண்பர்கள் பலரையும் திருப்தி செய்யும்நோக்கம் ரசித்தேன் நான்போட்ட பிள்ளையார் சுழிதான் விளங்க வில்லை

      நீக்கு
  11. சரியான திருப்பத்தில் நச்சென்று ஒரு கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறுகதை எழுதுவது மிகவும் கடினம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிபிராயம் இருக்கும் ஒருவர் கதைஎன்றால் ஒரு ஆரம்பம் நடுவு முடிவு என்று இருக்கவேண்டும் என்று சொன்ன நினைவு எப் கதைகள் எந்த வரை முறைக்குள்ளும் அடங்காது ஆனால் நிஜத்தன்மை இருக்க வேண்டும் என்று நம்புபவன்நான்

      நீக்கு
  12. யார் யாரையோ புதிதாக பார்ப்பதற்கு அந்த பையனை பார்த்தால் தான் என்ன. வரட்டு வீம்பில் வெம்பும் விருப்பங்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெகுவானமுன்னேற்றக் கருத்து நம்வீட்டில் அப்படி நடக்க விடுவோமா

      நீக்கு
  13. கதைகள் நன்றாக இருக்கின்றன. என் மண்டைக்குள் ஏதாவது உதிக்கிறதா பார்க்கலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாகப் பாருங்கள் ஏதாவதுகிடைக்காமலா போய்விடும்

      நீக்கு
  14. பல வீடுகளிலும் நடந்த நிகழ்வுதான்
    யதார்த்தமாக எழுதியிருக்கிறீர்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைகளும் யதார்த்தமாகவும் இருக்க வேண்டும் என்றுநம்புபவன் நான் நன்றி சார்

      நீக்கு
  15. ஸ்ரீராமின் இரண்டாவது கதை சரக்கென்று ஆரம்பித்து சுருக்கென்று முடிந்துவிட்டது. குமுதத்தின் அரைப்பக்கக் கதைத் தாக்கமோ?

    பதிலளிநீக்கு
  16. இது அவரது கதை தலைப்புக்காக எழுதியதே தவிர எந்த தாக்கமும் எனக்குத் தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  17. சார் உங்க கதையும் நல்லாருக்கு! பாவம் அந்தப் பெண்.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. பாவமே என்று ஒரு கமெண்ட் நன்றி கீதா

    பதிலளிநீக்கு