FUTURE SHOCK
ஓ
அது அந்தக்காலம் என்று அடிக்கடி நாம் சொல்கிறோம் இம்மாதிரி சொல்வது நம் வருங்கால சந்ததியிலும் தொடரும் போல் இருக்கிறது
இப்பொதைய ஐம்பது வயதுக் காரர் களும் அதற்கு மேற்பட்டவரும் அந்தக் காலத்தில் அப்படி
இப்படி என்று உருகுவதுபோல் இனி வருங்கால சந்ததியினரும்
உருகலாம்
ஆட்டோ
பெட்ரொல் ரிப்பேர் ஷாப்புகள் இனி இருக்காமல் போகலாம்ஒரு பெட்ரோல் டீசெல்
எஞ்சினில் சுமார் 20000 உதிரி பாகஙகளிருக்கிறதாம்
ஆனால்ஒரு எலெக்ட்ரிகல் மோட்டாரில்
20 பாகங்களே இருக்கும் எலக்ட்ரிக் கார்கள் ஆயுட்காலம்
வரை உத்தரவாதமிருக்கும் டீலர்கள் மட்டுமே ரிபேர் செய்யமுடியும்பத்து நிமிடங்களில்
அந்த மோட்டாரை மாற்றி வேறு மோட்டார் பொருத்துவார்கள் பழுதான எலெக்ட்ரிக் மோட்டர்கள்
ரீஜனல் ரிபேர் ஷாப்பில் ரோபோக்களால் ரிபேர் செய்யப்படும்
பெட்ரோல்
பம்புகள் காலாவதியாகிவிடும் மின் சாரம் தரும் கியொஸ்குகள்
சாலை ஓரங் களில் நிறுவப்பட்டு இருக்கும்
கொடாக்
கம்பனியில் 170000 பேர்கள் வேலையில் இருந்தனர் 85% ஃபில்ம் பேப்பர்கள் இருந்தன 1998ல் புகைப்பட சுருள் காணாமல் போகும் என்று எதிர்பார்த்தோமா காலாவதியாய் விற்கப்பட்டு விட்டது பிசினெஸ் முறையே மாற பலரும் வேலை இழந்தனர் பலரும் எதிர்பார்க்காத முறையில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன
புது மின்சாரக் கார்கள் வரும் கோல்(coal) இண்டஸ்ட்ரிஸ்
போய்விடும் எண்ணைக் கிணறுகள் இருக்காது இன்றைய குழந்தைகள் சொந்தமாக கார்கள் வைத்துக் கொள்ள மாட்டார்கள் கார்களை இனி ம்யுசியத்தில்தான் பார்க்கமுடியும் சொந்தக் கார்களே இருக்காது ட்ரைவிங் லைசென்ஸ் தேவைப்படாது சோலார்சக்தியே இனி எங்கும் இருக்கும்
நம்வீதிகள் இரைச்சலின்றி சுத்தமாக இருக்கும் ஃபோசில்(fossil) எனெர்ஜி இருக்காதுஎண்ணை கிணறுகள் மூடப்படலாம்
1998ல் புகைப்பட சுருள் காணாமல் போகும் என்று எதிர்பார்த்தோமா காலாவதியாய்
விற்கப்பட்டு விட்டது பிசினெஸ் முறையே மாற பலரும்
வேலை இழந்தனர் பலரும் எதிர்பார்க்காதமுறையில்
காலம் மாறிக் கொண்டிருக்கிறது கொடாக்குக்கு நேர்ந்தகதி பல தொழில்களுக்கும் நேர வாய்ப்பு
இருக்கிறது இதை நாம் FUTURE SHOCK
என்போமா
காலம் அனைத்தையும் மாற்றிக் கொண்டேதான் இருக்கிறது
பதிலளிநீக்குகாலம் அதாக மாறவில்லை ஐயா மாற்றிக் கொண்டிருக்கிறோம்
நீக்குமாறாதது மாற்றங்கள். தவிர்க்க முடியாதது.
பதிலளிநீக்குஒரு பாரா ரிப்பீட் ஆகி இருக்கிறது.
ஒரு ஃப்லோவில் எழுதும்போது தவிர்க்க முடியவில்லை ஊனரைப் படிப்பதற்கு நன்றிஸ்ரீ
நீக்கு30 வருடங்களில் ஆட்டோ தொழிலே இருக்காது என்கிறார்கள்.
பதிலளிநீக்குஇப்போதே ஆன்லைன், பார்மசி, மளிகை கடைகளை குறைத்து, டெலிவரிபாய் என்கிற புதிய வேலைத் தளத்தைத் திறந்துவிட்டிருப்பதைப் பார்க்கிறோம். கால்சென்டர்களே 20 வருடங்களுக்கும் குறைவான வேலைவாய்ப்புத் தளம்தானே
தயாராக்குங்கள் சந்ததியினரை
நீக்குஇதேபோல் எதிர்காலத்தில் கோலாகலமாக ஐயரை வைத்து திருமணங்களும் நடக்காது போல... திடீரென்று பையன் மனைவி குழந்தையோடு வீட்டுக்கு வருவான் பெற்றோரிடம் ஆசி வாங்க அல்ல!
பதிலளிநீக்குஇடத்தை காலி பண்ணிட்டு முதியோர் இல்லம் போங்க என்று சொல்ல!....
கில்லர்ஜி... சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்தது பிறகு மும்பையில், இப்போ தமிழகத்தில்.
நீக்குஅதன்படி தமிழகத்துல மும்பையைப்போல், (அங்க நடந்த மாதிரி) சாதித்தாக்கம் ரொம்ப ரொம்ப குறையும். திருமணச் செலவிலிருந்து பெற்றோர்களுக்கான பாரம் குறையும் என்றே நினைக்கிறேன்.
@கில்லர்ஜி இப்போதே திருமணங்களில் ஐயரிந்தாக்கம் குறைந்துவிட்டதே
நீக்கு@நெல்லை ஜாதித் தாக்கம்குறைவது நல்லது தானே சிலருக்கு நஷ்டம்சிலருக்கு லாபம்
நீக்குஉண்மை தான் ஐயா...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சார்
நீக்குகாலத்தின் மாற்றத்தில் நாமும்.....
பதிலளிநீக்குஎன்றும் நடப்பதுதானே
நீக்குஎங்க போய் முடியப்போகுதுன்னு தெரிலப்பா
பதிலளிநீக்குநடப்பவை எல்லாம் நல்லதுக்குதானே
நீக்குமாற்றங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். அதற்கு ஏற்ப ஒன்று நாம் மாறிக் கொண்டே இருக்க வேண்டிய சூழல். இந்த மாற்றங்களில் சில நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு.
பதிலளிநீக்குதுளசிதரன், கீதா
எப்பேர்ப்பட்ட மாற்றங்கள் வரலாம் என்பது குறித்த ஒர் ப்ரெடிக்ஷன் அவ்வளவுதான்
நீக்குகாணாமல் போகும் பட்டியலில் நீங்கள் வேலை பார்த்த Thermal power plant ஐயும் நான் வேலை பார்த்த Main frame computer ஐயும் சேர்த்துக்கொள்ளுங்கள். வேண்டும் என்றால் Land line telephone ஐயும் சேர்த்துக்கொள்ளலாம்.
பதிலளிநீக்குJayakumar
தெர்மல் பவர் ப்லான்ட் சோலார் பவர் ப்லாண்டாகலாம் மெயின் ஃப்ரேம் கம்ப்யூடர் பற்றி தெரியாது லாண்ட் லைன் இப்போதே காலாவதியாகி வருகிறதே
பதிலளிநீக்குமாற்றங்கள் ஒன்றே மாற்ற முடியாதது!
பதிலளிநீக்குஎதிர்பார்க்கக்கூடிய மாற்றங்கள் சில
நீக்குமாற்றங்கள் ஒன்றே மாற்ற முடியாதது!
பதிலளிநீக்குஎதிர்பார்க்கக்கூடிய மாற்றங்கள் சில
நீக்குமாற்றம் இருந்தால்தால் வாழ்க்கையிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கும்.
பதிலளிநீக்குஇனிய புதுவருட வாழ்த்துக்கள் ஜி எம் பி ஐயா.
இனிய புத்தாண்டு வாழ்த்து , ஐயா ! அறிவியல் கண்டுபிடிப்புகள் புதிது புதிதாய் வரவரச் சில தொழில்கள் நசிக்க வேறு தொழில்கள் உருவாகின்றன . பெரும்பாலோர்க்கு வேலையெதுவும் இல்லாமற் போகும் காலம் வரலாம் . எல்லாம் இயந்திரமயம் , ரோபோ மயம் .
பதிலளிநீக்கு