சனி, 22 டிசம்பர், 2018

விடுப்பில் இரண்டு நாள்




புது மனைபுகு விழா

பேரனுடன் நான்




                                        விடுப்பில் இரண்டு நாள்
                                        --------------------------------------

இரண்டு மூன்று நாட்கள் வலைப்பக்கம் வர இயலவில்லை  என் பேரன் அவனது தந்தையின் வீட்டுக்கு குடிபோவதை முன்னிட்டு  கணபதி ஹோமமும் சத்தியநாராயணா பூஜையும் செய்யச் சொன்னார்கள்   ஏற்கனவே அந்த வீட்டுக்கு குடிபோகும் போது என்மகன்   கணபதி ஹோமமும்   பகவதி ஹொமமும்  செய்திருந்தான் பிறகுதான் சென்னைக்குப் போகும்போது வாடகைக்கு விட்டிருந்தான்  அதே வீட்டை குடி இருந்தோரைக் காலி செய்யச் சொல்லி மகனுக்கும்  மறு மகளுக்கும்  குடி போக வழி செய்தான்
அதற்கு நானும் மனைவியும்  சென்றிருந்தோம்  மேலும்மனைவியின் உறவினர்கள் சிலருக்கு நாங்கள் அவர்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்னுமெண்ணமும் இருந்தது  ஒரெ கல்லில் பல மாங்காய்கள்  சரி என்றோம்  கணபதி ஹோமம்கேரளத்தவர் செய்வதும்கன்னடியர்கள்செய்வதும்  வித்தியாசமாயிருந்தது கேரள நம்பூதிரிகள் பூஜை செய்யும்போது கை விரல்களால் நர்த்தனம் செய்வார்கள் என் மறுமகள் கேரள நம்பூசாரி கிடைக்காததால்  கன்ன்னடிய பூசாரிக்கு ஒப்புதல் தந்தாள்  கன்னடிய பூசாரி   ஏற்பாடு செய்திருந்தார்கள் மேலும்   பெண்ணின் வீட்டில் சத்திய நாராயணப் பூஜையும்வேண்டும் என்றார்கள்
 எனக்கு விசாகப்பட்டினம் அருகே இருக்கும்   அன்னாவரம்கோவில் அனுபவமும்  நினைவுக்கு வந்தது விசாகப் பட்டினதிலிருந்து  அன்னாவரம்  சுமார் நூறு கிலோ மீட்டர்கள்  அங்கு மதியம் பூஜை முடிந்து உணவும்  உண்டு என்றார்கள்  எங்களுக்கோ நல்ல பசி உணவாக கொஞ்சூண்டு  புளியோதரை கொடுத்தார்கள்பிரசாதம் உணவு அல்ல ஆனால் இங்கெல்லாம்  சத்திய நாராயண பூஜைக்கு  ரவா கேசரி அவசியம் பிரசாதமாக  வேண்டும் என் வீட்டிலும் ஒரு முறை சத்திய நாராயண  பூஜை நடத்தி இருக்கிறோம்
மொத்தத்தில்  பூஜை விவரங்கள் படமாகவும் காணொளியாகவும்
சத்ய நாராயண பூஜை

எல்லாம் முடிந்த பிறகு என் மச்சினன் வீட்டுக்குச் சென்றோம்  அங்கு மனைவியின்சகோதரிகளும்  வருவதாக ஏற்பாடு  நன்பார்த்தவரை பொதுவாக ஓரளவு  வசதி உள்ள கேரள உறவு மற்றும் நண்பர்களின்  வீடுகளில்  ஒரு யானைப் பட்டம் மாட்டப்பட்டு இருக்கும்  என்மச்சினன்  வீட்டில் ஒரு சிற்ப வேலைப்பாடு மிகுந்த ஒரு சிலையைப் பார்த்தேன்   அது (B) பாலி நாட்டில் வாங்கியதாம் ராமனும்  சீதையும்  என்று மச்சினன் சொன்னான்

யானைப் பட்டம்


ஒரே மரத்தில்செதுக்கிய பாலி சிற்பம்  
ஜப்பானிய பொம்மைகள் கோவில் மணி  மினியேச்சர்


மலையாளத் திரு மணங்களுக்கு  தென்னம்பாளை மிகவும்  முக்கியம்  என்பேரனின்  திருமணத்துக்கு  ஒன்று வேண்டி இருந்தது மிகவும்  சிரமப்பட்டு ஒன்றுவாங்கக் கிடைத்தது  ரூபாய் 800/ கொடுக்க வேண்டி இருந்தது என்மகனின் ஹொரமாவு வீட்டின்பின்புறத்தில் ஒரு தென்னை இருந்ததுஅதில் தேனீக்களுடன் பாளையும்  இருந்தது


தென்னை






    

24 கருத்துகள்:

  1. படங்களை ரசித்தேன். பேரனுக்கும் மகனுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் ஐயா உறவுகளுடன் மகிழ்ச்சியாக கழித்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. பேரன் குடிபுகும் இல்லத்தில் எல்லா நலங்களும் இறைவன் அருளாலும், உங்கள் ஆசியாலும் கிடைக்கட்டும்.
    எங்கள் வாழ்த்துக்களும்.

    படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
  4. தம்பதியர் எல்லா நலன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள். நம்பூதிரிகள் செய்வது தாந்திரிக வழிபாடு. இங்கே கன்னடிய சாஸ்திரிகள் வைதிக முறையில் செய்திருப்பார்.

    பதிலளிநீக்கு
  5. நான்கணபதி ஹோமம் ஒரெ மாதிரிதான் செய்வார்கள் என்று நினைத்தேன் கருத்துக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துகள் ஜிஎம்பி சார். நான், நீங்கள் சென்னை போய்விட்டீர்களோ என்று நினைத்தேன். (நான் பெங்களூரில் இருக்கும் சமயம் பார்த்து...ஹாஹா)

    பதிலளிநீக்கு
  7. புதுக்குடித்தன வாழ்த்துக்கள்-உங்கள் பேரன் குடும்பத்துக்கு. உங்களுக்கும் இரண்டு நாள் உறவுகளுடன் refresh செய்துகொள்ள அவகாசம் கிடைத்தது.

    //..பாலி நாட்டில் வாங்கியதாம்//

    சிற்பம் அழகு. ராமனும் சீதையும் ஃபிட்னெஸ் கான்ஷியஸாக இருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது!

    Bali ஒரு நாடல்ல. இந்தோனேஷியாவின் ஒரு புகழ்பெற்ற தீவு. ராமாயண, மற்றும் பிற ஹிந்து கலாச்சாரச் சுவடுகளும் காணப்படும், வெளிநாட்டவர்கள் மிகவிரும்பும் சுற்றுலாத் தலமும்.

    பதிலளிநீக்கு
  8. //வெளிநாட்டவர்கள் மிகவிரும்பும் சுற்றுலாத் தலமும்.//- காரணம் சொல்லலையே ஏகாந்தன் சார்... நானும் அங்கு சென்றிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராமாயணக் கதைகள் அங்கும் பிரசித்தம் பல மாற்றங்கள் இருந்தாலும்

      நீக்கு
  9. படங்கள் எல்லாம் அருமை சார். தங்கள் பேரன், பேரனின் மனைவி, மகன் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு