சுய சரிதையில் சில பகுதிகள்
----------------------------------------------
சில நேரங்களில் சில முடிவுகள் எடுக்கப்படுகின்றன சரியா தவறாஎன்பது தெரியாமலேஎடுக்கப்பட்ட முடிவு வாழ்க்கையின் சுவாரசியத்துக்கு அதுவே காரணமாயிற்றோ இல்லையென்றால் அன்று நான் கண்டதுபற்றி இத்தனை ஃபீலிங் இருக்கவேண்டாமே பீடிகைகள் கடுப்பேற்றலாம்பார்க்க வேலை தேடும்படலம்
முதலில்
நான் எச் ஏ எல் லில் பயிற்சியாளனாகச் சேர்ந்தபோது தெரிந்தது மூன்றாண்டு பயிற்சி வெற்றிகரமாக முடித்தால் நாளொன்றுக்கு
ஒரு ரூபாய் பத்தணா சம்பளமாகவும் அலவன்சாக மாதம் ரூ 39 ம்கூட வரும் அன்றுநானிருந்த நிலையில் ஏதாவதுவேலைஒன்றுகிடைத்தால் போதும் என்னும்நிலையே. பயிற்சியில் இருக்கும்போது
அன்றைய மானெஜ் மென்ட் எங்களுக்கு ஒரு தேர்வு
வைத்து அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை பயிற்சிக்கு
பின்பு சூபர்வைசர்களாக நியமிக்கலாமென்று கருதி
தேர்வு வைத்தார்கள் சுமார் 60 பேரில் 12 பேரைத்தேர்வுச் செய்தார்கள்அதில் நானும் ஒருவன் மேற்பயிற்சிக்காக அம்பர்நாதுக்கு அனுப்பினார்கள் அதுபற்றி வெவ்வேறு பதிவுகளில் எழுதி
இருக்கிறேன் பயிற்சி முடிந்தபின் சூபர்வைசர்களாக நியமனம்
பயிற்சியின் போது ஐந்தாண்டுகள் வேலையில் இருப்போம் என்று ஒருபாண்ட் எழுதிக் கொடுத்தோம்
அப்போது எச் ஏ எல் லில் நிறையவே அனுபவங்கள் மேல் படிப்பு பெறாத குறையை அவ்வப்போது உணர்ந்தோம் அங்கிருந்த ஒரு அதிகாரி அடிக்கடி
கூறுவார் ஐ அம் எ டபிள் கிராஜுவேட் ஃப்ரம் கிண்டி எஞ்சினீரிங் காலேஜ்
ஐ நோ யு டோண்ட் நோ அவர் படித்த படிப்பை
விட இந்த பெருமைஅதிகம் வருத்தியது அவருக்குத்
தெரியும்என்பதோடு நில்லாமல் உனக்குத்தெரியாதுஎன்று கூறுவதே அதிகம் உரைக்கும்
நிறையச்
விஷயங்கள் எழுதிக் கொண்டே போகலாம் நீளம் அதிகமாகும் ஆனால் என்ன தொடர்ந்து எழுதலாமே பாண்ட்
பீரியட் ஐந்தாண்டுகாலம் எப்படியோ கழிந்தது வேறுவேலை தேடியதில் சென்னை லூகாஸ் டி வி
எஸ்ஸில் ஷிஃப்ட் இன்சார்ஜாக நியமனம் ஆயிற்று இந்த ஐந்தாண்டு காலத்தில் ஒரு பதவி உயர்வும்
கிடைத்ததுஅப்போது தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு
உச்சத்தில் இருந்தது நேர் காணலின் போது நான் ஆங்கிலத்தில் உரையாடியது கண்டு எனக்கு தமிழ் தெரிய வேண்டியது அவசியம் என்று கூறினர்
சுமார் ஓராண்டுகாலம்
அங்கே பணியில் இருந்தேன் வெள்ளையர்களுடன் பணி
புரிந்தகாலம் எனக்கு திருமணம் ஆன புதிது பணிநேரம் இரண்டு ஷிஃப்டுகள்முதல் ஷிஃப்ட் காலை ஏழே முக்காலிலிருந்து மாலை ஐந்தரை வரை இரண்டாம் ஷிஃப்ட் இரவு ஒன்பதிலிருந்து காலை ஏழே
கால்வரை மின் வெட்டு காரணமாக நன்றாகவே உழைத்து நல்ல பேர் வாங்கினேன் வாராவாரம் ஷிஃப்ட் மாறும் வாரம் ஐந்து நாட்கள்
ஒரு வாரகாலம் உடல் ஒரு ஷிஃப்டுக்கு பழக்கப்படும்நேரத்துக்குள்
அடுத்த ஷிஃப்டுக்கு பணி மாறும் நான் ஷ்ஃப்ட்
இன் சார்ஜ்ஆக இருந்தாலும் நேரடி வேலையில் அதிகாரம்
கிடையாது செய்முறைகள் ஆங்கிலேயர்களால் வகுக்கப்பட்டு இருந்தது எனக்கோ அதில் மாற்றம் செய்தால்
ப்ரொடக்டிவிடி அதிகமாகும் என்று தோன்றியது ஆனால் பகலில் வெள்ளையர்கள் இருப்பார்கள் நமக்கு மாற்றும்
அதிகாரம் கிடையாது நான் இரவு ஷிஃப்ட் வரும்போது என் விருப்பப்படி செய் முறையை
மாற்றி அதிக ப்ரொடக்ஷண் காண்பித்தேன்
பகலில்குறைவாகவும் இரவில்கூடுதலாகவும்
உற்பத்தி மாறுவதுநிர்வாகத்துக்கு புரியாமல்
இருந்தது என்னிடம் கேட்டார்கள் பகலில் என் கை கட்டப்பட்டு இருப்பதையும் இரவில் நானே கட்டுகளை அவிழ்த்து பணிசெய்வதையும்கூறினேன் வெள்ளையர் மேல் அதிகாரி என்னிடம் பகலிலும்
என் மாற்றலைச் செயல்படுத்துமாறு கூறினார்கள் நான்மாற்றம் செய்யும்போது கண்களில் எண்ணை விட்டுக்கவனிப்பதுபோல் கூர்ந்து கவனித்தார்கள்
ஒன்றை கூற வேண்டும் தவறை ஒப்புக்கொள்ளும் குணம் அவர்களுக்குஇருந்ததுஎன்முறையை வழக்கத்தில் கொண்டுவந்ததுடன்என் மேல் அதிகாரிக்கு பாராட்டுக் கடிதமும் கொடுத்தார்கள்
எனக்கு அப்போது ஒருகுறை இருந்ததுபாராட்டுக் கடிதத்தை எனக்குத் தராமல் என் உயர்
அதிகாரிக்குக் கொடுத்ததுதான் பல முக்கிய செய்திகளையும் நிகழ்வுகளையும் முன்பே சில இடங்களில் பகிர்ந்திருக்கிறேன் என் மூத்த
மகன்பெங்களூரில் பிறந்திருந்தநேரம் அவனைக்காண ஒரு வார இறுதியில் சென்ற்ருந்தேன் என் ஷிஃப்ட் மாற்றத்துக்கு
என்னால் நேரத்தில் வர முடியவில்லைசரியாக வேலைக்கு வராவிட்டால் வேறு ஆளைப் பார்த்துக் கொள்கிறோம் என்றார்கள் என்னை நம்பி ஒரு பெரிய குடும்பம் இருக்கும்போதுதலைக்குமேல்
வேலை போகும் அபாயம் என்னும் கத்தி தொங்கிக்
கொண்டிருந்ததது வேறு வேலை பார்த்துப்போகலாம் என்று முடிவு எடுத்தேன் பிஎச் ஈ எல் லில் உதவி எஞ்சினீர் வேலைக்கு விளம்பரம்வந்தது அப்ளை செய்தேன்
நேர் காண்லுக்கு அழைத்தார்கள்சென்றென் நேர் காணல் முடிவில் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்கள்
நான்
லூகாஸ் டி வி எஸ்ஸை விட்டு பி எச் ஈ எல் க்கு
ஏன் சென்றேன் அடுத்த பதிவில் காணலாம்
தொடரக் காத்திருக்கேன். நினைவலைகள் தொடரட்டும்.
பதிலளிநீக்குசுய சரிதை எழுதத் துவங்கினேன் பாதியிலேயெ நின்றது அது இப்போது பதிவெழுத உபயோகமாகிறது
நீக்குநெஞ்சகத்தில் தேங்கியிருக்கும் நினைவலைகளை தொடர்ந்து இறக்கி வையுங்கள்
பதிலளிநீக்குகாத்திருக்கிறேன்
தேங்கி இருக்கும் நினைவலைகளுக்கு ஒரு வடிகால் .....!
நீக்குசுவாரஸ்யமாக செல்கிறது ஐயா.
பதிலளிநீக்குதங்களது அனுபவங்களை இன்னும் எதிர்பார்க்கிறேன்...
நிறையவே எழுதி இருக்கிறேன் இன்னும் ஒரு சிலவே இருக்கிறது பகிர
நீக்குஇப்போது திரும்பவும் கடந்த காலங்களை நினைக்கும்போது ஆச்சர்யம் வரத்தான் செய்யும். சுவாரஸ்யமாகத்தான் செல்கிறது
பதிலளிநீக்குஆச்சரியமில்லை நெல்லை அனுபவங்கள் சுவாரசியமாக இருப்பதால்தானே பகிர்கிறேன்
நீக்குசில சமயம் ஆச்சர்யமாவும் இருக்கும். நாமா அப்படிச் செய்தோம்? நம்மை அப்படி உணர்வுபூர்வமான தீர்மானத்திற்கு வரச் செய்தது எது? ஏன் அப்படி நடந்துகொண்டோம்? அதனால் நாம் பெற்ற பலன்கள் (இல்லை கஷ்டங்கள்), என்று நம்ம வாழ்க்கையை மீண்டும் திரும்பிப் பார்க்கும்போது நிறைய ரசிக்கக்கூடிய விஷயங்கள் நினைவுக்கு வரும்.
நீக்குநம் சாதனைகளை மட்டும் யோசிக்காமல் குறைகளையும் நினைக்க வைப்பதே அனுபவ பாடம் எனக்கு ஒரு குறை பதிவில் சில நேரங்களில் சுட்டி கொடுத்தால் அதையும் வசித்தால் தான் முழு வீச்சும் தெரியும் குறைந்த பட்சம் பழையதை வாசிக்காதவர்கள் வாசிக்கலாமே
நீக்குதொடர்கிறேன் ஐயா...
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குநினைவுகள் தரும் அனுபவங்கள் எத்தனை எத்தனை!
பதிலளிநீக்குதொடர்கிறேன் சார்.
நினைவுகள் சுவாரசியம்தான் வருகைக்கு நன்றி
நீக்குசிரமம் நிறைந்த வாழ்க்கை ! என் வாழ்வு வளைவோ கோணல்மாணலோ இல்லாமல் நேராக ஓடிய , இப்போதும் ஓடுகிற ஆறு . ஆகவே அந்த சிரமங்களைக் கற்பனை செய்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது .
பதிலளிநீக்குஅப்போதெல்லாம்சிரமமாகத் தெரிய வில்லை some are born with silver spoon கற்பனைகள் ரசிக்கலாம்
நீக்குஇப்போதும்இளமைத் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருப்பதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது
பதிலளிநீக்குஇப்போதும்இளமைத் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருப்பதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது
பதிலளிநீக்குஇளவயது அனுபவங்கள் செதுக்குகிறதா
நீக்குதொடர்ந்து வாசிக்கிறேன் ஐயா. உங்களின் நினைவாற்றல் எங்களை வியக்க வைக்கிறது.
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் மறதி அதிகமாகிறது வருகைக்கு நன்றி சார்
நீக்குபுதிதாக யோசிக்கும் திறனும், அதை செயல்படுத்தும் துணிச்சலும் சிறு வயதிலேயே உங்களுக்கு இருந்திருக்கிறது என்பதை வாசிக்கும் பொழுது thought without action is abortion, action without thought is folly என்னும் ஜவாஹர்லால் நேருவின் கூற்று நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குசுட்டியில் இருந்த பதிவையும் வாசித்தீர்களா வருகைக்கு நன்றி
நீக்குஉங்கள் சுயசரிதத்தை முன்பு ஒரு முறை படித்திருக்கிறேன். அதில் உங்கள் இளமைப்பருவத்தை விரிவாக விவரித்திருக்கும் நீங்கள் பின் பகுதியை சுருக்கமாக எழுதி விட்டீர்களோ என்று தோன்றும்.
நீக்குஎன் சுய சரிதையில் சில பகுதிகளை அவ்வப்போது ஆங்காங்கே பகிர்ந்ததுண்டு ஆனால் சுய சரிதை என்று பகிர்ந்ததுஇல்லை
நீக்குஅனுபவங்கள் எப்போதுமே சுவாரஸ்யம்தான். தொடருங்கள்.
பதிலளிநீக்குஅனுபவங்களின் தொகுப்பே வாழ்வு சரியா
பதிலளிநீக்கு