பெர்செப்ஷனே எழுத்தாக
-----------------------------------------
யாருடி அவன்
2011ம் ஆண்டு ஐந்தும்
இரண்டும் என்னும் பதிவு எழுதி இருந்தேன் அதில்
பின்னூட்டமாகதிருஜீவி சார் /நன்றாகவே இருக்கிறது, ஜிஎம்பி சார்!
அதை இன்னும் நன்றாகச் செய்வதற்காக சொல்ல வந்தேன்.
'ஹாலில் நான் சேரில் அமர்ந்திருந்தேன், பேருக்காக பேப்பர் பக்கங்களைப் புரட்டியபடி.
வாசல் பக்கம் யாரோ நிற்கிற மாதிரி இருந்தது. சடாரென்று எழுந்து போய்ப்பார்த்தால்..' என்று கதையை ஆரம்பித்துப் பாருங்கள்.. அழுத்தமாக ஒரு சிறுகதை உரு கிடைக்கும். / என்று பின்னூட்டமெழுதி இருந்தார் அப்போது நானொருகற்றுக்குட்டி வலைப் பதிவர்
ஜீவியோ பழம்தின்று கொட்டைப் போட்டவர்அவர் சொல்படிமுடிகிறதா என்று பார்ப்போமே என்று ஒருசிறுகதை எழுதினேன் அதுவே ஏறி வந்தஏணி அதை இன்னும் நன்றாகச் செய்வதற்காக சொல்ல வந்தேன்.
'ஹாலில் நான் சேரில் அமர்ந்திருந்தேன், பேருக்காக பேப்பர் பக்கங்களைப் புரட்டியபடி.
வாசல் பக்கம் யாரோ நிற்கிற மாதிரி இருந்தது. சடாரென்று எழுந்து போய்ப்பார்த்தால்..' என்று கதையை ஆரம்பித்துப் பாருங்கள்.. அழுத்தமாக ஒரு சிறுகதை உரு கிடைக்கும். / என்று பின்னூட்டமெழுதி இருந்தார் அப்போது நானொருகற்றுக்குட்டி வலைப் பதிவர்
அதற்கு பின்னூட்டமாக ஜீவி / ஹாலில்நான் சேரில் அமர்ந்திருந்தேன்.. என்று அந்த 'ஐந்தும் இரண்டும்' கதையை ஆரம்பித்து எழுதலாம் என்றால், ஒரு புதுக்கதையையே பிரமாதமாக எழுதிவிட்டீர்களே! \ என்று எழுதி இருந்தார்
அண்மையில் திருஜீவி/
இன்றைய உலக அரசியலில் மோடியின் பங்கு வியக்கத் தக்கதாயும் துணிச்சலாயும் நம் தேசத்திற்கு உலக அரங்கில் பெருமை தெடித் தருவதாகவும் இருக்கிறது.
பதிவு எழுத அருமையான காலத்திற்கு தேவையான டாபிக்.
முடிந்தால் முயற்சித்துப் பாருங்கள்./ என்று ஒரு பின்னூட்டமிட்டிருந்தார் ஆனால்கதை எழுதுவது கற்பனையில் விளைவது அரசியல் பிரமுகர் பற்றி எழுதுவது அது போலல்ல
பதிவு எழுத அருமையான காலத்திற்கு தேவையான டாபிக்.
முடிந்தால் முயற்சித்துப் பாருங்கள்./ என்று ஒரு பின்னூட்டமிட்டிருந்தார் ஆனால்கதை எழுதுவது கற்பனையில் விளைவது அரசியல் பிரமுகர் பற்றி எழுதுவது அது போலல்ல
அரசியல்
எண்ணங்கள் பெரும்பாலும் ஏதோ பெர்செப்ஷனின் அடிப்படையில் உருவாவது என் பெர்செப்ஷன்
மோடியைப்பற்றி முற்றிலும் வேறானது என் எழுத்தில் என் கருத்துகள் இடம்பெறும்
மனதுக்கு
ஒவ்வாததைஎன்னால் எழுத முடியாது இருந்தாலும்
மோடியைப் பற்றின என் எண்ணங்களைப் பகிரலாம் என்றிருக்கிறேன்
உலக
அரசியலில் மோடியின் பங்கு வியக்கத்தக்கதாயும்
துணிச்சலாயும் நம் தேசத்திற்குபெருமை தேடித்தருவதாயும் இருக்கிறது எனக்குத் தெரிந்தவரை இதே மோடிக்கு உலக அரசுகள் வீசா மறுத்திருக்கின்றன
இப்போதைய வரவேற்பு அவர் இந்தியா என்னும் பரமசிவன்கழுத்தில் இருக்கும் பாம்பாக இருக்கிறார் என்பதாலேயே
சென்ற
பிரதமரைப்பற்றி மோடி மௌன்மோஹன் சிங் என்பார் ஆனால்மோடி நிறைய பேசுகிறார் எல்லாமே
ஒன் வே தான் மன்கி பாத் என்னும் நிகழ்ச்சி மூலம் அவரிடம்யாரும்கேள்வி கேட்கக் கூடாது இதனாலேயே பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதுஇல்லை அவர் பிரதமரான பிறகு ஒரு முறை
கூட பத்திரிக்கையாளர்களை சந்தித்தது கிடையாது
2007ல் என்று நினைவு மோடி குஜராதின்முதலமைச்சராக இருந்த
நேரம் கரன் தாப்பர் என்னும் பத்திரிக்கையாளரின் பேட்டி மோடிக்கு கோபம் வந்து பாதியிலேயே
எழுந்து விட்டாராம்
கோத்ரா
கலவரத்தின்போது அதைஅடக்க எந்தமுயற்சியும் மோடி எடுக்க வில்லையாம் மாறாக ரயிலில்
எரிக்கப்பட்ட கர் சேவக்குகளின் சடலங்களை ஊர்வலமாகஎடுத்துச்செல்ல
அனுமதித்தாராம்இந்தச் செய்தியை ஊர்ஜிதப்படுத்தும்விதம் எந்த செய்தியும் கிடைக்கவில்லை சென்ற அரசு ஊழலில் சிக்கித்
தவித்ததையே சொல்லிக் காட்டப்படுகிறதுஅரசு மாறினால்
இவர்கள்செய்த ஊழல்கள் அம்பலத்துக்கு வரும்
தகவல்
அறியும் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்தில்
80%அதிகமான தகவல்கள் மறுக்கப்படுகின்றதாம்
ஆண்டு தோறும் ஏழைகளுக்கு நூறு நாள் வருமானம் வரும்படி தரும் MGNREG இப்போது
செயல் படுகிறமாதிரி இல்லை திட்டக் கமிஷன்
என்னும் பெயரை மாற்றி NITI AYOG என்னும்
புதுப்பெயரில் அழைக்கப்படுகிறது மாற்றம் புதுபொலிவுடன் இயங்க என்னும் எண்ணத்தில்
செயல் படுகிறதாம் இதன் சொந்தக்காரர் மோடியேவாம்
இம்மாதிரி பலபெயர்களை மாற்றி டிங்கெரிங் செய்வதில்
வல்லமை படைத்து விட்டார்கள் உ-ம் ஆதார் எண்
முதலில்மறுத்தவர்கள் இப்போது நடை முறைப் படுத்துவதில்
தீவிரம்காட்டுகிறார்கள் இப்போது எது செய்தாலும் அதன் க்ரெடிட்
மோடிக்கே ஆனால் அஸ்திவாரம் எழுப்பப்பட்டு
இருந்ததை இருட்டடிப்பு செய்கிறார்கள் GSTயும் அம்மதிரிதான் பெரும்பான்மை பலத்தில் இருப்பதால் எதையும் செய்யலாமென்று நினைக்கிறார்கள்
பெரும்பான்மையின்ர் ஒரு கழுதையை குதிரை என்று சொன்னால் ஏற்கமுடியுமா இதைஎல்லாம் எனக்கே இருக்கும் பெர்செப்ஷனில்தான் எழுதுகிறேன்
நிற்க மேலே துவக்கத்தில்எழுதி இருக்கும் யாருடி அவன் என்னும் தலைப்பில் ஒருசிறுகதை எழுதுவேன் என்றுவாசகர்களை எச்சரிக்கிறேன் வாசகர்களும் முயற்சிக்கலாமே
பதிவுக்கு நன்றி. perception of reality என்ற ஒன்றும் உண்டு.
பதிலளிநீக்குriyality தானே எழுதி இருக்கிறேன்
நீக்குreality என்று இருக்கவேண்டும்
நீக்குமுடிவில் எச்சரிப்பது இப்பொழுதே மனதில் கிலியை உண்டாக்குகிறது ஐயா.
பதிலளிநீக்குசிறுகதைகள் கிலி ஏற்படுத்துமா அதுவும் கில்லர்ஜிக்கு
நீக்குஉங்கள் கருத்துகளைச் சொன்னது நன்று. அவரவருக்கு அவரவர் எண்ணங்கள்.
பதிலளிநீக்குகதை... படிக்கக் காத்திருக்கிறேன்!
ஆனால் பலரும் பொது வெளியில் அவரவர் கருத்தை சொல்வதில்லையே அடுத்து சிறுகதை பதிவாகும்
நீக்குமனதின் குரல் நிகழ்ச்சியின் பின்னணி இதுதானோ?
பதிலளிநீக்குஒரு வழிப்பேச்சின் மூலம் சொல்கிறார் பலபள்ளிகளில் அதைக்கேட்க கட்டாயப்படுத்துகிறர்கள் என்றும் கேள்விப்பட்டேன்
நீக்குஉங்கள் மனத்தில் பட்டதை ,உங்கள் கருத்துகளைத் துணிச்சலாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் . உங்கள் மதிப்பீடு சரியாக இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன் .பாராட்டு .
பதிலளிநீக்கு(உங்கள் அரக்கோண நாள்களில் எனும் பதிவின் தேதியைத் தெரிவியுங்களேன் ; வாசிக்க ஆர்வங் கொண்டுள்ளேன் .)
ஐயா வருகைக்கு நன்றி நேராகப் பேசுவதே என் பலமும்பலவீனமும் இணிய வெளியில்தானே பலர் அறிய கருத்துகூற முடியும்
நீக்குமிகவும் சிரமப்பட்டுத்தேடியும் பதிவுகளில் கண்டு பிடிக்க முடியவில்லை ஆனால் எழுதி இருக்கிறேன்பிரதிலிபிக்கும் ஞாபகம் வருதேஎன்னும் போட்டிக்கு அனுப்பியும்உங்கள் மின்னஞ்சல் முகவரிகு அனுப்பட்டுமா காப்பிஎடுத்து அனுப்பவேண்டும் கூடவே மின்னஞ்சல் முகவரியும்தர முடியுமா இல்லை என்றால் தேடி எடுக்கவேண்டும் உடன் அனுப்ப இயலாததற்கு வருந்துகிறேன்
நீக்குடிங்கெரிங்-ல் வல்லமை... Good...(!)
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்
நீக்குவெங்கட் நாகராஜ் கருத்தை வழி மொழிகிறேன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்தாக கேட்க விரும்பினேன்
நீக்குதாங்கள் எச்சரிக்கையோடு தெரிவித்திருக்கும் சிறுகதையைப் படிக்க ஆவல்
பதிலளிநீக்குஎச்சரிக்கை எடற்கு எனில் எதையோ எதிர்பார்த்து முற்றிலும் வேறான கதையைக் காண்லாம் என்பதை தெரிவிக்கவே வேறு விதமாக எழுத வாசகர்களும் முயலலாமே
நீக்கு//ஆனால் அஸ்திவாரம் எழுப்பப்பட்டு இருந்ததை இருட்டடிப்பு செய்கிறார்கள் //
பதிலளிநீக்குஉங்கள் எண்ணத்தை அறிந்துகொண்டேன். இந்திராவும் இதுபோல்தான் எல்லாவற்றையும் தன் பெயரில் செய்தார்.
வலிமையான தலைவர் பிம்பம் தனக்கு இருக்கவேண்டும் என்று ஆசைப்படும் எல்லோரும் செய்வதுதான் இது.
பிரதமர் கொண்டுவந்த திட்டத்தையே பதவி எதிலும் இல்லாத ராகுல் காந்தி அவர்கள் 'நான்சென்ஸ்' என்று சொன்னாரல்லவா?
தங்கள் தங்கள் பிம்பத்தைக் கட்டமைத்துக்கொள்ள எல்லா அரசியல்வாதிகளும் முனைவார்கள், முனைந்துள்ளனர்.
நான் மோடியைப் பற்றி சொல்ல வந்தால் அவர்களும் இப்படித்தானே என்று நியாயப்படுத்தலாமா யார் யார் எப்படி என்பதை விளக்க அல்ல இப்பதிவு மோடியைப் பற்றின பெர்செப்ஷனே இது
பதிலளிநீக்குநான் அன்றே வாசித்துவிட்டேன் சார் ஆனால் பயணத்தில் இருந்ததால் கருத்து போட முடியலை...
பதிலளிநீக்குஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெர்செப்ஷன் இர்க்கலாம் அவரவர் பார்வை அவரவர்க்கு...சார்.
கீதா
ஆனால் பலரது பெர்செப்ஷன்களே நாட்டின் நிலையைத் தீர்மானிக்கிறது
பதிலளிநீக்கு