Thursday, December 20, 2018

கதை தொடர அழைப்பு
                                      கதை தொடர அழைப்பு
                                      ---------------------------------------
                                      ( கண்டிஷன்  ஏதுமில்லை)
 இன்னும் ஒரு சிறுகதை. சிறுகதை எழுதும்போது  என்னை நடுவில் இருத்தி  சம்பவங்களைக் கோர்வையாகச் சொல்வது எனக்குப் பிடிக்கும் ஆனால் வாசகர்கள் உண்மையில் இந்த நானின் கதையோ என்று எண்ணும்    சாத்தியக் கூறு உண்டு. பரவாயில்லை  என்ன பற்றிய உண்மைகள்  பல பகிர்ந்திருந்தும் தவறான பெர்செப்ஷனிருப்பதையும் காண்கிறேன்
“மனைவி அமைவதெல்லாம்  இறைவன் கொடுத்த வரம் “”
(அப்படியானால் கணவன் அமைவது யார் கொடுத்த வரம்  அல்லது சாபம்எப்போதும் இந்த மைண்ட் வாய்ஸ் எதையாவது சொல்லும் )

அவனுக்கு மனைவி அமைந்தது  இறைவன் கொடுத்த வரமா? அல்லது அவளுக்கு கணவன் அமைந்தது  இறைவன்கொடுத்த வரமா திருமணத்துக்கு நிச்சயமான நாளிலும் இந்தப் பாட்டு பாடப்பெற்றது ஜோடி பிரமாதமென்று சொல்ல முடியாது புரியவே முடியாத ஒரு திருமண பந்தம்தான் அது பிடித்ததோ பிடிக்கவில்லையோ  திருமணம் என்ற ஒன்று நடந்து விட்டால்  ஒருவருக்காகவே மற்றவர் என்னும் நம்பண்பாடு அங்கும்  இருந்தது கூடஅவளுக்கு   நம் பண்பாட்டிலேயே இரண்டறக்கலந்துவிட்ட மாமியார் கொடுமையும்  இருந்தது சிறிசுகள் அப்படியும் இப்படியும்   இருக்கும் என்பது தெரிந்தாலும் மகன் தன் கட்டுப்பாட்டுக்குள்தான்   இருக்க வேண்டும் என நினைக்கும் தாய்தான் அங்கு மிருந்தாள்
(இதென்னடா பெயர் எதுவுமில்லாத கதை என்று தோன்றுகிறதா கதை மாந்தர்களுக்கு பெயர் கொடுப்பதே பெரிய வேலை இருப்பது இரண்டு மூன்று பாத்திரங்கள்தானே பெயர் வேண்டாமே) சின்னஞ்சிறிய புது மணத் தம்பதிகள் தனிக்குடித்தனம்  போனார்கள்  அதில்தானே பொறுப்புகள்தெரிய வரும் வாய்ப்பு உண்டுஆனால் தாயின்  அருகேதான்  வாழ்வு தொடங்கியது தாய் தினமும் வருவாள் மறு மகளுக்கு நிறையவே பாடம் எடுப்பாள்  பெர்சனல் சுதந்திரமாவது ஒன்றாவது மகன் பாடுதான்  திண்டாட்டம் மறுமகளுக்கு  ஒரு வெய்லிங் வால்  தேவைப்பட்டது பெண்ணோ மாட்ரிலீனியர் வழக்கத்தை ஆதரிப்பவள் பையனுக்கு இது பற்றி எல்லாம் கவலை இல்லை கணவனிடம் எதையாவது சொன்னால்  இதுதான்  நம்வாழ்க்கை பெற்றவர்களை அனுசரித்துபோவதுதான் நல்லது  என்று கண்டிப்பான்     பெண் தன் உறவினரிடம் சொல்லிப் புலம்புவாள்  சில நேரங்களில் மாமியார் சகிக்க முடியாதவளாகிப் போனாள் இத்தனைக்கும் பெண் ஒரு முதுகலைப்பட்டதாரி  தான் அழகில்லையோ என்னும் எண்ணம்  அவ்வப்போது தலை காட்டும் தன்னால் தனியே இருக்க முடியும்   என்னும் எண்ணம்  கொண்டவள் என்னதானிருந்தாலும்   இரவு வந்து விட்டால்  கணவன் மனைவி கூடல் மட்டும்  நிற்கவில்லை இரண்டு குழந்தைகளும்   பிறந்தனர் 
இதை எழுதும்போதே ஒரு ஐடியா  வருகிறது வலையில் கதை  பண்ணக்கூடியவர்கள்பலர் உண்டு இதுவரைஎழுதியதில் இருந்தே கதையை டெவெலப்  செய்யக் கூடியவர்கள் தொடர்ந்தால் நன்றாய்  இருக்கும் என்று தோன்றியது  செய்யலாம்தானே      

26 comments:

 1. நான் இன்றைக்கு முதலில் தெரிவு செய்து வைத்திருந்த பதிவு கிட்டத்தட்ட இதுபோலத்தான். கடைசி நிமிடத்தில் வேறு ஒன்றை வெளியிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. பாவம் வாசகர்கள்

   Delete
  2. ஸ்ரீராமின் பதிவைப் படிக்க முடியாமல் போனதால்

   Delete
 2. இது அநேகமாய்ப் பலர் வாழ்விலும் நடப்பது தான். சில தாய்மார்கள் மூத்த பிள்ளைக்குக் கல்யாணம் என்றாலே ஏற்க மாட்டார்கள். அடுத்தடுத்த பிள்ளைகள் கல்யாணம் செய்து கொள்வதில் ஆக்ஷேபம் இருக்காது. மூத்த பிள்ளை மட்டும் என்றென்றும் அம்மாபிள்ளையாகவே இருக்க வேண்டும். இப்படி ஒரு தாயைப் பார்த்திருக்கேன்.

  ReplyDelete
  Replies
  1. இந்த கருத்து புதிதாய் இருக்கிறது

   Delete
  2. புதிதெல்லாம் இல்லை. இப்படி நடந்திருக்கு. அந்த மூத்த பிள்ளை பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை நடத்தியதும் தெரியும். தன் தந்தை இறந்த பின்னர் தான் தன் திருமண வாழ்க்கையைப் பற்றி வெளி உலகுக்கு அறிமுகம் செய்தார். அம்மாவால் அப்போது ஒன்றும் பேச முடியவில்லை.

   Delete
  3. இதெல்லா எக்செப்ஷனலாக இருக்கலாம்

   Delete
 3. இனிய காலை வணக்கம் 🙏.

  கதை தொடரப் போகும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் 🎊.

  ReplyDelete
  Replies
  1. யாரும் தொடரப் போவது இல்லை என்றே நினைக்கிறேன் இன்னுமொரு பிள்ளையார்சுழி கூடக் காணோமே

   Delete
 4. "கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்"

  இந்த தலைப்பை நான் பொதுவில் பரிசளிக்கிறேன் ஐயா.

  தொடரட்டும் கதைக்களம்....

  ReplyDelete
  Replies
  1. என்பதிவிலிருந்து கதைகள் தொடர வேண்டும் என்றுதான் நினைத்தேன் கணவனமைவதெல்லாம் என்று கூட எழுத்லாமே

   Delete
 5. Replies
  1. அது ஏன்நீங்களக இருக்கக் கூடாது

   Delete
 6. ஜிஎம்.பி. சார்... இது அனேகமா எல்லா இடங்களிலும் இருப்பதுதான். நான் சொல்றது சரியான்னு சொல்லுங்க.

  பொதுவா, பையனைப் பெற்ற அம்மா, மருமகளை எப்போ பார்த்தாலும் கண்டிப்போடு வைப்பா. அதுனால மருமகள் மனசு வருத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். பேரன்/பேத்திகள் அப்பாவின் அம்மாவோடு ரொம்ப ஆசையா இருக்கமாட்டாங்க. அவங்க, அம்மாவின்பெற்றோர்களோடு ரொம்பவும் அன்பா இருப்பாங்க. அதுக்கு ஏத்த மாதிரி அம்மாவோட பெற்றோர்கள் பேரன் பேத்திகிட்ட ரொம்பவும் பாசமா இருப்பாங்க.

  கடைசி காலத்தில் மகனைப் பெற்ற தாய், நேச்சுரலாவே தன் மருமகள்கள், அவர்கள் குழந்தைகள் தன்னைப் புறக்கணிப்பதை அல்லது தேவையான அன்பு செலுத்தாததை உணர்வாள். மகன் மட்டும் தன் கடமைக்கான அன்போடு இருப்பான்.

  பையனும், அவனுடைய அப்பாவோட கொஞ்சம் நெர்வஸ் ரிலேஷன்ஷிப்லதான் இருப்பான் (ஏன்னா அப்பா எப்போதும் டாமினேடிங்). அதனால அவனும் அவன் மாமனார், மாமியாரிடம் இன்னும் நல்ல ரிலேஷன்ஷிப்ல இருப்பான்.

  இதைத்தான் நான் பொதுவாக எங்கும் கண்டிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. எக்செப்ஷன்ஸ் ஆர் தெயர்...நெல்லை...நானும் நீங்கள் சொல்லியிருப்பது போல் கண்டிருந்தாலும், குறைவுதான். நான் அதற்குச் சம அளவில் வைஸ் வெர்சாவும் கண்டிருக்கேன். குறிப்பாக எங்கள் குடும்ப சர்கிளில் பெரும்பான்மை வைஸ்வெர்சா...அதாவது கணவன் வழிக் குடும்பத்தோடு...அல்லது ஈக்வலாக..

   கீதா

   Delete
  2. என் மாமியார் மாமனார் கொடுத்து வைத்தவர்கள் காட் ப்ளெஸ்ட்... என்றே சொல்லுவேன். பிள்ளைகள் தாங்குவார்கள் அதற்கு ஈக்வலாக அவர்கள் மனைவிகளும்.

   கீதா

   Delete
  3. @நெத கதையாக்கி இருக்கலாமே

   Delete
  4. @கீதா இப்படி ஆளாளுக்கு அனுபவங்களைப் பகிர்வதைவிட்டுஅவற்றையே கதையாக்கி இருக்கலாமே

   Delete
  5. @பிள்ளைகள் தாங்குவார்கள் சரி ஆனால் அவர்களின் மனைவிகள்..? எங்கோ இடிக்குதே

   Delete
 7. வித்தியாசமான பாணியில், கதாபாத்திரங்களுக்குப் பெயர் வைக்காமல் நீங்கள் ஆரம்பிவைத்த கதையைத் தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. பதிவே பிறர் தொடர வேண்டும் என்று நினைத்ததாலேயே

   Delete
 8. என்னமோ தெரியல்ல இப்போதெல்லாம் போஸ்ட் எழுதவே நேரம் இடங்குடுக்குதிலை, இதில கதை எழுத மூட் வரவேண்டுமே...

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லை மூட் வரும்போது முயற்சிக்கலாம் அல்லவா

   Delete
 9. சிரமம் தான் - அடியேன் தொடர்வது...

  ReplyDelete