வெள்ளி, 14 டிசம்பர், 2018

மஹாபாரதக் கதைகள்



                                   மஹாபாரதக் கதைகள்
                                    ------------------------------------
மஹாபாரதத்தில் இருந்து சில  கதைகளை முன்பும்  பதிவிட்டிருக்கிறேன்
  மஹாபாரதம்   ஒரு கதைக்களஞ்சியம்  எத்தனை எத்தனை கதைகள் அவ்வப்போது கேட்டிருந்தாலும்  பாழும் நினைவில் நிற்பதில்லை பாண்டவர்கள் அக்ஞாத வாசத்துக்கு முன் காட்டில் இருந்தகாலம் அவர்களுக்கு தாகம்  மிகுதியாகவே அருகில் எங்காவது  நீர் நிலைகள் இருந்தால் அங்கு சென்று நீர் எடுத்து வருமாறு நகுலனைப் பணிக்கிறான்  தருமன்  நகுலனும் ஒருமரத்தின் மேலேறி நீர் இருக்கும் இடம் தெரிகிறதா  என்று பார்த்தான்  ஓரிடத்தில் இருந்த நாரைகள் சில பறந்து வருவதுகண்டு  நகுலன் அவ்விடம்தேடிப்போக  ஒரு குளக்கரைபக்கம் வருகிறன்
முதலில் தான் நீர் அருந்த குளக்கரைப் ப்க்கம் போகிறான்   அப்போது ஒரு அசரீரி தன் கேள்விக்கு பதில்தந்தால்தான்  குளத்தில் நீர் அருந்த முடியும் என்றதுநகுலன் அசரீரி குரலைப் புறக்கணித்து குளத்துக்குள் இறங்க முற்பட கரையிலேயே மாண்டு விழுகிறான் பின் நகுலனைத் தேடி சகாதேவன்  அர்ஜுனன்  பீமன் என எல்லோரும் வந்து அசரீரியின் சொல்லை மதிக்காமல் மாண்டு விழுகின்றனர் இவர்களைத்தேடி யுதிஷ்டிரன்  வருகிறான் குளக்கரையில்  தன்சகோதரர்கள்  மாண்டு கிடப்பதைப் பார்க்கிறான் அவனுக்கும்  அசரீரி குரல் கேட்கிறது  தன் கேள்விகளுக்குப் பதில் தந்தால்தான்  நீர் அருந்தலாம் என்றும் இல்லயென்றால்  அவன் சகோதரர்களுக்கு  நேர்ந்த கதியே இவனுக்கு  நேரும் என்று அசரீரி எச்சரித்தது அசரீரி யார் என தருமன்கேட்க  தானொரு யக்ஷன்  என்றுபதில் கூறியது அசரீரி     

அப்போதுதான் தன் சகோதரர்கள் தவறான பதில் கூறி, மாண்டது புரிந்தது தர்மருக்கு!
“”
நான் விடையளிக் கிறேன்என்றார் தர்மர்.

யக்ஷன் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான்.
“”
எது தினமும் சூரியனை உதிக்கச் செய்வது?”
“”
பிரம்மம்.”
“”
மனிதன் எதில் நிலைத்து நிற்கிறான்?”
“”
சத்தியத்தில்.”
“”
மனிதன் எதனால் சிறப்படைகிறான்?”
“”
மன உறுதியால்.”
“”
மனிதன் எதனால் எப்போதும் துணை யுள்ளவனாகிறான்?”
“”
தைரியமே மனிதனுக்குத் துணை.”
“”
எந்த சாஸ்திரம் படித்து மனிதன் புத்திமானாகிறான்?”
“”
இது சாஸ்திரத்தால் அல்ல; பெரியோர்களைப் பொறுத்தே.”
“”
பூமியைவிட பொறுமைமிக்கவர் யார்?”
“”
தாய்.”
“”
ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தவர் யார்?”
“”
தந்தை.”
“”
காற்றைவிட வேகமாகச் செல்வது எது?”
“”
மனம்.”
“”
புல்லைவிட அற்பமானது எது?”
“”
கவலை.”
“”
மனிதனுக்கு தெய்வத்திடமிருந்து கிடைத்த நன்மை எது?”
“”
மனைவி.”
“”
தேசாந்திரம் போகிறவனுக்கு யார் துணை?”
“”
வித்தை.”
“”
சாகப் போகிறவனுக்கு யார் துணை?”
“”
தர்மம். அதுதான் அவன்கூட பயணம் செல்லும்…”
“”
பாத்திரங்களில் எது பெரிது?”
“”
அனைத்தையும் தன்னுள்ளே அடக்கிக்கொள்ளும் பூமி.”
“”
எது சுகம்?”
“”
சுகம் நல்லொழுக்கத்தில் நிலைபெறுகிறது.”
“”
மனிதன் எதைவிட்டால் துயரமில்லை?”
“”
கோபத்தை.”
“”
எதை இழந்தால் மனிதன் தனவானாகிறான்?”
“”
ஆசையை…”
“”
மகிழ்ச்சியுடன் வாழ்பவர் யார்?”
“”
கடன் வாங்காதவர்.”
“”
வேகம் மிக்கது எது?”
“”
நதி.”
“”
வெற்றிக்கு அடிப்படை எது?”
“”
விடாமுயற்சி.”
“”
உலகில் மிகச்சிறந்த தர்மம் எது?”
“”
கொல்லாமை.”
“”
உலகெங்கும் நிறைந்து நிற்பது எது?”
“”
அஞ்ஞானம்.”
“”
முக்திக்குரிய வழி எது?”
“”
பற்றினை முற்றும் விலக்குதல்.”
“”
முக்திக்குத் தடையாக இருப்பது எது?”
“””
நான்என்னும் ஆணவம்.”
“”
எது ஞானம்?”
“”
மெய்ப்பொருளை அறிதல்.”
“”
எப்போதும் நிறைவேறாதது எது?”
“”
பேராசை.”
“”
எது வியப்பானது?”
“”
நாள்தோறும் பலர் இறப்பதைக் கண்டும், தான் என்றென்றும் வாழ்ந்திருப்போம் என்று மனிதன் நினைக்கிறானே, அதுதான்.”
“”
பிராமணன், உயர்வானவன் என்பது குலத்தினாலா? ஒழுக்கத்தினாலா? கற்ற பல சாஸ்திரங்களினாலா?”
“”
ஒழுக்கத்தினால் மட்டுமே உயர்ந்தவனாகிறான். நான்கு வேதங்கள் கற்றவனாயிருந்தாலும், கெட்டநடத்தை உள்ளவன் பிராமணன் அல்ல; இழிந்தவனே…”
“”
அற்புதம் தர்மபுத்திரரேஉமது பதில்கள் அபாரம். ஆனால் இறந்த உன் சகோதரர்களில் ஒருவனை மட்டும் நான் உயிர்ப்பிக்கிறேன். உமக்கு யார் வேண்டும்?”
“”
நகுலன்…” சற்றும் யோசியாமல் பதிலளித்தார் தர்மர்.

சத்தியமாக இந்த கேள்வி  பதில்கள் என்நினைவுக்கு வரவில்லை இணையத்தில் தேடி எடுத்தேன் கதைகள் மூலம்   சில செய்திகளை அறிய வைக்கும் உத்தி எனக்குப் பிடித்தது ஆனால் வலை உலகில் கேள்வி கேட்பதையே தவறு என நினைப்பவர்கள்  இருக்கிறார்கள் பல கேள்விகளும்   பதில்களும் என்னை இன்னும் கேள்வி கேட்கச் செய்கிறது  ஆனால் இந்த யக்ஷன்  பதில்களில் திருப்தி அடைந்து  விட்டான்
 மாண்ட நால்வரில் ஒருவர் உயிரைத் திருப்பமுடியும் என்றும் அப்படியானால் யாரை மீண்டும் உயிர்ப்பிக்க தருமன் விரும்புவான் என்னும் யக்ஷன் கேள்விக்கு நகுலன் உயிரை திருப்ப வேண்டுகிறான்     அதற்கு தருமன்சொன்ன காரணம் குந்தியின் பிள்ளைகளில் தான்பிழைத்து இருக்க மாதுரியின்  மூத்த மகன் நகுலன் பிழைப்பதே சரி எனும் தருமனின் பதிலில் மிகவும் திருப்தி அடைந்த யக்ஷன்மீதமிருந்தோரின் உயிர்களையும்  திருப்பிக் கொடுத்தான்   என முடிகிறது கதை  

22 கருத்துகள்:

  1. இந்த தருமன் -யட்சன் கேள்வி பதில்கள் எல்லா இடத்திலும் கிடைக்கிறது. கிடைக்காதது தர்மர் - நகுஷன் கேள்வி பதில்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு இட்ட மறு மொழியைப் பாருங்கள்

      நீக்கு
  2. எது வியப்பானது ?

    நாள்தோறும் பலர் இறப்பதைக் கண்டும், தான் என்றென்றும் வாழ்ந்திருப்போம் என்று மனிதன் நினைக்கிறானே, அதுதான்.

    இது எனக்கு மிகவும் பிடித்த பதில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி மனிதன் நினைக்கிறானா ஆனால் என்றும் வாழமட்டும் ஆசை உண்டு என்றே தோன்றுகிறது

      நீக்கு
  3. //கிடைக்காதது தர்மர் - நகுஷன் கேள்வி பதில்கள்.// முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னர் நீங்க கேட்டு நான் கொடுத்ததாக நினைவு. பழைய மெயில்கள் பலவற்றையும் அழித்துவிட்டதால் கிடைக்குமானு தெரியலை! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இந்த தலைப்பில் ஏதும் தாங்களிடம்கேட்கவில்லை நீங்களூம் ஏதும் தரவில்லை நகுஷன் பற்றி இப்போதுதான் பின்னூட்டங்கள் மூலம் அறிகிறேன் வலையில்மேய்ந்ததில் இந்த சுட்டியில் சில கதைகள் கிடைத்தன/ https://mahabharatham.arasan.info/2014/06/Mahabharatha-Vanaparva-Section180.html

      நீக்கு
    2. நீங்கள் தந்திருக்கும் சுட்டிக்கு நான் முன்னர் ரெகுலர் வாசகன். இப்போதும் பதிவுகள் வருகின்றன. சென்று பார்ப்பதில்லை.

      நீக்கு
    3. //நான் இந்த தலைப்பில் ஏதும் தாங்களிடம்கேட்கவில்லை நீங்களூம் ஏதும் தரவில்லை//

      கீதா அக்கா குறிப்பிடுவது என்னை!

      நீக்கு
    4. மன்னிக்கவும். அது ஸ்ரீராமுக்குச் சொன்ன மறுமொழி. அந்த மடலைத் தேடினேன். கிடைக்கலை. அவர் பெயர் போடாததால் உங்களுக்குச் சொன்ன மாதிரி புரிந்து கொள்ளப் பட்டது.

      நீக்கு
    5. ஸ்ரீராம் பெயர் குறிப்பிடாமல் மறுமொழி சொல்லாதீர்கள் எனப் புலம்புவார். இப்போத் தான் என்னோட ம.ம.வில் ஏறி இருக்கு! :))))))

      நீக்கு
    6. @ ஸ்ரீ பதிவுகள் சுட்டியில் இருந்து ரெகுலராக வருமா தகவல் எனக்குப் புதிது

      நீக்கு
    7. @ஸ்ரீ எனக்கு தெரியவில்லை

      நீக்கு
    8. @கீத சாம்பசிவம் என் பின்னூடமாக வந்ததால் எனக்கு என்று புரிந்துகொண்டேன்

      நீக்கு
    9. @கீதா சாம்பசிவம் சில நேரங்களில் அப்படி ஆவதுண்டு

      நீக்கு
  4. கேட்ட, அறிந்த கதைதான் ஐயா. இருந்தாலும் உங்களுடைய பாணியில் எழுதியதைப் படிக்கும்போது மிகவும் சிறப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  5. மகா பாரதக் கதைகள் படிச்சு முடியாதே.. உங்கள் போஸ்ட்டிலும் பல புது விசயம் பொறுக்கிக் கொண்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஹாபாரதக் கதைகள் முன்பே சில எழுதி இருக்கிறேன் செலெக்டெட் ஒன்ஸ்

      நீக்கு
  6. 124 கேள்வி பதில்கள் கீழுள்ள இணைப்பில் உள்ளது ஐயா...

    https://mahabharatham.arasan.info/2014/10/Yaksha-Prashna-124-questions.html

    பதிலளிநீக்கு