Monday, December 24, 2018

ஏரியா பூஜை                                                   ஏரியா பூஜை
                                                    -------------------


எங்களூர்  பெங்களூர்  நான் வசிக்கும் இடத்துக்கு வழி சொல்வதென்றால் ஜலஹள்ளி  ஐயப்பன் கோவில் அருகே  என்றுதான் சொல்வேன்   அந்த அளவு இங்கிருக்கும் ஐயப்பன்  கோவில் பிரசித்திபெற்றது வழக்கம் போல்  மார்கழி மாதம் ஒன்றாம்  நாள் கோவிலில்கொடி ஏற்றுவார்கள் அந்தக் கொடி ஏற்றம் அன்று எங்கள் ஏரியா பூஜையாய் இருக்கும்   எங்கள் ஊர் ஒரு மினி கேரளா ஆகவே ஐயப்பவழிபாடு சிறப்பாக இருக்கும்   எங்கள் ஊர்க் கோவிலின் மேல் சாந்தி பிரதம பூசாரி  சபரிமலைக் கோவிலுக்கு  பூசாரியாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டு  இருக்கிறார்
ஏரியா பூஜை பற்றி முன்பே பதிவிட்டிருக்கிறேன்  விவரமாக கூறப் போனால் செய்திகள் ரிபீட் ஆகும் சில ஆன்மீகப் பதிவர்கள் போல கோவில்பற்றியெ எழுத எனக்கே முடிவதில்லை  இருந்தாலும் இந்த வருடத்தியபூஜை [பற்றியும் சிறிதேனும் கூற விரும்புகிறேன் 
கொவிலில் திரு விழாக்களென்றால்  அதனால் பலன் பெறுவோர் பலரும் உண்டு  கிராமியக் கலைகள் பலவும் காணலாம் முக்கியமாக  செண்டை வாத்தியம் கேட்கலாம் தீயம் போன்ற  கேரள நிகழ்ச்சிகள் காணலாம்  இப்போதெல்லாம் டெக்னாலஜி உபயோகப்படுத்தி கதைகள் காட்டப்படுகின்றன
இங்கு ஏரியா பூஜையின் போது  மாலை சாலையே  ஸ்தம்பித்து நிற்கும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம்   ப்ரொசெஷன்  இருக்கும்  கேரள வழக்கமாக குழந்தைகள்..? (பெண்குழந்தைகள்) தாலமேந்தி ஊர்வலம்வருவார்கள் இந்த
முறை நான் படங்கள் அதிகம் எடுக்கவில்லை எனக்குப் பிடித்த சிங்காரிமேளத்தையும்  ஜெண்டை வாத்தியக் கச்சேரியும்  பதிவிடுகிறேன்   டெக்னாலஜி உபயோகப்படுத்தி சொல்லப்பட்ட  நிகழ்ச்சிகளில்  கண்ணனின்  காளிங்க நர்த்தனம்  பதிவிடுகிறேன் 
முன்பெல்லாம்  வீட்டுக்கு வந்து பறை அளப்பார்கள் குறிப்பிட்ட தொகை கொடுத்தால் வீட்டின்முன்  யானையை நிறுத்தி  பறை நெல் அளப்பார்கள் கோவிலுக்குச் செய்யும் ஒருகைங்கர்யம் அது இப்போது நின்று  விட்டது யானையை க்கொண்டு வருதலும் தடை செய்யப்பட்டு விட்டது
எந்த முக்கிய விழாக் கூட்டமும் என் வீட்டின்  முன்பாகப்போகும்எனக்கு முன்பு போல் ஓடியாடிப் படம் எடுக்க முடிவதில்லை எல்லாம்  நடப்பதுதானே என்னும் சலிப்பும் வந்து விட்டது

          
24 comments:

 1. காணொளி பிறகு பார்க்கவேண்டும். நேற்று க்ரோம்பேட் சென்று வந்தபோது மிகப்பெரிய பந்தலிட்டு அய்யப்பன் பூஜை நடந்து கொண்டிருந்தது. பெரிய கூட்டம் பெரிய எவர்சில்வர் தட்டுகளில் பிரசாதம் வாங்கிச் சென்றவண்ணம் இருந்தனர்.

  ReplyDelete
  Replies
  1. காணொளி அவசியம்பாருங்கள் இந்த ஐயப்பன் கோவிலில் தினம் வருவோர் அனைவருக்கும் அன்ன தானம் உண்டு

   Delete
 2. அலுப்புடனே நிறைவான படங்களைக் கொடுத்து அழகாக எழுதி இருப்பதற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. அலுப்பு இருந்தாலும் பதிவிடாமல் இருக்க முடியவில்லை

   Delete
 3. ஜலஹள்ளி பகுதியில்தான் வசிகிறீர்களா ஐயா.
  ஜலஹள்ளி ஐயப்பம் கோயிலுக்கு இரண்டு மூன்று முறை வந்திருக்கிறேன். ஜலஹள்ளியில்தான்., ஆசிரியர் பயிற்சி மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்காக அனுமதி வழங்கும் தென் மாநிலங்களுக்கான அலுவலகம் உள்ளது. நூறு முறைக்கும் மேல் வந்திருப்பேன்

  ReplyDelete
  Replies
  1. இந்த ஐயப்பன் கோவில் ஜலஹள்ளி மேற்கில் இருக்கிறது மேலும் ஜலஹள்ளி வில்லேஜும் உண்டு ஆசிரியர் பயிற்சிப்பள்ளி கண்ட நினைவில்லை

   Delete
 4. காணொளிகள் கண்டேன்.
  ஜலஹள்ளி ஒருமுறை கண்டிப்பாக வருவேன், ஐய'ப்ப்பன் கோவிலுக்கல்ல! ஐயா'வின் வீட்டுக்கு...

  ReplyDelete
  Replies
  1. வருகை புரிந்தால் மகிழ்வேன்

   Delete
 5. வாய்ப்பு கிடைக்கும்போது ஜலஹள்ளி வருவேன், ஐயப்பனையும் உங்களையும் காண்பேன் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. வரவேற்க நான் தயாராய் இருக்கிறேன்

   Delete
 6. ஏரியா பூஜையில், அந்த ஏரியாவிலேயே பல வருடங்களாக வசிக்கும் நீங்கள் இல்லையே...... அல்லது முன்பு பொறுப்பெடுத்துவிட்டு, தற்போது பொறுப்பெடுப்பதில்லையா?

  ReplyDelete
  Replies
  1. என்றைக்கும் கோவில் பொறுப்பெடுத்ததில்லை அந்தஜனக் கூட்டத்தில் என்னைத் தேடினீர்களா நான் என்ன கடவுளா எங்கும் தெரிய

   Delete
 7. ஸார் தீயம்? தெய்யம் இல்லையோ....வடக்கு மலபார் கலை அது...

  உங்க ஏரியா எங்க ஏரியாவிலிருந்து 45 நிமிடம் பேருந்தில்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தெய்யமோ தீயமோ ஏதோ ஒன்று கேரள கலை அது சரிதானே

   Delete
 8. //ஏரியா பூஜை பற்றி முன்பே பதிவிட்டிருக்கிறேன் விவரமாக கூறப் போனால் செய்திகள் ரிபீட் ஆகும் சில ஆன்மீகப் பதிவர்கள் போல கோவில்பற்றியெ எழுத எனக்கே முடிவதில்லை //

  ஹா ஹா ஹா ஐயாவுக்கு இந்த வய்திலும் பொறாஆஆஆஆஆமை:))

  ReplyDelete
 9. பொறாமை அல்ல அலுப்பு

  ReplyDelete
 10. காணொளிகள் பார்த்தேன். நல்லாருக்கு...சார்.. (கீதா)

  துளசிதரன்: விவரங்கள் மற்றும் காணொளிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது சார். அங்கு வந்த போது ஐயப்பன் கோயில் தானே அடையாளம் வைத்து வந்தோம்.  ReplyDelete
  Replies
  1. கூட்டத்தின் நடுவே போய் படம் எடுத்தால் இன்னும்நன்றாக வ்ந்திருக்கும் ஆம் கோவில் தான் லாண்ட் மார்க்

   Delete
 11. //..முன்பு போல் ஓடியாடிப் படம் எடுக்க முடிவதில்லை. எல்லாம் நடப்பதுதானே என்னும் சலிப்பும் வந்து விட்டது//

  இரவும் வரும் பகலும் வரும்
  உலகம் ஒன்றுதான்
  களிப்பும் வரும் சலிப்பும் வரும்
  வாழ்க்கை ஒன்றுதான்..
  வாழ்க்கை ஒன்றுதான்!

  -இந்தப் பாடல் கேட்டதுண்டா?

  ReplyDelete
  Replies
  1. பாடல்கள் கெட்க நன்றாய் இருக்கும் வாழ்க்கையே ஒரு அனுபவம்தானே உடல் நலம்நன்றாக இருந்தால் எல்லாம் ரசிக்கலாம்

   Delete
 12. செம கூட்டம் போலிருக்கு. அவர்களின் அலுப்பில்லாத ஆர்வம் வியக்க வைக்கிறது.
  ஒலியைக் கூட்டித் தானே வைத்திருந்தேன்?.. ஏன் ஓசையே எழும்பவில்லை?..

  ReplyDelete
  Replies
  1. ஊர்வல நீளம்சுமார் 800 மீட்டர்கள் எனக்குப் பிடித்தது சிங்காரி மேளம் என்று சொல்லும் ஜெண்டை வகைதான்

   Delete
 13. அருமையான காணொளிகள்.

  ஜெண்டை வாத்தியக் கச்சேரியும் அருமை.
  கண்ணனின் காளிங்க நர்த்தனமும், குத்துவிளக்கை தலையில் வைத்து கொண்டு அணையாமல் ஆடி வருவது வியப்பை தருகிறது.
  உங்கள் ஏரியா நிகழ்ச்சிகளை காணொளியாக தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 14. காணொளிகளில் சில பழையதுவந்து ரசித்ததற்கு நன்றி மேம்

  ReplyDelete