ஏரியா பூஜை
-------------------
எங்களூர் பெங்களூர்
நான் வசிக்கும் இடத்துக்கு வழி சொல்வதென்றால் ஜலஹள்ளி ஐயப்பன் கோவில் அருகே என்றுதான் சொல்வேன் அந்த அளவு இங்கிருக்கும் ஐயப்பன் கோவில் பிரசித்திபெற்றது வழக்கம் போல் மார்கழி மாதம் ஒன்றாம் நாள் கோவிலில்கொடி ஏற்றுவார்கள் அந்தக் கொடி ஏற்றம்
அன்று எங்கள் ஏரியா பூஜையாய் இருக்கும் எங்கள்
ஊர் ஒரு மினி கேரளா ஆகவே ஐயப்பவழிபாடு சிறப்பாக இருக்கும் எங்கள் ஊர்க் கோவிலின் மேல் சாந்தி பிரதம பூசாரி சபரிமலைக் கோவிலுக்கு பூசாரியாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்
ஏரியா பூஜை பற்றி முன்பே
பதிவிட்டிருக்கிறேன் விவரமாக கூறப் போனால்
செய்திகள் ரிபீட் ஆகும் சில ஆன்மீகப் பதிவர்கள் போல கோவில்பற்றியெ எழுத எனக்கே முடிவதில்லை இருந்தாலும் இந்த வருடத்தியபூஜை [பற்றியும் சிறிதேனும்
கூற விரும்புகிறேன்
கொவிலில் திரு விழாக்களென்றால் அதனால் பலன் பெறுவோர் பலரும் உண்டு கிராமியக் கலைகள் பலவும் காணலாம் முக்கியமாக செண்டை வாத்தியம் கேட்கலாம் தீயம் போன்ற கேரள நிகழ்ச்சிகள் காணலாம் இப்போதெல்லாம் டெக்னாலஜி உபயோகப்படுத்தி கதைகள் காட்டப்படுகின்றன
இங்கு ஏரியா பூஜையின் போது மாலை சாலையே ஸ்தம்பித்து நிற்கும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ப்ரொசெஷன்
இருக்கும் கேரள வழக்கமாக குழந்தைகள்..?
(பெண்குழந்தைகள்) தாலமேந்தி ஊர்வலம்வருவார்கள் இந்த
முறை நான் படங்கள் அதிகம்
எடுக்கவில்லை எனக்குப் பிடித்த சிங்காரிமேளத்தையும் ஜெண்டை வாத்தியக் கச்சேரியும் பதிவிடுகிறேன் டெக்னாலஜி உபயோகப்படுத்தி சொல்லப்பட்ட நிகழ்ச்சிகளில் கண்ணனின்
காளிங்க நர்த்தனம் பதிவிடுகிறேன்
முன்பெல்லாம் வீட்டுக்கு வந்து பறை அளப்பார்கள் குறிப்பிட்ட தொகை
கொடுத்தால் வீட்டின்முன் யானையை நிறுத்தி பறை நெல் அளப்பார்கள் கோவிலுக்குச் செய்யும் ஒருகைங்கர்யம்
அது இப்போது நின்று விட்டது யானையை க்கொண்டு
வருதலும் தடை செய்யப்பட்டு விட்டது
எந்த முக்கிய விழாக் கூட்டமும்
என் வீட்டின் முன்பாகப்போகும்எனக்கு முன்பு
போல் ஓடியாடிப் படம் எடுக்க முடிவதில்லை எல்லாம்
நடப்பதுதானே என்னும் சலிப்பும் வந்து விட்டது