செவ்வாய், 1 ஜனவரி, 2019

புத்தாண்டே வாவா


                                          புத்தாண்டே  வாவா
                                          -------------------------------

  அப்பாடா ஒரு வழியாய் 2018 முடிந்து விட்டது  ஒரு புத்தாண்டு மலர்கிறது என்னைப் பொறுத்தவரை புத்தாண்டு பிறக்கும் போது  ஒரு ஸ்டாக் டேகிங்  செய்வது வழக்கம் 
இந்த முறை நினைக்கும் பொது  எல்லா ஆண்டும்போல இதுவும் இருக்கும்  என்று நினைக்க முடியவில்லை
என்னவெல்லாமோ சிந்தனைகள்  எழுகிறது  எல்லாவற்றையும் எழுத்தில் வடிக்க முடியவில்லை ஒவ்வொரு நாளும் விழித்து எழும்போது இன்றும் ஒரு நாள்  ஆயுள் நீட்டிக்கப்பட்டதுபோல் தான் உணர்கிறேன் 

நண்பர் ஸ்ரீராம் ஒரு முறை  எழுதி இருந்தார்  கடந்த ஆண்டின் நிகழ்வுகளைச் சிந்தித்துப் பார்ப்பது நல்லதுதான். சந்தோஷ நினைவுகளை நினைவில் நிறுத்தி, அல்லவைகளை அகற்றி நேற்று என்பது உடைந்த பானை, நாளை என்பது மதில் மேல் பூனை, இன்று என்பதே கையில் உள்ள வீணை என்று இன்றைய தினத்தில் வாழ்பவன் நான்!
கேட்க படிக்க நன்றாக  இருக்கிறது சாத்தியமா என்பதே கேள்விக்குறி நடந்தவைகளை மறந்து இன்றைய சிந்தனையில் மட்டுமிருப்பது  முடியாது என்றே தோன்றுகிறது அதுவும் என் போன்றோருக்கு நேற்றைய நிகழ்வுகள் நன்றுபோல் தோன்றும்   நாளை என்பது ஒரு வித அச்சத்தை தருவதாகும்  அச்சம் என்றால் பலரும் நினைப்பது போன்ற அச்சமல்ல  எனக்கு வாழ்வில் செய்து முடிக்க வேண்டிய கடமைகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன  இனி நான் இருந்தாலும் இல்லாது போனாலும் ஒன்றுதான்
 ஒரு முறை என் வீட்டில் பூத்த பூ பற்றி எழுதி இருந்தேன்
 சுவரேறிப் படர்ந்து பூத்துக் குலுங்கின
வெள்ளை ரோஜாவும் மல்லியும் முல்லையும்
பல்வேறு நிறங்களில் கண் சிமிட்டும்
செம்பருத்தி;காணக் கண் கோடி வேண்டும்.

ஆண்டுகள் பலவாகிப் போக மராமத்து
வேலைக்காக செடிகளையும் கொடிகளையும்
அகற்றச் சொன்னார் மேஸ்திரி.

மீண்டும் நடும் செடிகளும் புதுப் பொலிவுடன்
பூக்கத்தானே போகிறது எனும் நம்பிக்கையில்
பழைய செடிகள் வெட்டிக் களையப் பட்டன

யார் கண் பட்டதோ, ஆண்டிரண்டாகியும் செடியும்
கொடியும் வளர்ந்தும் பூ மட்டும் பூக்கவில்லை.
பூச்செடிகளிலும் மலடு என்றுண்டோ.?

தளராது நீர் ஊற்றி,நாளும் காத்திருந்து காத்திருந்து
ரோஜாச் செடியொன்றில் செந்நிறத்தில் மொட்டவிழ்ந்து
பூ ஒன்று பூக்கக் கண்டதும் ஆஹா..கொள்ளை அழகு.
ஜென்ம சாபல்யம் அடைந்திருக்கும் பூச்செடியும்.
 பொதுவாக இது ஒரு மகிழ்வான நிகழ்வு என்றே  நினைத்தேன்
 ஆனால் அதற்கு ஒரு பின்னூட்டம் இப்படி இருந்தது!

பூத்தால் எனக்கென்ன
பூக்காவிட்டால்தான் என்ன
மனிடர் நினைப்பை எல்லாம்
 என்மேல் ஏற்றி சொல்லல் எதில் சேர்த்தி
பூக்காமல் இருந்தாலே நிம்மதி
 கொய்ய வருபவனைப் பார்த்து
 குலை நடுங்காமலாவது  இருக்கலாம்
 என் எழுத்துகளை என் எண்ணங்களுக்கு ஒரு வடிகால் என்று நினைப்பவன் நான் 
எழுதுவதில் ஒரு உண்மைத்தனமிருக்க வேண்டுமென்று நினைப்பவன்  நான்  அதனாலேயே என்சிறு கதைகள் பலவும்  எல்லோராலும்  ரசிக்கப்படுவதில்லை அதுகுறித்து நான் கவலைப்பட்டதுமில்லை  என் எழுத்துகளுக்கு சாயம் எறியப்பட்டதுண்டு  கவனிக்கவும்  சாயம்பூசப்பட்டது என்று சொல்லவில்லை  சில நேரங்களில் சாயமெறியப்படும்போது மனம் வருந்தியதூண்டு நான் எழுதுகிறேன்  எழுதுவேன்  நிச்சயமவை என் எண்ணங்களின் வெளிப்பாடுதான் அவற்றில் நான் சமரசம் செய்து கொள்வது இல்லை பலரும்  நோ என்று நினைத்து ஆம் என்று சொன்னதுமுண்டு   இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேல் தரக் கட்டுப்பாட்டு துறையில் இருந்ததால்  என்னால் அப்படி இருக்க முடியவில்லை போலும்  என் எழுத்துகள் என்கருத்துகள் அவற்றைப் பொது வெளியில் வைக்கிறேன்  உடன்படாதார் பலரும் இருக்கலாம்   ஆனால் எனக்கென்னவோ நிச்சயம்படித்தவர்கள் நெஞ்சில் ஒரு சலனமிருக்கும்   அதையே  அவர்கள் இன்னும்சற்று  கூர்ந்து கவனித்தால் என் தரப்பு நியாயம் தெரிய வரலாம்
ஒரு பதிவர் குறிப்பிட்டிருந்தார்  பின்னூட்டம்மூலம் அவர்களை வெளிப்படுத்திக் கொள்வார் என்று நினைப்பதுதவறு என்று  அதுவும்சரிதான் என்றே எண்ணுகிறேன்   பொழுது போக எழுதுபவர்கள்பலரும் இருக்கலாம்ஒருவர் அவர் கருத்துகளுக்கு நம்மை திருப்பி விடப்பார்ப்பார்  தவறில்லை  ஆனால் அதை அவராகஎழுதிக்காட்டலாமே   ஒவ்வொரு வருக்கும் ஓரோர் பாணி
நகைச்சுவை என்பது ஒரு வரம் ஆனால் எல்லா வற்றையும் நகைச் சுவையாக்குதல் சரி அல்ல என்றே நினைக்கிறென்  
என் குறைகளும் நானறிவேன்அதையே ஒரு பதிவுமாக்கி இருக்கிறேன்
 
ஆண்டொன்று கூட அகவை ஒன்று கூடுகிறது.
அதோடு சில வேண்டாத குணங்களும் கூடுகிறது..
, நான்வேண்டுவதெல்லாம்-என் பேச்சைஅடக்கவும்
 எங்கும் எதிலும் என்னை வெளிப்படுத்தவும்  விரும்பும்

என் எண்ணங்களுக்குக் கடிவாளம் இடவும்தான்

நான் என்னிடம் விரும்புவது.

மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை
நீக்க முயலும் என் முனைப்புகளை உடை.

எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய
நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிடு.

வட்டமாய் சிறகடித்து மேலிருந்து கீழே நேராய்
இரையை நாடும் பறவையைப் போல் சொல்ல
நினைக்கும் புள்ளியை நானடையக் கற்றுக்கொடு.

நான் படும் வேதனைகளை, வலிகளை
அடுத்தவன் முன் கொட்டித் தீர்க்க நான் வாய்
திறந்தால் அதனை அக்கணமே மூடிவிடு.

அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வை கூடவே
 நானும் தவறிழைக்கலாம் என என்னையும் எண்ண வை.


நான் பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம்.
படிப்பினைகள் ஆங்காங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம்.
அவரவர் வாழ்க்கை அவரவரே வாழ வேண்டும்.

இவ்வையகம் விட்டு நான் அகலும்போது என்னை நாலுபேர் நல்ல விதமாக எண்ணவேண்டாமா 

பலரும் பாரதியைப் பற்றி எழுதும்போது இக்கவிதையை  மேற்கோள் காட்டுகிறர்கள் ஏன் என்று புரிந்து கொள்ள முடியவில்லை 
                        
தேடிச்சோறு நிதந் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடி கிழப்பருவமெய்தி - கொடும்
கூற்றுக் கிரையென பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
பாரதியே வேடிக்கை மனிதன் போல் வீழ்ந்தவன்  தானே  அப்படியெல்லாம் இல்லாதவன்  என்று குறிப்பிடலாம்   பாரடியைதுணைக்கழைப்பவர்  அவன்போல் இருக்க நினைக்கிறார்களா பலரும்  சின்னஞ்சிறு  கதை பேசி மனம்வடித்துன்பம்  மிக உழன்று  பிறர் வாடப் பல கதைகள் பேசித்தானே கழிக்கிறார்கள் ப்லரும் நரை கூடிக் கிழப்பருவம்  எய்துவதில்லை எல்லோரும்  கூற்றுக்கு இரையாகிறார்கள்தான் பாரதியை மேற்கோள் காடி என்னதான்  சொல்ல வருகிறார்கள்  புரியவில்லை  நானும் ஒரு முறை குப்புற் வீழ்ந்து எழுந்தபின் வீழ்வேனென்று  
நினைத்தாயோ என்று எழுதி இருந்தேன் 
பின்னர் தோன்றியது  இப்படியுமெழுதி சமாளித்தேன்

 நரை
கூடிக் கிழப் பருவமெய்தி வேடிக்கை மனிதர் போல் வீழ்வே
னென்றுநினைத் தாயோஎ ன்று கேள்வி கேட்பது அபத்தம் போல் தோன்றுகிறது.

நம்மால் வீழாமல் இருக்க முடியுமா.?அவனே வீழ்ந்தவன் தானே.
 காலனை காலால் என்றும் எப்போதும் உதைக்க முடியுமா? (இப்
போது நான் உதைத்து விட்டாலும் )தவிர்க்கப்பட முடியாதது
தானே மரணம்.?அனுபவிக்கப்பட வேண்டியதுதானே என்று
கூறும்போது  அனுபவம் பகிர்ந்து கொள்ள்க் கூடியதா?வீழ்ந்தவன்
நான எழாமல் போயிருந்தால் நான் பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்க முடியுமா 
எதற்கு இந்த சிந்தனைகள் அதுவும்  புத்தாண்டு துவக்கத்தில்  பகிரப்பட வேண்டுமென்று தோன்றியது எழுதிவிட்டேன்  
எல்லோருக்கும் புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்   



  

44 கருத்துகள்:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா
    இன்றைய தினத்தில் நல்ல நினைவுகளையே மீட்டுவோம்.

    உங்களது எண்ணங்கள் சரியென்று எண்ணியே எழுதுகின்றீர்கள் அதே வழியில் வீறுநடை போடுங்கள் ஐயா.

    அவ்வப்போது இப்படி ஐயம் வேண்டாம்.

    நீங்கள் நீங்களாக எழுதுவதே உங்களது அடையாளம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறுவிதமாக எனக்கு எழுத வராது ஜி இனிய புத்தாண்டு தின நல் வாழ்த்துகள்

      நீக்கு
  3. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜி எம் பி ஐயா உங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும்.. இதேபோல 2020 க்கும் நீங்கள் வாழ்த்துப் போடோணும் நாம் வாழ்த்தோணும்..

    பதிலளிநீக்கு
  4. ///ஒவ்வொரு நாளும் விழித்து எழும்போது இன்றும் ஒரு நாள் ஆயுள் நீட்டிக்கப்பட்டதுபோல் தான் உணர்கிறேன் //

    அது உங்களுக்கு மட்டுமில்லை ஐயா, மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே.. ஒவ்வொருநாளும்.. கடவுளால் வழங்கப்படும் கிவ்ட் தான்.

    எப்பவும் பொசிடிவ்வாகவே சிந்தியுங்கோ.. நல்ல விசயங்களையே பேசுங்கோ.. மகிழ்ச்சியாக இருங்கோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வயதில் இவ்வித எண்ணங்கள் தவிர்க்க முடியாது எனெழுத்துகள் பாசிடிவ் தான்

      நீக்கு
  5. சற்று நீண்ட பதிவு. குறிப்பிட்ட வயதிற்கு பின் புத்தாண்டு எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் ஒரு சாதாரண நிகழ்வாக தெரிகிறது. என்றாலும் வாழ்த்துக்கள் கூறுவதில் தடை ஏதும் இல்லை. புத்தாண்டு சிறப்பாக அமையட்டும் ஐயா.

    Jayakumar​​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்து கூற மட்டுமல்ல எண்ணங்களைப் பகிரவும்தான் எழுதியது வாழ்த்துகள்

      நீக்கு
  6. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சார் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரிரு நாட்களுக்கு என்னதான் எழுதினாலும் பின்னூட்டம்வாழ்த்தாகவே இருக்கும்

      நீக்கு
  7. எண்ணங்களின் பகிர்வு அருமை.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களாவது எண்ணங்களின் பகிர்வை ரசித்தீர்களே நன்றி

      நீக்கு
  8. உங்க எழுத்துகளில் பாசிடிவ் எண்ணங்கள் குறைவாகவே இருக்கிறது ஜி.எம்.பி சார்... ஒருவேளை அந்த அந்த வயதுகளில் சிந்தனைகள் மாறுமோ?

    //பாரதியே வேடிக்கை மனிதன் போல் வீழ்ந்தவன் தானே // இது உங்கள் எண்ணமாயிருக்கலாம். பாரதியைப் பற்றிப் படித்தவர்கள், அவருடைய கவிதை, வாழ்க்கையை அறிந்தவர்கள் இப்படிச் சிந்திக்க மாட்டார்கள். அவர் எப்போதும் அவருடைய நிலையிலிருந்து 'வீழவில்லை', 'வேடிக்கை மனிதர்போல் தம் வாழ்வை வீணடிக்கவில்லை'. நீங்கள் பாரதியைப் பற்றிப் படித்துப்பாருங்கள்.

    பலர் 'தேடிச் சோறு நிதம் தின்று..' என்பதை எழுதும்போது அதுபோல் வீணடிக்கமாட்டோம் தங்கள் வாழ்க்கையை, என்று எண்ணிக்கொண்டு சொல்கிறார்கள், அப்படி இருக்க முடிந்திராதபோதும். அதற்குமேல் அதில் குறை காண ஏதுமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேடிச் சோறு நிதம்தின்பது வீணாடிப்படுஎன்றால் பலரும் அடைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள் சுற்றுப்புறத்தைக்காணும்போது எழுதுவது பாசிடிவ் எண்ணங்க்சள் குறைவது போல் தோன்றலாம் நான் எப்போதும் hope for the best but be prepared for the worst என்னும் எண்ணம் கொண்டவன்

      நீக்கு
    2. எதை வைத்து பாரதி 'வீழ்ந்தான்' என்று சொல்லியிருக்கீங்க? அந்தக் கவிதையின் அர்த்தம், 'வெறும் சோற்றுக்காக, கூழைக் கும்பிடு போட்டு, சோற்றையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டு, அதற்காக வாழ்க்கையில் எல்லா காம்ப்ரமைஸ்களையும் பண்ணுபவர்களை' தேடிச் சோறு... வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று சொல்கிறார்.

      சிலர் அவ்வாறு செய்யாமல், தாங்கள் கொண்டுள்ள உயர்ந்த கொள்கைக்காக வாழ்கிறார்கள். எப்போதும் பதர்கள் அதிகமாகத்தான் இருக்கும். நெல் குறைவாகத்தான் இருக்கும்.

      நீக்கு
    3. "நிதி சால சுகமா... ராமு நின்..." என்று 400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த தியாகராஜர், சொத்து சேர்க்காமல் வாழ்ந்துகாட்டிய காமராஜர்... இவர்களெல்லாம் உங்கள் நினைவுக்கு வராதது, நமது துரதிருஷ்டமா இல்லை இல்லை அவர்களது துரதிருஷ்டமா?

      நீக்கு
    4. 'மெல்லத் தமிழினிச் சாகும்' என்று பாரதி சொன்னதாக பரப்பப்பட்டு வருவது போல!!

      நீக்கு
    5. @நெத பாரதியே ஒரு பாடலில் பாடி இருக்கிறான் நினைவுக்கு வரவில்லை பெயர் பெற்றவர்கள் இறந்துபோனார்கள் எனும் அர்த்தத்தில் வரும்என் கருத்து உங்கள் சிறகுகளைச் சிலுப்பி விட்டது என்று தோன்று கிறது பாரதிஒரு லட்சியத்தோடு வாழ்ந்தான் ஆனல் அவனது வரிகளநேகமாக தவறாகப் பயன்படுத்தப்படுகிறதுஎன்பதிவில் நானே அப்படி தவறாகக் குறிப்பிட்டேனோ என்று எழுதி இருபதைக்காணலாம்

      நீக்கு
    6. ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் நாமிறந்தால் நம் நெருங்கிய சொந்தங்கள் சில நார்ட்களுக்கு நம்மை நினைவு கூறலாம் நீங்கள்குறிப்பிடவர்களைப் பற்றி ஒரு எல்லைக்கு மேல் யாருக்கும்தெரியாமல் இருக்கும் மேற்கோள் காட்டி எழுஹுபவர்கள் என்ன அர்த்தத்தில் எழுதுகின்றனர் என்பதே என்கேள்வி

      நீக்கு
    7. @ ஸ்ரீராம் மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று பாரதியை அரை குறையாகப்புரிந்துகொண்டு எழுதுவதுபோல் அல்லஎன் எழுத்து எழுத்துக்களை சரியக புரியாமல் சகட்டு மேனிக்கு மேற்கோள்காட்டுபவரைப்பார்த்தே எழுதியது

      நீக்கு
  9. எப்போதோ எழுதிய என் பின்னூட்டத்தை நினைவு கூர்ந்திருப்பதற்கு நன்றி.

    எழுதுவதில் ஒரு உண்மைத்தனம் இருக்கவேண்டும் என்று எதைச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. கதை எழுதுவதிலா? கதையில் உண்மைத்தனமா? புரியவில்லை நிஜமாகவே. கற்பனை கலந்ததுதான் கதை. உண்மைச்சம்பவங்களை அப்படியே எழுத முடியாது. சம்பந்தப்பட்டவர்களுக்கு நெருடும். கற்பனைச் சாக்லேட் கலக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்பனையில் எழுதும்போது கூட அது உண்மையில் நடக்கும் சாத்தியக் கூறுகள் இருக்கவேண்டுமென்கிறேன்

      நீக்கு
  10. நூறு வயது வாழ்வது எப்படி என்று புத்தகம் எழுதி வெளியிட்ட தமிழ்வாணன் வாழ்ந்தது ஐம்பத்தி சொச்ச வருடங்கள்.

    நான் படைப்பதனால் என் பெயர் இறைவன் என்று எழுதிய கண்ணதாசன் தன்னைக் கடவுளாக எண்ணிக்கொள்ளவில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று அவர் சொன்னது பொய்யுமில்லை. மரணமடைந்தும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். வார்த்தைகளுக்கு அப்படியே பொருள்கொள்ள முடியுமா என்ன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரணமடைந்தும் வாழ்வது அப்படி என்றால் எனக்கும் மரணமில்லை வார்த்தகளுக்கு இல்லாத பொருளைகூறுவதும் கற்பனைத் திறனே

      நீக்கு
    2. ஜி எம் பி சார்... நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எத்தனைபேர் இறந்திருக்கிறார்கள். அவர்களை நினைவுகூறுவது யார்? நெருங்கிய சொந்தங்களும் கூட இல்லை.

      இந்தக் கண்ணதாசனோ, எம்ஜியாரோ, ஜெ.வோ, காமராசரோ இன்னும் பலப் பலரோ நமக்கு நேரடியாக என்ன செய்திருக்கிறார்கள், வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்? அவர்களை நாம் நினைவுகூறுகிறோம் இல்லையா? அதுதான் இறந்தும் இறவாத நிலை.

      நீக்கு
    3. நினைவு கூறும்போது நம்மையும் அதுபோல் பாவிப்பது சரியா சார்

      நீக்கு
  11. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நண்பர்கள் எல்லோருக்கும் ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புஹ்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏகாந்தன் சார் உங்களுக்குமென் வாழ்த்துகள்

      நீக்கு
  14. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    //நான் என்னிடம் விரும்புவது.//

    நீங்கள் சொன்னவை எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தாண்டில் மனதில் பட்டவை எழுத்தாகி இருக்கிறது என் குறைகளையும்பட்டியலிட்டிருக்கிறேன் வருக்கைக்கு நன்றி மேம்

      நீக்கு
  15. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்ப்பா

    பதிலளிநீக்கு
  16. உங்கள் எழுத்தில் உண்மை இருப்பதை உணர்ந்திருக்கிறேன். பூவைப் பற்றி உங்கள் கவிதை ரசித்தேன். நல்ல மீள் பதிவுகளும் அதனையொட்டி அசைபோடும் சிந்தனைகளும். புது வருடம் அனைத்து சந்தோஷத்தையும் நல் ஆரோக்கியத்தையும் பரிசளிக்க எனது வாழ்த்துகள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பூவைப் பற்றி எழுதி இருந்ததற்கு வந்தபின்னூட்டம்ந்ந் என்னை ஈர்த்தது பதிவை ரசித்ததற்கு நன்றி

      நீக்கு
    2. எனக்கும் பிடித்திருந்தது. பின்னூட்டம் மனதில் நச்செனப் பதிந்தது.

      நீக்கு
    3. என் பதிவிடும் ஆரம்பகாலத்திலிருந்தே என்னை ஊக்கப்படுத்தியவர் நீங்கள் நன்றி

      நீக்கு
  17. மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சார்

      நீக்கு