வெள்ளி, 25 ஜனவரி, 2019

வாழ்வில் சந்தோஷம்



                                     வாழ்வில் சந்தோஷம்
                                      ---------------------------------


உன் சம்பளம் எவ்வளவு  நீ சந்தோஷமாக  இருக்கிறாயா
பெண்ணின் வயதையும்  ஆணின் சம்பளத்தையும் கேட்கக் கூடாது என்பார்கள் இருந்தாலும் சொல்கிறேன்   இதனால் யாராவது பயன் பெறலாமே

என் வயது 45  என்சம்பளம் ரு 14  லட்சம் ஆண்டுக்கு பிடித்தம்போக எனக்கு ரு 95 ஆயிரம் மாதம் கிடைக்கும் சென்னையில் வசிக்கிறேன்   சந்தோஷமாகவே இருக்கிறேன்  நான்  60   70 லட்சம் கொடுத்து வீடு வாங்கவில்லை மாதம்  35 ஆயிரம் ரூபாய் இ எம் ஐ  கட்டும்  அவசியமெனக்கில்லை அதனால் ஏற்படும் மன உளைச்சலும் டென்ஷனும் எனக்கில்லை மாதம்  பத்தாயிரம் ரூபாய் வாடகையில் 60  70 லட்ச பெறுமான  வீடு அலுவலகத்துக்கு அருகேயே வீடு போக்குவரத்துக்கு ஆகும் செலவு அதில் வரும்  டென்ஷன் முதுகு வலி  எனக்கு கிடையாது அலுவலகம் மாறினால் அருகேயே வீடு பார்ப்பேன்  சொந்த வீட்டில் இருந்து  அலுவலகத்துக்கு  வரும் என்சிலநண்பர்கள்  படும்பாடு பார்த்திருக்கிறேன்  சென்னை போக்கு வரத்திலும்  உஷ்ணத்திலும் தினம்40 கிலோ மீட்டர்  பயணம்  செய்து அலுக்கும்  அவர்களைப் பார்க்கும் போதுபாவமாய் இருக்கும் உடல் சோர்வினால்  அவர்களால் முழுதிறமையையும்  காட்ட முடிவதில்லை  அவர்களுக்கும் பெயர்கேடு அலுவலகமும் நட்டப்படுகிறது  குடும்பமும்  அவர்களின்   அருகாமை இல்லாமல்  கஷ்டப்படுகிறது
 மாதம்  20 ஆயிரம் ரூபாய்  ம்யூச்சுவல் ஃபண்டில் போடுகிறேன்  அதில்கிடைக்கும் வருமானம் சொந்த வீட்டில் கிடைக்கும் வருமானம்விட அதிகம்
 ரூபாய் 25 ஆயிரம் வீட்டுச்செலவுக்கு பெட்ரோல் இ பி காய்கறி   பால்  வீட்டு வேலைக்காரி இத்தியாதி செலவுகளுக்கு ஆகலாம்  மனைவியின் தங்க சிட்டுக்கு ரூபாய் ஆறாயிரம்   மனைவியை சந்தோஷமாய் வைத்திருக்க  வேண்டுமே கிராமத்தில் தனியே இருக்கும் பாட்டிக்கு ரூபாய் இரண்டாயிரம்  குழந்தைகளின் பள்ளி செலவுக்கு ரூபாய் மூன்றாயிரம்
வெளியில் போகவர  சாப்பிட என்று மாதம்  14ஆயிரம் மீதி இருக்கும்  15 ஆயிரம் அவசர தேவைகளுக்கு
எனக்கு க்ரெடிட் கார்ட் கிடையாதுநான் இ எம் ஐயில் பொருட்கள் வாங்குவதில்லை அதுஒரு ட்ராப் (trap) எனக்கு மாதக் கடைசி ப்ராப்ளம்   கிடையாது
என்னிடமொரு  125 சிசி பைக் ஐந்து ஆண்டு கால பழசு  இருக்கிறது இரண்டு லட்ச ரூபாய்  மதிப்புள்ள  ராயல் என் ஃபீல்ட் காண்டினெண்டல்  பைக் மீது ஆசைதான்  ஆனால் அதற்கு  ஆகும்செலவுகள்  அதிகம் என்பதால் வாங்கவில்லை 1000 சிசி ஹாட்ச் பாக்  கார் ஒன்று இருக்கிறது அது நம்சாலைகளுக்கும் என் தேவைக்கும் போதும்
 ரெஸ்டாரெண்ட் களில் செலவு செய்வதை விட மனம்மகிழும் சுற்றுப்பயணம்  மேற்கொள்வொம்  கையில் உணவு எடுத்துக் கொள்வோம்
எளிமையான என் வாழ்க்கை என்னைவிட சம்பாதிக்கும்  பலரைவிடஎன்னை சந்தோஷமாக  வைத்திருக்கிறது
 இதையெல்லாம் என் தந்தையிடம் கற்றேன் அவருக்கு கடன்கிடையாது சொந்த வீடும் ஆரோக்கியமான உடலும் இருக்கிறது 70 வயதாகிறது  பீபி  சுகர் முதுகு வலி ஏதும் கிடையாது  காலையில் ஐந்து மணிக்கு  எழுந்திருப்பார்  சுமார் மூன்று கிலோ மீட்டர்தூரம் நடப்பார் யோகா போன்ற உடற்பயிற்சிகள் செய்வார்  எங்கு போகவும் பஸ்ஸிலேயே செல்வார் அல்லது நடை     வீட்டில் சில்லறை வேலைகளை  அவரே செய்வார் அம்மாவுடன் ஆதரவாகவும அன்பாகவும்பொழுதைக்  கழிப்பார் உறவுகளின்  விசேஷங்களுக்குச் செல்வார் எங்களைக் காண சென்னைக்கு அடிக்கடி வருவார்  என் தந்தையின் நண்பர்களும்  அவர்களது பிள்ளைகளும்  வெளி  டுகளில்  நல்ல வேலைகளில் இருக்கிறார்கள்
 என் மாமா ஒருவர் பெரிய பணக்காரர்  வாய்க்கு ருசியாகசாப்பிட முடியாது நிறைய உடல் உபாதைகள்  என் தாய்க்கு நாங்கள் அயல் நாடுக்ளுக்குச்சென்றுசம்பாதிக்க வில்லையே என்னும் குறைபாடுஇருக்கலாம்  ஆனால் இங்கு கிடைக்கும்நிம்மதி பிள்ளைகள அயல்   நாடுகளுக்குப்போனால்  கிடைக்காது என்றும் தெரியும் என் அப்பா   அடிக்கடி சொல்வார் சிம்பிள் லிவிங் ஹை திங்கிங் தான்முக்கியம் 
 என் தந்தையே மிகப் பெரிய பணக்காரர் நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் என்பதை அவரிடம்தான் கற்றேன் அவரே என்  இன்ஸ்பிரேஷன் என்றுநான் அவரிடம் இதுவரை சொல்ல வில்லை சொல்லித்தெரிய வேண்டியதா அது  
இப்போது உங்கள் முதல் கேள்விக்கு வருகிறேன்  நான்  மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்
🌸🌸🌸🌸  *    
    நல்வாழ்த்துகள்
(படித்ததில் இருந்து அடாப்ட் செய்தது )





 
                             -----------------------------------------

23 கருத்துகள்:

  1. சொந்த வீட்டுக்கு ஆசைப்பட்டுக்கொண்டு அலுவலகம் மாறும் இடங்களுக்கெல்லாம் அங்கிருந்து சென்று வரும் கஷ்டத்துக்கு அந்தந்த இடங்களில் வாடகை வீடு எடுத்துக்கொள்வது உத்தமம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொந்த வீடு பெரும்பாலும் கொஞ்சம் தொல்லைதான் ஸ்ரீராம். வாடகை என்றால் பணம் மிச்சம்.

      நீக்கு
    2. எனக்கு சொந்த வீடுதான் சோறு போடுகிறது

      நீக்கு
    3. அலுவலகம் இருக்கும் இடங்களில் வாடகைக்கு வீடும் கிடைக்க வேண்டுமே

      நீக்கு
  2. மியூச்சுவல் ஃபண்டெல்லாம் இந்தக் காலத்தில் நம்புவதற்கில்லை.

    பதிலளிநீக்கு
  3. சுவாரஸ்யமாக இருந்தது. முதலில் உங்கள் பழைய நினைவுகளோ எண்டு நினைத்தேன். பின்னர் உங்கள் மகன் எழுதியதோ என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு

  4. இப்படி பலர் பேர் நினைத்து வாழ்ந்தால் வாழ்க்கையை சொர்க்கமாகத்தான் இருக்கும் ஆனால் அடுத்தவர்கள் பாராட்ட வேண்டுமே என்று நினைத்து வாழ்க்கையை தொலைப்பவர்கள்தான் அதிகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரை கலக்கல் வரிகள். அதுவும் சொன்னீங்க பாருங்க //அடுத்தவர்கள் பாராட்ட வேண்டுமே என்று நினைத்து வாழ்க்கையை தொலைப்பவர்கள்தான் அதிகம்//

      ரொம்ப உண்மையான சூப்பர் வரி!!!

      கீதா

      நீக்கு
    2. முதலில் நம் தேவையை நாம் உணர வேண்டும் அடுத்தவனைப் பார்த்து சுட்டுக் கொள்ளக் கூடாது

      நீக்கு
    3. பின்னூட்டங்களில்பிறரை பாராட்டும் உங்கள் குணம்பிடித்து இருக்கிறது

      நீக்கு
  5. படித்ததில் பிடித்ததை பகிர்ந்தது அருமை.

    பதிலளிநீக்கு
  6. படித்ததில் பிடித்தது அருமை ஸார். நான் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இப்போது என் மகன் சொல்லிக் கொண்டிருக்கிறான்.."சிம்பிள் லிவிங் ஹை திங்கிங்"

    இப்படி இருந்தால் கண்டிப்பாக பணக்காரர் என்று சொல்லிக் கொள்ளலாம். கிட்டத்தட்ட நானும் மகனும் சொல்லிக் கொள்ளும் வரிகள் பல..

    அலுவலகம் அருகே வீடு ரொம்ப நல்ல விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கும் உடல் நலத்துக்கும் செலவுக்கும் எல்லாம்சரியாக அமைய வேண்டும் பொன் மொழிகள் ஸ்டாக் நிறையவே உண்டு

      நீக்கு
  7. இதுவல்லவோ சந்தோசமான வாழ்க்கை...

    அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  8. நல்ல பதிவு. எளிய வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதுதான். எதிர்பார்ப்பில்லாத வாழ்க்கையும் அப்படித்தான்.

    பதிலளிநீக்கு
  9. அருமை ஐயா பலருக்கும் பயனுள்ள விடயம்
    கடன் இல்லாதவனே பணக்காரன் என்ற சொல்வடையும் நம்மில் உண்டு.

    பதிலளிநீக்கு
  10. நாடே கடனில் மூழ்கி இருக்கிறது அதிக கடனிருப்பவர்களுக்கே மதிப்பு கடன் இல்லாமலிருக்க பலவற்றையும் துறக்க மனம்வேண்டும்

    பதிலளிநீக்கு
  11. தற்போது பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கையை தவணையில் தான் வாழ்கிறார்கள்.

    பதிலளிநீக்கு