செவ்வாய், 22 ஜனவரி, 2019

காலச் சக்கரத்தில் பயணம்


                           காலச் சக்கரத்தில்பயணம்  புகைப்பட உதவியுடன்
                         ----------------------------------------------------------------------------------
முனைவர் ஜம்புலிங்கம்  அவர்கள் மைசூர் பிருந்தாவன்  கார்டன் பயணம்  பற்றி எழுதி இருந்தார் எனக்கும்  பிருந்தாவன்  கார்டெனுக்கு போய் வந்த நினைவுகள் எழுந்தது ஆனல் வெறுமே  நினைவுகளை வைத்து மட்டும் எழுதினால் சுவைப்பதில்லை  நினைவுகளுக்கு துணை நின்ற புகைப்படங்களைத் தேடி எடுத்தேன்   என்னவெல்லாம் நினைவுகள்
என் மனைவியின்   சித்தி பையன் ஒரு கார் அரேஞ்சு  செய்திருந்தான் அவன் இருக்குமிடம் எங்கள் வீட்டிலிருந்துசுமார் 25 கி மீ தூரம் மைசூருக்குப் போகவர சுமார் முன்னூறு கிமீ  எங்களை பிக் அப் செய்து ட்ராப் செய்துஅவன்  வீட்டுக்குச் செல்ல வேண்டும்  அதனால் தூரம்  சுமார் 50 கிமீ அதிகம்  அந்த காரில் வைப்பர் வேலை செய்ய வில்லை போகும்போது மழை இருந்தது ட்ரைவர் தன் கைகளால் கார் கண்ணாடியை  துடைத்து விட்டுக் கொண்ருந்தார்  அது ஒரு புது எக்ஸ்பீரியன்ஸ்  மைசூர் சாமுண்டி கோவில் மைசூர் ஜூ கார்டென்ஸ் எல்லாம்பார்க்க ப்ளான்   முதலில் பொகும்வழியில் ஸ்ரீ ரங்கப் பட்டணமும் சென்றோம்  என்  பேரக் குழந்தைகளுக்கு  ஜூ காண்பதில் ஆர்வம்  ஸ்ரீ ரங்கப்படணத்தில் என்  மருமக்ள்கள் குதிரை ஏறி சவாரி செய்தனர் அதிலிருந்து அவர்களை ஜான்சிகி ராணி என்று கூப்பிடத்துவங்கினேன்  ஜூவில் சிங்கம் ஒன்று என் பேத்தி அருகே சென்றபோது கர்ஜித்ததுஅருகில் இருந்தபேத்தி மீது அதன் எச்சில் தெறித்தது சிங்கம் என்மேல் துப்பி விட்டது என்று அழுதாள் (அப்போது அவளுக்கு சுமார் இரண்டு வயது )


ஆஃப்ரிக்க யானையை அங்குதான் பார்த்தேன் சாமுண்டி கோவிலுக்குச் சென்றோம்  வரும்வழியில் ஒரு பெரிய காளைச் சிலையைப் ( நந்தி என்று சொல்ல வேண்டுமோ?) பார்த்தோம் பிருந்தாவன சோலையில் அப்போதெல்லாம்மின் விளக்கில் நடமிடும்நீர்  பிரசித்தம்  ஆனால் அதன்நேரங்கள் பற்றி தெரிந்துகொள்ள வில்லை  கார்டனுக்குள் சென்றவுடன்  மீன்  வறுவலின் வாசனையில் மனம்பறிகொடுத்தவர்கள் அங்கே நேரம் அதிகம் எடுத்துக் கொண்டார்கள் அதன் பின் உள்ளே நுழைந்தால் மின் ஊற்றுகள்  நிறுத்தப்பட்டு விட்டன  எங்களுக்கு ஏமாற்றமே
ஜன்சி ராணி சின்னவள் 

ஜான்சி ராணி  பெரியவ;ள்

கர்ஜித்த சிங்க ம்

ஆஃப்ரிக்க யானை 

மைசூர் சமுண்டி  மலையில் இருந்துஇறங்கும் வழியில் நந்தி 

பேரனும்  பேத்தியும்  


ஸ்ரீரங்கப்பட்டணமா  சாமுண்டி கோவிலா 







   

12 கருத்துகள்:

  1. நினைவுகள் சுவாரஸ்யம். படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  2. படங்களுடன் அழகாக இருக்கிறது. நாங்களும் இந்த இடங்களுக்கெல்லாம் முதல் முறையாக எண்பதுகளில் சென்றோம். அதன் பின்னர் சில முறை சென்றாலும் சாமுண்டி ஹில்ஸ் தவிர்த்து வேறே எங்கும் போகவில்லை. பெண்களூர் அடிக்கடி போயிருக்கோம்.

    பதிலளிநீக்கு
  3. படங்களும் நினைவலைகளும் நன்று ஐயா.

    பதிலளிநீக்கு
  4. அருமையான அழகான நினைவுகள்.
    பேத்தியின் மழலை பேச்சை மறக்காமல் குறிப்பிட்டது மகிழ்ச்சி.
    ஜான்சி ராணிகள் அழகு.

    பதிலளிநீக்கு
  5. நினைவுகள் நன்று. நான் இன்னும் இந்தக் கோவில்களுக்கெல்லாம் போகவில்லை.

    பதிலளிநீக்கு
  6. நினைவுகள் அருமை சார். படங்களுடன். நல்ல அனுபவங்கள்.

    துளசிதரன், கீதா

    கீதா: ஜான்சிராணிகள் சூப்பர்!!

    பதிலளிநீக்கு
  7. நானும் இந்த இடங்களுக்குலாம் போய் இருக்கேன், உங்க பதிவும் சுவாரசியம்ப்பா

    பதிலளிநீக்கு
  8. ஆப்ரிக்க யானையை நானும் மைசூர் zoo_வில்தான் பார்த்திருக்கிறேன். படங்களும் பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் கூறியுள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று வந்துள்ளோம் ஐயா. இன்று இப்பதிவினைக் கண்டதும் அந்த நினைவுகள் மனதிற்கு வந்தன. உங்கள் நினைவுகூறலில் என் பதிவு வந்தது கண்டு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  10. மிக அருமையான அழகிய நினைவுகள்.. உங்கள் மருமகள் இருவரும் தைரியசாலிகள்போலும்.. நான் குதிரைக்கு/ யானைக்கு அருகில்கூடப் போக மாட்டேன்:)..

    எந்தப்பெரிய நந்தி.. பார்க்கவே ஆசையா இருக்கு.

    பதிலளிநீக்கு