GM vs GM
----------------
என்ன எழுதுவது என்று மனதை குடைந்து கொண்டிருந்தபோது
ஒரு ட்ரெண்டி தலைப்பில் எழுதினால் என்ன என்று
தோன்றியது ட்ரெண்டி சப்ஜெக்ட் என்றால் இப்போது கிரிக்கட் தான்
என் கிரிக்கட் அனுபவங்களைப் பகிரலாமென்று தோன்றியதுவழக்கம்
போல் நினைவுகள் துணை போயின
அன்று ஒரு அனொஃபிஷியல் நோட்டிஸ் வந்தது ஒரு கிரிக்கட் மாட்ச் ஆடலாமென்றும் ஆடத்தெரிந்தவர்கள்
கிளப் நிர்வாகியிடம் பெயர் கொடுக்கலாமென்றும்
எழுதி இருந்தது நான் ஏன் பெயர் கொடுக்கக்
கூடாது என்று தோன்றியது பெங்களூரில் இருந்தபோது கிரிக்கட் கிளப் பில் உறுப்பினராயிருந்து
வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அநேகமாக
எல்லா கிரௌண்டுகளிலும் ஆடியதும் நினைவுக்கு வந்தது எங்கள் டீமில் ஆடிய ஒருவர் பிற்காலத்தில்
கர்நாடக மந்திரியாக இருந்தாரென்பதும் நினைவுக்கு வந்தது அதுவா இப்போது முக்கியம் நான்
ஆடலாமா வேண்டாமா என்பதே கேள்வி
ஏறத்தாழ ஆறாயிரம் தொழிலாளிகளில் நோட்டிஸ்
அதிகாரிகளைக் குறி வைத்திருந்தது ஒரு
டீமுக்கு அன்றைய ஜெனரல் மானேஜர் காப்டனாக இருப்பார்
என்று தெரிந்தது பெரிய கம்பனியின் நிர்வாகி ஒரு டீமுக்குக் காப்டன் அவர் தனது டீம் மெம்பர்களைத் தேர்ந்தெடுத்து விட்டிருந்தார் இன்னொரு டீமில்யார் யார் ஆடப்போகிறார்கள் என்பதே
கேள்விக்குறியாகி இருந்தது ஆட விருப்பம் தெரிவித்தவர்கள் தங்களுடைய அனுபவப் பிரலாபங்களைத்
தெரிவிக்க வேண்டப்பட்டு இருந்தனர் நான் என்பிரலாபங்களில் பெங்களூரில் விளையாடி இருந்தது
குறித்து நிறையவே எழுதி இருந்தேன் ஒரு லெக்
ஸ்பின் போலர் என்றும் சிறந்தஃபீல்டரென்றும் எழுதி இருந்தேன் என்பெயரில்
இனிஷியலும் ஜீ எம் என்று இருந்ததால் எதிர் டீமுக்கு என்னைக் காப்டன்
ஆக்கினார்கள் என் டீமில் ஆடியவர்கள் ஒரு சந்தேகம்
கிளப்பினார்கள் நாம்திறமையாக விளையாடினால் ஒரு வேளை ஜெனரல் மானேஜரின் டீம் தோல்வி
யடைந்தால் அதனால் ஏதாவது விளைவுகள் ஏற்படுமோ
என்று பயந்தனர் எதிர் டீமின் தலைவன் என்னும் முறையில் அவர்களை தைரியப்படுத்துவது என் வேலையாயிற்று ஆட்ட மைதானம் வேறு தொழிற்கூடம்
வேறு என்று எடுத்துரைத்தேன் உனக்கென்ன நீ ஒரு
டெம்பொரரி காப்டன்தானே என்று கூறி என்னை வெறுப்பேற்றினார்கள்
ஆட்ட மைதானம் எல்லோருக்கும் பொதுவானது அங்கு நன்கு திறமையை காட்ட
வேண்டுவதெ ஒவ்வொருவரின்கடமை என்றேன்
டீம் என்பதை நான் நம் தின வாழ்வின் செய்கைகளுக்கு
ஒப்பிட்டுக் காட்டினேன் டீமில் ஏற்றதாழ்வுகள் பார்க்கக் கூடாது என்று எடுத்துக்
கூறினேன் ஆடுகளத்தை வாழ்வியலுக்கு ஒப்பிட்டு
கூறினேன் வாழ்வில் வெற்றி தோல்வி சகஜம்தான் வெற்றி தோல்வி
முக்கியமல்ல வெற்றியடையநம் முயற்சிகளே முக்கியம்
ஆட்டம் ஆட
டாஸ் போட்டார்கள் அதில் தோல்வியே வந்தது எங்கள்
டீம் முதலில் ஃபீல்டிங் என்றாயிற்று சுற்றி நின்று ஆடும் தீட்டம் விவரித்தபோது முதலில் பாட் செய்பவர்கள் நம்மை முதலில் துவம்சம்செய்யப்போகிறார்கள் என்னும்குரல் முதலில் ஒலித்தது கிரிக்கட் விளையாடியவருள்
காட்ச் கோட்டை விட்டவர்கள் யார் என்று கேட்டேன் யரும் காட்ச் கோட்ட விட்டிருக்கவில்லை
என்ற பதில் வந்தது கிரிக்கட்விளையாடி இருந்தால் ஒரு முறையாவது காட்ச் பிடிக்க முடியாமல்
இருந்திருக்கும் என்னும் அடிப்படை உண்மையைச்சொல்லாமலிருந்தேன் அவர்களுக்கு ஆடத்தெரியாது என்று சொல்லி பயமுறுத்த
விரும்பவில்லை
முதலில் பாட் செய்ய வந்த பொது மேலாளர் குழுவில் அவ்ரே
வந்தார் எங்கள்டீமுக்கு அதுவே கிலி கொடுத்தது
முதல் பந்தை வீசியவுடன் அவர் எதிர் கொண்டதைப் பார்த்தபோது அவரும் ஆடி நாட்களாகி விட்டது தெரிந்தது நம்மைப்
போல்தன் என்னும் எண்ணம் உதித்தது எல்லோருக்கும் ஆடி நாட்களாகி விட்டதுஅவர்கள் ஓடுவதிலேயெ
தெரிந்ததுநான் என்னை கல்லியில் ஃபீல்ட் செய்ய நிறுத்திக் கொண்டேன்
ஆட்டம்பார்க்க பலரும் குழுமி இருந்தனர் போடப்பட பந்துகள் விக்கெட்டுக்கு எதிரில் வந்தால்தானே அவர்களாலும் அடிக்க முடியும்
எப்படியோ பந்துகள் போடப்பட்டு அடிக்கப்பட்டு ரன்கள் எடுக்கப்பட்டன
ஒரு சமயம்
ஒரு பாட்ஸ்மன் அடித்த பந்து என்னை நோக்கி வந்தது அடிபடாமல் காக்க கையால் முகத்தை மறைத்துக் கொண்டேன் என்ன ஆச்சரியம் கையில்விழுந்த பந்தை என்னை அற்யாமல் பிடித்துக் கொண்டேன் பாட்ஸ்மன் அவுட் உற்சாகம்பீரிட்டது
ஆட்டத்தை எழுத்தில் வர்ணித்தால் சுவை குறையு,ம் எங்கள்டீம் வீரர்களுக்கு எப்படியாவது ஆட்டம் முடிந்தால் போதுமென்று
இருந்தது திறமையை வெளிப்படுத்த முடியாமல் பயம் இருந்தது பொது மேலாளர் குழு வெற்றி பெற்றது
அவரை எல்லோரும் வாழ்த்தினர்
இதன்நடுவில்
மாட்சை ஒலிபரப்பினார்கள் ஒலி பரப்பும்திறமையாளர்களுக்கு
தெரியும் பொது மேலாளரைப் புகழ்ந்து தள்ள கிடைத்த
வாய்ப்பு அது நன்றாகவே செய்தார்கள் முடிவில்
ஒன்று மட்டும் தெரிந்தது பொறுப்பில் இருப்பவர்க்கு
எதிராக செயல்பட அது ஆட்டமாக இருந்தாலும் சரிபலரும் தயங்குகின்றனர் G M
GM தான் உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா (எழுதியது எல்லாம் கறனையே )
cricket game |
-----------------------------------------
சுவாரஸ்யமான அனுபவம்தான்.
பதிலளிநீக்குஎழுத்தில் ஆட்டத்தை வடிப்பது சுவையாக இருக்காதா? யார் சொன்னது?
சுஜாதா ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பில் கிரிக்கெட்டை வைத்து ஒரு கதை எழுதி இருக்கிறார். படித்திருக்கிறீர்களா? ஆர் வி எஸ் உட்பட்ட சில பதிவர்களும் எழுதி இருக்கிறார்கள்.
//சுஜாதா ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பில் கிரிக்கெட்டை வைத்து ஒரு கதை எழுதி இருக்கிறார். //
நீக்குஎனக்கும் இதுதான் நினைவுக்கு வந்தது ஸ்ரீராம்.
@ ஸ்ரீ ராம் வழக்கம் போல (இல்லை வழமை போலா)எழுத்தில் ஆட்டத்தை வடிப்பது சுவையக இருக்காதுஎன்று எழுதி இருப்பதாக நினத்து விட்டிர்கள் ஆட்டத்தை எழுத்தில் வர்ணிப்பது என்றால் ஒவ்வொரு பந்தை வீசுவதையும் அத்சை எதிர் கொள்வது எதிர் கொள்வது பற்றியும் என்னுமர்த்தத்தில் எழுதி இருக்கிறேன் இந்த கிரிக்கட் பற்றிய கதையும் சுவையாகத்தானே இருக்கிறது
நீக்கு@பானுமதி எனக்கு முற்றத்து முல்லைக்கு மணமில்லை என்னும் சொலவடை நினைவுக்கு வந்தது
நீக்குஇனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குசுவாரசியமான கதை. கிரிக்கெட் கதை நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.
பாராட்டுக்கு நன்றி சார் கதையினூடெ சில உலகாயத நீதிகளையும் சொல்லி இருக்கிறேனே
நீக்குசுவாரசியமான அனுபவங்கள் ஐயா. நன்றாக இருக்கிறது!
பதிலளிநீக்குசுவரசியமான கற்பனை என்று சொல்லி இருந்தால் இன்னும் மகிழ்சியாய் இருந்திருக்கும்
நீக்குஆமாம், கற்பனைனு சொல்வதற்கு பதிலா அனுபவம்னு எழுதிட்டேன். கவனக்குறைவு! :)
நீக்குஅதனால் ஒன்றும் பாதகமில்லை நன்றி
நீக்குகற்பனையாக இல்லாமல் நிஜமாக நடந்திருந்தாலும் நீங்கள் எழுதியிருப்பது போலத்தான் நடந்திருக்கும். பொது மேலாளரை எதிர்த்து ஜெயிப்பதை பலர் விரும்ப மாட்டார்கள். வெற்றி அவர் டீமுக்குத்தான் தாரை வார்க்கப்பட்டிருக்கும். எப்படியோ சுவையான பதிவு.
பதிலளிநீக்குஅதுதானே உலக நியதி
நீக்குஅடுத்து பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்போருக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு குறித்து எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். அதுதானே இப்போது ட்ரெண்டி?
பதிலளிநீக்குஎன்னைப் பற்றிய உங்கள் தவறான சிந்தனைகளில் இதுவும் ஒன்று என்றுதான் நினைக்கிறேன்
நீக்குமன்னிக்கவும் உங்களைப்பற்றி எந்த தவறான சிந்தனையும் எனக்கு இல்லை. எனக்கு தவறான சிந்தனை இருப்பதாக நீங்கள் தவறாக நினைத்ததற்கு என்ன காரணம் என்றும் எனக்கு புரியவில்லை.
நீக்குஇவன் இப்படித்தான் என்னும்கருத்து மறைந்திருந்த தாகத் தோன்றியது
நீக்குஇல்லை, ட்ரெண்டி என்று நீங்கள் குறிப்பிட்டதால் சமீப ட்ரெண்டி டாபிக், அதுவும் மற்றவர்கள் கூறத்தயங்கும் விஷயங்களை தைரியமாக கூறக்கூடியவர் என்பதால் அதை எதிர்பார்த்தேன்.
நீக்குட்ரெண்டி ஆளாளுக்கு மாறு படும் ஆனால் எழுதுவதற்கு தயங்கும் சப்ஜெக்ட் நான் எழுத வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு அல்லவா
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇக்கதை எனது அலுவலகத்தில் நடந்த நிகழ்வை நினைவூட்டுகிறது ஐயா.
நீக்குஅலுவலகத்தில் சுற்றுலா போனோம் விளையாட்டு போட்டிகள் நடந்தது.
கையை மடக்கி யார் பலசாலி என்று பார்க்கும் போட்டியில். மேலாளரும், சாதாரண கிளர்க்கும் மோதினர்.
மேலாளர் எமராத் அரபி, கிளர்க் எஜிப்தியன்.
வெற்றி மேலாளருக்கு பரிசும் அவருக்கே.
எஜிப்தியன் அசுர பலசாலி என்பதை அனைவரும் அறிவர். சாதாரணமாக பேசிக்கொண்டு விளையாடும்போது அவன் அடிப்பதையே பலரும் (நானும்தான்)தாங்க முடியாது.
என்னைப் பொருத்தவரை மேலாளர் வெளியிடங்களில் விளையாடலாம் என்பதே சரியானது.
நீங்கள் சொல்லி இருப்பது ஒண்டிக்கு ஒண்டி நான் எழுதி இருப்பது இரு குழுக்களுக்கான ஆட்டம் ஒரு எக்சிபிஷன் மாட்ச் என்றாலும் மேலாளர் தான் வெற்றி பெற வேண்டுமென்பதுசொல்லாதநியதி ஆட்ட லைசணங்கள்சிலவற்றை எழுதிஒ இருக்கிறேனே அவைகவர வில்லையா
நீக்குகற்பனை அருமை ஐயா...
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி சார்
நீக்குமுதலில் உங்கள் அனுபவம் போலவே தோன்றியது...இடையில் வந்த உங்களின் கருத்துகளால் அப்படி எண்ணத் தோன்றியது போலும். ஆனால் கற்பனைக்கதை என்று தெரிந்தது. ரொம்ப நல்லாஎ எழுதியிருக்கீங்க சார்.
பதிலளிநீக்குதுளசிதரன், கீதா
கீதா: சார் கற்பனையிலாவது மேலாளர் டீம் தோற்றதாக இருந்திருக்கலாமே..வித்தியாசமாய்..இப்படியும் தோன்றியது.
என் எழுத்துகளில் என்கருத்டுஅளை இடம்பெறச் செய்வதுதானே என் ஸ்பெஷாலிடி @கீதா என் எழுத்துகள் நடப்புகளுக்கு வேறாகாது
பதிலளிநீக்குஆம் மேலாளர் கிரிக்கெட்டிலும் மேலாளனவர் என நிரூபிக்கவே இந்தப் போட்டிக்கு ஏற்பாடுசெய்திருப்பார்.பாவம் ஜெயித்துத்தான் போகட்டுமே சுவாரஸ்மான கற்பனை .என் இனிசியலும் ஜி.எம் என இருந்ததால்..என்பதை மிகவும் இரசித்தேன்
பதிலளிநீக்குதுல்லியமாகவாசித்து கருஹ்திடுவதுமகிழ்ச்சி தருகிறது வருகைக்கு நன்றி சார்
நீக்குகற்பனையைக் கூறும்போதுகூட உங்கள் எழுத்தில் வாசகனை ஈர்க்கும் சக்தியைக் காண முடிகிறது ஐயா.
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி சார்
பதிலளிநீக்குஉண்மையில் நடந்த சம்பவத்தை இப்போவும் சங்கடப்பட்டுக்கொண்டு எழுதின மாதிரி இயல்பா எழுதியிருக்கீங்க
பதிலளிநீக்குபாராட்டாக எடுத்துக் கொள்கிறேன் நான் சொல்வதுண்டு எழுத்தில் ஒரு உண்மைத்தனம் இருக்க வேண்டும் என்று கற்பனை உண்மைமாதிரி இருப்பதால் உங்கள் கருத்துஎன் எழுத்தின் வெற்றி என்றே நினைக்கிறேன்
பதிலளிநீக்கு