தொடர்பயணம் ( மதுரை )-2
------------------------------------------
மதுரையில் இரண்டாம் நாள் நாங்கள்சீக்கிரமாகவே
பயணம் தொடர ஆயத்தமானோம் முதலில் திருப்பரங்குன்றம்(அன்று தைப்பூசம்.?) அதன் பின் திரு மோகூர் அதற்குப் பின் வைகை அணை என்று
திட்டமிட்டுக் கொண்டோம் திருப்பரங்குன்றத்துக்கு நான் ஏற்கனவே பலமுறை
சென்றுள்ளதாலும் முருகனைத் தரிசிக்க படிகள் ஏற வேண்டுமென்பதாலும் நான் கீழேயே
இருந்து கொண்டு தேர் வீதி உலாவைக் காண முடிவு செய்தேன் எல்லோரும் முருகனைத் தரிசிக்க மலை ஏறினார்கள்
நான் கீழே இருந்தபோது எடுத்த படங்களும் காணொளியும் பகிர்கிறேன்
முருகனைத் தரிசிக்கச் சென்றவர்கள் ஆளுக்கு
ரூபாய் நூறு கொடுத்து சிறப்பு தரிசனம் என்று
சீக்கிரம் தரிசனம் செய்தார்கள் திருப்பரங்குன்றத்தில் எக்கோ பார்க் மற்றும்
வாட்டர் ஃபௌண்டன் மாலை ஆறு மணிக்கு மேல் இருக்கும் என்று திரு
எஸ்பி செந்தில்குமார் கூறி
இருந்ததால் நாங்கள் சென்றபோது அதைக் காண
முடியவில்லை திருப்பரங்குன்றத்தில் இருந்து திருமோகூர் பயணப் பட்டோம் மதுரைக்கு பல
முறை போயிருந்தும் நான் காணாத கோவில் அது திரு காள மேகப் பெருமாள் என்னும் நாமத்துடன் நின்ற கோலத்திலும் சயனபெருமாளாக படுத்த கோலத்திலும் இறைவன் காட்சி
தருகிறார் 108 திவ்விய தேசங்களுள் ஒன்று திரு மோகூர் கோவிலைப் பற்றியும் திவ்ய தேசம் பற்றியும் அர்ச்சகர் சொல்லிக்
கொண்டே போனார் நின்றகோலத்தில் இருக்கும் பெருமாளைப் புகைப்படம் எடுக்கலாமா என்று கேட்டேன் எங்களைத்தவிர கூட்டம் ஏதுமிருக்கவில்லை. கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை யாராவது ஃபோட்டொ எடுப்பார்களா என்று அர்ச்சகர் கேட்டார். நான் அதுவும் தான் நடக்கிறதே என்றேன் அதனால்தான் எதுவும் சரியாக அமைவதில்லை என்று ஏதோ சொன்னார் அர்ச்சகர் க.ர்ப்பக் கிரகத்தில் இருக்கும் கடவுள்களைப் படம் எடுக்காமலா பத்திரிக்கைகளிலும் இணையத்திலும் படங்கள் கிடைக்கின்றன. ? ஏதேதோசொல்லித் தட்டிக் கழிக்கிறார்கள் சிம்ப்லி ஹிப்போக்ராடிக்...! கேள்விகள் ஏதும் கேட்கக்கூடாது ஆமாம் சொல்லிவிட்டேன்
திருமோகூர் போகும் போது ஆனைமலை ஒரு தோற்றம் |
திருமோகூர் கோவில் முகப்பு |
வைகை அணை செல்லச் சற்று நேரம் ஆகும் என்பதாலும்
போகும் வழியில் காஃபி அருந்த வண்டியை
நிறுத்தினோம் வீதியோர காஃபிக் கடையிலிருந்து
என் மச்சினனும் மச்சினி மகள் ஒருத்தியும் காஃபி வாங்கிக் கொடுத்தார்கள்
வைகை அணை மேல் வான் செல்ல அனுமதி இல்லை என்றும்
மேலே போக விரும்புபவர்கள் நடந்துதான் போக வேண்டும் என்று கூறினார்கள்அணை மேல்
ஏறிப்போக விருப்பம் இருந்தாலும் கைப்பிடி இல்லாமல் படி ஏறுவது எனக்குச் சிரமம்
என்பதாலும் நானும் என் மனைவியும் அவள் சகோதரி ஒருத்தியும் கீழேயே பூங்காவில் நேரம்
செலவழித்தோம்
அணையின் மேல் பாகத்துக்குச் சென்றவர்களால்
நீர்த்தேக்கத்தை மட்டுமே கூடுதலாகப் பார்க்க முடிந்தது வைகை அணையைச் சுற்றிப்
பார்த்த பின் மீண்டும் அறையை நோக்கி வண்டி கிளம்பியது மாலை எட்டு மணி அளவில்
அறைக்கு வந்து சேர்ந்தோம் மறு நாள்
விடியற்காலையில் நான்கு மணி சுமாருக்கு இராமேஸ்வரம் செல்ல ரயில் என்பதால் சீக்கிரமே படுக்கச் சென்றோம் நாங்கள் மதுரையில்
சுற்ற்ப் பயன்படுத்திய அதே வான் எங்களை காலையில் ரயில் நிலையத்துக்குச் செல்லவும்
வந்தது அனைவரும் ரயிலில் ஏறி சௌகரியப்படுத்திக்
கொண்டோம் டிக்கட் பரிசோதகர் வந்தார். ( தொடரும் )