நாம் படைத்த கடவுள்கள்
-----------------------------------
ஒரு காண முடியாத சக்தியை நம்மில் பலரால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் விக்கிரக ஆராதனையின் முக்கிய காரணமாய் இருந்திருக்கவேண்டும். ஆண்டவனுக்கு நம்மில் ஒருவன் போல் உருவம் கற்பித்து அவனுக்கு ஏகப்பட்ட சக்தியையும் கொடுத்து காப்பவனாகக் கருதி வழிபடும்போது மன அமைதி கிடைக்கிறது. அழிப்பவனாகக் கருதி வழிபடும்போது தீய செயல் செய்வதை
பயத்தால் செய்யாமலிருக்கச் செய்கிறது. கடவுளுக்கு ஏராளமான சக்தி உண்டு என்று நாம் நம்ப, அவனுக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களின் வெளிப்பாடுகளாக அறிவிக்கப்படுகிறோம். இன்னும் கடவுளை ராமனாகவும் கண்ணனாகவும், முருகனாகவும் கற்பிதம் செய்து அவர்களின் சக்திகளில் நம்பிக்கை வைத்து அவர்களை வழிபாடு செய்தால் நலம் பெறுவோம் எனும் நம்பிக்கை சிறு வயது முதலே வளர்க்கப்படுகிறது. தாயே மனிதனின் முதல் தெய்வம் என்று கருதப்படும் நம் நாட்டில், கடவுளை அன்னையின் வடிவத்திலும் வழிபடுகிறோம். சரஸ்வதியாக ,
லட்சுமியாக , பார்வதியாக, ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு சக்தியின் பிரதிபலிப்பாக வணங்க வளர்க்கப்படுகிறோம்.
இந்தக் கடவுள்களின் சக்தியில் நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவே ஆயிரமாயிரம் கதைகளும்
புனைவுகளும் ஏற்பட்டிருக்க வேண்டும்.
சூனியமான இருண்ட அண்டத்தில் சூரியனின் ஒளியே வாழ்வின் ஆதாரமாக இருப்பதால் ஆதியில் சூரிய வழிபாடும், பிறகு உயிர் வாழப் பிரதானமான அக்னி,ம் , காற்று , நீர் , மண் போன்றவைகளும் வழிபாட்டுக்கு உரியனவாயின .
சூனியமான இருண்ட அண்டத்தில் சூரியனின் ஒளியே வாழ்வின் ஆதாரமாக இருப்பதால் ஆதியில் சூரிய வழிபாடும், பிறகு உயிர் வாழப் பிரதானமான அக்னி,ம் , காற்று , நீர் , மண் போன்றவைகளும் வழிபாட்டுக்கு உரியனவாயின .
எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் வரும்
வழக்கம்போல் நினைப்பதைப் பதிவில் பகிர்கிறேன் ஒரு முறை அடையாளங்கள் என்று ஒரு
பதிவு எழுதி இருந்தேன் அதில் ஊர்
பேர் அங்க அடையாளங்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுளர்களுக்கும் உண்டு. குழல்
வைத்துக் கொண்டிருப்பவன் கண்ணன், முருகனுக்கு வேல், லக்ஷ்மிக்கு தாமரை,
சரஸ்வதிக்கு வீணை, பெருவிழிகளுடன் நாக்கைத் துருத்திக் கொண்டிருந்தால் காளி
சிவனுக்கு பாம்பு சூலம், கொண்டையில் அரை நிலா இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்
படுத்துக் கொண்டிருந்தால் அரங்கன் , நின்று கொண்டிருந்தால் பெருமாள், தவழ்ந்து
கொண்டிருந்தால் கண்ணன், கோவணத்துடன் இருந்தால் குமரன். நமக்கு இருக்கும் அங்க
லட்சணங்களை கடவுளுக்கும் வைத்து நம்மைப் போல் அவருக்கும் உருவம் கொடுத்து நம்மில்
அவரைக் காணும்( அல்லது அவரில் நம்மைக் காணும்) பாங்கு வியக்க வைக்கிறது
இருந்தாலும் நம்மில் அவர்களை காணும்போது நாம் சமமாகக் கருதப் படலாம் என்னும் காரணமே
கடவுளர்களுக்கு ஆடை ஆபரணங்களுடன் சில பிரத்தியேக அடையாளங்களையும் சக்தியையும் நிர்ணயித்து கொடுத்திருக்கிறோம் தனியே வில்லுடன் ஒருவரை
உருவகித்தால் அவர் யாராக வேண்டுமானாலும் எண்ணப்படலாம் ஆகவேதான் ராமர் என்று
அடையாளப் படுத்த கூடவே இன்னொரு வில்லாளியை , லக்க்ஷ்மணனுடன் அனுமன் சீதை என்று
சேர்த்து வைத்து அடையாளப் படுத்துகிறோம் அதே போல் கண்ணனைக் குழந்தையாகக் காட்டும்போது
குமரனிடம் இல்லாத மயில் பீலிபோன்றவற்றுடன்
அறிகிறோம் குமரன் என்றாலேயே கையில் வேல் நெற்றியில் விபூதிப் பட்டை சில
நேரங்களில் வெறும் கோவணமே ஆடை என்று
பாகுபடுத்தி வித்தியாசம் பாராட்டுகிறோம்காளி என்றாலேயே பயங்கரமானவள் என்று
தெரிவிக்க துருத்திய நாக்கு எறியும் நிலையில்
சூலாயுதம் போன்றவற்றைத் தரித்திருபவளாகக் காட்டுகிறோம்
மேலும் அங்க லாவண்யங்களைக் கற்பனை செய்து வைத்து எழுதிய இறைப்
பாடல்களும் உருவங்களுக்கு மெருகூட்ட உதவி இருக்கலாம்இந்தமாதிரி எண்ணங்கள் எல்லாம்
என் கற்பனையில் தோன்றுவதே கடவுளர்களின் உருவங்கள் இவால்வ் ஆனவிதத்தைக் கற்பனை செய்து பார்க்கும்போது
தோன்றுவனவே நான் எழுதுவது வாசகர்களுக்கும் இந்தமாதிரி உருவங்கள் உருவான கதையோ
கற்பனையோ இருந்தால் தெரிவிக்கலாமே
அதிக
கற்பனை இல்லாமல் ஓரளவு காரண காரியங்களுடன் இவால்வ் ஆனதே லிங்கமும் ஆவுடையாரும்
என்று தோன்றுகிறது சிருஷ்டியின்
காரணமான ஆண்பெண் சேர்க்கையையே உருவகித்துக் கடவுள் வடிவம் கொடுத்து
விட்டார்களோ என்று தோன்றும் போது அதைச் சொன்னால் பலரும் தவறாக எண்ணக் காரணமாகலாம்
என்று தோன்றுவதால் அதிகம் விவரிக்கவில்லை ஆனால் அதுவே லாஜிக்கலாகத் தெரிகிறது
அது
என்னவோ தெரியவில்லை நம்
நம்பிக்கைகளும் வழிபாடுகளும் என்னில்
என்னவெல்லாமோ எண்ணங்களைத் தோற்றுவித்து பதிவெழுத வைக்கிறது.