வெள்ளி, 9 மார்ச், 2018

சென்னையில் சில நாட்கள்

                       
                                         சென்னையில் சில நாட்கள்
                                         -------------------------------------------

சென்ற கோடையில் சென்னைக்கு சென்று வந்தேன் என் மகனின் புதிய வீட்டு கிரகப் பிரவேசத்துக்குச் சென்றது  அதன் பின்  இப்போது ஃபெப்ருவரி மாச  நடுவில்  என் மகன்  இங்கு வந்து எங்களை கூட்டிக் கொண்டு சென்றான்  என் சென்னைப் பயணம்  பற்றி ஸ்ரீராம் தில்லையகத்து கீதா  செல்லப்பா மற்றும்  நெல்லைத்தமிழனுக்கு அறிவித்திருந்தேன்   இம்முறை நாங்கள் அவர் வீட்டுக்கு வரவேண்டும் என்று செல்லப்பா  கூறி இருந்தார் என் மகன்  தங்கி இருக்கும்  பெரும்பாக்கம்   சென்னையின்  வெளிப் புறம் இருக்கிறது செண்ட்ரலிலிருந்து சுமார் 30 கி மீ  தூரமிருக்கும் பொதுவாக சென்னை வந்தால் பதிவர்கள் சிலரை நான்  சந்திக்க அழைப்பதுண்டு  இம்முறை  இருப்பிடம் தூரம்காரணமாக இருந்ததாலும்  யாருக்கும் தொந்தரவு தர விரும்பவில்லையாதலாலும் யாரையும்  வேண்டி வருந்திக் கூப்பிடவில்லை 
திரு செல்லப்பாவின்  வேண்டுகோள் பற்றி என் மகனிடம்கூறி இருந்தேன் அவன் எங்களை அவனது காரில் கூட்டிச் சென்றான்   கூகிள் வரைபடமே நாவிகேட் செய்ய உதவியது செல்லப்பாஎன் மகன்வீட்டிலிருந்து சுமார் அரை  மணி தூரத்தில் அவரது  குடியிருப்பு இருப்பதாகக் கூறி இருந்தார்  ஆனால் ஷார்ட்கட்டில் பயணம் செய்தும்  ஒருமணி நேரம்  ஆயிற்று  அப்போதுதான்  திரு செல்லப்பா வேளச் சேரியில் என் மகன் வீட்டுக்கு வர எத்தனை சிரமப் பட்டிருப்பார் என்று யூகிக்க  முடிந்தது  மாலை சுமார் நான்கு மணி அளவில் அவர் வீட்டுக்குச் சென்றோம்  சுமார் ஒரு மணிநேரம் அவருடனும் அவர் மனைவியுடனும்  அளவளாவினோம்  தோசையும் காப்பியும்  கொடுத்தார்கள்
பிறகு அங்கிருந்து திரும்பினோம் 

திரு செல்லப்பா தம்பதியுடன் 
திரு செல்லப்பாவீட்டு  பால்கனி தோட்டம் 


 என் மகன்  சொன்னது  சென்னையின்  வடக்கு பாகமும்   பழைய மாமல்லபுரம் இருக்கும்  இடங்களும்  மக்களுமே  மாறுபட்டவர்கள் என்றும்  வட பாகத்தில் இருப்பவர்களுக்கும்   இந்தப் பகுதியில் இருப்பவருக்கும்    வாழ்க்கை முறையிலும்  அணுகலிலும் நிறையவே வித்தியாசங்கள்   இருக்குமென்றும்  இங்கிருப்பவர்களுக்கு   வடசென்னை  ஒத்துவராது என்றும் அவனது அபிப்ப்ராயத்தைக்கூறினான் அங்கும் ஏற்ற தாழ்வுகள்  பிரச்சனை

என் மருமகள் ஒரு சாய்பாபா  பக்தை  அடுத்த நாள் சனிக்கிழமை ஓ எம் ஆர்  சாலையில் இருக்கும்  சீரடி பாபா கோவிலுக்குப் போனோம்  எனக்கு அதுஒரு வித்தியாசமான அனுபவம்   நான் ஷீரடியில்  இருக்கும் சாய் பாபா கோவிலுக்குப் போய் இருக்கிறேன்   எல்லாமே வணிக மயமாய் இருந்தது. ஆனால் இங்கே ஒரு ட்ரஸ்ட் நடத்தும் இந்தக் கோவில் ஆச்சரியப்படவைத்தது  அமைதியான சுற்றுப் புறம்  கோவிலில் உண்டியலோ எதற்கும்   கட்டணமோ கிடையாதுமுக்கியமாக பணம் எதற்கும்  பணம்  பெறுவது  தடைசெய்யப் பாட்டிருக்கிறது
வழிகாட்டி
 பாபா கோவிலில் பதாகை 
தியான  மண்டபத்தில் பாபாவின்  சிலை
பாபாவி வாக்கு கள்


வரும்வழியில்  கடல் நீரை குடி நீராக மாற்றும்  டிசேலியனேஷன்  ப்லாண்ட் இருப்பதாகக் கூறினான் ஏதோ அந்தாசாக படம் பிடித்துக் கொண்டேன்
கடல் நீர் குடிநீராக  மாறும் இடம் ? 
  

 காலை சிற்றுண்டி அங்கே இருந்த அன்ன  பூர்ணாவில் உண்டோம் மினி ப்ரேக் ஃபாஸ்ட் என்று  பல ஐட்டங்கள் எனக்கு மிகவும் போதுமானதாக இருந்தது 

மினி டிஃபின் ?
          
.என் மகன்  வீட்டை பற்றி  முன்பே எழுதி இருக்கிறேன்  அந்தக் குடியிருப்பை சுற்றி வந்தால்  சுமார் ஒரு கி மீ நேரமாகும்   மாலை வேளைகளில்   நான்  நடைப் பயிறசிக்குப் போவதோடுசரி  எங்கு போகவும்  தூரம் ஒருபிரச்சனை ஜனங்களை பார்ப்பதே அரிதாக இருந்தது  எதற்கும்  மகனது உதவி தேவை  கணினியில் இருந்தும்  வலைஉலகில்  இருந்தும் விலகி இருந்தேன்  என் மொபைலில் சில விஷயங்களைக் கற்று தந்தான்  என் மகன்  ஒரு விஷயம் எனக்குப் புரியவில்லை  என் பேரனின்   பாத் ரூம் கதவில் எழுதி ஒட்டப்பட்டிஎருந்த வாக்கியம் அது பற்றிக் கேட்ட போதுபேரன் ஒரு ந்முட்டுச் சிரிப்பு சிரித்தான்    ஒரு நாள் மாலை என் பேரன் எங்களுக்காக  பூரி பட்டூரா  செய்து தந்தான்
பாத்ரூம்  கதவில்
பேரனின்  சன்னா  படூரா


 
 பெங்களூருக்கு வரும் சதாப்தி அதிகாலை ஆறு  மணிக்கு  புறப்படுகிறது  ரயில் நிலையத்துக்கு   வர காலை நான்கு மணிக்கே கிளம்ப  வேண்டி இருந்தது சதாப்தி ர்யில் புறப்படும் நடை மேடை பற்றி ரயில்வே ஊழியர்  ஒருவரிடம் என் மகன் கேட்டான் என்னை பார்த்த அவர் நடைமேடையில் தூரம் நடக்க வேண்டும்   என்றும்  என்னை ஒரு வீ; சேரில் கூட்டிப்போகவும் கூறினார்  எனக்கு அது பிடிக்காது என்றும்  நடக்கவே விரும்புவேன் என்றும் மகன் கூற அவர் ஆச்சரியப் பட்டு எனைப் புகழ்ந்தாராம் 
   பெங்களூரில் என்  இரண்டாம் மகன்   ரயில்  நிலையத்துக்கு வந்திருந்தான்   இரண்டாம் மருமகள் மருத்துவ மனையில் அட்மிட் ஆகி இருந்தவள்  அன்றுதான் வீட்டுக்கு வந்திருந்தாள்  பொதுவாக எங்கள் சென்னை வருகையின் போது  ஒரு மழையாவதுபெய்யும்   இந்த்முறை பெய்யவில்லை   
 











புதன், 7 மார்ச், 2018

திருமணம் லாட்டரியாகிறது


                 திருமணம்   லாட்டரியாகிறது
                 -----------------------------------------------

திருமணம்பற்றிய கருத்துகள் சில பதிவுகளில் காண்கிறேன் பல வகை திருமணங்களுக்குச்சென்று வந்திருக்கிறேன் அவை பற்றி எழுதியுமிருக்கிறேன்  ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதுபற்றி கில்லர்ஜியும் அண்மையில் எழுதி இருந்தார்  இது பற்றி அலசும் முன்   பண்டை காலத்தில் சங்க இலக்கியம் தொல்காப்பியத்தில் கூறி இருப்பது இப்போது நினைவு கொள்ளத்தக்கது

திருமணம் பண்டைக்காலத்தில் கடி-மணம், கரணம், மன்றல், வதுவை, வரைவு என்று பல பெயர்களில் அறியப் பட்டிருந்தது. அந்தக் காலத்திலேயே பொருத்தம் பார்த்து திருமணங்கள் நிச்சயிக்கப் பட்டிருக்கின்றன.

”பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு உருவு, நிறுத்த காமவாயில் ,நிறையே, அருளே உணர்வோடு திருவென முறையுளக் கிளந்த ஒப்பினது வகையே” என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
இப்பொழுதும், இளமை ,வனப்பு, வளமை, கல்வி, அறிவு என்று பல பொருத்தங்கள் பார்த்துத்தான் திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன, ஆனால் பல குடும்பங்களில் உறவின் வழியே நிச்சயமாகும் திருமணங்களில் பெரும்பாலும் இதையெல்லாம் கவனிப்பதில்லை.அறிந்த மனிதர் ,இனம் குலம் எல்லாம் ஒத்தது இதையெல்லாம் விட சொத்து பத்துகள் குடும்பத்தைவிட்டு வெளியேறாது என்னும் எண்ணமும்கலந்தெ மணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன. இந்த வகைத் திருமணத்தில்ACCOUNTABILITY ---GUARANTEED  என்று எண்ணுகிறார்கள், இந்த வகைத் திருமணத்தில் பெரும்பாலும் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை இழக்கிறார்கள். இம்மாதிரி உறவில் விளையும் திருமணங்கள் வாயிலாகப் பிறக்கும் சந்ததிகள் உடல் நலம் குன்றி இருக்க வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஆனல் இந்தக்காலத்தில் பெண்கள் படித்து வேலைக்குப் போகிறார்கள் ஃபைனான்ஷியல் சுதந்திரம் அடைந்து விட்டதாக எண்ணுகிறார்கள் திருமணத்தில் அவர்களது ஒப்பினியனும் இருக்க வேண்டும்  என்று நினைக்கிறார்கள் நல்லது/ ஆனால் அது சில நேரங்களில் அத்து மீறி போவதையே இப்பதிவில் சொல்ல வருகிறேன்  இப்போதெல்லாம்  திருமணம் ஒரு லாட்டரி யாகவே இருக்கிறது

ஒரு சில பதிவுகளில் மணப் பெண்கிடைப்பதே அரிதாகக் கூறுகிறார்கள் ஒருவனுக்கு மணம்பேசும்  வயது வந்து விட்டால்  அவனுக்கான பெண் எங்கோ பிறந்திருக்கவேண்டும்
நானறிந்த சில சம்பவங்கள் திருமணமென்பதையே கேலிக் கூத்தாக்கி விட்டதைக் காட்டுகிறது

என் நண்பரொருவர் அவரது மகனுக்குக் கல்யாணம்  என்று பத்திரிக்கை கொடுத்திருந்தார்  ஆனால் என்னால் போக முடியவில்லை  பையன் படித்து அமெரிக்காவில் வேலையில் இருந்தான் வழக்கப்படி பெண் பார்த்து சம்மதம்கூறி இரு வீட்டாரும் ஒப்புக் கொண்டபடி மணம்  நிச்சயமாயிற்று  திருமண நாளுக்கு முந்தைய தினம்  பெண் வீட்டை விட்டு ஓடிப் போயிருந்தாள் எல்லோருக்கும் வருத்தமும்  அவமானமும் நல்ல வேளைநான்  அந்தத் திருமணத்துக்குச்செல்ல வில்லை
இன்னொரு திருமணத்தில் திருமணம்முடிந்து  பெண் கணவனுடன் அமெரிக்க சென்றாள் ஆனால் அமெரிக்காவில் அவளது காதலன் வந்திருந்து அவளைக்   கூட்டிக் கொண்டுபோய் விட்டான்  இந்த திருமணம்  அவளுக்கு வீசா பெற்றுக்கொடுத்ததுதான்பலன் அதற்காகவே அந்தத் திருமணம் என்றாளாம்   

அண்மையில் ஒரு கல்யாணம் நடந்தது மணமகன்  ஏகப்பட்டஎதிர்பார்ப்புகளுடன்  மனை வியுடன் குடித்தனம் செய்ய ஒரு மூன்றுபடுக்கயறையுடன் கூடிய வீடு வாங்கி இருந்தான்  அவளுடன்சில நாட்கள் குடித்தனமும் நடத்தினான்   ஒரு நாள் அவன்  மனைவி  ஒரு கடிதம் எழுதி வைத்து அவள் கொண்டுவந்திருந்த் நகைகளைக் கேட்டு வந்தாள் அவள் ஏற்கனவே ஒருவனுடன் காதலில் இருந்ததாகவும் அங்கே செல்லப் போவதுமாய்க் கூறி இருந்தாள்  பெண்ணின் தாய்க்கு இந்தவிஷயம்முன்பேதெரியுமாம்  பையனின் கல்யாணக் கனவுகள் தகர்ந்தது

இன்னொரு திருமணம்  வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது  கல்யாணத்துக்கு முன்பே மணப் பெண்ணும்பையனும்  நன்கு பேசிப்பழகி இருக்கிறார்கள் திருமணம் முடிந்த சிலநாட்களிலேயே பெண் விவாகரத்து கோரி இருந்தாள்  கணவனுக்கு மனநிலை சரி இல்லை என்று கூறிவிவாக ரத்து கேட்டாள் இத்தனைக்கும்  அவனுடன் திருமணத்துக்கு முன்பே பேசிப்பழகி இருந்தாள் சிலமாத காத்திருப்புக்குப்பின்  விவாகம் ரத்தானது அந்தமணமகன் இப்போது இன்னொருபெண்ணை மணமுடித்து அமெரிக்காவில் வேலையில்  இருக்கிறான்
 இன்னும்  எத்தனையோ திருமணங்கள் நினைவுக்கு வருகிறது
இதையெல்லாம் பார்க்கும்போது இப்போதைய திருமணங்கள் ஒரு லாட்டரி என்றே நினைக்கத் தோன்றுகிறது
.
 




     

திங்கள், 5 மார்ச், 2018

என்னைப் போல் ஒருவன்


                               என்னைப் போல் ஒருவன்
                                ----------------------------------------

நம் எண்ணங்களைப் போல் ஒருவருக்கும்  நம் குணத்தோடு ஒத்து போகிறவரையும்  கண்டால்  பிடிக்கும்தானே
 எனக்கு நம் நாட்டில் நிலவும்  உயர்வு தாழ்வுகள் பிடிக்காது அதன்  மூல காரணத்தைஆராய்வதை விட்டு அதைஒழிக்கும் முறை என்ன  என்று சிந்திக்கும் போது அடிப்படையில் நம்கல்வியை மாற்ற வேண்டும் என்று தோன்றுகிறது இன்றைக்கு வளர்ந்துஇருப்பவகளில்  பெரும்பாலோர் மூளைச் சலவைசெய்யப்பட்டவர்களே  நம்முன் னோர்கள் கூறியது தவறாக இருக்காது நம் சாத்திர சம்பிரதாயங்கள் தவறாக இருக்க முடியாது என்னும் நிலைப் பாட்டை உடையவர்களாகவே  இருக்கிறார்கள் அதன்நீட்சியே இந்த ஏற்ற தாழ்வுகளையும் சிந்திக்க விடாமல் செய்கிறது  இதை மாற்ற என்ன வழி என்று யோசிக்கும்போது  சிறு வயதிலேயே அவர்களதுசிந்தனைகளை நேர் வழிப்படுத்த வேண்டும் என்னும் கட்டாயம்  ஏற்படுகிறது இனம்  சாதி மொழி போன்றவைகள்சொல்லி மாற்ற முடியாதது அதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும்  அதுதான்கல்விமூலம் செய்ய முடியும்  ஐந்திலேயே வளைக்க முற்பட வேண்டும் 
கல்வியிலும்  அநேக ஏற்றதாழ்வுகள் ஒரே வயதுள்ளவன் கல்விமூலம் உயர்ந்தவன்   தாழ்ந்தவன் ஆகிறான் ஆக்கப் படுகிறன்  எல்லோருக்கும் சமகல்வி என்னும்நிலையைக் கொண்டு வர வேண்டும் கல்வி வியாபாரமாக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்  பள்ளி இறுதி படிப்பு வரை அதாவது சுமார் பதினாறு வயது வரை எல்லோரும் சமம் என்னும்  எண்ணம் உருவாக்கப் படவேண்டும் இலவசமாக என்னவெல்லாமோ தருகிறார்கள்கல்வி ஏன்  இலவசமாகக் கூடாது  எல்லோரும்  சமம் என்னும்  எண்ணம்  பிஞ்சு மனதிலேயே  விதைக்கப் படவேண்டும்  அதற்கு எல்லோருக்கும்  எல்லோருக்கும் என்பதை அடிக்கோடிட்டுச்சொல்கிறேன் இலவசக் கல்வி இலவசசீருடை  இலவச உணவு என்பவை கட்டாய மாக்கப் பட வேண்டும் இவை  ஏற்ற தாழ்வு  எண்ணாங்களை குறைக்கும் அதே நிலையில் வளரும்  சிறார்கள் மனதில் உயர்வுதாழ்வு எண்ணம் வரும் வாய்ப்பு குறையும் அடுத்த தலைமுறை மக்களாவது  உயர்வு தாழ்வு பற்றி நினைக்கும் சாத்தியக் கூறுகள் குறையலாம்
 பிறப்பொக்கும்  என்னும்  நிலை வரலாம்
 ஆனால் இவற்றை நடைமுறைப்படுத்துவது சிரமம்  என்று தெரியும்   கல்வி வியாபாரிகளின் எதிர்ப்பு கூடும் மத வாதிகளின்  கூக்குரலும்  ஏறும்  இருந்தாலும்  இதை நடத்திகாட்டினால் சமுதாயம் ஏற்றதாழ்வு இல்லாமல் இருக்கும்
 இதெல்லாம்  உதோப்பியன்  கனவுகளாகத் தோன்றலாம்  எதற்கும்  ஒரு ஆரம்பம்  தேவைதானே
 அதற்கு  ஒத்த எண்ணங்கள் உடையவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும்   அவர்கள் சார்ந்து இருக்கும் கட்சியோ ஆட்சியோ இதை செயல் படுத்த வேண்டும் 
அரசியல் ஒரு சாக்கடை என்றுகூறி தப்பித்துக் கொள்ளாமல் சேவை மனப்பான்மையோடு செயல் படவேண்டும்   இந்த நிலையில் ஒரு கட்சி ஆரம்பிக்கும்போதே அதன்  கொள்கைகளாக உயர்வு தாழ்வு இல்லாத சாதி மதம்பார்க்காத சிறந்த கல்வி முறையே நாட்டம் என்று கூறபொபடுவதைக் கேட்கும்    போது   விடியல் அருகில் இருப்பதாகத் தோன்றுகிறது
இதைதான்  பதிவின்  ஆரம்ப வரிகளில் கூறி இருக்கிறேன் அரசியல் சேவை செய்வதற்கே ஆன்மீக ஏற்றத்துக்கு அல்ல ஆன்மீகம் என்று சொல்லி மக்களை ஏமாற்றியது போதும்
 இன்னதுதான்  குறை அதைத்தான் களையமுற்பட வேண்டும்யார் சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல என்ன சொல்கிறார்கள் என்பதே முக்கியம்
பல ஆண்டுகளுக்கு முன்  என்னை கம்யூனிஸ்ட் ஆக்கினீர்கள்  என்னும் ஒரு சினிமா மலையாளத்தில் வந்த நினைவு என்னை இப்படி சிந்திக்க வைப்பதும் இன்றைய அவலநிலையே   



.
 



வெள்ளி, 2 மார்ச், 2018

கதை அல்ல நிஜம்




கதையல்ல நிஜம்

அண்மையில் திருமதி பானுமதி ஒரு பதிவு எழுதி இருந்தார்  அதன்பின்னூட்டத்தில் நான்  எழுதி இருந்த இப்படியுமா கதை அல்ல நிஜம் என்னும்பதிவு பற்றிக் கூறி இருந்தேன்
பெங்களூரில்  ஒரு ஃப்ரென்ச்  தூதரக அதிகாரியை அவர் மனைவி அவர்கள் மகளையே வன்புணர்வு செய்ததாக புகார் செய்திருந்தார்  அந்த வழக்கு முடிவுக்கு வந்ததா தெரியவில்லை  எனக்கு நான் எழுதி இருந்த  இப்படியுமா கதை அல்ல நிஜம் என்னும் பதிவு நினைவுக்கு வந்தது
இப்படியுமா.....?  கதை அல்ல நிஜம்..
================================

      
உறவுகள் பற்றியும், அதன் திரிபுகள்  பற்றியும் ,
      
யார் யாரோ, என்னவெல்லாமோ எழுதி விட்டார்கள்.
      
நானும் எழுதி இருக்கிறேன்.

உணர்வுகள் திரிந்து ஏற்படும் உறவுகள் -மனசாட்சி
துணையுடன் நியாயப்படுத்தப்படும் செயல்கள்,
நிகழ்வுகளைத் தடுக்க இயலாத ,காரணகாரியங்களை
அலசி ஆராயும் மனோபாவங்கள் எல்லாம் மீற

        எண்ணத்தறியில்  ஏதேதோ எண்ணங்கள் 
       முன்னுக்குப்பின் முரணாய்  முற்றும்  கற்பனையாய் 
       சில சமயம் பாழாய் பழம் பொய்யாய்,பகற்கனவாய், 
       சிலநேரம் எதிர்கொள்ள வொண்ணா சீற்றத்துடன் 
       நம்பவே முடியாத நிகழ்வுகள் கண் முன்னே விரிகிறது.

        உள்ளத்து உணர்ச்சிகளுக்கு, வார்த்தைகளில்
      
உயிரூட்டினால் உண்மையில் ஜொலிக்கும்
      
நிஜங்களில் கற்பனை கலந்தால்  வீரியம் குறைந்து,
      
உண்மை நிலை மங்கிப் போகாதோ.

இதுவும் அயல்தேசத்தில் நடந்த இந்தியக் கதை அல்ல,
நிஜம்.உணரப்பட வேண்டிய உண்மைகள் இருப்பதால்
பகிர்ந்து  கொள்கிறேன்.

       மணம் முடித்து மனைவி குழந்தையுடன்
       வசிக்கும் தன் மகனைப் பார்க்கச் சென்ற
       பெரியவர் அவனைச் சிறையில் சந்தித்தார்.
       மாமனாரைப் பார்க்க மருமகள் விரும்பவில்லை.
       எங்களுக்குள் சிறு பிணக்கம், பெரிது படுத்த
       வேண்டாம், வெளியில் வருவேன் சடுதியில்
       கவலை வேண்டாம் என்று உறுதி அளித்த
       மகன் சொல் கேட்டு ஊர் திரும்பி வீடு
       சேரும் முன் வந்தது மகன் தன்னைத்தானே
       தூக்கிலிட்டு  மாய்த்துக் கொண்டான் என்ற
       பேரிடிச் செய்திஒன்று.

மறுபடியும் பறந்து சென்று, விசாரித்து அறிந்தால்
கிடைத்தது அதனினும் பெரிய பேரிடிச் செய்தி.

        பெற்ற மகளிடம் வன்புணர்ச்சி கொண்டான் கணவன்
        என்ற மனைவியின் வாக்குமூலம் பெற்றுத்தர
        இருக்கும் தண்டனையிலிருந்து தப்பிக்க அவன்
   தேர்ந்தெடுத்த வழியே தற்கொலை

            ( வக்கிர உணர்வுகளின் எல்லை மீறிய வெளிப்பாடு 
                இப்படியுமா.. என்ற ஆதங்கத்தில் பகிர்ந்தது. )

  


  

என்னைப் போல் ஒருவன்