Monday, April 18, 2011

கேள்விகளே பதிலாய்..........

கேள்விகளே  பதிலாய்.  (ஒரு  சிறுகதை .)
---------------------------------------------------- 

       கமலம் மற்றும் கண்ணனின் நடவடிக்கைகள் சற்றே
வித்தியாசமாகவும், விநோதமாகவும் பட்டது பாபுவுக்கு. சில 
நாட்களாகவே மாலை நேரத்தில் அவர்களை வீட்டில்  பார்ப்பதே 
அரிதாக இருந்தது. பார்க்க முடிந்தபோதோ, சோகத்துடன் கூடிய
ஒரு  பரபரப்பும் எதிர்பார்ப்பும் உணர முடிந்தது.திருமணமாகி
ஐந்தாறு  வருடங்களாகியும் மகப்பேறு இல்லாத குறை அவர்
களுக்குண்டு, என்று பாபுவுக்குத் தெரியும் பரிகாரம் தேடிகோயில்
குளங்கள் என்று அவர்கள் அலைவதும் தெரியும். மருத்துவரிடம்
சென்று குறை ஏதாவது, யாரிடமாவது இருக்கிறதா என்று அறிந்து
கொள்ள இருவருக்கும் துணிவில்லை. மகப்பேற்றுக்கு வாய்ப்பு
இல்லை என்று சொல்லி விடுவார்களோ என்று உள்ளூரப் பயம்
இருந்தது..ஆலய வழிபாடுகளும் ஆண்டவன் தரிசனமும் மாகப்
பேற்றுக்கு வழிவகுக்கும் என்றால் அந்தப் பாக்கியம் இல்லாத
வர்களே  இருக்க முடியாதே. வாழ்க்கையில் குறை எது, நிறை
எது, என்று பகுத்தறியும் அறிவையும், தெரிந்த குறைகளைத்
திருத்த முடியும் நம்பிக்கையையும், திருத்த முடியாத குறைகளை
பொறுத்துக்கொள்ளும் பக்குவமும் எல்லோருக்கும இருப்பது
இல்லை. இப்போது இந்த ஆராய்ச்சிகள் செய்வதால் யாருக்கு
என்ன லாபம்.? இருந்தாலும் மிகவும் வேண்டப்பட்டவர்கள்
தவறான பாதையில் செல்கிறார்கள் என்றால் பார்த்துக் கொண்டு
இருக்க முடிவதில்லையே. பாபு கண்ணனிடம் கேட்டே விட்டான்.

      " அம்மாஜி,என்றொருவர்.பெண்மணி. மிகவும் சக்தி வாய்ந்தவர்.
அவருடைய கடைக்கண் பார்வை பட்டால் துன்பங்கள் எல்லாம்
உருண்டோடிவிடும்.அவர்களைப் பார்க்கத்தான் நானும் கமலமும்
போகிறோம்.அவர் தரிசனம் கிடைக்க ஏராளமானவர்கள் காத்திருக்
கிறார்கள்.வேண்டுமென்றால் நீயும்தான் வந்து பாரேன்..."

       வாழ்க்கையை எப்பவும் எதார்த்த நிலையிலேயே பார்க்கும்
பாபுவுக்கு, மக்களின் அறியாமையிலும், மூட நம்பிக்கைகளிலும்
வருத்தமுண்டு. இவன் மட்டும் வருந்தி என்ன பயன்.?காலங்கால
மாக நிகழ்வுகளுக்குக் காரணம் காண முயன்று, முடியாது
போகையில் , வேண்டாத நம்பிக்கைகளை வளர்த்துக்கொண்டு,
ஆறுதல் தேடி அலையும் நிறையப் பேரிடம் பேச்சுக்கொடுத்து,
வாங்கிக் கட்டிக்கொண்ட அனுபவம் பாபுவை அவனுடையக்
கருத்துக்களைச் சொல்ல தயங்க வைத்தது.

        இருந்தாலும் இந்த அம்மாஜியை ஒரு முறைப் பார்க்க
வேண்டும். எந்த விஷயம் மக்களை அவரிடம் ஈர்க்கிறது என்று
தெரிந்து கொள்ள வேண்டும்.என்ற  உந்துதலில் பாபு  தன நண்பன்
நாதனையும் தன்னுடன் வரக் கேட்டுக்கொண்டான்.நாதன் ஏன்
என்றால், அதிகம் படிக்காதவன், பாமரன், எல்லோருக்கும்
நல்லதே நடக்க விரும்பும் அப்பாவி; அவனுக்கு எந்த ஒரு
சித்தாந்தமோ கோட்பாடோ கிடையாது. உள்ளும் புறமும்
உண்மையானவன்..மனதில் பட்டதைப் பட்டென்று சொல்லி
விடுவான். அவன் கூட இருந்தால் நன்றாக இருக்கும் என்ற 
எண்ணத்தோடு, அவனைத் தன கூட வருமாறு அழைத்தான் பாபு.

       அம்மாஜி எனும் பெண்மணி, வயது 35 லிருந்து, 40 க்குள்
இருக்கும். நடுத்தர உயரம்,மாநிறம், நெற்றியில் ஒரு பெரிய
குங்குமப்பொட்டு, நூல்புடவை, ஆபரணங்கள் அதிகம் இல்லை.
வசீகரம் என்று சொல்லும்படியாக ஏதும் இல்லை.அவருடைய
பக்தர் /பக்தி /சீடர் யாரோ ஒருவர் வீட்டில் தங்கி இருந்தார்.
மாலை விளக்கு வைக்கும் நேரம், அந்த வீட்டிற்கு நிறைய
ஜனங்கள் வருகை தரத் துவங்கினர். கணிசமான எண்ணிக்கை
யில்  ஆண்களும் பென்க்களுமாகக் குழுமி இருந்தனர். அந்த
வீட்டின் ஹாலில் நரசிம்ஹ  சுவாமியின் உருவப்படம் ஒன்று
வைத்திருந்தது. பக்திப் பாடல்களும் பஜனையும் ஆரம்ப
மாகியது. இவை எல்லாவற்றையும் மனசில் உள்வாங்கிக்
கொண்ட பாபு, நாதனிடம் நன்றாகக் கவனித்துப் பார்த்துக்
கொள்ளக் கூறினான்.

         பக்திப்  பாடல்களும்  பஜனைகளும் கூடி இருப்பவர்களின்
எண்ணங்களை பக்தியின்பால் ஒருமுகப்படுத்த இசைக்கப்
படும் ஒன்று. ஒருமித்த தாள கதியில் இனிய குரலில் ஒருவர்
இசைக்க,கூடியுள்ளவர்கள் தொடர,அங்குள்ள சூழ்நிலையையே
வேறு ஒரு தளத்துக்கு இட்டுச் செல்ல வேண்டியது பஜனைப்
பாடல்கள். ஆனால், அந்த வீட்டில் பாபுவுக்கு எதுவுமே சுருதி
சேராமல் ,அபஸ்வரத்தில் எழுந்த ஒரு CACOPHONY   இரைச்சல் 
என்றே தோன்றியது.அம்மாஜி மெதுவாக நடந்து,ஹால் முழுதும்
சுற்றிவந்து வந்திருப்பவர்களை அடையாளம் தெரிந்து கொண்டு,
கண்களாலும் தலையசைப்பாலும் விசாரித்துக்கொண்டு, தான்
கைகொட்டிக் கொண்டே நடந்தார். அந்த இடத்தில் பாபுவும் ,
நாதனும் புதியவர்கள் என்று புரிந்து கொண்ட பாவனையில் ,தன்
புருவத்தை ஒரு மாதிரி நெரித்து ,கண்களில் ஒரு கேள்வி எழுப்பும்
பாவனையில் ஒரு முறைப்பான பார்வையை வீசினார்.பாபுவுக்கு
அம்மாஜியை பார்த்ததும், அடையாளம் தெரியாதவர்களிடம்
காட்டப்படும் மரியாதை ,கூடவர மறுத்தது. "ஓ.! இந்தப் பெண்மணி
யிடம் என்ன சக்தி இருக்கிறது என்று இவ்வளவு பேர்
கூடுகிறார்கள் "என்ற எண்ணமும் தலை காட்டியது. நாதனுக்கோ
மேலும் அங்கிருக்கப் பிடிக்காமல் "வா, பாபு, போகலாம் ",என்று
கையைப் பிடித்திழுத்துக்கொண்டு வெளியேறினான்.

        அடுத்தநாள், கண்ணனும் கமலமும் பாபுவை ஒரு பிடி பிடித்து
விட்டார்கள். "எவ்வளவு சக்தி வாய்ந்த அம்மாஜி, அவர் அருகில்
வந்தவுடன், நீங்கள் வெளியேறியது, அவர்களை அவமதித்தது
போலாகி விட்டது. உங்களுக்கு நல்ல காலமில்லை ", என்று கூறி
சாபம் வேறு கொடுத்தனர். "கண்ணா, எனக்கு அவர்கள் மீது எந்த
நம்பிக்கையும் இல்லை. அவர்கள் பார்வையும், நோக்கும் ஒரு
வெறுப்புதான் அவர்கள் மேல் வருகிறது. அந்தப் பெண்ணிடம்
ஏதோ குறை இருக்கிறது என்று என்  உள் மனசு கூறுகிறது.
அவர்களுடன் உள்ள தொடர்பையே வெட்டி விடுங்கள். அதுவே
உங்களுக்கு நல்லது. அவரும் நம்மைப் போன்ற ஒரு சாதாரண
மனித ஜீவி. இல்லாத சக்திகளை அவர்களிடம் கொடுத்து, பின்
ஒரு காலத்தில் நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். இந்த மாதிரிக்
கூட்டங்களைக் கூட்டுவதும் ,ஆட்களைக்  கவருவதும், ஏதோ
ஒரு உள்நோக்கம் இருக்க வேண்டும்.அவ்வளவுதான் நான்
கூறுவேன்," என்ற பாபுவை இருவரும் எரிச்சலுடனே பார்த்
தார்கள்.பாபுவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
"என் மனதில் பட்டதை உங்களுக்குக் கூறினேன்.அதை ஏற்றுக்
கொள்வதும், கொள்ளாததும் உங்கள் விருப்பம் " என்று கூறி
வந்து விட்டான்.இது நடந்து ஓரிரு மாதங்கள் சென்றன. ஒரு
நாள் நாதன் பாபுவிடம், "அன்றைக்கு ஒரு நாள் ஒருஅம்மாஜியை
பார்க்க போயிருந்தோமே அவர்களுடைய  போட்டோ ஒன்றை
நண்பன் ஒருவன் வீட்டுப் பூஜை அறையில் பார்த்தேன்.அவரது
அருளால்,பல காலம் வேலை கிடைக்காமல் இருந்தவனுக்கு,
நல்ல வேலை கிடைத்திருக்கிறதாம்.எல்லாம் நரசிம்மருடைய
அருளும், அமமாஜியின்சக்தியும்தான்,என்று மகிழ்ச்சி பொங்கக்
கூறுகிறான்,"என்றான். " இதெல்லாம் காக்கை உட்கார பனம்
பழம் விழுந்த கதைதான். நம்பிக்கைகளைப் பற்றி மட்டும் நான்
அதிகம் பேச மாட்டேன். எனக்குத் தெரியும், அறிவுக்கும் 
உணர்வுக்கும் போராட்டம் நடந்தால் அறிவு தோற்று உணர்வு 
தான் வெல்லும். இது எப்போதைக்கும் பொருந்தும் உண்மை
நம்மால் ஒன்றும் செய்ய முடியாது ",என்று கூறிய பாபுவைப் 
பரிவுடன் பார்த்த நாதன், "இருந்தாலும் இந்த நிகழ்வுகள் உன் 
உள்ளத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதை என்னால் உணர 
முடிகிறது ",என்றான்.
        நாட்கள் வாரங்களாகி, மாதங்களாகி ஓடின. நாதனின் 
நண்பன் ஒரு சேதியைக் கொண்டு வந்தான்.அமமாஜியின் 
சிஷ்யர்களில் இதுவரை இரண்டு பேர் தற்கொலை செய்து 
கொண்டிருக்கிறார்கள். இருவரும் பெண்கள். மனசுக்கு 
என்னவோ போல் இருக்கிறது, என்றான்.அவர்களுடைய 
தற்கொலைக்கும் அம்மாஜிககும் தொடர்பு இருக்கிறதா 
என்ற கேள்விக்கு,பதில் சரியாகத் தெரியாது என்றும் அரசல்
புரசலாக கொஞ்சம் சலசலப்பு இருக்கிறது என்றும் கூறினான்.
      அமமாஜியின் போட்டோ உங்கள் பூஜையறையில் இன்னும் 
இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலேதும் கூறாமல் சென்று
விடடான் பாபுவுக்கு கண்ணன் கமலம் பற்றிய கவலை எழுந்தது.
உற்ற நண்பர்கள், உண்மையில் நல்லவர்கள், எதையும் அதிகம் 
சிந்திக்காமல் வெறுப்போ விருப்போ எதுவாயிருந்தாலும் 
உடனுக்குடன் வெளிப்படுத்தி விடுவார்கள்.கடவுள் பக்தியும்,
நம்பிக்கையும் தங்களுக்கு மிக அதிகம் என்று நம்புபவர்கள். 
சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மிகவும் ஈடுபாடு கொண்டு 
இருப்பவர்கள். கேள்வி ஏதும் கேட்காமலேயே எதையும் ஏற்றுக் 
கொள்வார்கள்.இல்லாவிட்டால் ஒதுக்கித் தள்ளி விடுவார்கள்..
அவர்கள் வீட்டுக்கு ஒரு முறை போக வேண்டும். எப்படி இருக் 
கிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக்   
கொள்ளும் பாபுவுக்கு சரியான நேரமும் சந்தர்ப்பமும் அமைய 
வில்லை,போக முடியவில்லை. உள்ளத்தின் ஒரு மூலையில் 
ஒரு குறுகுறுப்பு மட்டும் அவ்வப்போது தோன்றும்.
       கூறப்படும் நிகழ்வுகளும் சம்பவங்களும் நிகழ்ந்த காலத்தில்
இப்போதிருப்பதுபோல தொலைபேசி வசதியோ, கைபேசியோ 
கிடையாது. எதையும் அறிய வேண்டுமென்றால், யாராவது 
சொல்லக் கேட்க வேண்டும். இல்லையென்றால் நேரில் சென்று 
அறிந்து கொள்ள வேண்டும். கடிதத் தொடர்புகள் பெரும்பாலும் 
அயலூர்க்காரர்களுடந்தான்.
      சமயமும் சந்தர்ப்பமும் சரியாக அமைந்த ஒரு நாள், கண்ணன்  
வீட்டிற்கு பாபு சென்றான். கண்ணன் மட்டுமே இருந்தான்.கப்பலே 
கவிழ்ந்ததுபோல கவலையுடன் இருந்தான். பாபுவை வா என்று 
கூடக் கூப்பிடவில்லை. பாபுவுக்கு எங்கோ எதுவோ சரியில்லை 
என்று மட்டும் நன்றாகத் தெரிந்தது. "கமலம் வீட்டில் இல்லையா,
எனக்கு ஒரு கப் காப்பி கிடைக்காதா?"என்றான். "ஆமாம் ..இங்கு 
கும்பி கூழுக்கழுகிறதாம் அங்கு குடுமி பூக்கழுகிறதாம்.வெறுப்பு 
ஏத்தாதே பாபு.",என்று கண்ணன் கடுகடுத்தான். இறுக்கமாக 
இருந்த நிலையை சற்றே தளர்த்த பாபு இவ்வாறு கூறினான். 
"சரிதான் ,புகழ் பெற்ற அமமாஜியின் பிரிய சிஷ்யனுக்கா இந்த 
வெறுப்பும் கோபமும்...அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் .?"
"பாபு தமாஷ் வேண்டாம். கமலம் வீட்டில் இல்லை. நாலைந்து 
நாட்களாக இல்லை. என்னவோ ஏதோ என்று பேதலித்து இருக் 
கிறேன்.உனக்கென்னவோ தமாஷும், எகத்தாளமும். "
சீரியசான விஷயம் என்று அறிந்தவுடன் பாபு கேள்விகள் கேட்க 
முற்பட்டான். "எவ்வளவு நாளாகக் காணோம்..கடைசியில் எங்கு 
போனார்கள்.. போலீசில் அறிவித்தாயா...உன் அம்மாஜி என்ன 
சொல்கிறார்...முக்காலமும் உணர்ந்தவர்  ஆயிற்றே.அவர்.
கண்ணா நீ இருக்கும் நிலையைப் பார்த்தால், உனக்கு ஏதோ 
தெரிந்திருக்கிறது. இக்கட்டான சூழலில் இருக்கிறாய் என்று 
தெரிகிறது. என்னிடம் கூறலாம் என்றால் தெரிவி. "
     " குழந்தை இல்லாக் குறைக்கு பரிகாரமாக அம்மாஜி சொல்லக் 
கேட்டு எங்கெங்கோ யார்யாருடனோ போகிறாள். வீட்டுக்கு 
கூப்பிட்டால் வர மாட்டேன் என்கிறாள்.என்ன செய்வது என்று 
தெரியவில்லை."என்று கூறி கண்ணன் அழத் தொடங்கினான். 
      "கண்ணா, படித்தவன் நீ. குழந்தை பெறுவதோ, முடியாமல் 
போவதோ, உடல் சார்ந்த விஷயங்கள். இன்று மருத்துவம் 
வளர்ந்திருக்கும் நிலைக்கு, காரணங்களை எளிதில் தெரிந்து 
கொள்ளலாம். அம்மாஜியும் அப்பாஜியும் எதுவும் செய்ய முடியாது. 
ஏதாவது தவறான பாதையைக் காட்டி இருக்கப் போகிறார்கள். 
வேண்டுமானால் போலீசில் புகார் கொடேன். " என்ன சொல்லியும் 
கண்ணன் ஆறுதல் அடையவில்லை. 
       பகுத்தறிவு என்று பேசினாலேயே அது கடவுள் மறுப்பைக் 
குறிப்பதுதான், என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும் இடத்தில் 
சில நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் , அது எவ்வளவுதான் 
கூடுதல் புரிதலும், நட்பும் இருக்கும் நண்பனிடம் கூட, விவாதிக்க 
முடிவதில்லை. தெரிந்தே செய்யும் அறியாமையால் நடக்கும் 
தவறுகளைக் காலம்தான் திருத்த வேண்டும். அன்று என்ன 
என்னவோ பேசியும் பலனில்லாமல் போகவே பாபுவும் வந்து 
விடடான். 
      என்னென்னவோ அலுவல்கள் தவிர்க்க முடியாத பயணங்கள்  
கண்டு பேசி தெரிந்து கொள்ள முடியாத சூழ்நிலைகள் என்று 
பாபுவும் கண்ணனும் பேசியே விளையாட்டாக இரண்டு ஆண்டு 
கள் ஓடிவிட்டன. 
       எதிர்பாராத விதமாக சந்திப்பு நடந்தபோது, கண்ணன் பாபுவை 
அவன் வீட்டிற்கு அழைத்தான். சென்றபோது அழகான ஒரு பெண் 
குழந்தையுடன் கமலம் அவனை வர வேற்றாள். 
      "கண்ணா, இந்தக் குழந்தை.?"என்று பாபு கேட்டபோது கண்ணன், 
"இது எங்கள் குழந்தை.வேறெந்த கேள்வியும் கேட்காதே.
இப்போது நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம் ",என்று சொல்லி 
பாபுவின் வாயடைத்து விடடான். 
       கேள்விகளுக்கு பதில் காண விழைந்த பாபுவுக்கு மேலும் 
கேள்விகளே பதிலாக அவன் மனதில் ஓடியது.  
================================================
 
.  


                

 

.
  ..

26 comments:

 1. கதை நல்ல விறுவிறுப்பாகச் சென்றது. கடைசியில் என்ன ஆகுமோ என்ற ஆவலையும் தூண்டியது.

  //கேள்விகளுக்கு பதில் காண விழைந்த பாபுவுக்கு மேலும் கேள்விகளே பதிலாக அவன் மனதில் ஓடியது.//

  ஆனால் கடைசியில், பாபு போலவே நாங்களும் !
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. கேள்விகளுக்கு பதில் காண விழைந்த பாபுவுக்கு மேலும்
  கேள்விகளே பதிலாக அவன் மனதில் ஓடியது.  ......வித்தியாசமாக கதையை முடித்து விட்டீர்கள். இதுவும் நல்லா இருக்குது.

  ReplyDelete
 3. சில நேரங்களில் சில கேள்விகளுக்கான பதில்கள் அது பற்றி நாம் உருவாக்கிக் கொள்ளும் ஊகங்களாக இருக்கவே விரும்புகிறோம். நம் ஊகத்திற்கேற்ப பதில் கிடைக்காத பட்சத்தில் கிடைத்த பதிலை உண்மையென்று நம்பப் போவதும் இல்லை. இந்த மாதிரி சமயங்களில் அதுபற்றிக் கேட்கப்படும் கேள்விகளும் ஒப்புக்குத்தான் என்று ஆகிப்போகிறது. ஊகங்கள் அந்த அளவுக்கு உண்மை போலவே மனத்தை பலமாக ஆக்கிரமித்துக் கொண்டு உண்மை என்றே நம்மை நம்பச் செய்து விடுகிறது.. சில நேரங்களில் உண்மையாகவே ஊகங்கள் இருப்பினும் அதை மனம் நம்ப மறுக்கும். அது பொய்யாக இருக்கக் கூடாதா என்று ஏற்றுக் கொள்ள மறுக்கும்.

  ReplyDelete
 4. கதையை எழுதிவிட்டு, அதனை விளக்க வேண்டி வரும்போது, கொஞ்சம் சங்கடமாகவே இருக்கிறது. சிறுகதை எழுதுவதில், எனக்குத் தெரிந்து இரண்டு வகைகள் உள்ளன. சம்பவங்களைக் கொண்டே கதையை நகர்த்துவது. மற்றது,சில விஷயங்களைச் சொல்ல, கதாபத்திரங்களை உருவாக்கி,ஆங்காங்கே மன நிலையை,விளக்கிக்கொண்டு போகும் விதம். இரண்டாம் வகையில் வாசிப்பவர்களின் ஆர்வம்,புரிதல் தெவை. அவர்கள் கதையில் ஒன்றினால்தான் ரசிக்க முடியும். கதாசிரியன் சொல்ல வந்ததை புரிந்து கொள்ள முடியும்.ஜீவி அவர்களின் பின்னூட்டம் படிக்கும்போது, ஒரு நிறைவு ஏற்படுகிறது. மற்றபடி சொல்ல வந்ததை நேராகவே சொல்லிவிட்டால் அது கதையாக இருக்காது; கட்டுரை யாகி விடும். கதையின் சுவாரசியம் போய்விடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். நான் என் “ வாழ்வின் விளிம்பில்” என்ற சிறுகதையை ஜீவி அவர்கள் புட்டுப்புட்டு விமரிசிக்க வேண்டுகிறேன் என்பது என் நீண்ட நாள் அவா.

  திரு. ரத்னவேலுக்கு, நான் கதை எழுதி உள்ளேன். மீண்டும் படித்துப் பாருங்கள். புரியலாம். சித்ரா மற்றும் கோபு சாருக்கும் வருகைகும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 5. அழுத்தமான ஆழமான கதை பாலு சார்.

  உணர்வுக்கும் அறிவுக்குமிடையே போராட்டம் நிகழும்போது உணர்வுதான் கவனிக்கப்படுகிறது.வெல்லவும் செய்கிறது.

  நீங்களே சொன்னதுபோல கதையோ கவிதையோ வாசகனின் மனதில் சிறிய வெற்றிடத்தை உண்டுபண்ணினால் அதை கதாசிரியனின் வெற்றி அல்லது அந்தக் கதையின் வெற்றியெனச் சொல்லலாம்.

  தவிர கதைகள் எப்போதும் முடிவதில்லை எனும் ஜாதி நான்.

  ReplyDelete
 6. அன்புள்ள ஜிஎம்பீ சார்!

  தாமததிற்கு வருந்துகிறேன். இனிமேலும் தாமதிக்கக் கூடாதென்று அந்த 'வாழ்வின் விளிம்பில்' கதைக்கு அந்தப் பகுதியிலேயே என் எண்ணங்களைக் குறித்து விட்டேன்.

  தங்கள் அன்பான அழைப்புக்கு மிக்க நன்றி.

  என்றும் அன்புடன்,
  ஜீவி

  ReplyDelete
 7. வித்தியாசமாக கதையை முடித்து விட்டீர்கள். இதுவும் நல்லா இருக்குது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 8. சுந்தர்ஜி சொல்வதுபோல் கதைகள் முடிவதில்லை. நீங்கள் முடித்து விட்டீர்கள். ஆனாலும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது கதை எங்கள் மனதிலும், கண்ணனின் அக்கம்பக்கத்து இல்லங்களிலும் .

  கதை வெகு அருமை சார்

  ReplyDelete
 9. முதலில் ஜீவி சாருக்கு, என் சிறுகதை “வாழ்வின் விளிம்பில்” படித்து விமரிசனம் எழுதியதற்கு. வாசகர் மனதில் இன்ன விதமான பாதிப்புகளை கதைகள் ஏற்படுத்த வேண்டும் என்று ஆசிரியன் விரும்புகிறானோ, அது நடந்து விட்டால் அவன் வெற்றி பெற்றவனாகிறான். அதற்கு ஆசிரியன் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. நல்ல வாசிப்பனுபவமும் ஈடுபாடும் கொண்ட வாசகர்களும் அவசியம் .என் குறை நிறைகளை அலசிய ஜீவிக்கு மீண்டும் நன்றி. சுந்தர்ஜி, சிவகுமாரன் கோபு சார் சித்ரா போன்ற நல்ல வாசகர்களுக்கும் என நன்றி.
  மாலதி, உமேஷ் அவர்களுக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

  ReplyDelete
 10. கதை முடியும் இடத்தில்தான் தொடங்கியிருக்கிறது. பாபுவின் மனதில் ஓடும் கேள்விகள் வெளிப்படையானவை அவற்றை நாம் எல்லோருமே அறிந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. தவிரவும் கதை தொய்வில்லாமல் போகிறது. தேர்ந்த தன்மையை உணர முடிகிறது. இருபதாண்டுகளுக்கு முன்பு இதே தன்மையில் வேறு கதைப்பொருண்மையில் எழுதிய என்னுடைய கதையை நினைவுபடுத்திக்கொள்கிறேன். சில நெருடல்களான தருணங்களையும் இக்கதை என்னுடைய மனதில் பதிவு செய்கிறது. உணர்வுகள்தான் இருதரப்பிலும் நின்றுலகிறது காலங்கள்தோறும் பல கேட்கமுடியாத கேள்விகளையும் பெறமுடியாத பதில்களையும் மனதில் நிறுத்தி.

  ReplyDelete
 11. இருதரப்பிலும் நின்றுலவுகிறது.

  ReplyDelete
 12. Sir,

  there have been many things, happening to people all around you- that leaves you with lots of questions. the theme here- is one such. it fits exactly into that description that you've mentioned in your story. 'rationalizing'- as you say, sure does leave people with notions of being an 'atheist'. there are many places where the tale you've woven here, strikes a chord... the clash between the brain and heart... questions being answers (yes, the very title...). Took me for a while, back to my own experience in writing out something called 'Spatika Lingam', long time back-- in last june... my first attempt at writing a tamil story...
  As we still stand, heads held high, questioning beliefs- when asked- 'why question'? we proudly answer- 'we seek answers- the truth'-- but alas! truth is, but-- questions!

  Brilliant!

  ReplyDelete
 13. PS: I was kind of away from blogging... Due to work and other such unimportant things that usually build up my already lazy schedule... But it was my dad., who had read this post of yours and recommended to me that I read it right away-- saying it was a 'must-read' for me and that I'd really like it! :) His taste never falters. So, a special thanks to him too...!

  ReplyDelete
 14. @ஹரணி அவர்களுக்கு, எழுதிய கதை மனதில் சிறு சலனத்தையாவது ஏற்படுத்தி இருந்தால் அதை என் வெற்றி என்றே கொள்வேன்.கருத்துகளுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 15. @மாதங்கி மாலிக்கு, IT IS REALLY SATISFYING TO HAVE
  AVID AND DISCERNING READERS LIKE YOU. I AM ALSO GLAD TO KNOW, YOUR FATHER RECOMMENDED THIS STORY BE READ BY YOU. THAT MEANS I HAVE ONE MORE PERSON WHO WOULD LIKE TO READ REASONABLY FAIR POSTINGS. THANK YOU BOTH,

  ReplyDelete
 16. சிந்திக்க வைத்த கதை. யதார்த்தத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலை இன்னும் பலருக்கு வரவில்லை. நம்பிக்கைதான் வாழ்வு. நம்பிக்கை இல்லாவிடில் பைத்தியம்தான் பிடிக்கும்.

  ReplyDelete
 17. கேள்விகளை எழுப்பிகொண்டே
  ஒரு தீர்க்கமான விடை தராத
  வாழ்க்கை தரும் ஒரு துன்பமான
  இன்பத்தைப்போலவே
  விடைதராது மீண்டும் கேள்விகளை
  வாசகனிடத்தில் விதைத்துப்போகும்
  படைப்பே மிகச் சிறந்த படைப்பு என்பதில்
  இரண்டுவித கருத்துக்கள் இல்லை
  நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. சார் வணக்கம்.
  இது நான் காணாத உங்களின் இன்னொரு முகம்.
  கதையில் பாபு மற்றும் நாதனின் சித்திரிப்பில் நீங்கள் பிரதிபலிப்பதாய் ஒரு உணர்வு.
  கதாசிரியனின் தன்னாளுமையைத் தான் அறியாமலே தன் பாத்திரங்களில் பிரதிபலிக்கும் இடங்கள் கதைகளில் அமைதல் இயல்பு.

  அது போன்று இவ்விரு பாத்திரங்கள் ஒலிக்கும் குரல் உங்களுடையதாய்த் தோன்றியது.

  யூகம் சரியாய்த்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

  அடுத்து கதையின் முடிவு ...!

  அதைப் படிப்பவன் தன் மனஉணர்விற்கேற்ப அமைத்துக்கொள்ளுமாறு விட்டிருப்பது அழகு.

  வியக்க வைக்கறீர்கள்.

  நன்றி

  ReplyDelete
 19. சார்! மிக மிக அருமையான ஒரு கதை! உணர்வுகளின் அழுத்தம் ஓங்கிய கதை! அம்மாஜியைப் பற்றி பாபு, கண்ணனிடம் விவரிப்பதாய் வரும் உங்கள் வரிகளே கிட்டத்தட்டக் கதையின் போக்கைச் சொல்லி விடுகின்றது. (ம்ம்ம் பல சாமியாரிணிகள், சாமியார்களைப் பற்றித் தெரிந்து கொண்டதால் இருக்குமோ?!!!)

  கமலத்தைக் காணவில்லை, அம்மாஜியுடன் எங்கெல்லாமோ பரிகாரம் வேண்டிச் செல்கின்றாள் என்ற கண்ணனின் வரிகள் அது என்ன என்று உரைத்து விட்டது. அதற்கான பதிலும் இறுதியில் ஊகம் சரிதான் என்று...கிடைத்துவிட்டது. உங்கள் கதையின் முடிவில். கிட்டத்தட்ட மாதொருபாகன் முடிவுதான் ஆனால் அதில் அந்த நாயகன் தற்கொலை செய்து கொள்கின்றான் இதில் உங்கள் முடிவில் நாயகன் இருக்கின்றான். அதில் பகுத்தறிவு பேசப்படவில்லை, இதில் நீங்கள் பகுத்தறிவு பற்றிச் சொல்லுகின்றீர்கள் - கதை ஆசிரியரின் மன எண்ணங்களாய் பிரதிபலிக்கின்றது. ஒரு வித்தியாசமான முடிவுதான். அருமையாக இருக்கின்றது சார்....ஊகிக்க முடிந்தாலும் நீங்கள் ஊகத்தை வாசகர்களிடம் விட்டாலும், எங்கள் ஊகம் சரிதான் என்பது கண்ணனின் இறுதி வரிகள் உறுதிப் படுத்துகின்றன. ஆனால் அது மாதொருபாகனைப் போலா இல்லை ஆணின் விந்து கமலத்தின் கர்பப்பைக்குள் செலுத்தப்பட்டா....குழந்தையில்ல்லா குறை கண்ணனிடம் தான் இருக்கின்றது என்பது போல வந்தாலும், கண்ணனின் விந்தை கமலத்தின் உடலுக்குள் செலுத்தி பெற முயற்சி செய்திருக்கலாமோ....

  ஆனால் மிகவும் அழகான கதை சார்! நீங்கள் இதை எந்தக் காலகட்டத்தில்/ எந்தக் காலகட்டத்தை மனதில் கொண்டு எழுதினீர்கள் என்று தெரியவில்லை....ஆனால் உங்களுக்கு மாதொருபாகனின் சர்ச்சை வராது சார். ஏனென்றால் இதில் அது போன்ற சாதிக் குறிப்புகள் இல்லையே!

  ReplyDelete
 20. சார்! இந்த முடிவை வைத்து நீங்களும் அடுத்துத் தொடரலாம் சார்! அதற்கான சாத்தியக் கூறுகள் பல உள்ளனவே! கதையில்...ஏனென்றால் இந்தக் கதை முடிவு பெற்றதாகத் தெரிந்தாலும்....முடிவுற்றதாகத் தெரியவில்லை. உணர்வுகளின் கொந்தளிப்பு இப்போது அடங்கியிருப்பது போல் தோன்றினாலும் அது ஒரு எரிமலைதான் சார். நீங்கள் இந்தக் கதையை மீண்டும் தொடர்ந்தால் என்ன? அதுவும் நீங்கள் எழிதிய வருடத்திற்கும் இப்போதும் இடைவேளி உண்டே அந்தப் பெண் குழந்தையும் வளர்ந்து வருவாளே!

  ReplyDelete

 21. @ ஊமைக் கனவுகள்
  நீங்கள் சொல்வது சரிதான் என்று நானே எழுதி இருக்கிறேனே. கதையின் கருவை வளர்க்கும் போது கூடவே என் கருத்துக்களையும் சேர்ப்பது என் வழக்கம் அதே போல் குழந்தைக்காக செய்ய வேண்டிய செயல்களை விட்டு சாமியார், சாமியாரிணிகள் பின்னல் பரிகாரம் எனச் செல்வது disgusting என்பது என் அபிப்பிராயம். வருகைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete

 22. @ துளசிதரன் தில்லையகத்து
  கதையை ஊன்றிப் படித்து சொல்லப்பட்ட விஷயங்களை உள் வாங்கி கருத்திடுவது மகிழ்ச்சி தருகிறது
  நான் எழுதிய கதையால் சர்ச்சை வர வாய்ப்பில்லை. மாதொரு பாகனின் தளமே வேறு. நான் ப்துவாகக் கூறுகிறேன். அவர் குறிப்பிட்டு க் கூறி அதை சமூகம் அங்கீகரிப்பதாகவும் எழுதினார்.கருத்துப் பகிர்வுக்கு நன்றிஐயா

  ReplyDelete

 23. @ துளசிதரன்
  என் சிறுகதைத் தொகுப்பில் சில கதைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும்படி இருக்கலாம் இந்தக் கதையை யாராவது தொடர விரும்பினால் எனக்கு ஆட்சேபணை இல்லை. தொடர்வதாக த் தெரிந்தால் போதும்.வருகைக்கு நன்றி.

  ReplyDelete