பசித்திரு . முட்டாளாய் இரு.
--------------------------------------------
நான் பதினேழு வயதாக இருக்கும்போது படித்தது." ஒவ்வொரு
நாளையும் உன் வாழ்வின் கடைசி நாளாக நீ கருது வாயானால்
ஏதோ ஒரு நாள் நிச்சயமாக உன் கருத்து உண்மையாகும். "என்ற
ரீதியில் இருந்தது. அது என் மனதில் பதிந்தது. பிறகு கடந்த 33-/
வருடங்களில் தினமும் நான் கண்ணாடி முன் நின்று "இதுவே
என் வாழ்வின் கடைசி நாளானால் இன்று நான் செய்ய
நினைப்பதை செய்ய விரும்புவேனா "என்று கேட்டுக் கொள்வேன்
அதற்கு "மாட்டேன்" என்ற பதில் தொடர்ந்து சில நாட்கள் வரு
மானால் நான் என்னில் சில மாற்றங்களை செய்யத் தேவை
என்று எனக்குத் தெரிய வரும்.
கூடிய சீக்கிரமே நான் இறந்தவனாகி விடுவேன் என்ற நினைப்பே
என் வாழ்க்கையில் நான் மிக முக்கியமான முடிவுகளை
எடுப்பதில் மிகவும் உதவும் கருவியாக இருந்திருக்கிறது.
ஏனெனில் எல்லா புற எதிர்பார்ப்புகளுமே , கர்வம், தோல்வியால்
ஏற்படும் அவமானமோ பயமோ - இறப்பின் முன்னே வீழ்ந்து
உண்மையிலேயே எது முக்கியமோ அதுவே நிலைக்கும். நீ
இறக்கப் போகிறவன் என்ற நினைப்பே வாழ்வில் தோல்வி எனும்
வலைக்குள் நீ சிக்காமல் இருக்க உதவும். ஏற்கெனவே அம்மண
மாகி இருக்கும் நீ இதயத்தின் ,மனசின் எண்ணங்களை
தொடராமல் இருப்பதற்கு நியாயம் இல்லை.
சுமார் ஓராண்டுக்கு முன் எனக்குப் புற்று நோய் இருப்பதாக கண்டு
பிடிக்கப் பட்டது, காலை 7-30-/ மணிக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு
என் பான்க்ரியாசில் கட்டி இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.
எனக்கு பான்க்ரியாஸ் என்றால் என்னவென்றே தெரிந்திருக்க
வில்லை. மருத்துவர்கள் இது, குணப்படுத்த முடியாத புற்று நோய்
வகையை சேர்ந்தது என்றும், மிஞ்சிப்போனால் மூன்று மாத
முதல் ஆறு மாதத்துக்குமேல் நான் உயிர் வாழ்வது எதிர்பார்க்கக்
கூடாது என்றார்கள். என்னுடைய டாக்டர் என்னை வீட்டிற்குப்
போய் எல்லா நிலவரங்களையும் நேர் செய்ய சொன்னார். அது
என்னை சாவதற்கு தயாராக இருக்கும்படி கூறும் டாக்டரின்
அறிவிப்பும் கணிப்பும் ஆகும். என்னவெல்லாம் செய்வோமோ,
சொல்லுவோமோ அவற்றை ஓரிரு மாதங்களில் பிள்ளைகள்
இடமும் உற்றார்களிடமும் சொல்ல முயல வேண்டும்.எல்லா
ஓட்டைகளையும் அடைத்து கூடியவரை குடும்பத்தினர் எளிதாக
எடுத்துக்கொள்ள தயார் செய்தல் வேண்டும். அதாவது பிரியா
விடை பெறுதல் வேண்டும் என்று பொருள்.
அந்த உடல் நிலைகுறித்த அறிவிப்புடன் நாள் பூரா இருந்தேன்
மாலையில் பயாப்சி எடுத்தார்கள். என் தொண்டை வழியாக ஒரு
குழாயைச் செருகி வயிற்றுக்குள்ளும் குடலுக்கு உள்ளும்
நுழைத்து பான்க்ரியாசிளிருந்து கட்டியின் சில துகள்களை ஊசி
மூலம் எடுத்தனர். என்னை மயக்க நிலைக்கு உட்படுத்தி இருந்
தார்கள். அருகில் கவனித்துக் கொண்டிருந்த என் மனைவி அந்த
அணுக்களை மைக்ராச்கொபில் பார்த்த டாக்டர்கள் கண்ணீர்
(ஆனந்த) வடிப்பதைக் கண்டாள். அறுவைச் சிகிச்சை மூலம்
குணப்படுத்தக்கூடிய அசாதாரணமான அணுக்களை பாங்கரி
யாஸ் புற்று நோயில் கண்டனர். எனக்கு அறுவைச் சிகிச்சை
நடந்து முடிந்தது. இப்போது நலமாக உள்ளேன்.
இதுவே இறப்பின் மிக அருகாமைக்குச் சென்றதும் இன்னும்
பல ஆண்டுகளுக்கும் இதுவே இறப்பின் மிக அருகாமையாக
இருக்கும் என்றும் நம்புகிறேன். இந்த அனுபவத்தினூடே
வாழ்ந்த நான் இன்னும் சற்றே ஊர்ஜிதமாகக் கூற முடியும்.
"சாவு என்பது உபயோகமான , ஆனால் அறிவார்த்தமான ஒரு
குறியீடு மட்டுமே. (CONCEPT)
யாருக்கும் இறக்க விருப்பமில்லை.சொர்கத்துக்கு போக
விரும்புபவர்கள்கூட அங்கு செல்ல இறக்க விரும்புவதில்லை
ஆனால் சாவு என்பதே அனைவரும் சேருமிடம் என்பதைப்
பகிர்ந்து கொள்கிறோம். யாராலும் தவிர்க்க முடியாதது. அது
அப்படித்தான் இருக்கவேண்டும். ஏனெனில் இறப்பே வாழ்வின்
மிகச் சிறந்த கண்டு பிடிப்பு. வாழ்க்கையை மாற்றிப்போடும்
மகத்தான நிகழ்வு. வயதானவர்களை அப்புறப்படுத்தி புதிய
வர்களுக்கு இடமளிக்கிறது. தற்சமயம் அந்த புதியவருள் நீயும்
ஒருவன். காலப்போக்கில் நீ பழசாகி அப்புறப்படுத்தப் படுவாய்.
சொல்வதற்கு நாடகத்தன்மை கொண்டிருந்தாலும் அதுவே
உண்மை.
உன் காலம் வரையறுக்கப்பட்டது ஆகவே பிறரின் வாழ்க்கை
வாழ்ந்து வீணாக்காதே. மற்றவரின் சிந்தனைப்படி வாழ்ந்து
அதன் பலனில் சிக்கும் கோட்பாடுகளில் மாட்டிக்கொள்ளாதே.
பிறரது சிந்தனையின் சப்தம் உன் உள்ளத்து சிந்தனையின்
அறிவுரையை மூழ்கடிக்க விடாதே. உன் உள்ளத்தின் அறிவுரை
மற்றும் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து அதன்படி வாழ மனோ
திடம் கொள்ளல் அவசியம். நீ என்னவாக இருக்க வேண்டும்
என்பதை உன் உள்மனம் அறியும். மற்றவை எல்லாமே
இரண்டாம் பட்சம்தான்.
நான் சிறுவனாக இருந்தபோது "The whole earth catalog' என்ற ஒரு
பிரசுரிப்பு இருந்தது. அது என் தலை முறையினரின்
வேதங்களில் ஒன்று என்ற தகுதி பெற்றிருந்தது.Stewart Brand
என்பவரால் வாழ்க்கைக்கு ஒரு கவித்துவ உணர்வைக்
கொண்டு வந்தது. 1960-/ களின் கடைசிக் கட்டத்தில் கணினி
காலத்துக்கு முன்பானது. டைப்பிங் மெஷின்கள் கத்தரிக்
கோல் ,போலராய்ட் காமராக்கள் உதவி கொண்டு உருவாக்கப்
பட்டது.கூகிளுக்கு 35-/ வருட முந்தையது. புத்தக வடிவில்
கூகிள் என்று கூறத்தக்கது. சிறந்த கருவிகளுடனும் சீரிய
சிந்தனைகள் வழிந்தோட உருவாக்கப்பட்டது.
Stewart Brand -ம அவர் குழுவினரும் The whole earth catalog -இறுதிப்
பதிப்பைக் கொண்டு வருமுன் பல வெளியீடுகளை கொண்டு
வந்தனர் அந்த இருதிப்பதிப்பு 1970-களின் நடுவில் நான் உங்கள்
வயதினனாக இருந்தபோது வந்தது. அதன் பின் அட்டையில்
அதிகாலை கிராம சாலையின் புகைப்படம் அச்சிடப்பட்டு
இருந்தது. அதன் அடியில் Stay Hungry; Stay Foolish. ( அறிவுப் )
பசியுடனிரு ; முட்டாளாய் இரு. என்று எழுதி இருந்தது. அது
அவர்கள் விடைபெறுமுன் கூறிய மொழியாக இருந்தது.
பசித்திரு; முட்டாளாய் இரு என்றைக்கும் நான் இருக்க
விரும்பியது. படித்து முடித்துப்பட்டம் பெற்று வெளியேறும்
உங்களுக்கும் நான் கூறுவதும் அதுவே. STAY HUNGRY; STAY
FOOLISH; நன்றி
( Stanford University -யில் 12-06-2005 -ல் STEVE JOBS. பட்டம்பெறும்
மாணவர்களுக்கான உரையின் தொடக்கப் பகுதியின் சில
குறிப்புகள். )
ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளர் STEVE JOBS தனது 56-ம வயதில்
காலமானார். THE HINDU நாளிதழில் வெளியான ஒரு பகுதியின்
தமிழாக்கம் இது. மொழிபெயர்ப்பல்ல. சமீபத்தில் இறப்பு பற்றிய
எண்ணங்களாலும் அனுபவங்களாலும் ஈர்க்கப்பட்ட எனக்கு, " இறப்பே
வாழ்வின் சிறந்த கண்டு பிடிப்பு "என்ற தலைப்பு பிடித்திருந்தது.
அனுபவங்கள் ஒத்துப் போனதால் தமிழாக்கம் செய்தேன். நன்றி.
-------------------------------------------------------------------------------------------------------
. .
கரெக்ட்
பதிலளிநீக்குஆனா மரணம் முற்றுப் புள்ளியாய் விழுந்து விடக் கூடாது, நம் எழுத்துக்கள் நம் வாழ்க்கையை அந்த புள்ளியுடன் இணைந்து அரை புள்ளியாய் தொடர வேண்டும்....
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
பதிலளிநீக்குஇவர் போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும்
-----ஸ்டீவ் ஜாப்ஸ் இயற்கை எய்திய செய்தி வாசித்தபோது எனக்குத் தோன்றிய வரிகள் இவை!
அருமையான பகிர்வு ஐயா!
உன் காலம் வரையறுக்கப்பட்டது ஆகவே பிறரின் வாழ்க்கை
பதிலளிநீக்குவாழ்ந்து வீணாக்காதே
வாழ்ந்து கற்று அறிவித்த
வாழ்க்கைப் பாடம்.!
பகிர்வுக்கு பாராட்டுக்கள்>
//உன் காலம் வரையறுக்கப்பட்டது ஆகவே பிறரின் வாழ்க்கை
பதிலளிநீக்குவாழ்ந்து வீணாக்காதே. மற்றவரின் சிந்தனைப்படி வாழ்ந்து
அதன் பலனில் சிக்கும் கோட்பாடுகளில் மாட்டிக்கொள்ளாதே.
பிறரது சிந்தனையின் சப்தம் உன் உள்ளத்து சிந்தனையின்
அறிவுரையை மூழ்கடிக்க விடாதே. உன் உள்ளத்தின் அறிவுரை
மற்றும் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து அதன்படி வாழ மனோ
திடம் கொள்ளல் அவசியம். நீ என்னவாக இருக்க வேண்டும்
என்பதை உன் உள்மனம் அறியும். மற்றவை எல்லாமே
இரண்டாம் பட்சம்தான்.//
அருமையான அறிவுரைகள், ஐயா.
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
நல்ல கருத்துகள்.
பதிலளிநீக்குபிறப்பு என்று ஒன்றிருந்தால் இறப்பென்றும் உண்டுதானே. அதை எண்ணி ஏன் பயப்படனும்.?
பதிலளிநீக்குவணக்கம்.
பதிலளிநீக்கு19.10.2011 ஆனந்த விகடனில் ஒரு செய்தி வந்துள்ளது. உதிர்ந்த ஆப்பிள் எனும் தலைப்பிலான கட்டுரை ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் இறந்தது பற்றி. அதில் ஒரு பாரா செய்தி மட்டும்.
ஆப்பிள் நிறுவன அலுவலகத்தில் இருக்கிற கார் பார்க்கிங்கில் யாரெல்லாம் குறித்த நேரத்திற்குள் வருகிறார்களோ அவர்களுக்கே பார்க்கிங்கில் நிறுத்த இடம் கிடைக்கும். எவ்வளவு உயர் அதிகாரியாக இருந்தாலும் லேட் என்றால் பார்க் செய்ய இடம் கிடைக்காது. ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸ் லேட்டாக வந்தால் மாற்றுத் திறனாளிகளின் பார்க்கிங் ஏரியாவில் கருணையே இல்லாமல் காரை பார்க் செய்வார். இப்படி ஒரு குணாசியத்தோடு இருந்தவர் ஸ்டீவ்.