Wednesday, March 26, 2014

சில அனுமானங்கள்


                                                   சில அனுமானங்கள்
                                                    ----------------------------
       ன்றைய த ஹிந்து ஆங்கில இதழில்( பெங்களூர் பதிப்பு 26-03-2014 ) Tre possibility of pilot suicide  எனும் கட்டுரையைப் படித்த போது இனம் தெரியாத நிம்மதி மனதில் தோன்றியது, என்னடா இது 239 பேரைக் காவு வாங்கிய MH370 எனும் விமானம் இந்து மஹாசமுத்திரத்தில் நொறுங்கி விழுந்த செய்தி எப்படி நிம்மதி தரமுடியும் என்று நினைக்கிறீர்களா.? அந்த விமான ஓட்டியின் எண்ணம் ஏதோ ஒரு காரணத்தால் செயல்பட முடியாத நேரத்தில் அவர் அந்த விமானத்தை கடலில் செலுத்தி தன் உயிரை மாய்த்துக் கொண்டது மட்டுமல்லாமல் பயணம் செய்த அனைவரின் உயிர்களையும்  எடுத்துச் சென்றிருக்கிறார். இதில் எனக்கு என்ன நிம்மதி என்றால் , ஒரு வேளை அந்த விமானி நினைத்ததைச் செயல்படுத்தி இருந்தால் நினைக்கவே நடுங்குகிறது. மலேஷியாவில் இருந்து வடகிழக்குப் பாதையில் சென்ற விமானம் கோபைலட்டின் “all right, good night “  என்ற அறிவிப்புக்குப் பின் திசை மாறி மேற்கு நோக்கி பயணிக்க துவங்கி இருக்கிறது.அந்த நேரத்தில் அதுவரை 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் 42000 அடி உயரத்துக்குச் செலுத்தப் பட்டிருக்கிறதுஅந்த உயரத்தில் காபின் டி ப்ரெஷரைஸ் ஆகி ஆக்சிஜன் இருக்காது. அந்நேரத்தில் ஆக்சிஜன் மாஸ்க் அணிய கிடைக்கும் நேரம் 15 வினாடிகளுக்கும் குறைவே. நித்திரையில் இருக்கும் பயணிகள் அவர்களை அறியாமலேயே மூளைச்சாவாகி இருப்பார்கள்.விமான ஓட்டியின் எண்ணத்துக்கு தடையாய் பயணிகள் யாரும்வர வாய்ப்பில்லாதபோது விமானிஉயரத்தை குறைத்துக் கொண்டு மேற்கு நோக்கியே பயணத்தைத் தொடர்ந்திருந்தால் இந்திய எல்லைக்குள் வந்திருப்பார்.விமானம் 45000 அடி உயரத்தில் இருக்கும் போது டிப்ரெஷரைஸ் ஆகி இருந்தால் அது திடீரென 12000 அடி உயரத்த்ய்க் வந்து விடும் அப்படி வந்தால் விமானம் ஏதோ எமர்ஜென்சி யில் இருப்பதாக ராடார் கண்காணிப்பவர் நினைக்க ஏதுவாகும் இந்திய எல்லைக்குள் வந்து அமெரிக்காவில் நிகழ்ந்த மாதிரியோ அல்லது ஜனத்தொகை மிகுந்த இடத்திலோ விமானத்தைச் செலுத்தி இருந்தால்...... அப்படி ஏதும் நடக்காமல் ஏதோ காரணத்தால் விமானம் தெற்கு நோக்கிப் பறந்து இந்து மஹா சமுத்திரத்தில் வீழ்ந்திருக்கிறது. தற்கொலை செய்து கொள்ள விமானி நினைத்திருந்தால் அதற்கு எத்தனையோ வழிகள் இருக்க  239 பயணிகளுடன் பயணம் செய்த்து அவனுடைய ஏதோ அல்டீரியர் மோடிவுக்கு துணை போயிருக்கும். விமானம் ஏன் திசை மாறித் தெற்கு நோக்கிச் சென்று நொறுங்கியது என்பது பல ஆண்டுகளுக்கும் விவாதிக்கப் படும் இந்தியா ஒரு இலக்காக இருந்திருக்கலாம். எப்படியோ நடக்காமல் போய் விட்டது என்பதே என் நிம்மதிக்குக் காரணம் 
                         **********************************


அண்மையில் திருமதி . கீதா சாம்பசிவம் காஃபி பற்றி மூன்று பதிவுகள் எழுதி இருந்தார். அவரது ஒரு பதிவின் பின்னூட்டத்தில் பெர்கொலேடர் காஃபி குடித்திருக்கிறீர்களா  என்று கேட்டிருந்தேன். அதில் காஃபியை விட நுரை அதிகம் இருக்கும் என்று மறுமொழி எழுதி இருந்தார். பெங்களூருக்கு வரும் முன் வரை பெர்கொலேடரில் காஃபி தயாரித்துக் குடிப்பது வழக்கம் நாங்கள் எந்த நுரையும் கண்டதில்லை. ஆகவே பெர்கொலேடர் பற்றிய பதிவாக இது. முதலில் பெர்கொலேடர் எப்படி இருக்கும் என்று கூறுகிறேன். அதுஅடியில் ஒரு ஜாரும் நடுவில் ஃபில்டரும் மேல் பாகத்தில் ஒரு நாஜிலுடன் கூடிய ஜக்கும் இருக்கும் கீழ் ஜாரில் நீர் ஊற்றி அத்ன் மேல் ஃபில்டர் பாகத்தை பொருத்தி  அதன் மேல் நாஜிலுடன் உள்ள மேல் பாகத்தையும் பொருத்த வேண்டும் இந்த அசெம்ப்ளியை அடுப்பில் வைத்து நீரைக் க்திக்க விட்டால் அதிலிருந்த வரும் ஆவி மேல் பாத்திரத்தில் உள்ள நாஜில் மூலம் வெளிவந்து காஃபி டிகாக்‌ஷப்னாக இருக்கும் . இந்த டிகாக்‌ஷனில் தேவையான அளவு பாலும் சர்க்கரையும் சேர்க்க காஃபி ரெடி. இந்தப் பதிவு என் பூவையின் எண்ணங்கள் தளத்தில் வந்திருக்க வேண்டும் 




( படங்களுக்கு  கூகிளுக்கு நன்றி) 

     திருமதி ரேவதி சங்கரன் ஒரு பல்கலை வித்தகி. பார்த்து ரசியுங்களேன் 
                                                                

36 comments:

  1. MH370 என்னவாயிற்று என்று இன்னும் உறுதியான தகவல் ஏதும் இல்லை...

    பெர்கொலேடர் தகவலுக்கு நன்றி... பூவையின் எண்ணங்கள் தளத்திலும் பகிர்வுகள் தொடரவும் ஐயா...

    ReplyDelete
  2. பெர்கொலேடர் தகவல் சிற்ப்பு .அதில் நுரை ஏதும் வராதே..

    எக்ஸ்ப்ரஸ்ஸோ காபியில்தான் பாதி நுரையாக ததும்பிக்கொண்டிருக்கும்..

    காணொளி ரசிக்கவைத்தது..!

    ReplyDelete
  3. காணொளிக்கு முதல் மார்க்! உண்மையில் பல்துறை வித்தகிதான்!
    காப்பி எங்கள் வீட்டில் பில்டரில் தான் (இப்போது காபி மேக்கர்) போடுவேன். ஒருமுறை நாக்பூர் போயிருந்தபோது உறவினரின் பிள்ளை காபிடே விற்கு அழைத்துப்போனார். என் அதிர்ஷ்டம் காப்பி சூடே இல்லை. காப்பிக்கு சூடுதானே அழகு?

    மனதை வருத்தும் நிகழ்வு இந்த மலேசிய விமானம் காணாமல் போனது. பல செய்திகள் வருகின்றன. எது உண்மை என்று தெரியவில்லை.

    ReplyDelete
  4. மலேசிய விமானம் குறித்துப் பல செய்திகள் வருகின்றன ஐயா. எது உண்மை என்றே தெரியவில்லை. தற்கொலை செய்துகொள்வதற்குக் கூடவா துணை தேடுவார்கள். புரியவில்லை ஐயா

    ReplyDelete
  5. விமானம் நம் ஊரில் விழுந்து விபத்து ஏற்படவில்லையே என மகிழ்ச்சியடைவதை விட விமானத்தில் உள்ள அனைவரும் சுகமாக நலமாக இருக்கிறார்கள் என்ற செய்தி வந்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருக்கலாம்.

    நீங்கள் தந்துள்ள காணொளியில் வரும் காட்சி சில ஆண்டுகளுக்கு முன்பு திரு K.பாலசந்தர் அவர்கள் இயக்கிய ஒரு தொலைக்காட்சி தொடரில் வந்தது. அதில் திருமதி ரேவதி சங்கரனின் இந்த அச(சா)த்திய திறமையைக் கண்டு இரசித்து வியந்திருக்கிறேன். திரும்பவும் இரசிக்க வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  6. மலேசிய விமானம் என்ன ஆனது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.......

    காஃபி - :))) இந்த பெர்கொலேட்டர் காஃபி குடித்ததில்லை.

    ரேவதி சங்கரன் - நிச்சயம் வித்தகி தான். இந்த காணொளியினை முன்பே பார்த்திருக்கிறேன். ஒரு முறை ஃப்ரூட் சாலட் பகுதியில் பகிர்ந்து கொண்டதாகவும் நினைவு.

    ReplyDelete
  7. மலேசிய விமானம் MH 370 என்ன ஆனது என்பது புரியாத புதிர் - இந்த நொடி வரையிலும்!.. பற்பல செய்திகள் பலரும் வாசிக்கின்றனர். மூளையில் நினைவலைகள் நின்று போகும் போது - இந்த மாதிரி நிகழ்வுகள்!.. என்று யாரோ சொல்லக் கேட்டது..

    ReplyDelete

  8. @ திண்டுக்கல் தனபாலன்
    மலேஷிய விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விட்டது என்பது தெரிந்தாகிவிட்டது. ஏன் எப்படி என்பதே புதிர். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி

    ReplyDelete

  9. @ இராஜராஜேஸ்வரி
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி

    ReplyDelete

  10. @ ரஞ்சனி நாராயணன்
    காஃபி பற்றிய பல பதிவுகள் படித்தேன். அதில் எங்கும் பெர்கொலேடர் காஃபி பற்றிய செய்தி இருக்கவில்லை. ஆகவே இந்தப் பதிவு
    எங்கள் வீட்டுக்கு ஒரு முறை வாருங்கள். சூடான காஃபி தருகிறேன் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி

    ReplyDelete

  11. @ கரந்தை ஜெயக்குமார்
    தற்கொலை செய்து கொள்ள துணை தேடவில்லை. ஒரு தடயம் இல்லாத க்ரைம் செய்ய நினைத்தது தவறி விட்டதோ என்பதே பதிவின் கரு.

    ReplyDelete

  12. @ வே.நடனசபாபதி
    விமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைக்கவில்லை என்பது ஊர்ஜிதம். ஆனால் அதையும் தாண்டி இன்னும் பெரிய அளவில் சேதம் ஏற்படாதது மகிழ்ச்சிதானே நல்ல காணொளி மகிழ்ச்சிதரும் என்பதால்பதிவிட்டேன் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  13. @ வெங்கட் நாகராஜ்
    மலேஷிய விமானம் என்ன ஆனது என்பது புதிரல்ல. ஏன் என்பதுதான் புதிர். எனக்கு நீங்கள் இந்தக் காணொளி முன்பே பதிவிட்டது தெரியாது. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி

    ReplyDelete

  14. @ துரை செல்வராஜு
    மூளையில் நினைவலைகள் நின்று போகும் போது இந்த மாதிரி நிகழ்வுகள். பயணம் செய்த பயணிகளின் நினைவலைகளை முற்றிலும் இழக்கச் செய்த நிகழ்வு. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.

    ReplyDelete
  15. காணாமல் போன விமானம் பற்றிய மர்மம் இன்னும் முழுதும் வெளியாகவில்லை. என்னதான் மர்மம் என்று என்றேனும் ஒருநாள் தெரியுமோ என்னவோ!

    காஃபி மேக்கர் சரியாக வராமல் மீண்டும் ஃபில்டரிலேயே டிகாக்ஷன் போடுகிறோம்!

    ReplyDelete
  16. பெர்கோலேடருக்கும், எக்ஸ்ப்ரஸோவுக்கும் குழம்பிக் கொண்டு பதிலளித்திருக்கிறேன் என நினைக்கிறேன். நீங்கள் அளித்திருக்கும் பெர்கோலேட்டர் காஃபியும் குடிச்சிருக்கேன். எக்ஸ்ப்ரசோ காஃபியும் குடிச்சிருக்கேன். :)))) அதில் தான் நுரை நிறைய இருக்கும்னு ராஜராஜேஸ்வரி சொன்னப்புறமாத் தான் நினைவு வந்தது. :))))

    ReplyDelete
  17. மலேசிய விமானம் குறித்துப் பற்பல தகவல்கள்! :( எல்லாரும் பிழைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். :((((

    ReplyDelete
  18. மலேசிய விமானத் துகள்களை கண்டுபிடித்துவிட்டதாக பல முறை சொல்லியாயிற்று. ஆகவே கடைசியாக சொல்வதையும் எப்படி நம்புவது என்று தெரியவில்லை. ஒரு பயணியின் உடலையாவது அல்லது விமானத்தின் ப்ளாக்பாஸ் பெட்டியையாவது கண்டுபிடித்தால் மட்டுமே நம்ப முடியும். எனக்கென்னவோ மலேசியா எதையோ மூடி மறைக்கிறது என்றே தோன்றுகிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  19. விமான விபத்து குறித்த தங்கள்
    பகிர்வு வித்தியாசமான சிந்தனையாக இருந்தது
    கெட்டதற்குள்ளும் ஒரு நல்லது என்பதைப்போல
    காணொளி மிக மிக அருமை
    இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. மபில் தோகை விரிக்கும் அழகு காணொளி , ரேவதி சங்கரன் பன்முகவித்தகி தான். அவர்களின் காணொளி முன்பே பார்த்து இருக்கிறேன். எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது,அருமையான் காணொளி .
    மலேசியா விமான விபத்து கவலை தந்த செய்தி.
    காபி பகிர்வு அருமை.

    ReplyDelete

  21. @ ஸ்ரீராம்
    விமானம் பற்றிய மர்மம் தெரியாததால்தான் அனுமானங்கள் என்றேன் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. எனக்கும் ஃபிடர் காஃபிதான் ப்ரிஃபெரன்ஸ்

    ReplyDelete

  22. @ கீதா சாம்பசிவம்
    ஏதோ குழப்பம் என்று தெரிந்தது. குழப்பம் தெளிவிக்க எனக்கும் அரை பதிவு தேறியதுவீழ்ந்து நொறுங்கிய விமானத்தின் பயணிகள் பிழைத்திருந்தால்.... இருந்தாலும் உங்களுக்கு அளவுக்கு மீறிய நம்பிக்கை/ஆசை வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  23. @ டி.பி.ஆர் ஜோசப்விமானம் விழுந்து நொறுங்கிய உதிரி பாகங்கள் கண்டு பிடித்தாலும் விமானத்தின் ப்லாக்பாக்ஸ் கிடைப்பது அரிதான விஷ்யம் அங்கு கடலின் ஆழம் அதிகம் என்கிறார்கள். மலேஷியா எதை மூடி மறைக்கிறது என்பதும் என் அனுமானத்தின் ஒரு பகுதி.வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி

    ReplyDelete

  24. @ ரமணி
    You know that I am different. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete

  25. @ கோமதி அரசு
    பதிவைப்படித்தும் கண்டும் மகிழ்ந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  26. பெர்கோலேட்டர் காபி... நான் குடித்ததில்லை. காணொளி அருமை.

    ReplyDelete
  27. பெர்கோலேட்டர் காபி... நான் குடித்ததில்லை. காணொளி அருமை.

    ReplyDelete
  28. இப்படி ஒரு பயங்கரம் நிகழாமல் இருந்ததற்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.........
    பயணிகளை நினைத்தால் வருத்தமாக உள்ளது...


    பெர்கோலேட்டர் காபி இப்பொழுது தான் கேள்வி படுகிறேன். ஒரு முறை முயற்சித்து பார்க்க வேண்டும்

    ReplyDelete

  29. @ பாலகணேஷ்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சில பாத்திரக் கடைகளில் விசாரித்தேன் கிடைக்கவில்லை

    ReplyDelete

  30. @மஹேஷ் ப்ரபு
    முதல்(?) வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  31. இப்பதிவை இந்து ஆங்கில இதழில் முழுமையாகப் படித்தேன். விபத்திற்கு இவ்வாறான ஒரு காரணம் இருந்திருக்கலாம் என்பது என் எண்ணமும்கூட.

    ReplyDelete

  32. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    இதைத்தான் great people think alike என்கிறார்களோ....! வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  33. எங்கள் வீட்டில் பெர்குலேட்டர்+ காஃபி மெஷின் இரண்டும் உபயோகப்படும். பெர்கோலேட்டரில் கிடைக்கும் டிகாக்ஷன் அடர்த்தியாக சுவையாக இருக்கும். இங்கு எப்பொழுதும் மலேஷிய விமான அலசல் தான் சிஎன் என் இல். ஒன்றும் உருப்படியாகச் செய்தி இல்லை. எட்டு கப்பல்கள்,ஏழு விமானங்கள், சாட்டிலைட் தேடலகள்.,நிபுணர்களின் ஆய்வு, எண்ணங்கள். நடு நடுவே காலிஃபோர்னியா பூகம்பம்,ஆர்லிங்டன் மண் சரிவு. வருத்தம்தான்.

    ReplyDelete
  34. நல்ல மயிலாட்டம்!

    MH 370 விபத்து. நீங்களே அனுமானம் என்று சொல்லி விட்டீர்கள்! எனக்கென்னவோ அந்த விமானி மீது எல்லா பழியையும் போட்டுவிட்டு மற்றவர்கள் தப்பப் பார்க்கிறார்களோ என்று தோன்றுகிறது.

    பெர்கொலேடர் காஃபி கீதாசாமசிவம் வலைத்தளம் சென்று பார்க்க வேண்டும்.

    ரேவதி சங்கரன் ஒரு பல்கலை வித்தகி. – நீங்கள் கொடுத்த பட்டம் சரிதான்.

    ReplyDelete

  35. @ வல்லிசிம்மன்
    சுவையான காஃபிக்கு ( சுவை ஒருவருக்கொருவர் மாறுபடும் )நல்ல தேர்ந்தெடுத்த காஃபிக் கொட்டைகளிலிருந்துவறுத்து அரைக்கப் படும் ப்யூர் காஃபி நல்ல பால் சேர்த்துச் செய்வது என்பது என் அபிப்பிராயம்நொறுஙிக்ய விமானம் பற்றிய செய்திகள் அலசல்கள் எல்லாம் சில நாட்களுக்குத்தான். பின் மறந்து விடும் நான் எழுதியுள்ள மறதி போற்றுவோம் படித்திருக்கிறீர்களா. படிக்க விரும்பினால் பார்க்க சுட்டி
    gmbat1649.blogspot.in/2010/09/marathy-potruvom.html

    ReplyDelete

  36. @ தி தமிழ் இளங்கோ
    வருகை தந்து படித்து ரசித்துக் கருத்துக்கள் பதிவிட்டதற்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete