Friday, March 28, 2014

கன்னட கவி சர்வக்ஞா


                                    கன்னட கவி சர்வக்ஞா
                                    --------------------------------
( மயிலின் தோகை விரிப்போடு வணக்கம் கூறி வரவேற்கிறேன்)
திருவள்ளுவர் யார் என்று தமிழ் படித்தவர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். தமிழ் படித்தவர்கள் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளிலிருந்து ஓரிரு குறள்களையாவது சொல்வார்கள் என்றுநம்புகிறேன். இன்னும் சிலருக்கு திருக்குறள் மூன்று பிரிவுகளில் ( அறப்பால் ,பொருட்பால், காமத்துப்பால்) மொத்தம் 133 தலைப்புகளில் தலைப்புக்குப் பத்தாக 1330 ஈரடிச் செய்யுட்கள் கொண்டது என்றும் தெரிந்திருக்கலாம்
சரி சர்வக்ஞா யார் என்று தெரியுமா? தமிழர்கள் அநேகமாகக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். சிலருக்கு வேண்டுமானால். திருவள்ளுவர் சிலை பெங்களூரில் திறக்கப்பட வேண்டுமானால் சென்னையில் கன்னட கவி சர்வக்ஞாவின் சிலையும் திறக்கப் படவேண்டும் என்ற கன்னடியர்களின் கோரிக்கை நினைவுக்கு வரலாம். அதாவது தமிழர்களுக்கு திருவள்ளுவர் போல கன்னடியர்களுக்கு சர்வக்ஞா
“கைகள் அள்ளிய நீர் பதிவர் திரு சுந்தர்ஜி அவர்கள் சுபாஷிதம் என்னும் தலைப்பில்  இம்மாதிரி பல அறிஞர்களின் வாக்குகளை எழுதிக் கொண்டிருந்தார் அவர் சர்வக்ஞாவின் செய்யுட்கள் transliteration  translation  -உள்ள  புத்தகம் கிடைக்குமா என்று கேட்டிருந்தார். நானும் பல்வேறு கன்னடநண்பர்களிடமும்  பதிப்பகங்களிலும் விசாரித்து ஏதும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தேன். என் இயலாமையை அவரிடமும் தெரிவித்தேன்  

இருந்தாலும் இப்படிப்பட்ட சர்வக்ஞா பற்றியும் அவரது  செய்யுட்கள் பற்றியும் தெரிந்து கொள்ளும் ஆவலோடுமுனைந்தேன். ஒருசில தகவல்களும் செய்யுட்களும் இணையத்தின் மூலம் கிடைத்தது. இணையத்தில் தேடும்போது கன்னட மொழியில் வேண்டுமானால் அவரது செய்யுட்கள் கிடைக்கலாம் ஆனால் எனக்குக் கன்னடம் தெரியாது ஆகவே எனக்குக் கிடைத்த தகவல்கள் உங்களிடம் பகிர்கிறேன் இணையத்தில் தேடும்போது ஒரு சில செய்யுட்களின் transliteration , translation  கிடைத்தது. அவற்றை எழுதியவருடனும் தொடர்பு கொண்டேன் அவர் ஒரு தமிழர். அவரும் முழுவதும் எழுத முயல்வதாகக் கூறி இருக்கிறார் இது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. திரு சுந்தர்ஜி இப்பொழுதெல்லாம் வலைப் பக்கம் வருவதில்லை. முகநூலில் மும்முரமாகி விட்டார். அதில் அவர் சர்வக்ஞாவின் சில செய்யுட்களை பதிவிட்டுப் பகிர்ந்திருக்கிறார்.
புஷ்பதத்தர் என்னும் இயற்பெயர் கொண்ட சர்வக்ஞாவின் காலம் சரியாகக் கணிக்கப் படவில்லை பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவராக எண்ணப் படுகிறது. ஒரு சைவப் பிராம்மணத் தந்தைக்கும் , ஒரு சூத்திரவிதவைப் பெண்ணான தாய்க்கும் பிறந்தவர் என்று சொல்லப் படுகிறது ஆயிரத்துக்கும் மேற்பட்ட த்ரிபாதி(TRIPADIS) எனும் மூன்றடிச் செய்யுட்களை இவர் இயற்றி இருப்பதாகச் சொல்லப் படுகிறது மதம் ஒழுக்கம் வழக்கம் ஜோதிடம் பருவங்கள் புதிர்கள் என்று பல தலைப்புகளில் இவர் எழுதி இருப்பதாகக் கூறப் படுகிறது அறிஞர்கள் இவரது செய்யுட்களிருந்து மேற்கோள் காட்டுகின்றனர். ஆனால் இவர் எழுதியதாக கருதப்படும் எந்த இரு புத்தகமும் ஒருப்போல இருப்பதில்லையாம்.  ஒருவேளை இவர் இயற்றியதாகச் சொல்லப் படும் பல செய்யுட்கள் பல நகல் எழுத்தாளர்களின் இடைச் செருகலாக இருக்கலாம் என்று சொல்லப் படுகிறது. இனி இவர் எழுதிய சில( VACHANAGALU”)   செய்யுட்கள் சிலவற்றைக் காண்போம்


 1) சர்வக்ஞ எம்பவனு (G)கர்வதி-இந்த ஆதவனே
சர்வரொல்லு ஒந்து ஒந்து நுடி கலிது
வித்யேய பர்வதவே ஆதா சர்வக்ஞா..!

சர்வக்ஞா என்பவ்ன் கர்வம் கொண்டவனே
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றாகக் கற்று
அறிவில் மலைபோல் விளங்கினான்

விளக்கம்:-சர்வக்ஞா என்பவன் உன்னைப் போல் ஒருவனே என்றாலும் 
ஒவ்வொருவனின் வார்த்தையிலும் ஞானம் பெற்று மலை போல் விளங்கினான் ( சர்வக்ஞா = எல்லாம் அறிந்தவன் )

( எனக்குத் தெரிந்த சில கன்னட நண்பர்கள் சர்வக்ஞாவின் இந்த மூன்றடிகளைச் சொல்கிறார்கள் நாம் திருக்குறளில் “அகர முதல....சொல்வதைப்போல)

2) ஏளு கோடியே கோடி ஏளு லக்‌ஷ்வே
ஏளு சாவரித எப்பத்து வசனகள
ஹேளித்தானு  கேள  சர்வக்ஞ
..
ஏழு கோடியே ஏழு லக்ஷத்து
ஏழாயிரத்து எழுபது வசனங்கள்
சர்வக்ஞனால் கூறப் பட்டது அறிவீர் நண்பர்களே

விளக்கம் சர்வக்ஞர் கூறுகிறார். அவரால் பயனுள்ளதாஉ உலகோருக்குக் கூறப்பட்ட வாக்குகள்  ஏழு கோடியே ஏழு லட்சத்து ஏழாயிரத்து எழுபதுஎன்று. (ஆனால் 20002500 வசனங்களே கிடைத்திருக்கின்றன)

3) கெலவம் (B)பல்லவரிந்த கலது
கெலவம் மல்பவரிந்த கண்டு மத்தே
ஹலவம்தானே ஸ்வதஹா மாடி தில்லி எந்தா சர்வக்ஞா

சில அறிந்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்
சில பிறர் செய்வதைக் கண்டு அறிந்து கொள்
மற்றவை தானே அறிந்து செய்யச் சொல்கிறார் சர்வக்ஞா

விளக்கம் :- உலகில் எல்லாம் நமக்குத் தெரியாது. சர்வக்ஞா கூற்றுப்படி சில விஷயங்கள் பிறர் சொல்வதைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் இன்னும் சிலவை பிறர் செய்வதைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் மற்றவை அவரவர் அனுபவத்தில் கற்றுத் தெரிய வேண்டும்

4)மூர்கநிகே புத்தியனு நூர்க்கால பேளிதறு 
கோர்க்கல்ல மேல் மள கரெதரே 
ஆ கல்லு நீரு குடிவுதே சர்வஞ்யா

அறிவிலிக்கு  நூறாண்டு புத்திமதி சொலவது
பெருமழை கல்லில் வீழ்வதற்கொப்பாகும்
கல் ஒருக்காலும் நீரைப் பருகாது

விளக்கம் :- ஒரு முட்டாளுக்கு அறிவுரை கூறுவது கல்லின் மேல் பொழியும் மழைக்கொப்பாகும் அறிவிலி புத்திமதிகளை ஏற்கமாட்டான்  கல் நீரை  உறிய முடியாததுபோல

5) சித்தவுஇல்லதே (g)குடிய சுத்திதோடெஃபலவேனு
எத்து (g)கான்னவனு ஹொத்துத
நித்யதல்லி சுத்தி(b)பந்தந்தே சர்வக்ஞ

மனம் எங்கோ அலைய கோவிலைச் சுற்றுவதில் என்னபலன்
செக்கிழுக்கும் எருதின் சுற்றலுக்கு அது ஒப்பாகும்

 விளக்கம்ள்- கவுளிடம் மனம் லயிக்காமல் கோவிலைச் சுற்றுவதில் பலனேதுமில்லை. அச்செயல் செக்கிழுக்கும் மாடு போல் செயல் படுவதற்கு ஒப்பாகும்

6) சாலவனு கொம்பாக ஹாலோகருண்டந்தே 
சாலிகரு பண்டு எலெவாக 
கிப்பதிய கீலு முரிதந்தே சர்வஞ்யா

கடன் வாங்கும்போது தேனினும் இனிக்கும் பணம்
திருப்பிக் கொடுக்கக் கேட்கப் படும்போது
முதுகெலும்பை முறிபது போல் இருக்கிறது

விளக்கம்:- கடன் வாங்குவது வரமல்ல  சாபம் என்று உணர வேண்டும் கடன் பெறுகையில் இனிக்கும் பணம் திருப்பிக் கேட்கும் போது முதுகெலும்பை முறிப்பது போல் இருக்கும் கடன் முதுகெலும்பை முறிக்கிறதோ இல்லையோ அன்பை முறிக்கும்

7) அன்னவனு இக்குவுது நன்னியனு நுடியுவுது
தானந்தே பரார (b)பாகெடொடெ
கைலாச (b)பின்ன அனவக்கு  சர்வக்ஞ 

பசித்தோர்க்கு அன்னமிடல் உணமை உரைத்தல்
தன்னைப் போல் பிறரை பாவிப்பது
வானுலகத்துக்கு உயர்த்தும்

விளக்கம்:- சொர்க்கத்துக்குப் போக அனைவரும் விரும்புவர். பசித்து வருவோர்க்கு உணவிடுதல் என்றும் உண்மைபேஅல் தன் உயிர் போல் அனைத்தையும் எண்ணுவது இவையெல்லாம் வானுலகேக வழிவகுக்கும் 

( சென்றிடுவீர் எட்டு திசையிலும்  கொணர்ந்திங்கு சேர்ப்பீர்  கலைச் செல்வத்தை என்ற பாரதிக்கு நன்றி )

       

22 comments:


  1. "கன்னட கவி சர்வக்ஞா"பற்றி அறியத் தந்தமைக்கு நன்றிகள்..!

    சித்தர்கள் ராஜ்ஜியம் என்கிற வலைப்பூவில் சர்வகஞர் பற்றி பதிவுகள் உண்டு..!

    ReplyDelete
  2. ஐயா கீழே சில இணைப்புகளை தருகிறேன்...

    1. தளம் : அம்மன் தரிசனம்

    இணைப்பு : http://ammandharsanam.com/magazine/July2009unicode/page024.html

    2. தளம் : தினமணி (pdf-ஆக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

    இணைப்பு : http://www.dinamani.com/editorial_articles/article951256.ece?service=print

    ReplyDelete
  3. சர்வக்ஞரைப் பற்றிய தகவல்களுடன்,
    அருமையான திரிபாதிகளைத் தந்தமைக்கு நன்றி..

    ReplyDelete

  4. @ இராஜராஜேஸ்வரி
    வருகை தந்து கருத்து இட்டமைக்கு நன்றி சித்தர்கள் ராஜ்ஜியம் வலைப்பூ முகவரி கிடைத்தால் பார்க்கலாம்

    ReplyDelete

  5. @ திண்டுக்கல் தனபாலன்
    வருகைக்கும் இணைப்பு பற்றிய தகவல்களுக்கும் நன்றி. வலையில் மேயும்போது நான் இவற்றை படித்திருக்கிறேன். நான் எனக்குத் தோன்றிய விதத்தில் transliteration translation -உடன் பாடல்களெடுத்துப் பதிவிட்டிருக்கிறேன் மீண்டும் நன்றி ( உங்கள் உடன் உதவ விரும்பும் குணத்துக்கு )

    ReplyDelete

  6. @ துரை செல்வராஜு
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி

    ReplyDelete
  7. தேசியக்கவி பாரதிக்கும் நன்றி சர்வக்ஞரின் கவிதைகளை பகிர்ந்த தங்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  8. கன்னடக் கவிஞரை எங்களுக்கு அறிமுகம் வைத்ததோடு அவர் எழுதிய செய்யுட்களையும் எங்களுக்காகப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  9. HI Balu!Nice to see you getting into kannda literature and taking pains to write nicely about Sarvajna!

    ReplyDelete

  10. @ வே.நடன சபாபதி
    திருவள்ளுவருக்கு ஈடாகப் பேசப் படும் சர்வக்ஞாவின் சில திரிபாதிகளே கிடைத்தது. அதில் சிலவற்றைப் பகிர்ந்தேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete

  11. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    நானறிந்த கன்னட நண்பர்கள் வெகு சிலரே சர்வக்ஞா பற்றிப் பேசினால் ஆர்வம் காட்டுகிறார்கள். உங்கள் கருத்ஹுப் பதிவுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  12. @ hns.mani
    It is nice to know you read some of my postings. Thanks.

    ReplyDelete
  13. கன்னட கவி சர்வக்ஞா"பற்றி அறியத் தந்த பகிர்வுக்கு நன்றிகள் ஐயா...!

    ReplyDelete
  14. நானும் சுந்தர் ஜி அவர்களின்
    பதிவில் படித்துத்தான் தெரிந்துகொண்டேன்
    இன்னும் தெரிந்து கொள்ள ஆவல்
    தொடந்தால் மகிழ்வேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. நானும் சுந்தர் ஜி அவர்களின்
    பதிவில் படித்துத்தான் தெரிந்துகொண்டேன்
    இன்னும் தெரிந்து கொள்ள ஆவல்
    தொடந்தால் மகிழ்வேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. செய்யுள் வரிகளைப் படிக்கும்போது நாக்கு சுளுக்கிக்கொள்ளும் அளவுக்கு கடினமாக இருந்தது.ஆனால் பொருள் நிறைந்த வரிகளாக உள்ளன.இவ்வாறு ஏறத்தாழ அனைத்து மொழிகளிலும் இறவா புலவர்கள் இருந்துள்ளனர். இப்போதைய தலைமுறையினரை விட அன்றைய தலைமுறையினர் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

  17. @ தனிமரம்
    வருகைதந்து கருத்துப் பதிவிட்டமைக்கு நன்றி

    ReplyDelete

  18. @ ரமணி
    சுந்தர்ஜி என்னிடம் அந்தப் புத்தகம் பற்றிக்கேட்டிருக்காவிட்டால் இதை நான் பதிவிட்டிருப்பேனா தெரியாது, கன்னட செய்யுள்கள் transliteration . translation -உடன் மிக சொற்ப அளவே கிடைத்தது.வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி

    ReplyDelete

  19. @ டி.பி.ஆர் ஜோசப்
    கன்னட மொழிக்கும் தமிழுக்கும் நிறையவே ஒற்றுமை உள்ளது. நான் பேச்சு வழக்கில் இருக்கும் கன்னட மொழிபற்றிக் கூறுகிறேன் அது பற்றி பிறிதொரு பதிவில் எழுத உத்தேசம் வருகாஇக்கும்கருத்துப் பதிவுக்கும் நன்றி.

    ReplyDelete
  20. புதுடில்லியில் இருக்கும் எனது நண்பர் உதயம் ஸ்ரீனிவாசன், சர்வக்ஞர், அக்கமாதேவி முதலிய நான்கு ஆன்மிகக் கவிஞர்களின் 'வசனங்'களைக் கன்னடத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெரத்திருக்கிறார். அதை நான் எடிட் செய்து கொடுத்திருக்கிறேன். செம்மொழித் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் அந்த நூல் விரைவில் வெளியாகவுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். வெளியீட்டு நிகழ்வுகளைத் தவறாமல் பதிவிட்டு அனைவருக்கும் தெரிவிப்பேன். சில மாதங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  21. கன்னடக் கவிஞரை அறிமுகம் செய்துவைத்தமைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  22. சர்வக்ஞர் குறித்துக் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் இவ்வளவு தகவல்கள் தெரியாது.

    அது சரி, அக்கமாதேவி எழுதியது தெலுங்கிலா, கன்னடத்திலா? தெலுங்குனு நினைச்சுட்டு இருந்தேன்.

    ReplyDelete