சென்னையில் நான் ----- சில நிகழ்வுகளும்நினைவோட்டங்களும்
----------------------------------------------------------------------------------------
இந்தமாதம் அதாவது ஏப்ரல் 18 முதல் 22 ம் தேதி முடிய நான் சென்னையில் இருந்தேன் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் சென்னை செல்வதானாலும் அந்த பயணத்தை
நான் வலைப் பதிவர்களை சந்திக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதுவேன் இந்தமுறையும் பலரையும் சந்திக்க நான் விரும்பினாலும் சிலரையே சந்திக்க முடிந்தது/ சென்னையில்
கொளுத்தும் வெயிலில் நான் பலரை சந்திக்க
அழைத்தாலும் வர இயல வில்லை என்று
சொல்லிவிட்டால் வருத்தப் படுவது குறைவாயிருக்கும்
ஆனால் எந்த பதிலும் சொல்லாமல் உதாசீனப் படுத்துவது வருத்தம் தருகிறது இதுவே எனக்கு வலை நட்புகளைப்
பற்றிய மதிப்பீட்டிலொரு மாற்று குறைய
வைக்கிறது. இருந்தாலும் நான் பயணத்தில்
இருந்தபோதே வருகிறேன் என்று சொல்லி
இருந்தாலும் தவிர்க்கமுடியாக் காரணங்களால் வர இயலவில்லை என்று தொலை பேசியில் தெரிவித்த திண்டுக்கல் தனபாலன் போன்றோர்
மதிப்பில் உயர்கிறார்கள் என்னை ஒரு தொந்தரவு
என்று எண்ணும் வகையில் நான் விடாது
தொடர்பு கொண்டும் வராதவர்கள் குறைந்த பட்சம் தங்கள் இயலாமையைத் தெரியப்படுத்தி
இருக்கலாம் இதில் வருகிறேன் என்று சொல்லி வராதசிலரும் உண்டு . Let bygones be bygones. I learn
from my experiances . இந்த முறை வெகு நாட்களாக சந்திக்க விரும்பிய பூவனம் ஜீவியை
சந்தித்தேன் அவரை நானும் என்னை அவரும் நேரிடையாய் அறியக் கிடைத்த ஒரு
வாய்ப்பு ஸ்ரீராம் காலையிலேயே வந்து
சென்றார், மதியம் தில்லையகத்து கீதா, தம்பட்டம் பானுமதி
வே நடன சபாபதி ஜீவி ஆகியோர் வருகை
தந்தனர் இவர்களுள் ஸ்ரீராமும்
கீதாவும் தங்கள் புகைப்படங்கள்
வருவதை விரும்புவதில்லை
ஒரு சிறிய காணொளி
திரு வெங்கட்ராமன் கணேசன் (ஜீவி) |
வே. நடன சபாபதி |
திருமதி பானுமதி, நான் .ஜீவி, நடனசபாபதி |
எங்கள்
ப்ளாக் கேட்டிருந்த சீதை ராமனை மன்னித்தாள்
என்னும் தலைப்புக்காக நான் எழுதி
இருந்த பதிவுக்கான பின்னூட்டங்கள்
நான் பெங்களூர் வந்தபின்பே வாசித்தேன்
அது குறித்து எல்லோருக்கும் மறுமொழி
தருவது நீண்டு விடும் என்பதாலும் நான் எழுதியது
கதை வடிவில் இல்லை என்றும் கட்டுரை போல்
இருக்கிறதுஎன்றும் படித்தேன் எனக்கே அந்த சந்தேகம் இருந்ததால் ஸ்ரீராமுக்கு
எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியைஇங்கே வெளியிடுகிறேன்
அன்பின் ஸ்ரீராமுக்கு வணக்கம் நிபந்தனையுடன் கதை கேட்டீர்கள்
ஆனால் நான் எழுதிக் கொடுத்திருப்பது கதையின் இலக்கணத்துக்கு (அப்படி ஒன்றிருந்தால்
) உட்படாதது நான் சற்றே
வித்தியாசமாய்ச் சிந்தித்து எழுதி இருக்கிறேன் உங்கள் தயவால் கம்பராமாயணம் சில
பகுதிகளுக்கு மீண்டும் சென்றேன் பிரசுரிக்க
முடியாதென்றால் தெரியப் படுத்தவும் இப்படிக்கு அன்பும் நன்றியுடனும் ஜீஎம்பி ”
அதற்குப்
பதிலாக ஸ்ரீராம் இதைத்தான் எதிர்பார்த்தேன். கட்டாயம்
வெளியிடுகிறேன். அனேகமாக
ஏப்ரல் 18. கணினிக்கு
வந்ததும் கன்பர்ம் செய்கிறேன். நன்றி.
மேலும் கதைக்கு இலக்கணமாக அவர் எழுதி இருந்தவரிகளும் இதோ சாதாரணமாக ஒரு சம்பவத்தை வைத்து கதை புனைவார்கள். நீங்கள் மொத்த சம்பவத்தையும் கோர்த்து, ஒரே வரியில் முடித்து விட்டீர்கள். அதுதான் நீங்கள் சொல்லும் கதையின் இலக்கணமோ! ஒரு சம்பவம்... தொடர்ந்து
ஒரு உரையாடல்... முடிவு! எப்படியோ..
இதை ஏப்ரல் 18 காலை 6 மணிக்கு வெளியிடுகிறேன்.
நன்றி ஸார்.
( நான் சிறுகதையின் இலக்கணம்
என்று ஏதும் எழுதி இருக்கவில்லை )
கதைக்கு இலக்கணம் என்று ஏதும்
இருப்பதாக எனக்குத் தெரியவில்லை ஒரு வரிக் கதைகளும் படித்திருக்கிறேன் முடிவில் சொல்ல வந்ததைச்
சொல்கிறோமா என்பதே முக்கியம் நான்
எழுதி இருந்தது என் புனைவு அல்ல, ராமாயணக் காப்பியத்தில்
இருந்ததை நான் புரிந்து கொண்டதைச்
சான்றுகளுடன் விளக்கி இருந்தேன்
ஸ்ரீராம் என்னைச் சந்தித்த போது
அவர் சொல்லும்இலக்கணப்படி ஒரு கதை எழுதினால் அதையும் பதிவிடுவதாகக் கூறி
இருந்தார் எனக்கு அந்த மாதிரியும் எழுத முடியும் அதையே கதையில் ராமன் சீதை என்னும் பாத்திரங்களைக்
கற்பனை செய்து ஏதோ கதை ஒப்பேற்றி விடலாம்தான் ஆனால் எனக்கு அது சரியாகத்
தோன்றவில்லை ராமன் சீதை என்றாலேயே நம்
மனதில் வருவது இராமாயணக் காப்பிய பாத்திரங்களே ராமாயணத்துக்கு யாரும் காப்பி ரைட்
வாங்கி இருப்பதாகத் தெரியவில்லை. ராமனை ஒரு உதாரண புருஷனாகவே நம் மக்கள்
நினைக்கின்றனர் என்னால் அப்படி நினைக்க முடியவில்லை எல்லா குணங்களும் குறைகளும் நிறைந்த
பாத்திரங்களாகவே அணுகுகிறேன் என் மனதில் தோன்றிய சில கருத்துகளுடன் கதை புனையத்
தயார்படுத்திக் கொண்டேன்இருந்தாலும் அசல் கதையை சிதைக்கக் கூடாது என்னும் முனைப்பும்
இருந்ததுஅதுவே இந்த வடிவம் பெற்றுவிட்டது ராமாயணக் கதையை அநேகமாக எல்லோரும் அறிந்துஇருப்பர் ஆகவே
கதையை விளக்காமல் பாத்திரங்களை மட்டும் அணுகுகிறேன்
ராமாயணத்தை
நான் ஒரு கதையாகவே எண்ணுகிறேன் அதன்
பாத்திரங்களுக்கு இல்லாத குணா விசேஷங்களை
கற்பனை செய்யவும்
விரும்பவில்லை இந்தப் பதிவே
பலரத்து பின்னூட்டங்களுக்கு மறுமொழியாக இருக்கிறது என்று தோன்று கிறது
சீதை ராமனை மன்னித்து விட்டாள் என்னும் தலைப்பில் கூடிய சீக்கிரமே எழுதுவேன்
என் வலைத்தளத்தில் பதிவிடுவேன்
அதுவாவது சிலர் நினக்கும் சிறுகதை
இலக்கணத்துக்குள் வருகிறதா பொறுத்திருந்துதான்
பார்க்க வேண்டும்
வணக்கம் ஐயா சென்னையில் தாங்கள் யார் யாரை சந்தித்தீர்கள் என்பதை நேற்றே அறிந்தேன்.
பதிலளிநீக்குசந்நிப்புகள் மகிழ்சியை தரட்டும் வாழ்த்துகள்.
உடனுக்குடன் செய்திப் பரிமாற்றம் நிகழ்வது மகிழ்ச்சி தருகிறது வருகைக்கு நன்றி ஜி
நீக்குசார் தங்களையம் அம்மாவையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..தங்கள் தயவால் நடனசபாபதி சாரையும், பானுமதி அக்காவையும்,
நீக்குஜீவி சாரையம் சந்தித்தது இன்னும் மகிழ்ச்சி....மிக்க நன்றி சார்
There is something wrong . I am not able to type in tamil The pleasure was mine too
நீக்குஐயா, நான் நியூ ஜெர்சியில் இருக்கிறேன், ஆகவே சென்னையில்த ங்களைச் சந்திக்கும் வாய்ப்பைத் தவறவிடுகிறேன் என்று முன்பே சொல்லிவிட்டேனே! அதன் பிறகும் என் மீது கோபப்படலாமா? (2) சீதை ராமனை மன்னித்து விட்டாள் என்று அவசரப்பட்டு வெளியிட்டுவிடாதீர்கள். ஜூன் கடைசிவாரம் வரை பொறுக்கக்கூடாதா?
பதிலளிநீக்கு- இராய செல்லப்பா நியூஜெர்சி
பதிவில் எங்கும் உங்கச்ளைக் கோபிப்பதாகக் கூறவில்லையே இன்னும் ஓரிரு நாளில் பதிவு வெளியாகும் எங்கிருந்தாலும் வாசிக்க முடியுமே வருகைக்கு நன்றி சார்
நீக்குஎழுத்துக்களை வைத்தே நாம் பலரையும் மதிப்பிடுகிறோம்
பதிலளிநீக்குபலநேரங்களில், எழுத்துக்களுக்கும்,அதை எழுதியவர்களுக்கும் இடையில் பெரும் இடைவெளி இருப்பதை அறியும் போது வருந்துவது இயல்புதான்,
என்ன செய்வது ஐயா, இந்த அவசர உலகில், நட்பிற்கான இடம் குறைவுதான்
கவலை வேண்டாம் ஐயா
Yes I agree with you thanks
நீக்குநன்றி ஸார்.
பதிலளிநீக்குI would have been more pleased if you could have joined us in the afternoon Any way I thank you for visiting us
நீக்குநட்புக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி ..காணொளியும் கண்டேன் ..
பதிலளிநீக்குFour more people expected who did not feel it convenient Thank you Anjelin
நீக்குகுட்டியான பதிவர் சந்திப்பை நிகழ்த்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஜி.எம்.பி. சார்... தலைப்பு 'சீதை ராமனை மன்னித்துவிட்டாள்' என்றல்ல... கதையின் கடைசி வரி இவ்வாறாக இருக்கவேண்டும். அசத்துங்கள்.
I AM NOT ABLE TO WRITE I in Tamil as there seems to be a problem Iwould very much wish to expain But that will not be possible now , that I have to type only i English Thanks
நீக்குமிக்க மகிழ்ச்சியான தருணம். நமக்கும் சந்தோசமாக இருக்கிறது.
பதிலளிநீக்குThank you ATHIRA
நீக்குமாமி கொடுத்த பிஸிபேளா பாதி அருமை. என் பாஸும் அதை ரசித்துச்ச்சாப்பிட்டார். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. சீதை ராமனை மன்னிக்கும் அந்த இன்னொரு கதையை எங்களுக்கு அனுப்பி நீண்ட நாட்கள் காத்திருக்க முடியாது என்கிற பொறுமையின்மையே உங்கள் தளத்தில் வெளியிட்டுக்கொள்ளக் காரணமா!!
பதிலளிநீக்குThat was my d.in laws preparetion Itwas from navathaniyam You are right Iam in a way in a hurry Thank you SRI
நீக்குமாலை வந்திருந்த ஜீவி ஸார், பானு மேடம், கீதா ரெங்கன், நடனசபாபதி ஐயா போன்றவர்களை அன்று நான் மிஸ் பண்ணி விட்டேன் என்று தெரிகிறது! அது ஒரு கடுமையான வேலை நாள் எனக்கு! அதுதான் காரணம்.
பதிலளிநீக்குyour dilemma was known Thanks
நீக்குஒரு ஷார்ட் விசிட்டில் ஐந்து பேரையாவது சந்திக்க முடிந்ததும் நல்லவிஷயம்தான். ஆனால் வர இயலாதவர்கள் ஃபோனில் கூப்பிட்டுக்கூடச் சொல்லவில்லையே என்கிற வருத்தம் வருவது நியாயமானது.
பதிலளிநீக்குOne has to satisfy with what was achieved Thanks sir
பதிலளிநீக்குசென்னை சந்திப்பு அருமை. :) இவ்வளவு கூட சந்திக்க இயலாமல் போய்விடும். அவரவர் வேலை அவரவருக்கு. நமக்காக நேரம் ஒதுக்கி புத்தக விமர்சனம், வெளியீடு என்று சிலர் மட்டுமே வருவார்கள். அதுவே பெரிய சிரமமான காரியம்தான் என நான் உணர்வேன் .:)
பதிலளிநீக்குஎனக்கும் அது புரிகிறது ஆனால் வருகிறேன் என்று சொன்னர்கள் வராமல் இருப்பதும் ஏதுமே பதில் சொல்லாம்ல் உதாசீனப்படுதுவதுமே வருத்தம் தருகிறது வருகைக்கு நன்றி மேம்
நீக்குபல தடவைகள் தள்ளிப் போன சந்திப்பு இந்தத் தடவை ஒருவழியாக நடந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனாலும் அது ஒரு பூர்வாங்க சந்திப்பு தான். இன்னும் பல தடவைகள் நடக்கப் போகிற சந்திப்பில் உருப்படியாக பதிவுலகில் எதையாவது செய்ய திட்டமிட வேண்டும்.
பதிலளிநீக்குதில்லையகத்து கீதா, பானுமதி மேடம், நடன சபாபதி சார் என்றுஇ எல்லோரையும் ஒருசேர பார்ததில் மிகவும் சந்தோஷம்.
இந்த சந்திப்பை நிகழ வைத்த ஜிஎம்பீ சாருக்கு நன்றி.
பதிவுலக நண்பர்கள் ஒருவரை ஒருவர் நேர்முகமாக சந்தித்ததே உருப்படியான விஷயம் என்று நினைக்கிறேன் எதிர்பார்த்த சிலரும் வந்திருந்தால் சந்திப்பு இன்னும் களை கட்டியிருக்கும் நன்றி சார்
நீக்குஎன்னை நண்பர்கள் இங்கேயும் சந்திக்கலாமே?..
பதிலளிநீக்குwww.pustaka.co.in
இந்த ஆன்லைன் நூலகம் நாளும் மெருகேறிக் கொண்டு வருகிறது. நண்பர்களை எழுத்தாளர்களாய், வாசகராய் இங்கேயும் சந்திக்க வெகுவாக ஆசை.
அன்புடன்,
ஜீவி
என்னதான் எழுத்துகளில் சந்தித்தாலும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து அளவளாவதுபோல் வருமா நன்றி சார்
நீக்குபதிவர் சந்திப்பு அருமை. காணொளியும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குவந்தவர்களை போற்றுவோம். மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
காணொளியில் நீண்ட நேரம் எடுத்தால் பதிவிடுவதில் சிரம மிருக்கிறது வருகைக்கு நன்றி மேம்
நீக்குஎந்த ஊருக்கு சென்றாலும், அந்த ஊரில் இருக்கும் வலைப்பதிவரைச் சந்திக்க விரும்பும் உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்துகள். இந்த முறை சென்னையில் உள்ள வலைப்பதிவர்கள், எங்கள் ப்ளாக் ஸ்ரீராம், தில்லையகத்து கீதா, தம்பட்டம் பானுமதி, மூத்த வலைப்பதிவர் வே நடன சபாபதி, எழுத்தாளர் ஜீவி ஆகியோரைச் சந்தித்து, சந்திப்பினை, ஒரு மகிழ்வான பதிவாக்கி தந்திட்ட அய்யா ஜீ.எம்.பி அவர்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குசந்திப்பில் சுவாரசியமான தகவல் ஒன்றும் இல்லையா ?அதையும் சொல்லுங்க :)
பதிலளிநீக்குஒரு வார காலமாக ஊரில் இல்லாதாதால் தங்களை சந்திக்க இயலவில்லை . அடுத்த முறை நிச்சயம் சந்திப்பேன். சீதை மன்னிக்கும் கதையினை படித்தேன்.
பதிலளிநீக்குநட்புக்களை சந்தித்த மகிழ்ச்சியை பகிர்வில் உணரமுடிகின்றது ஐயா!
பதிலளிநீக்குமுதற்கண் சென்னையில் ஒரு சிறிய பதிவர் சந்திப்பு நடக்க உதவியமைக்கு தங்களுக்கு மனமார்ந்த நன்றி! இந்த சந்திப்பில் திருமதி கீதா, திருமதி பானு, திரு ஜீவி சார் ஆகியோரை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவெயில் தாக்கத்தால் பலர் வரவில்லை என நினைக்கிறேன். ஆனாலும் வள்ளலார் பாடியதுபோல், வெயிலில் வந்த எங்களுக்கு ‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருபோல், அது தரும் நிழல் போல் தங்களுடைய மகனின் இல்லமும், எங்களை இன்முகத்துடன் வரவேற்ற தங்கள் துணைவியாரின் உபசரிப்பும், அதற்கும் மேலாக அந்த இரண்டு மணி நேரம் நம்மிடையே நடந்த உரையாடல்களும் இருந்தன என்பது மறக்கமுடியாத ஒன்று. அடுத்தமுறை சந்திக்கும் இன்னும் பல பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும் என நம்புகிறேன்.
@தி தமிழ் இளங்கோ
பதிலளிநீக்குசென்னையில் சந்திக்க விரும்பும் பல பதிவர்கள் இன்னும் இருக்கிறார்கள் இந்த சந்திப்பில் முதச்ல் முறையாக சந்தித்தது ஜீவி அவர்கள் மட்டுமே வருகைக்கு நன்றி சார்
@ பகவான் ஜி
பதிலளிநீக்குசந்திப்பே சுவாரசியமானதாயிற்றே வருகைக்கு நன்றி ஜி
@ டி என் முரளிதரன் வருகை பற்றியும் சந்திப்பு பற்றியும் உங்களுக்குத் தகவல் கொடுக்க வில்லையே என் தவறும் இருக்கிறது நன்றி முரளி
பதிலளிநீக்கு@ தனிமரம்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்
@ வே நடன சபாபதி
பதிலளிநீக்குஅந்த வெயிலிலும் வந்து என்னை கௌரவித்த உங்களுக்கு நான் அல்லவா நன்றி சொல்ல வேண்டும் நினைத்துப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா
சந்திப்புகள் கிடைச்சவரை நல்லதுன்னு நினைச்சுக்குவேன். வரேன்னு சொல்லி இருந்தாலும் கடைசி நேரம் வரமுடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கே! அதுவும் நம்ம மக்களுக்கு நேரத்தின் அருமை தெரிவதில்லை. பத்து மணிக்கு ஒரு விழா, சந்திப்பு இப்படி எதாவது சொல்லி இருப்போம். பதினொன்னரைக்கு வந்து சேர்வாங்க சிலர்.
பதிலளிநீக்குஒரு சமயம் சென்னையில் செம்மொழிப்பூங்காவில் ஒரு சந்திப்பு வச்சிருந்தோம். ஏழு தோழிகள் மட்டும்தான். அதிலே ஒருவர் வந்துக்கிட்டு இருக்கேன்னு அரைமணிக்கொரு முறை தகவல் சொல்லிக்கிட்டே இருந்தார். எங்கோ வழியில் ட்ராஃபிக்லே மாட்டிக்கிட்டாராம். எங்க சந்திப்பு மாலை 6 வரைதான். அப்புறம்தான் இருட்டிப்போகுதே.... அப்படியும் நாங்கள் ஆறேகால் வரை காத்திருந்தோம். அப்புறம் நாங்கள் கிளம்பும்போது, இனி வந்து பயனில்லை. எங்கே இருக்கீங்களோ அப்படியே திரும்பிப் போயிருங்கன்னு செல்லில் கூப்பிட்டுச் சொன்னோம். போகட்டும், நாம் யாரை சந்திக்கணுமுன்னு இருக்கோ அவுங்களைத்தான் சந்திக்க முடியும்.
/சந்திப்புகள் கிடைச்சவரை நல்லதுன்னு நினைச்சுக்குவேன்./ வேறு வழி...?
பதிலளிநீக்குஐயா,
பதிலளிநீக்குமுக்கிய வகுப்பில் சிக்கிக்கொண்டேன். கீதா அவர்கள் 'வாட்சப்'பில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்கள். அதையும் நான் ஏழு மணிக்குத்தான் பார்த்தேன். அதற்குள் சந்திப்பு முடிந்துவிட்டதாகக் கூறினார்கள். வகுப்பில் இருந்ததால் என்னால் அழைத்துப் பேச இயலவில்லை.
சந்திக்க முடிந்திருந்தால் நானும் வந்திருந்தோறும் மகிழ்ந்திருப்போம் என்னிடம் உங்கள் தொலை பேசி எண் இருக்கவில்லை
நீக்குஅதனால்தான் கீதாவிடம் கேட்கச் சொன்னேன் வந்து நிலைமையைச் சொன்னதற்கு நன்றி சரவணன்
18 முதல் 22! நான் சென்னை வழியே 23 அன்று பயணித்தேன்.
பதிலளிநீக்குசிலரை நீங்கள் சந்திக்க முடிந்தது அறிந்து மகிழ்ச்சி. திருச்சியில் சிலரை சந்திக்க வேண்டும் - இம்முறை! பார்க்கலாம்.
தொடரட்டும் சந்திப்புகள்.