வியாழன், 30 ஜூன், 2022

ஆவிகள்

 


                            ஆவிகள் உலகம்........ஒரு சிறுகதை(மீள் பதிவு)
                          ------------------------  -----------------------
( சிறுகதை எழுதுவது என்பது சிலநேரங்களில் சிக்கலாய் இருக்கிறது. புனைவுதான் என்றாலும் உண்மைபோல் இருகக வேண்டும் அதற்கான கருவாக நான் தேர்ந்தெடுத்தது நம்பமுடியாத , நம்ப விரும்பாத ஒன்று. படித்துப் பாருங்களேன் )



இவனுக்குத் தூக்கத்தில் இருந்து திடீரென்று விழிப்பு வந்தது. ஏதோ கனவு கண்டு கொண்டிருந்தோமே , என்ன அது.?நினைவு படுத்திக் கொள்ள முயன்றால் ஏதோ மச மசவென்று காட்சிகள் விரிவது போல் தோன்றுகிறது. பிள்ளைகள் என்னவோ ஓஜா போர்ட் என்று சொல்லிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.
 இப்போது அந்த போர்டின் நினைவு ஏன் வர வேண்டும். கனவில் கண்ட காட்சிக்கும் இந்த ஓஜாபோர்டுக்கும் என்ன சம்பந்தம்.? இதெல்லாம் வேண்டாம் என்று படித்துப் படித்துச்சொன்னான் இவன். கேட்டார்களா.... எல்லாம் வயசுக் கோளாறு.. யாரோ ஆவிகளுடன் பேச முடியும் என்று சொன்னார்களாம். உடனே அதைச் செயல் படுத்திப் பார்த்துவிட வேண்டுமே. இதெல்லாம் சுத்த ஹம்பக் என்று சொன்னாலும் கேட்கவில்லை. அப்படியே ஆவியுடன் பேச முடிந்தால் அது மனசை பாதித்துவிடும் வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை.

ஒரு அட்டையில் மேல் வரிசையில் ஒன்று முதல் ஒன்பது வரை எண்களை எழுதிக் கொள்கிறார்கள்.நடுவில் ஒரு சதுரத்துக்கு காலியாக இடம் விடுகிறார்கள்.அதைச் சுற்றிலும் ஆங்கில எழுத்துக்களை  வரிசையாக எழுதி வைத்துக் கொள்ள வேண்டுமாம். ஆவியுடன் பேசப் போகிறோம் என்று நம்பிக்கை வேண்டுமாம்.நடுவில் உள்ள சதுரத்தின் நடுவே ஒரு ரூபாய் நாணயம் வைக்கவேண்டுமாம் அதன் மேல் ஒரு சின்ன டம்ப்ளரைக் கவிழ்க்க வேண்டுமாம்  ஆவியுடன் பேச ஆயத்தங்கள்தான் இவை.
  
ஆவியுடன் பேச நம்பிக்கை உள்ள இர்ண்டு பேர் வேண்டுமாம்.இந்த இரண்டு பேரும் அறிந்த இறந்த ஒருவரின் ஆவியைத்  தொடர்பு கொள்வது சிறிது எளிதாகலாமாம்
இருவரும் கண்மூடிப் பிரார்த்தனை செய்ய வேண்டுமாம். கவிழ்த்து வைக்கப் பட்ட டம்ப்ளர் மேல் இருவரும் லேசாகக் கை வைத்துக் கொண்டு ஆவியை அழைக்க வேண்டும் சற்று நேரத்தில் அவர்கள் கை லேசாக நடுங்கத் தொடங்குமாம். முதலில் வந்திருப்பது அவர்கள் கூப்பிட்ட ஆவியா என்று உறுதி செய்து கொள்கிறார்கள் மூன்றாவதாக இருப்பவர் நகரும் டம்ப்ளர் எந்தெந்த எழுத்தில் நிற்கிறதோ அதை குறித்துக் கொள்கிறார்
இவனுக்கு ஒரே சலிப்பு. நாம் ஏதாவது சொன்னால் கேட்டால்தானே. எதையும் செய்து பார்த்து விட வேண்டும் என்ற வேகம் இவனுடைய மகன் இந்த ஓஜா போர்ட் பற்றி சொன்னபோது இவன் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் ஆவியுடன் பேச முயற்சி செய்து பார்த்துவிடுவது என்று உறுதியாய் இருந்தான். மகனுடைய நண்பனின் தந்தை இறந்து போய் சில நாட்களே ஆகி இருந்தன. இறந்த மனிதர் இவனுக்கும் நல்ல நண்பன். அன்றுமாலை இவனுடைய மகன் வந்த போது முகமெல்லாம் வெளிறி மிகவும் பயந்தவன் போல் காட்சியளித்தான். ஏதோ அசம்பாவிதம் நடந்து இருக்கிறதென்று இவனால் யூகிக்க முடிந்தது. என்ன விஷயம் என்று கேட்டாலும் ஒன்றுமில்லை என்னும் மழுப்பலே பதிலாய் வந்தது.

அன்றிரவு தூங்கப் போன இவனுக்கு திடீரென விழிப்பு வரவும் தன் மகன் பயந்து போனது போல் வந்ததும் நினைவுக்கு வந்தது.

காலையில் அவசர அவசரமாக இவனது மகன் எங்கோ போகத் தயாராகி இருந்தான். வீட்டில் அவன் தாயிடம் டேப் ரெகார்டர் கண்டிஷனில் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டிருந்தான். என்ன செய்வது...! பிள்ளைகள் வளர்ந்து விட்டால் தோளுக்கு மேல் தோழன்தானே.கண்டிக்கவும் முடிவதில்லை. கவலைப் படாமலும் இருக்க முடிவதில்லை. இவனுக்கும் மகனின் அனுபவங்களைச் சொல்லிக் கேட்க விருப்பம்தான். பார்க்கலாம் சொல்லாமல் போய்விடுவானா என்று எண்ணிக் கொண்டே இவனது தினசரி அலுவல்களைக் கவ்னிக்கச் சென்றான். 

மாலை அலுவலகத்திலிருந்து வந்தவன் தன் ம்கன் வந்து விட்டானா என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினான்.

மகன் வந்ததும்,” என்ன இன்றைய அனுபபங்களையாவது சொல்லப் போகிறீரா இல்லை பயத்தில் அப்படியே இருக்கப் போகிறீர்களா.?

“ ஆவியாவது ஒன்றாவது என்று சொன்னீர்களே...! உஙகளுக்குத் தெரியாதது இல்லை என்றாகுமா

“ அதாவது நீ ஆவியுடன் தொடர்பு கொண்டாய்.. அதை நான் நம்பவேண்டும். சில சமயங்களில் மனப் பிராந்தியேகூட உண்மைபோலத் தெரியலாம்

மனப் பிராந்தியுமில்லை, விஸ்கியுமில்லை.  நாங்கள் ஆவியுடன் பேசியதற்கு ஆதாரம் இருக்கிறது தெரியுமா... இவன் மகன் விளக்கமாகச் சொல்லத் தொடங்கினான். “ நேற்று  நாங்கள் அங்கிளின் ஆவியை வரவழைத்தோம். வந்திருப்பது அவர்தான் என்று நிச்சயம் செய்து கொண்டோம். அப்போது என் நண்பன் துக்கம் தாங்காமல் அழ ஆரம்பித்து விட்டான். இந்த மாதிரி ஓஜாபோர்ட் மூலம் பேசுவது கஷ்டம் . ஆகவே நாளைஇன்னும் நம்பிக்கையோடு வாருங்கள். சில விஷயங்களை உங்களில் ஒருவர் மூலம் நான் சொல்ல விரும்புவதை நீங்கள் கேட்கலாம்” என்று சொன்னான். “அதற்காகத்தான் டேப் ரெகார்டரை எடுத்துக் கொண்டு போனேன்” என்றும் சொன்னான்.

“ அவர் என்னதான் பேசினார் என்று நாங்களும் கேட்கிறோமே” என்று இவன் சொன்னதும் “ இப்போது அது என்னிடம் இல்லை. அங்கிளின் மகன் அதை எடுத்துக் கொண்டு போய் விட்டான் ஓஜாபோர்டில் நாங்கள் அங்கிளைக் கூப்பிட்டதும் உடனே வந்தவர் கொஞ்சமும் எதிர்பார்க்காதபடி எங்கள் இரண்டாவது நண்பனின் உடலில் புகுந்து விட்டார். அவனது உடல் ஒரு மாதிரி முறுக்கி கொண்டது. அப்போது அவன் பேசியது அங்கிள் பேசுவது போல் இருந்தது, நான் தயாராய் வைத்திருந்த டேப் ரெகார்டரை ஆன் செய்து அவர் பேசுவதைப் பதிவு செய்தேன். அங்கிளுக்கு அவர் மகன் நன்கு படித்து முன்னுக்கு வர வேண்டும் என்றும் மகளுக்குத் திருமணம் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்ற விருப்பமும் இருப்பதாகக் கூறினார்.பிறகு திடீரென்று எந்த வித முன் அறிவிப்பு மின்றிப் போய்விட்டார்.. பிறகு நாங்கள் ரெகார்டரை ஆன் செய்து ப்ளே செய்து பார்த்தால் அங்கிளின் குரலிலேயே அவர் சொன்னது பதிவாயிருந்தது. அங்கிளின் மகன் டேப்பை அவன் அம்மாவுக்குப் போட்டுக் காட்ட எடுத்துச் சென்றுவிட்டான் “என்று கூறினான்

இவனுக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. இவனும் கூட இருந்திருந்தால் மரணத்துக்குப் பின் ஆவியுலகம் எப்படி இருக்கிறது என்று கேட்டிருக்கலாமோ என்று தோன்றியது. மனசின் ஒரு ஓரத்தில் இறக்கும் முன் தான் கொடுத்த விபூதிப் பிரசாதத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் ஒரு வேளை இப்படி ஆவியாகி அலையாதிருப்பாரோ என்றும் தோன்றியது.

வெள்ளி, 24 ஜூன், 2022

அன்பு என்பது என்ன


       அன்பெனப்படுவது யாதெனில் என்று

             எழுதத் துவங்கும் முன்பே ,முன்னே வந்து 
             நிற்கின்றன அனேக கேள்விகள் சந்தேகங்கள்.
            அன்பே சிவம்,அன்பே  கடவுள் அன்பே  எல்லாம்
             என்றெல்லாம்  கூறக் கேட்டாலும்அடிப்படையில்
             அன்பு  என்பதுதான்  என்ன.

அன்பு மனைவியிடம் அவளது எண்ணம் கேட்டேன்.
உடலில்,உணர்வில் ஏற்படும்  ரசாயன  மாற்றமே
உணர்ச்சிகளின்  வெளிப்பாடுஅதில்  அன்பெனப்படுவது 
உதிரம்  சம்பந்தப்படுகையில்  உயர்வாகிறது
அதுவே என் நிலைப்பாடும்  என்றாள். 
             உள்ளம்  சார்ந்த  பதில்  ஒன்றைக்  கூறிவிட்டாள். 
             அறிவு  சார்ந்த  பதிலை  நாடுதல்  தவறோ.?
தொப்புள்  கொடி  உறவு  உதிரம்  சார்ந்தது. 
ஆதலால்  ஒப்புக்  கொள்ளத்  தோன்றுகிறது. 
அந்த  உறவின்  உணர்வும்  அன்பும்  அறியப்படாமல் 
போய்  விட்டதால்  எழுகிறதோ  என் கேள்விகள்.?

   உணர்வுகள் புரிதலை  (EMPATHY)  அன்பெனக்கொள்ளலாமா?
  சார்ந்திருப்பதன்  சாராம்சமே அன்பின் விளைவா.?

           சேய்  தாயை சார்ந்திருப்பதால் அவளிடம் அன்பா.?
           பெற்ற சேயிடம்  தாய்க்கு என்ன எதிர்பார்ப்பு.
          ஆரம்பத்தில்  இல்லாதது நாள்படத் தோன்றுமோ. ?
          தாய் தந்தை மகன் மகள் கணவன் மனைவி 
          என்று எல்லோரிடமும் உணர்வுகளில் உறங்கிக்கிடக்கும் 
          எதிர்பார்ப்புகளின் மறு பெயர்தான் அன்போ.?
          எதிர்பார்ப்பில்லாத அன்பென ஒன்று உண்டா என்ன.?

கட்டிய மனைவியும்,பெற்ற  பிள்ளைகளும் 
கதறி அழும்போது வந்து விழும் வார்த்தைகள் 
எதிர்பார்ப்புகள் ஏமாற்ற மாவதைக்  காட்டுகிறதா.?
அன்பின் பிரிவால் ஏற்படும் அழுகையா, ?
அவலங்களை எதிர் நோக்கும் எண்ணங்கள் அழவைக்கிறதா?


           பாடுபட்டுக் கோடி பல விட்டுச் சென்றால் 
           பெருமையுடன் நினைப்பார்களோ.உலகில் 
           பாடுபட விட்டுச் சென்றால் பழியேற்றுச் செல்ல வேண்டுமோ.?
           அன்புக்கும் ஒரு விலை உண்டு என்பதுதான்  உண்மையோ.?

அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ் ......
எண்ணிப்பார்த்தால் உண்டென்றே  தோன்றுகிறது. 

          எதிர்மறைக் கருத்துகள் இருக்கலாம் என்று 
          எண்ணும் இடமெல்லாம் கேள்விகளாக்கி  விட்டேன். 
          ஆன்றோரே சான்றோரேஉங்கள் கருத்துகள் 
          அறியக் காத்திருக்கிறேன்.. எது எப்படியாயினும் 
          முத்தாய்ப்பாக  நான் எண்ணுவது 


உழைத்துக் களைத்து உடலம் கிடத்தி உறங்கி எழுந்தால்
மறு நாளும்  உண்டு வாழ்வுதொடரலாம் பணிகள். 
உறக்கத்தில் மூச்சு விட மறந்து எழாமல் போனால் 
என்னாகும்.?ஒன்றுமாகாது. பேரினை நீக்கி பிணமென்று கூறி
பாடையில் கிடத்தி கொண்டு போவார்கள் புதைக்கவோ எரிக்கவோ.

          இருந்தபோது  செய்ததன் விளைவு 
          பெற்றுத்தரும் விழி நீரோஉமிழ் நீரோ. 


இல்லாமையின் வெறுமை உணரப்படலாம் சில நாட்கள். 
விட்ட குறை தொட்டகுறை எனப் பணிகள் 
விடுபட்டுப் போயிருந்தால். பல நாட்களாக அது மாறலாம். 
காலம் கடந்தபின் மிஞ்சுவதெல்லாம் சில நினைவுகள் மட்டுமே.

(அன்பு நேசம் பாசம் காதல் என்றெல்லாம் அறியப் படும் உணர்வு உண்மையில் என்ன?என்றோ எழுந்த கேள்வி பதிவாகி இருந்தது. இப்போது அதுவே மீள்பதிவாக)
 

         
 

புதன், 22 ஜூன், 2022

ரசிக்க பகிர சில எண்ணங்கள்

 


            அண்மையில் ஒரு பதிவு படித்தேன். அதில் அத்வைதம்,
துவைதம், விசிஷ்டாத்வைதம் போன்ற விஷயங்களை எடுத்து
அலசியிருந்தார். அந்தப் பதிவர். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மா
வுக்குமுள்ள சமன்பாடுகள் குறித்த அலசல். அதைப் பற்றி நான்
எதுவும் எழுதப் பொவதில்லை. அடிக்கடி எழும் இந்த ஜீவன்
ஆத்மாபோன்றவற்றின் பொருள் விளங்காமலேயெ அல்லது,
விளங்கிக் கொள்ளும் புத்தி இல்லாமலேயே காலம் கழிந்து
விடுகிறது. இன்று நேற்று எழுந்த கேள்விகள் அல்ல இவை.
இருந்தும் அனைவரும் புரிந்து கொள்ளும் ,அல்லது ஒப்புக்
கொள்ளும் விளக்கங்கள் இருக்கிறதா.? இல்லை என்று சொல்
வதைவிடத் தெரியவில்லை என்று சொல்வதே சரியாகும். தினம்
இறந்து ,தினம் பிழைக்கும் நாம் இருக்கிறோம் என்று சொல்வதே
உயிர் என்று ஒன்று இருப்பதால்தானே. அதுதான் என்ன.?எளிதாக
சொன்னால் காற்று எனலாமா.? அதுவும் தவறாக இருக்கும்.
பிராணவாயு ( ஆக்சிஜன் ) என்பது கூடுதல் சரியாக இருக்கும்.
மூச்சுக் காற்று உடலுக்குள்ளேயும் உடலை விட்டு வெளியும்
சென்று கொண்டிருந்தால் உயிருடன் இருக்கிறோம் என்று
புரிகிறது.ஐம்புலன்களின் செயல் இழந்து விட்டாலும் மூச்சுக்
காற்று வந்து போய்க் கொண்டிருந்தால் உயிருடன் இருக்கிறோம்
என்று உணர்கிறோம். இந்தப் பிரபஞ்சத்தில் வாயு மண்டலத்தில்
இருக்கும் அநேக வாயுக்களில் பிராணவாயு மட்டுமே உயிருக்கு
உத்தரவாதம் அளிக்கிறது. இந்தப் பிராண வாயுவை மின்சாரத்
துக்குஒப்பானதாக எடுத்துக் கொள்ளலாம். வாஷிங் மெஷின்,
ஃப்ரிட்ஜ்,ஹீட்டர், லேத், பல்ப், போன்றவை மின்சாரம் என்ற
சக்தி செலுத்தப் பட்டால் வேலை செய்கிறது. அதேபோல இந்த
உடல் என்னும் மெஷினும் பிராணவாயு செலுத்தப் பட்டால்தான்
இயங்கும்.கேள்வி அதுவல்ல. உயிர்தான் ஆத்மாவா.? உயிர் உள்ள
உடலில் வந்து போகும் பிராணவாயுதான் ஜீவாத்மாவா.?பிரபஞ்சத்
தில் ஊடுருவி இருக்கும் வாயுமண்டலத்திலுள்ள பிராணவாயு
தான் பரமாத்மவா?ஜீவாத்மாவால் இயங்குவது இந்த உடல் என்பது
போல பரமாத்மாவால் இயங்குவதுதான் இந்த பிரபஞ்சமா.? இப்படி
எண்ணிக் கொண்டால் இந்த ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும்
உள்ளசமன்பாடு, ஒரு FINITE NUMBER-ஆ எது.எப்படியாயினும்
இரண்டையும் இயக்குவது என்ன, யார்.?மீண்டும் BACK TO SQUARE
ONE.  இதைத்தானே நான் ஒருமுறை எழுதியிருந்தேன்.,
அறியாமை இருளிலிருப்பதே சுகம் என்று.

       முடிவு காணமுடியாத,அல்லது முடிவு காணத் தெரியாத
எண்ணங்களை விட்டு விடு மனமே.அதெப்படி விட முடியும்.?
அநாதி காலந்தொட்டு கற்பிக்கப் பட்டும், நம்பப் பட்டும் வருகிற
விஷயங்கள் எல்லாம் மனதுக்கு ஒப்புவதில்லையே.கேள்வி
கேட்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதவர் மத்தியில்
சந்தேகமே வரக் கூடாது.!
                             **********************************

      இந்த அவதாரக் கதைகளை எடுத்துக் கொள்வோம். அவதாரங்
களைக் கதைகள் என்று சொல்லுவது ஆட்சேபிக்கப்படலாம்.
என்ன செய்ய. ..கதைகளையும் கற்பனைகளையும் உண்மை
என்று நம்ப இந்தப் பாழாய்ப் போன புத்தி மறுக்கிறதே. இந்தக்
கதைகள் கற்பனைகள் என்று ஒரேயடியாய் ஒதுக்கி விட்டு அதில்
கூறப்பட்டிருக்கும் கருத்துக்களையும் போதனைகளயும் தள்ளி

விடுவதும் சரியல்ல. மனம் ஒப்புவதை ஏற்போம்.இல்லாததை
ரசித்து விட்டு விடுவோம். நம்புபவர்கள் மனம் புண் படுதத
வேண்டாமே.

      “பரித்ராணாய ஸாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்
        தர்ம ஸம்ஸ்தாபனார்த்தய ஸம்பவாமி யுகே யுகே “

என்று பகவான் கீதையில் கூறியிருக்கிறார். உலகில் எப்போது
எப்போது அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போது அப்போது
அவதாரம் எடுத்து தர்மத்தை நிலை நாட்டுவேன் என்கிறார். இது
கிருஷ்ணாவதாரத்தில் தெரியப் படுத்தியது. இதை
அடிப்படையாய் வைத்து மற்ற அவதாரங்களை அலசினால்
அவற்றை ஏற்பது எனக்குக் கஷ்டமாயிருக்கிறது. நான்முகனின்
ஆணவத்தை அடக்க மச்சாவதரம்;ஆணவத்தால் வலிமை
இழ்ந்த தேவேந்திரனுக்கு செல்வம் சிறப்புடன் கூடிய வலிமை
பெற்றுத்தர ,அமுதமெடுக்க, திருப்பாற்கடலைக் கடைய மந்தார
மலை நிலை பிறழாமல் இருக்க எடுத்த ஆமை அவதாரம்;
வைகுண்டக் காவலர்கள் ஜயன், விஜயன் ஆகியோர்,ஆணவம்
கொண்டு சனகாதி முனிவர்களால் சபிக்கப்பட அவர்களை
மீண்டும் ஆட்கொள்ள எடுக்கப்பட்ட அவதாரங்களே பன்றி
மற்றும் நரசிம்மாவதாரம்.;கோயில் விளக்கு அணையாமல்
இருக்கத் திரி தூண்டிக் கொண்டிருந்த எலிக்கு மூவுலகும் ஆள
சிவனார் கொடுத்த வரத்தின் பயனாய் பலிச்சக்கரவர்த்தியாகப்
பிறந்து மூவுலகை ஆண்டவனின் கர்வம் அடக்க எடுத்த வாமன
அவதாரம்;தந்தை சொல் கேட்டுத் தாயை வெட்டிதந்தையின்
காமதேனு பசுவுக்காக அவரைக் கொன்றவர்களைப் பழி தீர்க்க
இருபத்தொரு தலைமுறை அரசர்களை அழித்த பரசுராம அவ
தாரம்;மனைவியைக் கவர்ந்து சென்ற ராவணனைக் கொன்ற
ராமாவதாரம்;உழவுத் தொழிலின் மேன்மையை உணர்த்தக்
கலப்பையை ஆயுதமாகக் கொண்ட பலராம அவதாரம்;பூமியின்
பாரத்தைக் குறைக்கவும் ( எப்படி.? கௌரவ பாண்டவர் போரில்
கணக்கற்றவர்களின் இறப்பாலா.?) சிலபல அரக்கர்களைக்
கொல்லவும் எடுத்த கிருஷ்ணாவதாரம் போன்றவற்றில் எல்லாம்
கடவுளை எங்கே காணமுடிகிறது.?கதைகளில் சொல்லப்பட்டுள்ள
சிலபல கருத்துக்கள் மனசுக்கு இதம் தரலாம். உதாரணத்துக்கு
சிறுவன் பிரகலாதனின் நம்பிக்கையை வலியுறுத்தும் நரசிம்மாவ
தாரக் கதை, தந்தை சொல் தட்டாத ராமன், நண்பனுக்கு உதவும்
ராமன், அநிதியை எதிர்க்கும் ராமன், என்று நல்ல குணங்களை
உணர்த்திச் செல்லும் ராமாயணக் கதை, பிறக்கும்போதே தான்
கடவுளின் அவதாரம் என்றுணர்ந்துஅதற்கேற்பச் செயல் புரியும்
கிருஷ்ணாவதாரக் கதை இவற்றிலிருந்து, வாழ்க்கைக்குப் பலன்
தரும் பல கருத்துக்கள் கொள்ளப்பட வேண்டியவையே தவிர
இவர்கள் எல்லோரும் அதர்மத்தை அடக்க வந்த கடவுளின் அவ
தாரங்கள் என்பது எனக்கு ஏற்றுக் கொள்வது இயலாததாய்
இருக்கிறது. அனைத்து கதைகளிலும் ஆங்காங்கே தெளிக்கப்
பட்டிருக்கும் நல்ல விஷயங்களை முடிந்த வரை பின்பற்ற
முயலுவோம். கதைகளைக் கதைகளாகவே உணர வேண்டும்.
நம்பிக்கை விளைவிக்கும் ,வாழ்வுக்கு ஆதாரமாயிருக்கும்
கருத்துக்களை உள் வாங்குவோம். மற்றவற்றைப் பதராக உதறு
வோம். எனக்குத் தெரியும், அறிந்தோ அறியாமலோ கேள்வி
கேட்காமல் பழக்கப் படுத்திவிட்ட உணர்வுகளை ஆராயத்தொடங்
கினால் எதிர்ப்புகள் பலமாய் இருக்கும் நான் என் எண்ணங்களைக்
கூறுகிறேன். இதை இன்னொரு கோணத்தில் அணுகுகிறேன்
அவ்வளவுதான்.வேறொன்றுமில்லை.
                                             *********************

         எதை எழுதும் போதும் தன்னிலைப் படுத்தாமல் பொதுவாக
எழுத முடிவதில்லை. எண்ணங்களைக் கடத்தவே எழுதுகிறோம்.
எழுதப்படும் எண்ணங்கள் பலரிடம் சென்றடைந்தால் மகிழ்ச்சியே.
பலரிடம் சென்றடைகிறதா, அதன் தாக்கம் என்ன என்று அறிய
வரும் பின்னூட்டங்களை அளவு கோலாகக் கொள்ளலாமா. ?அது
சரியென்று தோன்றவில்லை. பதிவர்களில் பலர், ஒருவருக்கு
நாம் பின்னூட்டம் எழுதினால் அவர்கள் நம் பதிவுக்கு வருகிறார்
கள். பின்னூட்டங்களின் எண்ணிக்கையில் பலவிதமுண்டு. ஒரு
பதிவுக்கு ஒருவரே ஏழெட்டு பின்னூட்ட மிடுவதை காண்கிறேன்.
சில சமயங்களில் பின்னூட்டங்கள் பதிவைவிட நீளமாகிப் போய்
விடுகிறது. அநேகமாக எல்லோரும் பாராட்டியே எழுதுகிறார்கள்
மீறிப் போய் யாராவது விமரிசனமாக எழுதினால் அது விரும்பப்
படுவதில்லை. விமரிசனம் எனும் போது எழுத்துத்தான் விமரி
சிக்கப்பட வேண்டுமே தவிர எழுதுபவரல்ல. ஒரு சிலர் சளி பிடிக்
கும் அளவுக்குப் பாராட்டில் குளிப்பாட்டுகிறார்கள் அந்தக் காலப்
பரிசில் வேண்டும் புலவர்கள் நினைவு வருகிறது. ஒரு சிலர்
பதிவிடும்போது என்ன சொல்ல வருகிறார் என்று புரிவதில்லை.
சில ABSTRACT எண்ணங்கள் சென்றடைவதில் சிரமமிருக்கிறது.
புரிந்தால் என்ன, புரியாவிட்டால்தான் என்ன.. இருக்கவே இருக்
கிறது டெம்ப்ளேட் காமெண்ட்ஸ். என்னை பொறுத்தவரை நான்
எழுதுவது எல்லோருக்கும் உடன்பாடாக இருக்க வேண்டும்
என்று எண்ணுவதில்லை. சிந்தனையைக் கிளறினாலேயே நான்
எழுதுவதன் பலனை அடைந்ததாக எண்ணுகிறேன். யாருடையப்
பதிவையும் யாரும் கட்டாயப் படுத்திப் படிக்க வைக்க முடியாது.
எழுத்துக்கள் வாசகரை ஈர்த்து வர வேண்டும்.என்னுடைய மெயில்
பெட்டியில் வந்து சேரும் பதிவுகள் பற்றிய தகவல்கள்
எண்ணிக்கை என்னைத் திக்கு முக்காடச் செய்கிறது

ஈர்க்கப்பட்டு நான் படிக்க விரும்பினால் அவர் பதிவின் தொடர்
பாள்னாகிறேன். அவர் எழுதும் பதிவுகள் உடனுக்குடன் தெரியும்.
சில நேரங்களில் சிலரது பதிவுக்கு நான் இடும் பின்னூட்டம்
எவ்வாறு எதிர்கொள்ளப்படுகிறது என்று தெரிய மீண்டும் அவர்கள்
வலைக்குச் செல்வேன். மற்ற பதிவர்களும் அப்படித்தான் என்று
எண்ணுகிறேன். சில காமெண்டுகளுக்கு எவ்வாறு REACT  செய்வது
  என்று தெரிவதில்லை. முன்பே ஒரு முறை எழுதி இருக்கிறேன்.
பதிவுகளில் நான் ஒரு I ALSO RUN  என்னும் ரகம்தான் என்று
  

                மாறுதலுக்கு இப்படியும் ஒரு சிறுகதை
                       ------------------------------------------------
தினமும் நான் செல்லும் பஸ்ஸிலேயே வருகிறான். நான்
இறங்கும் நிறுத்தத்தில் அவனும் இறங்குகிறான். என்னையே
பார்த்துக் கொண்டு வருகிறானோ.?நான் பார்த்தால் வேறு
பக்கம் பார்க்கிறான். இது இப்படியே தொடர்ந்தால் நல்லதற்கல்ல.
வீட்டில் சொல்லலாமா ? வேண்டாமா.?

நான் அவனுக்குத் தெரியாமல் கண்காணித்ததில் அவன் வேலை
செய்யுமிடம் நான் பணிபுரியும் கட்டிடத்தின் மேல் மாடியில்
இருந்தது. அவன் வீடு எங்கள் தெருவில் எங்கள் வீட்டுக்கு
மூன்றாம் வீடு.

ஒரேதெருவில் குடியிருந்தும் ,இரே கட்டிடத்தில் பணி புரிந்தும்
ஒருவரை ஒருவர் தெரியாமல் இருந்திருக்கிறோம். !!!1!!1
---------------------------------------------------------------------------

ஒரு ஜோக் படித்தேன்.ஆங்கிலத்தில் இருந்தது. தமிழாக்கினால்
சுவை போய்விடும் .அதனால் அதனை அப்படியே தருகிறேன்.
இது ஒரு "A" ஜோக். ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.


Do you speak English.?
Yes.
Name.?
Abdul al-Rhasib.
Sex.?
Three to five times a week.
No, no, - I mean , male or female.?
Yes, male female, and sometimes camel.
Holy cow.!
Yes. cow,sheep,animals in general. 
But, is it not hostile.?
Horse style, doggy style, any style.
Oh, dear.!
NO, no , deer runs too fast. 
-----------------------------------------------------


புனித தாமஸ் கேரளாவுக்கு வந்தார். அவர் ஏசு நீரின் மேல் j9
நடந்தார் என்றார்.ut

யாரும் நம்பவில்லை.

அவர் மேலும் சொன்னார்.”ஏசு நீரை வைன்( wine ) ஆக மாற்றினார்.”

பாதி கோட்டயம் கிருஸ்தவர்களாக மாறியது. !
---------------------------------------------------------------

(
                                    ================