நான் 85 வயதிலும் நல்ல பையன்
கண்முன்னே கார்குழல் விரித்த கன்னியர்
கண்முன்னே கார்குழல் விரித்த கன்னியர்
(இப்போதெல்லாம் பின்னிய கூந்தல் காண்பதரிது)
பத்மினி,சித்தினி,சங்கினி, அத்தினிப் பெண்டிர்
பவிசாக வந்தாலும் பத்திர காளியாய் நின்றாலும்
பயமாய் இருக்கிறது.. தலை தூக்கிக் கண்டாலே
காவலரிடம் புகார் செய்வரோ, என்றே அச்சம்.
அவர்களுக்கென்ன ..பாரதியே கூறிவிட்டான்
நிமிர்ந்து நடக்கவும் நேர்கொண்டு பார்க்கவும்.
எனக்கேன் இந்த பயம்..?
பேதையோ, பெதும்பையோ
மங்கையோ மடந்தையோ , அரிவையோ தெரிவையோ
இல்லை பேரிளம்பெண்ணோ , பார்வையால்
துகில் உரியப்பட்டு பருவ பேதமின்றி சிதைக்கப்படும்
அச்சத்தின் உச்சத்தில் வளைய வரும் தாய்க்குலம்
யாரைப் பார்த்தாலும் பாம்பா பழுதையா என்றறியாது
தற்காப்புக்காக எதுவும் செய்யலாம்தானேபாரதிதாசன் கூறியதுபோல் “ கிளையினில் பாம்பு தொங்க
விழுதென்று குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கென குதித்ததைப் போல் கிளைதோறும் குதித்துத் தாவி
கீழுள்ள விழுதையெல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன் வால் பார்க்கும்.”
பாவிகள் பலரது செயல்கள்
பூவையரிடையே அச்சத்தை விளைவிக்க நானிருக்கிறேன்
85 வயதிலும்நல்ல பையனாக
அது சரி.... நாமே நம்மை 'நல்ல பையன்' என்று சர்டிஃபிகேட் கொடுத்துக்கொண்டால், அதைப் பார்த்தே பெண்கள் பயந்து தள்ளி நடப்பார்கள், இது பாம்பாக இருக்க வாய்ப்பு இருக்கிறதே என்று.
பதிலளிநீக்குசென்ற வருட பிக் பாஸ் சிறிது பார்த்தேன் சமீபத்தில். அதில் ஒருவன், (மதுரைக் காரன் என்ற பெத்த பேரு அந்தப் பயலுக்கு) பெண்களை வாடி, போடி என்றெல்லாம் மரியாதைக்குறைவாகப் பேசி, கட்டிப்பிடிக்காத குறையாக பெண் லோலனாக நடந்துகொள்கிறான். அவனை அப்சர்வ் பண்ணினாலே மோசமான ஆள் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் வீட்டில் இருக்கும் பெண்கள் (பிக் பாஸ் வீட்டில்) அவன் ரொம்ப நல்லவன், நாங்க சேஃப் ஆக உணர்கிறோம் என்று சொன்னார்கள்.
உண்மையில் மதுரைக்காரர்கள் தங்களை விட வயதில் சிறியவர்களையும் 'வாங்க போங்க' என்றுதான் அழைப்பார்கள்.
நீக்குஉங்களூக்குத் தெரிகிறது
நீக்குநெல்லை நிறைய டீவீ பபார்க்கிறார் போல
நீக்கு//பாவிகள் பலரது செயல்கள் பூவையரிடையே அச்சத்தை விளைவிக்க//
பதிலளிநீக்குஇதுதான் இன்றைய நிலைப்பாடு ஐயா.
பாம்புகளும் உண்டு
நீக்குமனதளவில் நீங்கள் என்றும் நல்ல பையன் தான்.? ஆனாலும் குறும்புள்ள பையன்...!
பதிலளிநீக்குகுறும்புதானே
நீக்குநல்ல பிள்ளைதான்! பாரதிதாசன் பாடலையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி
நீக்குநீங்கள் என்றுமே நல்ல பிள்ளைதான்
பதிலளிநீக்குநன் றி
பதிலளிநீக்கு