நினைவுகளுக்கு பஞ்சமில்லை
--------------------------------------------------
நினைவுகளுக்குப் பஞ்சமில்லை
இம்மாதம்
ஐந்தாம் தேதியே மனைவி நினைவு படுத்தி விட்டாள் சனிக்கிழமை ஆறாம் தேதி பஹுள பஞ்சமி திருவையாறு ஆராதனைகள் நேரலையில்
ஒளிபரப்பாகும் கேட்கவேண்டும் என்றாள் எனக்கு
திருச்சியில் இருந்தபோது 1980 களின் துவக்கத்தில்
திருவையாறு பஞ்சமி கீர்த்தனைகளைக் கேட்கச் சென்றது நினைவிலாடியது இன்னும் ஒருமுறை பெங்களூரில்
இருக்கும் பொது ஆஸ்திரேலியா இந்தியாவுக்கிடையே நடந்தடெஸ்ட் மாட்சை யும் ஆராதனையையும் விட்டு விட்டுக் கேட்டதும் நினைவுக்கு வந்தது அன்று
போல் இன்றும் டெஸ்ட் மாட்ச்தான் ஆஃப்ரிகா இந்தியா
இடையே ஆனால் பஞ்சமி கீர்த்தனைகள்முடிந்த பின் ஆட்டம் தியாகராஜர் எத்தனையோ கீர்த்தனைகள்பாடியிருந்தும் ஐந்து கீர்த்தனைகள் கொண்டு மட்டுமே ஆராதனை நடத்தப்படுகிறது மேலும்
நான்காவது கீர்த்தனையான கனகன ருசி என்னும்
கீர்த்தனை வராளி ராகமாம் ( இதெல்லாம்
ஸ்ரீராமுக்கு அத்துபடியாயிருக்கும்
) அந்த ராகத்தை யாரும் சொல்லிக் கொடுக்க மாட்டார்களாம் சொல்லிக் கொடுக்காமலா இத்தனை பேரும் ஆராதனையில்,
பாடுகிறார்கள்
நாங்கள் திருவையாறுக்கு ஆராதனைக்குச் சென்றுவந்ததெல்லாம் நினைவில் வருகிறது காலையில் உணவு எடுத்துக் கொண்டு போய் ஆற்றின் கரையில்
உண்டதும் பாடல் வரிகளைப் பார்க்க கொடுக்கப்பட்டிருந்தசின்ன
ஏட்டுடன் கூடவே பாடமுயற்சி செய்ததும் இப்போது நினைத்தால் தமாஷாக
இருக்கிறது இந்தமுறை ஆராதனை ஒளிபரப்பாகும்போது
காமிராவில் சில பகுதிகளைப் பதிவாக்கினேன் ஆனால்
பகிர முடியவில்லை நீளம் அதிகமானபடியால்பகிர
முடியவில்லை
பழைய
நினைவுகளை புரட்டிப் பார்க்க வைத்த விஷயம்
இன்னொன்றுண்டு இந்தவிலை வாசிகள். அன்றும் இன்றும் எண்ணி பார்க்கவும் முடியவில்லை என்மகன் எனக்கு அனுப்பி இருந்த சில படங்கள் அந்தக் காலநினைவுக்கு
இழுத்துச் சென்றது அதற்குமுன்
ஒரு பாட்டின் வரி
அஞ்சு ரூபா நோட்டு கொஞ்ச முன்ன மாத்தி மிச்சமில்லை காசு மிச்சமில்லை
கத்திரிக்காய் வெல கூட கட்டவில்ல ஆச்சு காலங் கெட்டு போச்சு
என் மனைவி அந்தக் கால செலவுகளை
அங்கும் இங்கும் குறித்து வைத்திருக்கிறாள் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ 26 /- என்றுஎழுதப்பட்டு இருக்கிறது இன்னும் சில விலைகளுமிருக்கின்றன ஆனால் குவாண்டிடி குறிப்பிடப்படாததால்
இங்கு சொல்ல முடியவில்லை நாங்கள் விஜய வாடாவில் இருந்தபோது (1976-1980) தங்கம் ஒரு சவரன் ரூ 200. என்னும் அளவில் இருந்தது நாங்கள்பெங்களூர்
வந்தபோது நாங்கள் தங்கியிருக்கும் இடத்துக்கும்
சிவாஜி நகருக்கு ம்பேரூந்து கட்டணம் ரூ. ஒன்று அதுவே இப்போது ரூ25 /- சிலபடங்களை
இடுகிறேன் எழுத இருப்பதை விட அவை நன்குவிளக்கும்
![]() |
பெட்ரோல் விலை ஒரு பில் |
![]() |
சினிமா டிக்கெட் |
![]() |
சில அரிய புகைப்படங்கள் |
![]() |
நான் பிறக்கும் முன் |
![]() |
அரசியல் தலைகள் |
![]() |
அந்த நதி எங்கே |
![]() |
விலையை பாருங்கள் |
![]() |
பதிவில் நான் எழுதி இருந்த விலையைப் பாருங்கள் |
![]() |
சங்கீத வித்தகிகள் |
.