சதிகார உலகம்.....?
-------------------------
ILLUMINATI என்பது ஒரு இயக்கம். 1776-ம்
ஆண்டு வாக்கில் நிறுவப் பட்ட பவேரியன் இல்லுமுனாடி ஒரு ரகசிய இயக்கமாக இருந்தது.
அண்மைக் காலத்தில் இந்தப் பெயர் ஒரு சதிக் கும்பலை பிரதிபலிக்கிறது. இவர்கள்தான்
சதி நிறுவனமாக இயங்கி பல நிகழ்வுகளுக்கும் காரண கர்த்தாக்கள் என்று நம்பப்
படுகிறது. பல அரசுகளையும் பெரும் நிறுவனங்களையும் கைப் பிடிக்குள் வைத்து காய்
நகர்த்தும் சாகசக் காரர்கள். இந்த அகிலத்தையே தங்கள் கட்டுக்குள் கொண்டுவர செய்யும்
முயற்சிகள் ,யார் இதன் மூலகர்த்தா என்று அறிய முடியாதபடி செய்யும் காரியங்கள் நம்ப
முடியாதவையாக இருக்கிறது.சரித்திரப் பிரசித்தி பெற்ற வாட்டர்லூ யுத்தம், ஃப்ரென்ச் புரட்சி, ஜனாதிபதி கென்னெடி
கொலை போன்றவற்றின் பின்னணியில் இவர்கள் இருந்திருப்பார்களோ என்று சந்தேகம்
இருக்கிறது.
இந்த இயக்கத்தில் முந்தைய அமெரிக்க
ஜனாதிபதிகளான ஜார்ஜ் வாஷிங்டன், பெஞ்சமின் ஃப்ராங்க்லின் பெரும் பங்கு வகித்திருக்கலாம்
என்று நம்பப் படுகிறது.புனித GEOMETRIC DESIGN என்று நம்பப்படுபவை எல்லாம் அமெரிக்க சமூகத்திலும், வாஷிங்டன் டீ.சியின்
நெடுஞ்சாலைகளிலும் , முக்கிய தேசியக் கட்டமைப்புகளிலும் , அமெரிக்க அரசாங்க
இலச்சினையிலும் விரவிக் கிடக்கிறது.
இல்லுமினாடி இயக்கம் அரசியலில்
நேரடியாக ஈடுபடுவதில்லை. ஆனால் அரசை கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். அமெரிக்க FEDERAL RESERVE அரசாங்கத்தின்
கட்டுப்பாட்டில் இல்லை. அமெரிக்கா சுதந்திரம் அடைந்தபோது பணப்புழக்கம் தங்கத்தின்
அடிப்படையில் இருந்தது. 1920-களில் பெரிய வங்கி முதலாளிகளான ராக்ஃபெல்லர், மோர்கன்
,வார்பர்க், ரோத்சைல்ட் போன்றோரின் ஆதரவில் வெற்றி பெற்ற வில்சன் FEDERAL RESERVE ACT சட்டம் கொண்டுவந்தார். அந்தச்
சட்டமே சில வங்கியாளர்களால் எழுதப் பட்டது. இது தங்கத்தின் அடிப்படை என்பதை
மாற்றியது. அரசு வங்கியிலிருந்து கடன் வாங்கும். வங்கி பணத்தை அச்சடித்துக்
கொடுக்கும். அரசுக்குக் கிடைக்கும் வரிப் பணம் உட்பட எல்லாம் வங்கிக்கே சேரும்
அரசு எப்போதும் வங்கியின்கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். பணப்புழக்கம் FEDERAL RESERVE-ன் கட்டுப்பாட்டில்
இருக்கும். அதன் நிதி நிலைமை தணிக்கைக்கு உட்படுத்தப் படுவதில்லை.ஜான் எஃப்.
கென்னடி ஒரு புதிய நிதி கொள்கையைக் கொண்டு வருவதன் மூலம் அரசை எப்போதுமிருக்கும்
கடன் சுமையிலிருந்து மீட்க நினைத்தார்..அவருக்கு நேர்ந்த கதி தெரிந்த பிறகு பின்
வந்த எவரும் எந்த முயற்சியும் எடுக்க முடியாத நிலை அறிந்தவர்களே.
இதை இவ்வளவு தூரம் கூற வேண்டியதன்
அவசியம், உலகின் பெரிய ஜனநாயகமே அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதா என்னும்
சந்தேகத்தால் எழுந்ததே பத்திரிகைகள் தொலை தொடர்பு நிலையங்கள் போன்ற மீடியாவும்
இவர்கள் கையில்தான்.
.
இல்லுமினாடியின் அடையாளம் அமெரிக்க டாலர்
நோட்டில் காணலாம்.ஒரு டாலர் நோட்டின் ஒரு பக்கம் பிரமிட் –உம் அதன் மேல் ’ஒரு கண் ’ படமும் இருக்கும். இது
அவர்களது இலச்சினை. எல்லாவற்றையும் கண்காணிக்கும் கண். பிரமிடின் அடியில் இருக்கும் ரோமன் எண்களைக் கூட்டினால்
1776 என்ற எண் வரும்.இடது கீழ்புறத்தை ஒரு பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தால் ஒரு
ஆந்தையின் உருவம் தெரியும்.
அனேக கார்பொரடெ நிறுவனங்களின்
இலச்சினைகளில் எல்லாவற்றையும் கண்காணிக்கும் கண்ணின் உருவம் தெரியும். உ-ம். CBS ,AOL போன்றவை. நடந்து கொண்டிருக்கும்
லண்டன் ஒலிம்பிக்ஸின் மாஸ்காட் உருவ்ங்களிலும் இந்த இலச்சினை தெரிகிற்து. பிரமிட்
சின்னமும் இவர்களின் அடையாளமாகும். ஒலிம்பிக் ஸ்டேடியம் முழுவதும் ஒளி வீச ஏற்பாடு
செய்திருக்கும் விளக்குகளும் பிரமிட் ஷேப்பில் இருப்பது தற்செயலானதா.?ஈரான்
ஜனாதிபதி மஹ்மூத் அஹமதிநெஜாத் இந்தப் போட்டியிலிருந்து அவரது நாடு விலகும் என்று
அச்சுறுத்தினார். காரணம் 2012 என்னும் ஆண்டு குரிப்பிடப் பட்டிருந்த விதம் ZION என்பது போல் தெரிகிறது என்பதால்.
அயல் கிரக வாசிகள் மனித உருக்கொண்டு
நம்முள் ஊடுருவி இருப்பார்களொ என்றும் சந்தேகம் உண்டு. அமெரிக்காவின் MAJESTIC 12 என்னும் பெயர்கொண்ட ஏஜென்சி,
ஒரு நிழல் அரசாகக் கருத படுகிறது. அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் AREA 51 என்ற இடம் பற்றுய தகவலே
1995-ம் ஆண்டுக்குப் பிறகுதான் தெரியும். RFID எனும் ரேடியோ ஃப்ரீகுவென்சி ஐடெண்டிஃபிகேஷன் மூலம் எல்லோரையும்
கண்காணிக்கும் திட்டமும் வரக் கூடும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
மனிதரில் உயர்ந்தோர் தாழ்ந்தோர்
என்னும் எண்ணம் அனாதி காலமாக இருந்து வருகிறது. அடால்ஃப் ஹிட்லர் அவர்களது இனமே
உயர்ந்தது என்று கருதி யூதர்களைக் கொன்று குவித்தான். பண பலத்தால்தான் உலகை
கட்டுப் படுத்தலாம் என்ற எண்ணமே , எண்ணை வள நாடுகளை ஆக்கிரமிக்கும் பணியில்
அமெரிக்கா போன்ற நாடுகளை ஈடுபடுத்துகிறது. ஈராக், லிபியா, குவைத் என்று ஒன்றன்பின்
ஒன்றாக ஆக்கிரமிப்புக்குள் வந்தாயிற்று. அடுத்தடுத்து நிகழும் சச்சரவுகளும்
உள்நாட்டுப் போர்களும் இதையே குறிக்கின்றன. எண்ணை வளம் முழுவதும் கட்டுக்குள்
வந்தால் உலக அரசு என்னும் அவர்களுடைய இலக்கு அடைய சாத்தியதை ஏற்படும். எண்ணை
இல்லாமல் எரிபொருள் தயாரிக்க முடியும் என்னும் ஆராய்சிகளையே மேலை நாடுகள்
குலைக்கின்றன.
அமெரிக்காவில் செப்டம்பர் பதினொன்றாம்
நாள் நடத்தப் பட்ட பயங்கரமும் அண்மையில் ஏற்பட்ட சுனாமி அழிவுகளும் இந்த
இயக்கத்தால் நடத்தப் பட்டதோ என்றும் கருத்துகள் உலவுகின்றன.
அங்கும் இங்கும் சில நாடுகளில் மக்கள்
பொங்கி எழுகிறார்கள் எனும் மாயை உருவாக்கப் பட்டு , அவற்றைக் கபளீகரம் செய்யும்
முயற்சியில் இந்த இல்லுமினாட்டியின் பங்கு நிறையவே இருக்குமோ என்னும் சந்தேகம்
எழுகிறது.
இல்லுமினாட்டி பற்றி உங்களுக்குத்
தெரியுமா என்று என் பேரன் கேட்டான். தெரியாது என்று கூறி வலையில் சற்று
மேய்ந்தேன். ஏராளமான பதிவுகள் இருக்கின்றன. அண்மையில் எரிதழல் வாசன் ஒரு ஆதங்கப்
பதிவு எழுதி இருந்தார். அநேக செயல்கள் கண்ணுக்குத் தெரியாத சூத்திர தாரிகளால்
நிகழ்த்தப் படுகிற்தோ என்னும் சந்தேகம் மற்றும் சாத்தியக் கூறுகளின் விளைவே
இப்பதிவு. எல்லாம் நெட்டில் சுட்ட விஷயங்களே. என் கற்பனை சிறிதும் இல்லை. ,
லண்டன் ஒலிம்பிக்ஸ் மாச்கட்ஸ். எதையும் காணும் கண்.
2012 என்கிறதா ZION என்கிறதா,?